Print Version|Feedback
Corporate mass murder in London
லண்டனில் பெருநிறுவன பாரிய படுகொலை
Robert Stevens
17 June 2017
அதிர்ச்சியும் திகிலும் கோபமும் சினமுமாய் பொங்கி வழிந்தது. அண்மைக்கால பிரிட்டிஷ் வரலாற்றில் மோசமான தீவிபத்தில் பெரும் படுகொலை நடந்ததற்கு பொறுப்பானவர்களை தண்டிக்கவும் நீதிகோரியும் லண்டனில் வெள்ளிக்கிழமை அன்று ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கென்சிங்டன் டவுன்ஹாலால் சூழப்பட்டுள்ள Grenfell Tower இல் பலியாக்கப்பட்டவர்களுக்காக, கட்டிடத்தில் தடுப்பரண் செய்து வைக்கப்பட்டுள்ள நகர சபை அதிகாரிகளிடமிருந்து பதில்தரக்கோரி நூற்றுக் கணக்கானவர்கள் “நீதி வேண்டும்” என்று தொடர்ந்து முழங்கினர்.
பிரதம மந்திரி தெரெசா மே, கென்சிங்டனுக்கு வருகை தந்தவேளை, தேவாலயத்துக்குள் இருக்கும்படி நிர்பந்திக்கப்பட்டதுடன் துரத்திச்செல்லப்பட்டார் – கடும் பாதுகாப்பு சூழ இருந்த நிலையில்– ஆர்ப்பாட்டக்காரர்களும் ஊ என்று கத்தி “வெட்கக்கேடு”, “கோழை” என்று சத்தமிட்டனர்.
இந்த உணர்வு பிரிட்டனிலும் உலகெங்கிலும் அதன் எதிரொலிப்பைக் கண்டது.
புதன்கிழமை தீயில் குறைந்தபட்சம் 100 மற்றும் 150 தொழிலாள வரக்க குடியிருப்பாளர்களின் இழப்பால் இலட்சக்கணக்கானவர்கள் அதிர்ச்சியுற்றனர்.
அனைத்திற்கும் மேலாக மிக அதிர்ச்சி தருவது என்னவென்றால், இது உலகின் மிகச் செல்வம்படைத்த மாநகர் ஒன்றில் பிரிட்டனின் மிக செல்வம்படைத்த நகரமான Kensington and Chelsea இல் இடம்பெற்றது என்பதுதான். தலைநகரின் பல பகுதிகளைப் போலவே, இங்கும் அதி வறுமையும் அதி செல்வமும் அக்கம்பக்கமாக உள்ளது.
Kensington ம் Chelsea வும், Grenfell Tower அமைந்திருக்கும் இடத்தில் Lancaster West Estate-ல் வசிக்கும் மில்லியனர்கள் பில்லியனர்கள் தெளிவாகத் தெனபடக்கூடிய லண்டனின் மிகவும் சமூகரீதியாகப் பிளவுபட்ட பகுதிகளுள் ஒன்றாகும், நாட்டின் மிகவும் விலையுயர்ந்த Kensington இல் உள்ள விக்டோரியா வீதியில் சராசரி வீட்டுவிலை 8 மில்லியன் பவுண்டுகளாகும்.
இது, விரிந்துவரும் நிகழ்வுகளுக்கு ஒரு அரசியல் ரீதியான வெடிப்புக் கொண்ட ஊக்கத்தை வழங்கும் — அதனால்தான் போலீசும் நகரசபை அதிகாரிகளும் குடியிருப்போரின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களின் வேண்டுகோள்களை தடுக்கின்றனர் மற்றும் உண்மையான சாவு எண்ணிக்கையையும் மறைக்கின்றனர்.
Grenfell ஒரு அதிர்ச்சியூட்டும் துன்பியல் அல்ல, அது ஒரு குற்றம். அங்கே வாழ்ந்தவர்கள் அந்தக் கட்டிடத்தில் நிச்சயமாக தீவைத்திருந்தால் கொல்லப்பட்டிருப்பதுபோல் உயிர்பறிக்கப் பட்டிருக்கிறார்கள்.
பொது மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாத ஈவிரக்கமற்ற செலவுக் குறைப்புப் போக்கு, Grenfell சாவுகளுக்கான ஒரு அடிப்படைக்கு வித்திட்டது மற்றும் அடுக்குமாடி கட்டிடத்தின் தனியொரு வீட்டில் ஆரம்பத்தில் பற்றிய தீ அழிவுகரமாக விரைந்து பரவியதையும் உறுதிப்படுத்துகிறது.
கட்டிடத்தின் மேல் சேதாரத்தை தடுக்க பூசப்பட்ட பூச்சானது வெடித்து சுவாலை விட்டதன் காரணமாக தீ மிகவேகமாகப் பரவியது. கடந்த ஆண்டு “புதுப்பிப்புக்காக” அது சேர்க்கப்பட்டது. வெள்ளிக் கிழமை அன்று, அதில் பயன்படுத்தப்பட்ட காப்புப் பொருள் தீப்பற்றக்கூடியது என விடயம் வெளிப்பட்டபொழுது, பலர் ஏற்கனவே சந்தேகப்பட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. அது ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றால் தீயைத் தடுக்கும் மாற்றுப்பொருளைவிடவும் அந்தப் பூச்சுப்பொருள் ஒரு சதுர மீட்டருக்கு 2 பவுண்ட்டுகள் மலிவானது, இப்படி மிச்சப்படுத்தியும் கிடைப்பது வெறும் 500 பவுண்ட்டுகள்தான்.
இதுவும் மற்ற உயிராபத்தான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன அல்லது கன்சேர்வேட்டிவ் கட்சி ஆளும் Kensington மற்றும் Chelsea வின் ராயல் மாநகராட்சியால் அங்கீகாரம் வழங்கப்பட்டது மற்றும் அதன் சார்பில் Grenfell Tower ஐ நிர்வகிக்கும் Kensington மற்றும் Chelsea குடியிருப்போர் நிர்வாக அமைப்பாலும் அங்கீகரிக்கப்பட்டது. Grenfell Tower கட்டிடத்தில் மைய தீ எச்சரிக்கை அமைப்புமுறை இல்லை மற்றும் முறையான இடத்தில் நீர் எடுப்பதற்கான வழிவகைகள் வைக்கப்படவில்லை மற்றும் வெளியேறுவதற்கு ஒரே வழிகள் மட்டுந்தான் இருந்தது. Grenfell Tower பாதுகாப்பற்றது மற்றும் “மரணப்பொறி” என்று பல ஆண்டுகளாக குடியிருப்போர் குழுவிலிருந்து திரும்பத்திரும்ப வந்த எச்சரக்கைக்களை பொறுப்பாளர்கள் அலட்சியம் செய்தனர்.
அத்தகைய அதிர்ச்சியூட்டக்கூடிய கவனிக்கத்தக்க குற்றகரத்தன்மை ஆழமான காரணங்களை கொண்டுள்ளது. Grenfell Tower சாவுகள் வர்க்க சமுதாயத்தினதும் முதலாளித்துவ அமைப்பு முறையினதும் “சாதாரணமான“ செயற்பாடுகள் ஆகும்.
லண்டன், ஊக வணிக மற்றும் நிதிய ஒட்டுண்ணித்தனத்தின் ஒரு உலக மையமாகும். சொத்து வீட்டு சந்தையானது இந்த ஊழல் உலக வலைத் தளத்தின் ஒரு முக்கிய கூறாகும். தலைநகரில் உள்ள நிலமும் வீடும் உலகில் உள்ள மிகவும் இலாபம் தரக்கூடிய பண்டங்களுள் ஒன்றாகும். லண்டன் 80 பில்லியனர்களுக்கு வீடு மட்டுமல்ல, ஆனால் அதன் பல மாடிகள் கொண்ட வானளாவிய கட்டிடங்களில் 60 சதவீதம், எண்ணற்ற ஆடம்பர வீடுகள், ஃபிளாட்டுகள் என வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் பணக்கார வசிப்பாளர்களுக்கு சொந்தமானது, நிலைமை என்னவென்றால் அவர்கள் மிகவும் அருமையாக எப்போதாவதுதான் அதில் கால் வைத்திருப்பார்கள் அல்லது ஒருபோதும் வைத்திருந்திருக்க மாட்டார்கள்.
குறிப்பாக அவர்கள் விருப்பப்பட்ட பகுதிகளில் ஏழை குடியிருப்புவாசிகளை அகற்றுவதே இந்த சந்தையின் கோரிக்கைகளை மகிழ்விப்பதாகும். Lancaster West Estate வாசிகள் Grenfell Tower இல் முதலீடு செய்யத் தவறியது அவர்களை திட்டமிட்டு வெளியேற்றும் முயற்சி என வலியுறுத்துவது சரிதான் என்பது வழக்கமாகி விட்டது.
பணம்பண்ணும் தன்னலக்குழு ஆட்சியாலும் மக்களின் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அழிவுகரப் பாதிப்பிற்கு தீர்மானிக்கும் அவர்களது தலையாட்டிப் பொம்மைகளாலும் அதேபோன்ற சமூகவிரோத முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. வீடுகளும் பள்ளிக்கூடங்களும் பாதுகாப்பற்றவையாக இருக்கின்றன. மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன, படுக்கைகள் இல்லை, முக்கிய பணிகள் திரும்ப பெறப்பட்டுவிட்டன. ஏனென்றால் அவர்களை ஏற்கப்பட முடியாத இலாபம் அல்லது சாக்கடை எனவும், அது என்ன விலைகொடுத்தாவது சரிக்கட்ட வேண்டும் எனவும் சிலர் எங்கேயோ தீர்மானிக்கிறார்கள்.
சமூக சேவைகளை வெட்டல், தனியார்மயப்படுத்தல் மற்றும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தல் போன்றவற்றை நியாப்படுத்துவதற்காக “சமுதாயம் என்றவாறாக அங்கு ஒன்றும் இல்லை” என மார்கரெட் தாட்சர் அறிவித்த நாற்பதாண்டுகளுக்குப் பின்னர், தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் சமூக நிலைமைகள், மூன்றாம் உலகம் என அழைக்கப்படுவதுடன் ஒரு சமயம் தொடர்பு கொண்டிருந்த மட்டங்களை அடைந்திருக்கிறது. இது எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் இப்போது இருக்கின்ற ஆழமான வர்க்கப் பிளவுக்கும் சமூக சமத்துவமின்மைக்கும் சாட்சியமாக இருக்கிறது.
வியாழன் அன்று மக்களின் கோபத்தை எதிர்கொள்கையில், Grenfell Tower தீப்பற்றியது தொடர்பாக ஒரு பகிரங்க விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மே அறிவித்தார். இது அனைத்திற்கும் மேலாக அவரது சொந்த அரசாங்கத்திற்குள்ளே உள்ள அதற்குப் பொறுப்பான நபர்களை மூடிமறைத்தலையும் காப்பாற்றலையும் உறுதிப்படுத்துவதை நோக்கங்கொண்டது.
இந்த மரணங்களுக்கு பொறுப்பானவர்கள் கட்டாயம் கைது செய்யப்பட்டு குற்றவிசாரணைகளை எதிர்கொள்ள வேண்டும், உண்மை விசாரணைகளில் வெளிவர வேண்டும். லண்டன் தீ அணைப்பு சேவையை வெட்டிக் குறைத்ததற்கும் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை தளர்த்தியதற்கும் பொறுப்பான முன்னாள் லண்டன் மேயர் Boris Johnson மற்றும் Kensington மற்றும் Chelsea நகரசபை தலைவர் Nick Paget-Brown ஆகியோரும் அவர்களில் இருக்க வேண்டும்.
பெரும் செல்வந்தர்களது சேவையில் அதீதமாய் மேன்மக்களை குடியமர்த்தலுக்கு பொறுப்பான ஜோன்சன் போன்ற முன்னணி டோரிக்கள், லண்டன் சபைகளில் பெரும்பாலானவற்றை நடத்தும் தொழிற் கட்சி உட்பட அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் இதற்குப் பொறுப்பாவன, சமமான அளவில் குற்றச்சாட்டிற்கு தகுதியானவர்கள். லண்டன் மேயர் சாதிக் கான் லண்டன் வீடமைப்பு நெருக்கடியை தீர்க்கப் போவதாக அவர் பதவி ஏற்றதில் கூறியதற்குப் பின்னரிருந்து, இந்த நிலைமைகள் சரிசெய்யப்படாமல் தொடர்வதற்கு அனுமதித்த அவரது பங்கிற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.
Grenfell Tower இல் நடந்த சாவு எண்ணிக்கை, 2001ல் பயங்கரவாதத்தின் மீதான யுத்தம் என அழைக்கப்படுவது தொடங்கிய பின்னர், இங்கிலாந்தில் ஒவ்வொரு பயங்கரவாத தாக்குலிலும் விளைந்த மொத்த எண்ணிக்கைக்கு மேலாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தசாப்தத்தில் பிரிட்டனில் பயங்கரவாத, தாக்குதல் நடைபெறும்போதெல்லாம், அரசின் முழுப் படையும் கொண்டுவரப்படும். தனிப்பட்ட பயங்கரவாதியுடன் தீங்கற்ற வகையில் ஒருவர் தொடர்பு கொண்டிருந்தால் கூட, ஒவ்வொரு நபர் மீதும் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன. அவர்கள் உடனே கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்க இழுத்துச் செல்லப்பட்டனர் மற்றும் பலநாட்கள் கம்பிகளுக்குப் பின்னால் வைக்கப்பட்டனர். Grenfell Tower தீ தொடர்பாக, இதுவரை தனி ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை, குற்றம்கூட சாட்டப்படவில்லை.
நடைபெறும் போலீஸ் விசாரணைகள் மற்றும் பொது விசாரணைகளின் விளைவு எதுவாயினும், Grenfell Tower இல் பெருநிறுவன பெரும்படுகொலையின் அடிப்படைக் காரணத்தை கண்டுபிடிக்கப்போவதில்லை. ஏனென்றால், சொல்லவியலா துன்பத்தை, இறப்பை மற்றும் அழிவை மற்றும் பூமியின் பெரும்பான்மையான மக்களின் அழிவை அறுவடை செய்யும், தோல்வியுற்ற முதலாளித்துவ அமைப்பில் அது வேரூன்றி உள்ளது.
லண்டனில் அதிர்ச்சிக்குள்ளான வகையில் ஏற்பட்ட உயிரிழப்பு, சோசலிச வேலைத்திட்டத்தின் பின்னே தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டியதன் மற்றும் சமூகக் கொள்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் நிதிய ஒட்டுண்ணிகள் மற்றும் ஏமாற்றுவோரின் நலன்களுக்கு கீழ்ப்படுத்துதற்கு ஒரு முடிவு கட்டவேண்டியதுமான ஒரு அவசர தேவையை எடுத்துக் காட்டுகின்றன.