World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France prepares drastic overhaul of Labour Code

பிரான்ஸ் தொழிலாளர் விதிகளைக் கடுமையாக செப்பனிட தயாரிப்பு செய்கிறது

By Kumaran Ira
9 November 2015

Back to screen version

அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய தொழிலாளர் விதிகள் முதலாளிமார்களின் நலன்களுக்கேற்ப மேற்கொண்டும் மறுவரைவு செய்யப்படுமென பிரெஞ்சு பிரதம மந்திரி மானுவேல் வால்ஸ் புதனன்று அறிவித்த பின்னர், தொழிலாளர் துறை மந்திரி Myrian El Khomri இவ்வாரயிறுதியில் பல்வேறு பேட்டிகளில் அச்சீர்திருத்தத்தை முன்னிலைப்படுத்தினார்.

“21ஆம் நூற்றாண்டுக்கான தொழிலாளர் விதிகளை எளிமைப்படுத்தல், பேரம்பேசுதல், பாதுகாத்தல்" என்று தலைப்பிட்ட அந்த அறிக்கை, 20ஆம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தால் வென்றெடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மீது ஒரு கடுமையான தாக்குதலுக்கு வடிவமைப்பை அளிக்கிறது. பெரும்பாலும் அதன் நடவடிக்கைகள், செப்டம்பரில் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்திடம் சமர்பிக்கப்பட்ட Combrexelle அறிக்கையை அடிப்படையாக கொண்டிருக்கின்றன, அது தேசிய தொழிலாளர் விதிகளை மீறி நிறுவன-மட்டங்களிலான ஒப்பந்தங்களை பேரம்பேச தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும். அவ்விதத்தில் தொழிலாளர் விதி நடைமுறையில் பயனற்றதாக ஆக்கப்படும்.

அதன் நடவடிக்கைகள் "நிறுவன-மட்டத்திலான ஒப்பந்தங்களுக்கு அதிக முக்கியத்துவமளிக்கும், அடிமட்ட யதார்த்தங்களுக்கு நெருக்கமாக இருக்கும், மற்றும் தொழிற்சாலை-மட்டத்தில் பேரம்பேசல்களைப் பலப்படுத்தும். … இது சமூக பங்காளிகள்", அதாவது தொழிற்சங்கங்கள் மற்றும் நிர்வாகம், "வகிக்கும் பாத்திரத்தை பலப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் கடந்த மூன்று ஆண்டுகால நோக்கங்களோடு பொருந்துகிறது,” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

தொழில்ரீதியிலான கிளைகளை (professional branches), அல்லது தொழிற்சாலை குழுக்களை (industry groups) 700 இல் இருந்து 200 ஆக குறைப்பதானது, இப்போதைய ஒப்பந்தங்களை திருத்தி எழுத தொழிற்சங்கங்களுக்கும் மற்றும் முதலாளிமார்களுக்கும் கூடுதல் அதிகாரமும் வழங்கும். நிறுவனத்தின் தேவைக்கேற்ப வேலை நேரங்களை சீரமைப்பதன் மீது முதலாளிமார்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே கலந்தாலோசித்த பின்னர், தொழிலாளர் துறை அமைச்சகம், 2016 இன் மத்தியில் அதை சட்டமாக நிறைவேற்றுவதற்காக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு சட்ட வரைவை முன்வைக்கும்.

“சமூகம் அதன் தொழிலாளர்களை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதை மீண்டும் யோசிப்பதும், அதேவேளையில் நிறுவனங்கள் முதலீட்டை செய்யவும் மற்றும் வேலைகளை உருவாக்கவும் அவற்றிற்கு புதிய நம்பிக்கையை வழங்குவதும் அவசியமாகிறது,” என்பதையும் அது சேர்த்துக் கொள்கிறது.

உண்மையில் தொழில்வழங்குனர்களும் மற்றும் பிரான்சின் ஊழல்பீடித்த தொழிற்சங்க அதிகாரத்துவமும் அந்த தொழிலாளர் விதிமுறை வழங்கும் மிச்சமீதி பாதுகாப்புகளையும் முடிவுக்குக் கொண்டு வந்து, தொழிலாளர்களை தண்டிக்கும் நிலைமைகளை திணிப்பர் என்பதையே சோசலிஸ்ட் கட்சி (PS) நிர்வாகிகளும் பத்திரிகைகளும் தெளிவுபடுத்துகிறார்கள்.

வணிகங்களின் தேவைக்காக சோசலிஸ்ட் கட்சியின் அர்ப்பணிப்பை மீண்டும் மீண்டும் பெருமையடித்துள்ள வால்ஸ், தொழிலாளர் விதி சீர்திருத்தத்தை ஒரு "புரட்சியாக" புகழ்ந்துரைத்தார். எழுத்துபூர்வமாக வாரத்திற்கு 35 மணி நேர வேலையை அமைக்கும் பிரெஞ்சு சட்டத்திலிருந்து நழுவுவதற்கு ஒரு நிறுவனம் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அவர் விவரித்தார்.

“ஒரு புதிய பொருளை அறிமுகப்படுத்துவதற்காக ஒரு நிறுவனத்திற்கு 12 வாரங்களுக்கு ஷிப்ட் கணக்கை வாரத்திற்கு 48 மணி நேரமாக்க வேண்டியிருக்கிறதென வைத்துக் கொள்ளுங்கள். ஒருசில குறிப்பிட்ட துறைகளைத் தவிர மற்றும் நிர்வாக ஒப்புதல் இருந்தால் ஒழிய, இன்றைய நிலையில் அது சாத்தியமில்லை. நாளை, ஒரு நிறுவன-மட்டத்திலான உடன்படிக்கை அதை அனுமதிக்கிறதென்றால், அது சாத்தியமாகிவிடும்,” என்றவர் தெரிவித்தார்.

2012 க்குப் பின்னரில் இருந்து சோசலிஸ்ட் கட்சி அதிகரித்த சிக்கன நடைமுறைகள் மற்றும் வணிக-சார்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதற்குப் பின்னர், இந்த தொழிலாளர் விதிகள் வந்துள்ளன, அந்த நடவடிக்கைகளே தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்களுக்கு குழிபறித்து, கடந்த மூன்று ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மையை அதிகரிக்க இட்டுச் சென்றுள்ளது. “பொறுப்புறுதி உடன்படிக்கை" (pacte de responsabilité) என்றழைக்கப்பட்டதன் கீழ், சோசலிஸ்ட் கட்சி 50 பில்லியன் யூரோவிற்கும் அதிகமான சமூக வெட்டுக்களையும் மற்றும் 40 பில்லியனுக்கும் அதிகமான பெருநிறுவன வரிகளையும் திணித்தது.

இருந்தபோதினும் அது பொருளாதாரரீதியில் அதன் போட்டியாளர்களுக்கு பின்னால் நிற்க வேண்டியிருப்பதால், பிரெஞ்சு ஆளும் வர்க்கம் தொழிலாளர்களை விலையாக கொடுத்து அதன் போட்டித்தன்மையை பாரியளவில் அதிகரிப்பதற்கு இந்த தொழிலாளர் விதி சீர்திருத்தத்தை முக்கியமானதாக பார்க்கிறது. பத்திரிகைகளோ இந்த சீர்திருத்தத்தை, 2005 இல் ஹெகார்ட் ஷ்ரோடரின் கீழ் ஜேர்மனியின் சமூக ஜனநாயக அரசாங்கம் கொண்டு வந்த ஹார்ட்ஜ் IV விதி அளவிலான, அல்லது 1980களில் சுதந்திர-சந்தை நடவடிக்கையில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் அளவிலான ஒரு சமூக தாக்குதலாக வரவேற்கின்றன. Le Monde எழுதியது, “நாங்கள் நம்பிக்கைப் பெற தொடங்கியுள்ளோம். Combrexelle அறிக்கையுடன், சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான பிரான்ஸ், தொழிலாளர் விதிகளைச் செயல்படுத்தும். … அங்கே சுதந்திர சந்தை புரட்சியின் ஆரம்பத்தில் நடந்த புராணகால போராட்டங்களுக்கு திரும்ப வேண்டிய அவசியமில்லை: அதாவது ஆகஸ்ட் 1981 இல் ரீகன் 11,000 விமான போராக்குவரத்து கட்டுப்பாட்டு பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியதைப் போலவோ அல்லது மார்கரெட் தாட்சரால் பிரிட்டிஷ் சுரங்க தொழிலாளர்கள் தோற்கடிக்கப்படுவதற்கு இட்டுச் சென்ற ஓயாத போராட்டங்களை போலவோ செல்ல வேண்டியதில்லை. பழைய ஐரோப்பிய சமூக ஜனநாயகங்கள் அனைத்தும் அமைதியாக செய்ததைப் போல, அதை தைரியமாக திணிக்க முயல்வதன் மூலமாக, பிரான்ஸ் அந்த விடயத்தை நம்பத்தகுந்த வகையில் கையாளும்.” பெரும் பணக்காரர்களின் நிதியியல் நலன்களுக்காக, சட்டத்தை உடைக்கும் ஒரு போலி-சட்ட தந்திரமாக உள்ள இந்த மிக மோசமான மக்கள்விரோத நடவடிக்கையை திணிப்பதற்கு, முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளர்களுக்கு எதிராக தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கூட்டுறவை நாடுகிறது. 1980களுக்குப் பின்னரில் இருந்து, பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு எதிராக திருப்பிவிடப்பட்ட ஒரு நடுத்தர வர்க்க பொலிஸ் படையின் சமூக குணாம்சத்தை விட சற்று கூடுதலான சுபாவத்தை ஏற்று, நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்துள்ளன.

அவை பெருகியளவில் அரசு மற்றும் பெரு வணிகங்களிடமிருந்து நிதிகளை பெறுகின்ற நிலையில், தொழிலாளர் போராட்டங்களை தடுக்க அவை பெரும்பிரயத்தனம் செய்கின்றன. அவற்றிற்கான பெரும்பாலான நிதிகள் (90 சதவீதம்) நிறுவன மற்றும் அரசு மானியங்களிலிருந்து வருகின்ற நிலையில், அவற்றின் வரவு-செலவு திட்டத்தில் சங்க அங்கத்தவர்களின் சந்தா பிரதிநிதித்துவம் வெறும் 3 இல் இருந்து 4 சதவீதமே ஆகும். அரசு மற்றும் வணிகத்தின் மீது தொழிற்சங்கங்கள் நிதிக்காக சார்ந்திருப்பதானது, தசாப்த காலங்களில் தொழிலாள வர்க்கத்தில் அவற்றின் அடித்தளம் பொறிந்து போயிருப்பதைப் பிரதிபலிக்கிறது; வெறும் 7 சதவீத பிரெஞ்சு தொழிலாளர் சக்தி மட்டுமே தொழிற்சங்கமயமாக உள்ளது.

பிரான்சின் பிரதான வர்த்தக சம்மேளம் (Medef) அச்சீர்திருத்ததை வரவேற்றதுடன், வணிகங்களுக்கு சாதகமாக மேற்கொண்டும் தொழிலாளர் விதிகளை மாற்றியமைக்க அது அழைப்புவிடுத்தது. மெடெஃப் தலைவர் பியர் கட்டாஸ் கூறுகையில், “இன்றைய அறிவிப்புகள் சரியான திசையில் செல்கின்றன, ஆனால் நாம் இன்னும் மேற்கொண்டு செல்ல வேண்டும்,” என்றார்.

“புரிந்துகொள்ளவியலாத தொழிலாளர் விதிகள் என்றும், அவை பருத்துப் போயிருக்கின்றன என்றும்" பரிகசித்து, கட்டாஸ் தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக கூடிவேலை செய்ய அழைப்புவிடுத்தார்: “சந்தேகம் என்றவொரு கலாச்சாரத்திலிருந்து, பேச்சுவார்த்தை மற்றும் நம்பிக்கை எனும் ஒரு கலாச்சாரத்திற்கு கடந்துசெல்லும் தைரியத்தை நாம் பெற வேண்டும்!”

தொழிற்சங்கங்களும் கட்டாஸிற்கு சாதகமாக விடையிறுத்தன. சோசலிஸ்ட் கட்சியோடு இணைப்பு கொண்ட ஜனநாயக தொழிலாளர் சம்மேளனம் (CFDT) பகிரங்கமாகவே தொழிலாளர் விதி சீர்திருத்தத்தை பாராட்டியது. அது எரிச்சலூட்டும் வகையில் அதை "தொழிலாளர்களுக்கான சமூக முன்னேற்றம்" என்றும், “தொழிலாளர் சட்டத்தின் மீது தொழிலாளர்களுக்கு அதிகமான புரிதலை உறுதிப்படுத்தி அது சமூக பேச்சுவார்த்தைகளை பலப்படுத்துவதாகவும்" புகழ்ந்தது.

தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பான (CGT) ஸ்ராலினிச தொழிற்சங்கம் அச்சீர்திருத்தம் குறித்து ஒருசில பயனற்ற விமர்சனங்களை மொழிந்தது, அதை "மெடெஃப்க்கான ஒரு புதிய அன்பளிப்பு" என்றது குறிப்பிட்டது. எவ்வாறிருப்பினும் 2012 இல் சோசலிஸ்ட் கட்சியின் பிரான்சுவா ஹோலாண்ட் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து அக்கட்சியின் பிற்போக்குத்தனமான சமூக நிகழ்ச்சிநிரலுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பைத் தொடர்ந்து திட்டமிட்டு CGT ஒடுக்கி வருகிறது.

அனைத்திற்கும் மேலாக முதலாளிமார்களின் கோரிக்கைகள் ஒட்டுமொத்தமாக தொழிற்சங்கங்களின் பரந்த கொள்கைகளுடன் பொருந்துகின்றன. சமீபத்திய ஆண்டுகளில், அவை இழப்பீட்டுத்தொகை (compensation) இல்லாமலேயே வேலை நேரங்களை நீடிக்கும் பல உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளன. ஆண்டுக்கு 500 மில்லியன் யூரோ கிடைக்கும் வகையில் ரெனால்ட் வாகன உற்பத்தி நிறுவனம் அதன் தொழிலாளர் சக்தியைக் குறைக்கவும், கூலி உயர்வுகளை முடக்கவும் மற்றும் வேலை நேரங்களை 6.5 சதவீதம் உயர்த்தவும் தொழிற்சங்கங்கள் 2013 இல் அந்நிறுவனத்துடன் ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. செப்டம்பரில் அவை ஹம்பாஹ்கில் உள்ள மெர்சிடஸ்-டைம்லெர் துணைநிறுவனமான Smart இல் வெறும் 37 மணிநேர சம்பளத்திற்கு 39 மணிநேர வார வேலைக்கு ஒப்புதல் அளித்தன.