சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

“Free Speech” hypocrisy in the aftermath of the attack on Charlie Hebdo

சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பின்னர்பேச்சு சுதந்திரம்" எனும் பாசாங்குத்தனம்

David North
9 January 2015

Use this version to printSend feedback

சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகங்கள் மீதான தாக்குதல் பொதுமக்களை அதிர்ச்சியூட்டி உள்ளது, அவர்கள் பாரீசின் மையத்தில் 12 பேரது பயங்கர மரணத்தால் பீதியுற்றுள்ளனர். துப்பாக்கிதாரிகள் அவர்களது ஆயுதங்களைக் கொண்டு சுடுவதையும், ஏற்கனவே காயப்பட்ட ஒரு பொலிஸ்காரரை அவர்கள் கொல்வதையும் காட்டும் வீடியோ படக்காட்சிகள், மில்லியன் கணக்கானவர்களால் பார்க்கப்பட்டு, அந்த புதன்கிழமை சம்பவங்களைக் குறித்து ஒரு அசாதாரணமான யதார்த்தத்தைக் காட்டியுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடந்த பின்னர் உடனடியாக, அரசும் ஊடகங்களும் பொதுமக்களின் அச்சம் மற்றும் குழப்பத்தைச் சுரண்டுவதற்கு முனைந்து வருகின்றன. மீண்டுமொருமுறை அரசியல் திவால்நிலைமை மற்றும் பயங்கரவாதத்தின் இன்றியமையாத பிற்போக்குத்தன குணாம்சம் அம்பலப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளால் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தைக் கொடுங்கோன்மை மற்றும் இராணுவவாதத்திற்கு ஆதரவாக திருப்பிவிட பிரயோகிக்கும் அரசினது நலன்களுக்கு அது சேவை செய்கிறது. 2003இல், புஷ் நிர்வாகம் ஈராக்கின் மீது படையெடுத்த போது, பிரெஞ்சு மக்களின் எதிர்ப்பானது ஜனாதிபதி ஜாக் சிராக் தலைமையிலான அரசாங்கம் அமெரிக்காவிடமிருந்து பாரிய அரசியல் அழுத்தத்தின் முன்னிலையிலும், அந்த போரை எதிர்க்க நிர்பந்திக்கும் அளவுக்கு மிகவும் அதிகளவில் இருந்தது. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதோ, ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" அமெரிக்காவின் பிரதான கூட்டாளியாக பிரான்ஸைத் திருப்ப போராடி வருகின்ற நிலையில், பாரீஸில் நடந்த இந்த தாக்குதல் அவரது கரங்களில் விளையாடுகிறது.

இத்தகைய முயற்சிகளில் ஹோலாண்ட் ஊடங்களைச் சார்ந்திருக்க முடியும், அவை இதுபோன்ற சூழல்களில் அவற்றின் மொத்த சக்தியையும் உணர்வுப்பூர்வமாக உபாயங்கள் செய்வதிலும் மற்றும் பொதுமக்களின் அரசியல் நிலைநோக்கைப் பிறழச் செய்வதையும் நோக்கி திருப்பி விடுகின்றன. முதலாளித்துவ ஊடகங்கள், அரைகுறை உண்மைகளுடன் மற்றும் முற்றுமுதலான பொய்களுடன் தகவல்களைத் திறமையாக நசுக்குவதுடன் சேர்ந்து, அவை வழங்கும் பொருள்விளக்கங்கள் பரந்த பொதுமக்களின் அடிப்படை உள்ளுணர்வுகளுக்கு மட்டும் முறையீடு வழங்குவதைக் கணக்கில் கொள்ளவில்லை, மாறாக அவர்களது ஜனநாயக மற்றும் கருத்துவாத உணர்வுகளையும் கணக்கில் எடுக்கின்றன.

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதிலும், சார்லி ஹெப்டோ இதழ் மீதான தாக்குதல், பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதலென்றும், இதழாளர்கள் அவர்களது சுதந்திரத்தை இழக்காமல் அல்லது அவர்களது உயிர் குறித்த பயமின்றி அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு ஜனநாயக சமூகத்தில் அன்னியப்படுத்த முடியாத விதத்தில் அவர்களுக்கு உரிமை இருக்கிறதென்றும் கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன. சார்லி ஹெப்டோ கேலிச்சித்திர ஓவியர்கள் மற்றும் பதிப்பாசிரியர்களின் படுகொலை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மிகவும் நேசத்திற்குரியதாக இருந்து வந்ததாக கூறப்படும் பேச்சு சுதந்திரத்தின் கோட்பாடுகள் மீதான ஒரு தாக்குதலாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இவ்விதத்தில் பார்த்தால், சார்லி ஹெப்டோ மீதான தாக்குதல், மேற்கத்திய "சுதந்திரங்களை" சகித்துக் கொள்ள முடியாத முஸ்லீம்களின் மற்றொரு அட்டூழியமாக தான் காட்டப்படுகிறது. இதிலிருந்து என்ன முடிவுக்கு வர முடிகிறதென்றால் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்"—அதாவது மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, வடக்கு மற்றும் மத்திய ஆபிரிக்கா மீதான ஏகாதிபத்திய தாக்குதல்ஒரு தவிர்க்கவியலாத அவசியமென்று ஆகிறது.

ஜனநாயக பாசாங்குத்தனத்தின் இந்த பெருங்கூத்துக்கு இடையே, அமெரிக்க இராணுவம், மத்திய கிழக்கில் அதன் போரினூடாக, குறைந்தபட்சம் 15 இதழாளர்கள் கொல்லப்படுவதற்குப் பொறுப்பாகும் என்ற உண்மையைக் குறித்து எந்த குறிப்பும் காட்டப்படுவதில்லை. தாக்குதலின் கீழ் இருக்கும் பேச்சு சுதந்திரம்" மீது வழங்கப்பட்டு வருகின்ற பொருள்விளக்கத்ததில், அங்கே 2003இல் பாக்தாத்தில் அல் ஜசீரா அலுவலகங்கள் மீது வானிலிருந்து தரைக்கு செலுத்தும் ஏவுகணைகளைக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலைக் குறித்து எதையும் குறிப்பிட அங்கே இடமில்லாமல் போய்விடுகிறது, அதிலேயும் மூன்று இதழாளர்கள் கொல்லப்பட்டார்கள், நான்கு பேர் காயமுற்றனர்.

அல்லது பாக்தாத்தில் வேலை செய்து வந்த புகைப்பட பணியாளர்கள் நமிர் நூர்-எல்தீன் மற்றும் ஓட்டுனர் சயித் சமாஹ் ஆகிய இரண்டு ராய்டரின் இதழாளர்கள் ஜூலை 2007இல் கொல்லப்பட்டது குறித்தும் எதுவும் எழுதப்படுவதும் இல்லை அல்லது சொல்லப்படுவதும் இல்லை. அந்த இரண்டு நபர்களுமே கிழக்கு பாக்தாத்தில் வேலைக்குப் பொறுப்பேற்றிருந்த போது, அமெரிக்க அப்பாச்சி துப்பாக்கிதாங்கிய விமானங்களால் திட்டமிட்டு இலக்கில் வைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

ஒரு அமெரிக்க சிப்பாய் கோப்ரல் பிராட்லி செல்சியா மானிங்கிடமிருந்து பெறப்பட்ட இரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டதன் விளைவாகஇரண்டு இதழாளர்களும் அத்துடன் ஒரு ஈராக்கிய குழுவினரும் கொல்லப்பட்ட இரத்தம் உறைய வைக்கும் படுகொலையின் ஒரு வீடியோவைஇது துப்பாக்கியேந்திய விமானம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டதுஅமெரிக்க மற்றும் சர்வதேச மக்களல் முதலில் பார்க்க முடிந்தது.

மேலும் விக்கிலீக்ஸ் பேச்சு சுதந்திரத்தின் நடைமுறையை பாதுகாக்க அமெரிக்காவும் ஐரோப்பாவும் எவ்வாறு செயல்பட்டுள்ளன? விக்கிலீக்ஸின் ஸ்தாபகரும் பிரசுரிப்பாளருமான ஜூலியன் அசான்ஜ் இரக்கமின்றி வழக்குவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள முன்னணி அரசியல் மற்றும் ஊடக பிரபலங்கள் அவரை ஒரு "பயங்கரவாதி" என்று குற்றஞ்சாட்டியதோடு, சிலர் அவர் படுகொலை செய்யப்பட வேண்டுமென்றும் கூட பகிரங்கமாக அழைப்புவிடுத்தனர். அமெரிக்க மற்றும் ஸ்வீடன் உளவுத்துறை சேவைகளால் ஜோடிக்கப்பட்ட மோசடி "கற்பழிப்பு" வழக்குகளில் இன்னும் இழுக்கப்பட்டு வருகிறார். அவர் இலண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் புகலிடம் கோர நிர்பந்திக்கப்பட்டார், அந்த தூதரகத்தை விட்டு அவர் வெளியே வந்தால் அவரைப் பிடித்துக் கொள்ள பிரிட்டிஷ் பொலிஸ் தொடர் காவலில் வைக்கப்பட்டுள்ளது. செல்சியா மானிங், தேசத்துரோக குற்றத்திற்காக 35 ஆண்டுகள் தண்டனை பெற்று, தற்போது சிறையில் உள்ளார்.

இப்படித்தான் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மாபெரும் முதலாளித்துவ "ஜனநாயகங்கள்" பேச்சு சுதந்திரம் மற்றும் இதழாளர்களின் பாதுகாப்புக்கு அவற்றின் கடமைப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன!

அரசு மற்றும் ஊடகங்களால் சுழற்றிவிடப்படும் நேர்மையற்ற மற்றும் போலித்தனமான வனப்புரைகள், சார்லி ஹெப்டோவையும் படுகொலை செய்யப்பட்ட அதன் கேலிச்சித்திர ஓவியர்களையும் மற்றும் இதழாளர்களையும் பேச்சு சுதந்திரத்திற்காக உயிர்நீத்த தியாகிகளாக மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் சாகச இதழியலின் போற்றுதலுக்குரிய ஜனநாயக பாரம்பரியத்தின் பிரதிநிதிகளாக தூக்கிப்பிடிக்க கோருகின்றன.

பைனான்சியல் டைம்ஸில் புதனன்று பிரசுரமான ஒரு கட்டுரையில் தாராளவாத வரலாற்றாளர் சைமன் ஷாமா, சுதந்திரத்தின் ஜீவநாடியாக" உள்ள இதழியல் பாரபட்சமின்மையின் பெருமைமிகு பாரம்பரியத்தில் சார்லி ஹெப்டோவை நிறுத்துகிறார். பெருந்தலைவர்கள் மற்றும் சக்தி வாய்ந்தவர்கள் மீதும் அவர்களது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி இருந்த பதினாறாம் நூற்றாண்டுக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட தலைசிறந்த ஐரோப்பிய நையாண்டி ஓவியர்களை அவர் நினைவுகூர்கிறார். 1500களில் டச் சுதந்திர போராட்டத்தை இரத்தத்தில் மூழ்கடித்த மூர்க்கமான அல்பாவின் கோமானும்; பிரெஞ்சு "சூரிய மன்னர்" பதின்நான்காம் லூயி; பிரிட்டிஷ் பிரதம மந்திரி வில்லியம் பிட்; மற்றும் வேல்ஸ் இளவரசர் ஆகியோரும் அவர்களது ஒப்பற்ற இலக்குகளில் இடம் பெற்றிருந்தார்கள் என்று ஸ்சாமா நமக்கு நினைவூட்டுகிறார். தேனீர் விடுதிகளிலும் மற்றும் ஓய்விடங்களிலும் காற்றோட்டமாக அமர்ந்து ஏளனத்திற்குரிய சொகுசான ஓநாய்களை வரையும், நையாண்டி அரசியலின் சுவாசம் மாறியுள்ளது, அந்த கேலிச்சித்தரிப்புகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் பதிப்பிக்கப்படுகிறது, என்று ஷாமா எழுதுகிறார்.

ஷாமா, சார்லி ஹெப்டோவை அதற்கு சம்பந்தமில்லாத ஒரு பாரம்பரியத்திற்குள் கொண்டு வந்து நிறுத்துகிறார். ஷாமா குறிப்பிடும் தலைச்சிறந்த நையாண்டி ஓவியர்கள் அனைவரும் ஒரு ஜனநாயக அறிவொளியின் பிரதிநிதிகளாக இருந்தனர், அவர்களின் நையாண்டி கற்பனையை அவர்கள் பிரபுத்துவ செல்வாக்கினது சக்தி வாய்ந்த மற்றும் ஊழல்மிகுந்த பாதுகாவலர்களுக்கு எதிராக திருப்பி இருந்தனர். ஆனால் சிறிதும் தயவுதாட்சண்யமின்றி முஸ்லீம்களை இழிபடுத்தும் சித்திரங்களில் சார்லி ஹெப்டோ ஏழைகளையும், அதிகாரமற்ற பலவீனர்களையும் ஏளனப்படுத்தி இருந்தது.

சார்லி ஹெப்டோவின் அந்த இழிவார்ந்த, வெறுப்பூட்டும் மற்றும் கீழ்தரமான பாத்திரம் குறித்து அப்பட்டமாகவும், நேர்மையோடும் பேசுவதானால், அதன் நபர்களைப் படுகொலை செய்தவர்களை மன்னிக்க கூடாது தான். ஆனால் "நான் தான் சார்லி" என்ற முழக்கம் கையாளப்படுகையில், ஊடகங்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் முழக்கமாக அது பலமாக ஊக்குவிக்கப்படுகையில், அரசு மற்றும் ஊடக பிரச்சாரத்தில் மூழ்கிப் போயிராதவர்கள் இவ்வாறு தான் பதிலளிக்க கடமைப்படுவர்: நாங்கள் அந்த இதழ் மீதான வன்முறை தாக்குதலை எதிர்க்கிறோம், ஆனால் நாங்கள்­­ 'சார்லியும்' அல்ல­—அதனுடன் எங்களுக்கு பொதுவில் எதுவும் கிடையாது," என்பர்.

மக்கள் மத்தியில் மதவாத செல்வாக்கைக் கடந்து வரும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்டுகள் ஒன்றும் புதியவர்கள் இல்லை. ஆனால் மதவாத நம்பிக்கை என்பது பெருந்துன்பங்கள் மற்றும் பெரும் கஷ்டமான நிலைமைகளால் தாங்கிப் பிடிக்கப்பட்டுள்ளது என்ற புரிதலுடன் அந்த போராட்டத்தை நடத்துகின்றனர். மதம் ஏளனப்படுத்துவதற்குரியதல்ல, மாறாக அதை கார்ல் மார்க்ஸ் புரிந்து கொண்டு விமர்சித்தவாறு புரிந்து கொண்டு விமர்சிக்கப்பட்ட வேண்டும்:

மதரீதியிலான அவலங்கள் என்பதுநிஜமான அவலங்களின் வெளிப்பாடாகும், மேலும் நிஜமான அவலங்களுக்கு எதிரான போராட்டமும் ஆகும். மதம் என்பது ஒடுக்கப்பட்ட ஜீவனின் ஏக்கப் பெருமூச்சாக, ஓர் இதயமற்ற உலகின் இதயமாக, உயிரற்ற நிலைமைகளில் வெறுமனே உயிரோட்டத்தைப் போல இருக்கிறது. அது மக்களின் போதைப்பொருளாக உள்ளது.

மக்களின் கற்பனையான மனநிம்மதியாக உள்ள மதத்தை அகற்றுதல் என்பது அவர்களின் நிஜமான மகிழ்ச்சியை கோருவதைப் போன்றதாகும். நிலவும் விவகாரங்கள் குறித்து பிரமைகளைக் கைவிடுமாறு கோருவது, அந்த பிரம்மைகளை அவசியமாக கொண்டிருக்கும் அரசு விவகாரங்களைக் கைவிட கோருவதாகும். ஆகவே மதத்தின் மீதான விமர்சனம் என்பது மதத்தின் ஒளிவட்டமாக விளங்கும் கண்ணீர் பள்ளத்தாக்கினது தோற்றுவாயை விமர்சிப்பதாக உள்ளது. [Contribution to Critique of Hegel’s Philosophy of Law, in Marx and Engels Collected Works, Volume 3 (New York, 1975), pp. 175-76]

சார்லி ஹெப்டோவில் வெளிப்பாட்டைக் கண்டுள்ள முன்னாள்-இடது அரசியல் வெறுப்பின் ஆரோக்கியமற்ற சூழலில் இருந்து மார்க்சிசத்தைப் பிரிக்கும் இந்த புத்திஜீவித மற்றும் தார்மீக இடைவெளியைக் கண்டுகொள்வதற்கு, இத்தகைய வார்த்தைகளைத் தான் ஒருவர் வாசிக்க வேண்டியுள்ளது. அவர்களின் சிறுபிள்ளைத்தனத்திலும் மற்றும் பெரும்பாலும் முஸ்லீம் மதம் மற்றும் அதன் பாரம்பரியங்களைக் குறித்து ஆபாசமாக இழிவுபடுத்துவதிலும், அறநெறி மற்றும் புத்திஜீவித கருத்துக்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், அவர்களது கருத்துக்களில் அறிவொளி வழங்கக்கூடிய எதுவும் அங்கே இல்லை.

சார்லி ஹெப்டோவின் பல பல அட்டைப்படங்களில் வெளியாகி உள்ள சிடுமூஞ்சித்தனமான வெறுப்பூட்டும் முஸ்லீம்-விரோத கேலிச்சித்திரங்கள் பிரான்சில் வலதுசாரி பேரினவாத இயக்கங்களின் வளர்ச்சிக்கு உதவியுள்ளதுடன், துணைபோயும் உள்ளன. சார்லி ஹெப்டோவினை பாதுகாக்கும் வழியில், அதன் கேலிச்சித்தரங்கள் அனைத்தும் "மிகவும் கேலிக்குரியவை" என்றும், அவை எந்த அரசியல் விளைவுகளையும் கொண்டிருக்கவில்லை என்றும் வாதிடுவது முற்றிலும் அர்த்தமற்றதாகும். பிரெஞ்சு அரசாங்கம் ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கில் அதன் இராணுவ நிகழ்ச்சிநிரலை அதிகரிக்க ஆதரவைத் திரட்டுவதற்காக பெருமுயற்சி செய்து வருகிறது என்ற உண்மைக்கு அப்பாற்பட்டு, பிரான்ஸில் நவ-பாசிச தேசிய முன்னணியின் செல்வாக்கு வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த அரசியல் சூழலில், சார்லி ஹெப்டோ அரசியல்மயப்பட்ட முஸ்லீம்-விரோத உணர்வின் ஒரு வடிவம் வளர்வதற்கு உதவியுள்ளது, அது 1890களில் பிரான்சில் ஒரு பாரிய இயக்கமாக எழுச்சி கண்ட அரசியல்மயப்பட்ட யூத-எதிர்ப்புவாதத்திற்கு பெரிதும் பொருந்தியதன்மையை ஏற்கிறது.

முஸ்லீம்களைக் குறித்து ஒரேமாதிரியாக வஞ்சகமான படங்களை நிரப்பிக் கொடுக்கும் கொடூரமான மற்றும் கொச்சையான கேலிச்சித்திரங்களை அது பயன்படுத்தியதில், ஜேர்மனியின் சார்பாக ஒரு யூத அதிகாரி உளவுவேலைகளில் ஈடுபட்டதாக பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டதற்குப் பின்னர், 1894இல் வெடித்த பிரபல டெரெஃபஸ் விவகாரத்தின் (Dreyfus Affair) போது, பிரான்ஸ் மூழ்கடித்திருந்த யூத-எதிர்ப்புவாத கிளர்ச்சிக்கு முட்டுக்கொடுப்பதில் ஒரு முக்கிய பங்காற்றிய மலிந்த இனவாத பிரசுரங்களையே சார்லி ஹெப்டோ நினைவுபடுத்துகிறது. மக்களிடையே யூத வெறுப்பைத் தூண்டிவிடுவதில், இழிபெயர்பெற்ற எடோர்டு அடால்ஃப் ட்ரூமோன்ட்டால் பிரசுரிக்கப்பட்ட La Libre Parole [பேச்சு சுதந்திரம்”] எனும் இதழ், பெரிதும் திறமையாக கேலிச்சித்திரங்களைப் பயன்படுத்தியது, அது பரிச்சயமான யூத-எதிர்ப்பு சாதனங்களைப் பயன்படுத்தியது. அந்த கேலிச்சித்திரங்கள் டெரெஃபஸ் மற்றும் அவரது பாதுகாவலர்கள், அதாவது மாபெரும் நாவலாசிரியரும் J’Accuse இன் ஆசிரியருமான எமில் சோலா போன்றவர்களுக்கு எதிராக குண்டர்களை ஏவிவிட்டு, பொதுக்கருத்தைத் தூண்டிவிடுவதில் சேவை செய்தது.

நீண்டநெடிய அரசியல் கோட்பாடுகளின் அடித்தளத்தில் உலக சோசலிச வலைத் தளம், சார்லி ஹெப்டோ மீதான பயங்கரவாத தாக்குதலை எதிர்க்கிறது மற்றும் சிறிதும் தயக்கமின்றி கண்டிக்கிறது. ஆனால் ஜனநாயகம் மற்றும் பேச்சு சுதந்திரத்தின் காரணமாக சார்லி ஹெப்டோவை ஒரு தியாகியாக சித்தரிப்பதில் நாங்கள் சேர்ந்து கொள்வதை நிராகரிக்கிறோம், மேலும் இந்த போலித்தனமான மற்றும் நேர்மையற்ற பிரச்சாரத்தை ஊக்குவிக்கின்ற பிற்போக்குத்தனமான நிகழ்ச்சிநிரலில் இருந்து இடையறாது விழிப்புடன் இருக்குமாறு நாம் எமது வாசகர்களை எச்சரிக்கிறோம்.