World Socialist Web Site www.wsws.org |
Wealth of world’s billionaires: $7.3 trillion உலக பில்லியனர்களின் செல்வவளம்: 7.3 ட்ரில்லியன் டாலர்கள்
Joseph Kishore Wealth-X மற்றும் UBSஆல் நேற்று வெளியிடப்பட்ட ஒரு புதிய அறிக்கையின்படி, உலக பில்லியனர்களின் செல்வவளம் இப்போது 7.3 ட்ரில்லியன் டாலர்களாகியுள்ளது, இது கடந்த ஆண்டைவிட 12 சதவீத உயர்வாகும். உலகில் 2009இல் 1,360 ஆகவும், 2013இல் 2,170 ஆகவும் இருந்த பில்லியனர்கள், ஒரு சாதனையளவிற்கு 2,325 ஆக உயர்ந்திருக்கிறார்கள். உலக மக்கள் தொகையில் பில்லியனர்கள் .000033 சதவீதமாக இருக்கிறார்கள், அல்லது வேறுவிதத்தில் கூறுவதானால், ஏறத்தாழ ஒவ்வொரு மூன்று மில்லியன் மக்களில் ஒருவர் பில்லியனராக இருக்கிறார். இருந்தபோதினும், இந்த மிகமிகச் சிறிய சமூக அடுக்கு மக்களின் அடிமட்டத்திலிருக்கும் பாதிபேரின், அல்லது 3.5 பில்லியன் மக்களின் மொத்த செல்வவளத்தை விட சுமார் 4.5 மடங்கு செல்வவளத்தைக் உடமையாக கொண்டிருக்கிறது. இதர சில ஒப்பீடுகள் இந்த புள்ளிவிபரங்களை விளக்கிக்காட்ட உதவுகின்றன. பத்து அல்லது நூறு ஆயிரக்கணக்கானவர்களையும் கூட கொல்லக்கூடிய எபோலா தொற்றுவியாதியால் தற்போது பாதிக்கப்பட்டுள்ள லைபீரியா மற்றும் சியாரா லியோனின் நிகர மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஓராண்டில் தயாரிக்கப்பட்ட மொத்த பண்டங்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பு) வெறுமனே 7 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருக்கிறது —அது 2,235 தனிநபர்களின் செல்வவளத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காக இருக்கிறது. திவால்நிலைமைக்கான நடவடிக்கையின் பாகமாக அவர்களின் ஓய்வூதியங்கள் வெட்டப்படுவதை மற்றும் அவர்களுக்கான தண்ணீர் வினியோக சேவை நிறுத்தப்படுவதைப் பார்த்துவரும் தொழிலாளர்கள் உள்ள மிச்சிகனின் டெட்ராய்ட் நகரத்தின் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை சுமார் 330 மில்லியன் டாலராக இருக்கிறது, இதை உலகின் பில்லியனர்களால் இருபதாயிரம் முறை சரி செய்ய முடியும். பங்குச்சந்தையும் மற்றும் நிதியியல் மூலதனமும், உலக பில்லியனர்களின் செல்வ வளத்திற்கு பின்னால் இருக்கும் உந்து சக்திகளாக இருக்கின்றன. Wealth-X நிறுவனத்தின் கருத்துப்படி, பில்லியனர்கள் இருக்கும் முதன்மை தொழில்துறை, "நிதியியல், வங்கியியல் மற்றும் முதலீட்டுத்துறை" ஆகும், இது மொத்த பில்லியனர்களின் எண்ணிக்கையில் 20 சதவீதத்திற்கு நெருக்கமாக இருக்கிறது. இதற்கடுத்ததாக தொழில்துறை ஜாம்பவான்கள் 12 சதவீதத்திலும் மற்றும் கட்டிடம்-நில வியாபாரம் 7 சதவீதத்திலும் இருக்கிறது. ஆறு பில்லியனர்களில் ஒருவருக்கு மேற்பட்டவர் நியூ யோர்க், மாஸ்கோ, ஹாங்காங் மற்றும் இலண்டனின் நிதியியல் தலைநகரங்களில் இருக்கிறார்கள். இந்த புள்ளிவிபரங்களுக்கு பின்னால் முதலாளித்துவ அமைப்புமுறை செயல்படுவதற்கு அவசியமான ஒரு சமூக உறவுமுறை தங்கியுள்ளது. பிரதான முதலாளித்துவ அரசுகள் மற்றும் மத்திய வங்கிகள் நிதியுதவி வழங்கி துணையாக இருந்து செய்த ஒரு பாரிய செல்வவள மறுபங்கீட்டிலிருந்து, பெருநிறுவன மற்றும் நிதியியல் பிரபுத்துவம் ஆதாயமடைந்துள்ளது. இது வெறுமனே பெருமளவிலான செல்வவளம் பெருமளவிலான வறுமைக்கு பக்கத்தில் நிற்கிறது என்பது மட்டுமல்ல, மாறாக ஒன்று மற்றதன் நேரடி விளைபொருளாகும். அமெரிக்க முதலாளித்துவம் உலக பொருளாதார நெருக்கடியினதும் மற்றும் ஆளும் வர்க்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட சமூக எதிர்-புரட்சி இரண்டின் மையத்திலும் இருக்கிறது. 2008இல் இருந்து, ஒபாமா நிர்வாகத்தின் வழிகாட்டலின் கீழ், அமெரிக்க கருவூலத்துறை மற்றும் மத்திய ரிசர்வ்வின் ஆதார வளங்கள் வோல் ஸ்ட்ரீட்டிற்காக திறந்துவிடப்பட்டுள்ளன, அது முன்னொருபோதும் இல்லாதளவிற்கான ஊகவணிக விரயத்தில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவின் வங்கி பிணையெடுப்புகள் மற்றும் "பணத்தைப் புழக்கத்தில் விடுதல்" என்பது சர்வதேச அளவில், குறிப்பாக ஐரோப்பாவிலும் அதேபோன்ற நடவடிக்கைகளை சமாந்தரமாக கொண்டு வந்துள்ளது. ஆறு ஆண்டுகளுக்குப் பின்னரும், பங்குச் சந்தைகள் சாதனையளவிற்கான உயரத்தை பதிவு செய்வதைத் தொடர்கின்றன. வியாழனன்று, அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகளான ஸ்டாண்டர்டு & புவர்ஸ் 500 மற்றும் டோவ் ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு அதற்கு முந்தைய உச்சங்களை விட அதிகமானதில் போய் முடிந்தது. மத்திய வங்கி ஒரு "குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு" வட்டி விகிதங்களை சுமார் பூஜ்ஜிய அளவிற்கு வைத்திருக்குமென (அதாவது முக்கியமாக வங்கிகளுக்கு சுதந்திர பணத்தை வழங்குமென) பெடரல் தலைவர் ஜெனெட் யெலென் தெரிவித்ததும் இந்த சமீபத்திய உயர்வு ஏற்பட்டது. அதன் விளைவாக, அமெரிக்க பில்லியனர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 57 அளவுக்கு அதிகரித்துள்ளது. அந்நாடு உலகின் அதிகளவிலான (571) பில்லியனர்களின் எண்ணிக்கையில், அதாவது மொத்த உலக பில்லியனர்களில் சுமார் 25 சதவீதம் மற்றும் வேறெந்த நாட்டையும் விட மூன்று மடங்கு அதிகமாகவர்களின் தாயகமாக இருக்கிறது. அதேநேரத்தில், WSWS ஏற்கனவே ஆவணப்படுத்தி இருப்பதைப் போல, பெரும்பான்மை மக்களின் வருமானங்கள் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துள்ளன. ஒபாமாவினது “மீட்சியின்” காலகட்டம், 2010 மற்றும் 2013க்கு இடையே, மக்கள்தொகையின் அடிமட்டத்தில் இருக்கும் ஐந்து பேர்களின் சராசரி வருமானம் 8 சதவீதத்திற்கு வீழ்ந்திருந்தது, அதேவேளையில் மேலே பத்து இடங்களில் இருப்பவர்களின் வருமானம் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. இத்தகைய ஆதாயங்களின் பெரும்பகுதியை பெரும் செல்வந்தர்கள் அறுவடை செய்திருந்தார்கள். வங்கிகளுக்கு வழங்கப்பட்ட கடன், சமூக திட்டங்களை அழிப்பதைக் கொண்டு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளை வரலாற்றில் இல்லாதளவிற்கு பின்னோக்கி திருப்பியதைக் கொண்டு மூடிமறைக்கப்பட உள்ளது. நெருக்கடிக்கு ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பு சமூக சமத்துவமின்மையில் ஒரு வெடிப்பார்ந்த வளர்ச்சிக்கு மட்டும் இட்டுச் செல்லவில்லை, மாறாக இன்னும் மேலதிகமான பேரழிவுக்கான நிலைமைகளையும் உருவாக்க உள்ளது. உலகளாவிய பங்குச்சந்தைகளின் அதிகரிப்புக்கும் மற்றும் "நிஜமான பொருளாதாரத்தின்" நிலைக்கும் இடையிலான அசாதாரண தொடர்பின்மை குறித்து பகுத்தறியும் திறன்பெற்ற நிறைய ஊடக விமர்சகர்கள் கவலைகளோடு குறிப்பிட்டுள்ளனர். வியாழனன்று பைனான்சியல் டைம்ஸில் எழுதுகையில், ஜே பெலோஸ்கி இவ்வாறு எச்சரித்தார், “பூகோள பொருளாதாரத்தின் நிலை, வெடிக்கும் தறுவாயில் இருக்கும் முட்டைக்கு ஒத்திருக்கிறது," என்றார். அவர் பல எச்சரிக்கை அறிகுறிகளை எடுத்துக்காட்டினார்: “அமெரிக்க நுகர்வோர் அசைவற்று இருக்கிறார்கள், ஆசிய கடன் அளவுகளோ அங்கே ஒரு வேகமான பொருளாதார வளர்ச்சி இல்லாமல் வியத்தகு அளவிற்கு அதிகரித்து வருகிறது, அதேவேளையில் ஐரோப்பா மந்தநிலைமையில் இருக்கிறது. பூகோள வாங்குதிறனோ போதியளவிற்கு இல்லை," என்றார். பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்ற நிலையில், பொருளாதார முன்கணிப்புகளோ கீழ்நோக்கி சரிந்து வருகின்றன. 2014 மற்றும் 2015இல் அனைத்து பிரதான பொருளாதாரங்களிலும் பொருளாதார வளர்ச்சி குறித்த அதன் முன்மதிப்பீட்டை பொருளாதார அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான அமைப்பு இந்த வாரம் வெட்டியது. பில்லியனர்கள் மத்தியிலேயே கூட, அங்கே கவலைகள் அதிகரித்து வருகிறது. Equity Group Investments இன் (இது 4.8 பில்லியன் டாலர் நிகர மதிப்பைக் கொண்டது) தலைவர் சாம் ஜெல் இந்த மாதத்தின் தொடக்கத்தில் குறிப்பிடுகையில், “பங்குச் சந்தையோ எல்லா காலத்தையும் விட உயர்ந்து இருக்கிறது, ஆனால் பொருளாதார நடவடிக்கையோ எல்லா காலத்தையும் விட குறைந்திருக்கிறது," என்றார். முதலீட்டாளர்களுக்கு "அவர்களின் பணத்தை முதலிடுவதற்கு இடமே இல்லை, மேலும் பங்குச் சந்தைகளோ அதன் பங்கையும் விட அதிகமாக பெற்று வருகின்றன. ஏதோவொன்று விட்டுக் கொடுத்தே ஆக வேண்டும் என்பதைப் போல இருக்கிறது," என்றார். வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்கள் வெறுமனே பங்குகளை வாங்கி வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, ஆனால் பெருநிறுவனங்களே கூட உற்பத்தியை அதிகரிப்பதற்கு மாறாக சந்தைகளுக்குள் சாதனையளவிற்கான பணத்தைப் பாய்ச்சி பதுக்கி வைக்கின்றன. இந்த ஆண்டின் முதல் அரை பகுதியில், அமெரிக்க நிறுவனங்கள் அவற்றின் சொந்த பங்குகளையே 338 பில்லியன் டாலருக்கு வாங்கி இருந்தன, இது 2007க்குப் பின்னர் வேறெந்த ஆறு-மாத காலத்தையும் விட அதிகமாகும். உலக முதலாளித்துவத்தின் நிஜமான நிலை என்னவென்றால்: முடிவில்லா பண ஓட்டத்தால் நிலைநிறுத்தப்பட்டு, ஊகவணிகத்திற்கு அடிமையாகிப் போன ஒரு நிதியியல் பிரபுத்துவத்தால் நடத்தப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் மீதான நிலையான தாக்குதலுடன், மற்றொரு இன்னும் பெரிய பொறிவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. பொருளாதார நிலைமையின் மிக மோசமான நிலை, மற்றும் அதற்கு தலைமை தாங்கிவரும் ஆளும் வர்க்கத்தின் ஒட்டுண்ணித்தனம் ஆகியவையே யுத்தத்திற்கான உந்துதல் மற்றும் சர்வாதிகாரம் ஆகிய இரண்டையும் விளக்குவதற்கான முக்கிய காரணியாக இருக்கின்றன. இலாபகர அமைப்புமுறையின் நெருக்கடியிலிருந்து வெளியே வர எந்தவித பாதையும் இல்லாமல், அமெரிக்க நிதியியல் பிரபுத்துவத்தின் தலைமையில் ஆளும் வர்க்கம், அதிகளவில் வெளிநாடுகளை நோக்கி இராணுவவாதத்துடனும் மற்றும் உள்நாட்டில் உள்நாட்டு ஒடுக்குமுறையுடனும் திரும்புகிறது. இந்தளவிற்கு இருக்கும் ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்தப்படும் முறைமைகள் ஒரு வரலாற்று முட்டுச்சந்தை அடைந்துள்ளன. சர்வதேச தொழிலாள வர்க்கம் இந்த நெருக்கடியை அதன் சொந்த தீர்வான சோசலிச புரட்சியைக் கொண்டு எதிர்க்க வேண்டும். |
|