ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Twenty thousand demonstrate against fascist rampage in Macerata, Italy

இத்தாலி மாச்செராட்டாவில் பாசிச வெறியாட்டத்திற்கு எதிராக இருபதாயிரம் பேர் ஆர்ப்பாட்டம்

By Marianne Arens
15 February 2018

சுமார் 20,000 பேர் எதிர்ப்பினர், அவர்களுள் பலர் இளைஞர்கள்,  சனிக்கிழமை பிற்பகல் இத்தாலி, மாச்செராட்டா முழுவதும் பாசிச எதிர்ப்பு  ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஒருவாரத்திற்கு முன்னர்தான், பிப்ரவரி 3 அன்று, உள்ளூர் பாசிஸ்டான லுக்கா ட்ரையினி இனவாத துப்பாக்கிச்சூட்டில் அங்கு வசிக்கும் ஆறுபேரைக் காயப்படுத்தினார்.

பாசிசத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பொலொக்னா, மிலான், பியசென்சா மற்றும் இதர நகரங்களிலும் நடைபெற்றன. ஆயினும், இத்தாலி முழுவதுமிருந்து இளையோர், பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களின் ஐக்கியத்தை எடுத்துக்காட்டுவதற்கும் பாசிச அச்சுறுத்தல் மீண்டும் எழுந்தால் எதிர்ப்பதற்கு தங்களின் ஆயத்தத்தைக் காட்டுவதற்கும்  மாச்செராட்டா பயணத்தை வலியுறுத்தினர். வியாழன் அன்று ஆளும் ஜனநாயகக் கட்சி (PD) உத்தியோகபூர்வமாக ஆர்ப்பாட்டத்தை இரத்து செய்தது.

ஒரு பதாகையில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: “ஜென்னிஃபர், மஹ்மாடு, ஜிடியான், வில்சன், ஃபெஸ்டஸ், ஓமார்” —இப்பெயர்கள் ஒருவாரத்திற்கு முன்னர் கருப்புநிறத் தோலுடையோர் மீது கண்மூடித்தனமாக சுடப்பட்டதால் பாதிக்கப்பட்ட அறுவரின் பெயர்களாகும். ஊர்வலம் தொடங்கிய பகுதியான, ஒரு சிறிய பூங்கா, விரைவில் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது, மற்றும் ஊர்வலம் வெற்றிகரமாக இருக்க உறுதிப்படுத்தியதால் மகிழ்வான, ஓய்வான மனோநிலை அங்கே பரவியது. பலர் பாசிசம் மற்றும் போருக்கு எதிராக சுலோகங்களை எழுப்பி பாடினர்.

PD அரசியல்வாதிகள் ஊர்வலத்திற்கு வராமை பற்றி என்ன நினைக்கின்றார் என ஒருவரிடம் கேட்க, பங்கேற்ற ஒருவர் கூறினார்: “அது எனக்கும் கூட வியப்பளிக்கிறது.” ஒரு பெண் குறிப்பிட்டார், “இடதுக்கும் வலதுக்கும் எந்த வேறுபாடும் இனி இல்லை” என்றார், இன்னொருவர், “எடுத்துக்காட்டுவதற்கான எங்கள் உரிமைக்காக நாமும் போராடுகிறோம்” என்றார்.

வியாழன் அன்று, உள்துறை அமைச்சர் மார்க்கோ மின்னிட்டி (PD) ஊர்வலத்தை தடைசெய்வதற்கு முயற்சித்தார். அவர் PD தலைவர் மத்தேயோ ரென்சி ஆல் ஆதரிக்கப்பட்டார். “கோபத்தை தணிவிக்க” அவர் “அனைத்துப் பக்கங்களையும் அழைத்தார். அதற்கு முன்னரே மாச்செராட்டா நகரசபை தலைவர் Romano Carancini, அவருங்கூட PD ஐ சேர்ந்தவர், வன்முறை மோதல்களை எச்சரித்தார் மற்றும் எந்தவிதமான ஊர்வலத்திற்கும் எதிராக ஆலோசனை கூறினார்.

Carancini இந்த எச்சரிக்கையை, Forza Nuova மற்றும் CasaPound போன்ற பாசிச அமைப்புக்களின் அதிர்ச்சியூட்டும் முறையிலான தோற்றத்தின்மீது அடிப்படையாகக் கொண்டிருந்தார். அவையும் ஊர்வலங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன. Forza Nuova-வின் தலைவர் Roberto Fiore, கொலையாளி லுக்கா ட்ரையினி க்கு பகிரங்கமாக தனது ஆதரவைத் தெரிவித்ததோடு, அவரது வழக்குக்காக நன்கொடை தரவும் வேண்டினார், வியாழன் இரவு, 30 பாசிஸ்டுகள் ஆரவாரத்துடன் அணிவகுத்து, உண்மையில் மாச்செராட்டாவில் தகாத வகையில் பாலியல் ரீதியான தாக்குதலிலும் ஈடுபட்டனர்.

இத்தாலிய உழைக்கும் மக்கள் தேசியக் கழகம் (Anpi) மற்றும் Cgil யூனியன் உட்பட யார் பேரில் ஆர்ப்பாட்டம் உண்மையில் அறிவிக்கப்பட்டிருந்ததோ அனைத்து அமைப்புக்களும் விரைவில் சரணடைந்தன. அவை ஊர்வலத்தை இரத்துச்செய்தன. PD க்கு இடது என்று தம்மைக் கூறிக்கொள்ளும் தேர்தல் கூட்டணியான “சுதந்திரமும் சமத்துவமும்” (LeU, Liberi e Uguali), அதையேதான் செய்தது.

LeU-வின் முன்னணி வேட்பாளர், Pietro Grasso வியாழன் அன்று மாச்செராட்டாவுக்கு வருகை தந்தபோது பேசினார், ஊர்வலத்தை இரத்துச்செய்ததற்கு ஆதரவு தெரிவித்தார். மேயரின் முடிவை தான் ஏற்பதாகத் தெரிவித்தார். “அரசியல் அமைப்பின் மதிப்புக்கள்” மீறப்படக்கூடாது மற்றும் அதனை பாசிச மற்றும் பாசிச எதிர்ப்பு ஊர்வலங்களுக்கு சமப்படுத்தக்கூடாது என்றார், மேலும் கூறுகையில் “ஊர்வலம் செல்வதா வேண்டாமா என்ற முடிவு பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்களால் எடுக்கப்பட வேண்டும்” என்றார்.

இதன் அனைத்து அர்த்தமும் மேலும்மேலும் அகதிகள் ஆதரவு பிரச்சாரங்கள் ஆகும், ஆதரவுக்குழுக்கள், NGOக்கள் மற்றும் மாச்செராட்டாவில் வசிக்கும் தனிநபர்கள் கூட தாங்கள் திட்டமிட்டபடி பாசிசத்திற்கும் இனவாதத்திற்கும் எதிராக புலம்பெயர்ந்தோரைப் பாதுகாக்க சனிக்கிழமை அன்று வீதிகளில் திரள்வதாக பகிரங்கமாக அறிவித்தனர்.

சனிக்கிழமை அன்று, மேயர் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகத்தை மூடினார் மற்றும் பகல் 1.30 மணிக்கு பொதுப் போக்குவரத்தை நிறுத்தினர். அவர் நகர மையத்தில் ஆத்திரமூட்டும் பொலீஸ் நிலைநிறுத்தலை ஏற்பாடு செய்தார். பீதியுற்ற பல கடைக்காரர்கள் தங்களின் கடைகளை மூடினர் கதவுகளையும் கடையின் ஜன்னல் கதவுகளையும் பூட்டினர்.

ஆயினும், ஊர்வலம் வெற்றிகரமாய் நடைபெற்றது. அது அமைதியாக நடந்தேறியதுடன், பெரும்பான்மையான இத்தாலிய மக்களுக்கும் கட்சி பெருந்தலைகளுக்கும் இடையில் ஆழமான இடைவெளி இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தியது. அது இளையோர் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பெரும்பகுதியினருக்கு அன்னியர் குறித்த வெறுப்பு திட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் வலதுசாரி கொள்கைகளுடன் உடன்பாடு இல்லையெனத் தெளிவாகக் காட்டியது.

மார்ச் 4ம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான அனைத்துக் கட்சிகளின் பிரச்சாரங்கள் பெரும்பாலும் தேசியவாதம் மற்றும் அன்னியர் வெறுப்பு இவற்றால் குறிக்கப்பட்டன. PD அரசாங்கமானது, வட ஆபிரிக்காவிற்கு துருப்புக்கள் அனுப்ப ஆயத்தம் செய்துகொண்டு, புலம்பெயர்வோர்க்கு எதிரான லிபிய கடலோரக் காவற்படையுடன் பொது நோக்கத்தை வகுத்துக் கொண்ட அதேவேளையில், Lega, Forza Italia மற்றும் the Five Star Movement ஆகியன ஒன்று மற்றதனுடைய புலம்பெயர்ந்தோர் எதிர்ப்புக் கோரிக்கைகளில் ஒற்றையொன்று விஞ்சிக் கொண்டிருந்தன. அரசியல் ஆளும் தட்டானது உருவாக்கிய சூழலில் பல வாரங்களாக வலதுசாரி தீவிரவாதிகளின் தாக்குதல்களின் “கறுப்பு அலை” இருந்து வருகிறது.

இதற்கு எதிரான எதிர்ப்பு இப்பொழுது வளர்ந்துகொண்டிருக்கிறது, ஆனால் அது நிலவும் கட்சி அமைப்பு நிறமாலையில் ஒரு வெளிப்பாட்டையும் காணவில்லை. PD யின் இடதுகளுடன் தேர்தல் கூட்டு என்பதும் மாற்றீடு ஒன்றையும் வழங்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், தொழிலாள வர்க்கத்தில் எந்தவிதமான சுதந்திரமான இயக்கத்தையும் கைப்பற்றுவதற்கு அது உயரவில்லை மற்றும் அதன் முதுகை முதலாளித்துவ அரசியலின் பழைய தடங்களின் வழியே திசை திருப்புகிறது.

இது குறிப்பாக LeU தேர்தல் கூட்டணிக்கும் அதன் தலைமை வேட்பாளர் Pietro Grasso க்கும் பொருந்தும். இந்தக் கூட்டணி பிரதானமாக 1991ல் கலைக்கப்பட்ட இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வந்த அரசியல்வாதிகளைக் கொண்டுள்ளது. அவர்களில் பெரும்பான்மையினர் அரசாங்கம், அரசு மற்றும் தொழிற்சங்கப் பொறுப்புக்களில் ஏற்கெனவே உள்ளனர். இவர்களுள் Massimo D’Alema, Pier Luigi Bersani மற்றும் Guglielmo Epifani போன்ற உள்ளூர் கட்சிக் காரியாளர்களும் உள்ளடங்குவர். Bersani பல ஆண்டுகளாக Partito Democratico (PD) கட்சித் தலைவராக இருந்தார், Epifani  Cgil தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்தார், மற்றும் D’Alema ரொமானோ ப்ரோடி அரசாங்கத்தின் கீழ் வெளியுறவு அமைச்சராகவும் பிரதமராகவும் கூட இருந்தார்.

தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில், Matteo Renzi மீது அவர்கள் தங்களது சண்டையைக் குவிமையப்படுத்தியுள்ளனர். இவர்தான் நான்காண்டுகளுக்கு முன்னர் PD மற்றும் அரசாங்கத்தின் தலைமையை எடுத்தபொழுது அவர்களை செல்வாக்கில்லாது ஆக்கியவர். Renzi கிறித்தவ ஜனநாயகப் பிரிவான “Margherita” விலிருந்து வருபவர். இந்த அமைப்புடன்தான் இடது ஜனநாயகவாதிகள் 2007 அக்டோபரில் ஒன்றிணைய ஜனநாயகக் கட்சி (PD) உருவாகியது. அதுமுதற்கொண்டு, இந்த பிரிவு கட்சியின் திசைவழியைத் தீர்மானித்து வருகிறது.

டிசம்பர் 2016ல், அரசியல் சட்ட வாக்கெடுப்பில் ரென்சியின் தோல்வியில் PD இன் வீழ்ச்சியடைந்துவரும் செல்வாக்கை எடுத்துக்காட்டிய பொழுது, சில பழைய ஸ்ராலினிஸ்டுகள், முதலாளித்துவ ஆட்சிக்கு முண்டு கொடுக்க PD க்கு வெளியே ஒரு கட்சியை நிறுவுவதற்கான தேவையைக் கண்டனர். இந்த அடிப்படையில்தான், 2017 டிசம்பரில் LeU-வை அமைக்க, ஜனநாயக மற்றும் முற்போக்கு இயக்கம் (MDP), PD யிலிருந்து பிரிந்து வந்த ஒன்று, மற்றும் “Possibile” ஆகிய அனைத்தும் இத்தாலிய இடதுடன் (Sinistra Italiana, SI) ஒன்று சேர்ந்தன. LeU தலைவர்கள் பல தடவை கூறியவாறு, ரென்சி இல்லாது இருக்கும்வரை PD அரசாங்கத்தை அவர்கள் பொறுத்துக் கொள்வர்.

முன்னணி வேட்பாளர் Pietro Grasso முன்னாளைய செனெட் தலைவர் மற்றும் மாஃபியா எதிர்ப்பு வழக்கறிஞர் ஆவார். அவர் அரசியல் நிலைமையை ஒரு அரசுத்தரப்பு வழக்கறிஞரின் பார்வையில் பார்க்கிறார், அனைத்தையும் அரசுக்கு கீழ்ப்படுத்துவது, மற்றும் சுதந்திரமான இயக்கம் எதுவும் வளர்ந்துவிடாது உடனடியாகத் தடுப்பதற்கு அதிகாரத்தை சேர்ப்பதற்கு உடன்படுகிறார். மாச்செராட்டாவில் ஊர்வலத்தை இரத்துச்செய்வதற்கு விடுத்த அவரது அழைப்பில் இதுவும் கூட சாட்சியமானது.

வலதுசாரி மற்றும் பாசிச சக்திகள் இத்தாலிய அரசோடு மிக நெருக்கமாக இணைந்துள்ளன. பொலீஸ் மற்றும் இராணுவம் பாசிஸ்டுகளுக்கு அடிக்கடி பரிவுணர்வு காட்டிவருகின்றன, அதேவேளை ஆவணப்படுத்தப்படாத புலம்பெயர்ந்தோரையும் சோசலிஸ்டுகளையும் வேட்டையாடுகின்றன மற்றும் ஏகாதிபத்தியப் போர்களால் வெளியேறி வரும் மக்களுக்கு எதிராக எல்லைகளை மூடி வருகின்றன.