சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

The Scottish referendum: Lessons from Quebec

ஸ்காட்டிஷ் வெகுஜன வாக்கெடுப்பு: கியூபெக்கின் படிப்பினைகள்

By Keith Jones
17 September 2014

Use this version to printSend feedback

செப்டம்பர் 18 ஸ்காட்டிஷ் வெகுஜன வாக்கெடுப்புக்கான பிரச்சாரத்திற்கும், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கியூபெக்கில் நடந்த சம்பவங்களுக்கும் இடையே அங்கே அதிர்ச்சியூட்டும் சமாந்தரங்கள் இருக்கின்றன. இந்த சமாந்தரங்கள், ஸ்காட்லாந்தின் உழைக்கும் மக்கள் தேசியவாதத்தை நிராகரிக்க வேண்டியதன் அவசரத்தையும் மற்றும் அதற்கு மாறாக, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களுடன் இணைந்து முதலாளித்துவ சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக, தொழிலாளர்களினது ஐரோப்பாவிற்கான ஒரு பொதுவான போராட்டத்தில் இணைய வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிடுகின்றன.

1995இல், கியூபெக்கின் பெரு வணிக கியூபெக்குவா கட்சி (Parti Québécois - PQ) அரசாங்கம், கனடாவுடன் ஒரு "புதிய கூட்டணிக்கு" பேச்சுவார்த்தை நடாத்தும் ஒரு வாக்குரிமை கோரி ஒரு வெகுஜன வாக்கெடுப்புக்கு அழைப்புவிடுத்தது, கனடாவுடனான அந்த "புதிய கூட்டணியின்" கீழ் கியூபெக் ஒரு "இறையாண்மை" பெற்ற அல்லது சுதந்திர அரசாக அங்கீகரிக்கப்படுவதும் இருக்கும்.

ஸ்காட்லாந்தில் நடந்ததுள்ளதைப் போலவே, வெகுஜன வாக்கெடுப்புக்கு முந்தைய உடனடியான வாரங்களில் கியூபெக் சுதந்திரத்திற்கு-சார்பான "பிரிந்துபோக ஆதரித்தவர்களின்" பிரச்சரத்திற்கு ஆதரவு அதிகரித்திருந்தது. அக்டோபர் 30, 1995இன் கியூபெக் வெகுஜன வாக்கெடுப்புக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், “பிரிந்துபோக ஆதரித்தவர்களின்" பிரச்சாரம் 15இல் இருந்து 20 சதவீத-புள்ளி வித்தியாசத்தில் முன்னணி பெற்று வெல்லும் என்பதாக காணப்பட்டது. ஆனால் அந்த பிரச்சாரத்தின் இறுதி நாட்களில், அப்போட்டியின் முடிவு தீர்மானிக்கவியலாதபடிக்கு இருந்தது. இறுதியாக, “பிரிந்துசெல்ல வேண்டாமென்றவர்களின்" வாக்குகளே மேலோங்கியது. ஆனால் 50,000 வாக்குகளுக்கு சற்று அதிகமாக, “பிரிந்துசெல்ல ஆதரித்தவர்களின்" 49.42 சதவீத வாக்குகளுக்கு எதிராக அது 50.58 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது.

கியூபெக்கில் "பிரிந்துசெல்ல ஆதரித்தவர்களின்" பிரச்சாரத்திற்கு ஆதரவு அதிகரித்தற்கு இரண்டு காரணிகள் பெரிதும் பலமூட்டியிருந்தன. அதே இரண்டு காரணிகள் இந்த வியாழக்கிழமை வாக்கெடுப்புக்கு முன்னதாக ஸ்காட்டிஷ் சுதந்திரத்திற்கான ஆதரவிலும் மிதமிஞ்சி இருக்கிறது.

முதலாவதாக, கனடாவின் அரசியல் மற்றும் முதலாளித்துவ மேற்தட்டின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவுகளினது தலைமையில் இருந்த "பிரிந்துசெல்ல வேண்டாமென்ற" உத்தியோகபூர்வ பிரச்சாரம், பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்கு எந்தவொரு சாதகமான கோரிக்கையையும் விட முற்றிலும் இலாயக்கற்று இருந்தது.

ஒருவர் மாற்றி ஒருவராக, வலதுசாரி அரசியல்வாதிகளும் பெருநிறுவன நிர்வாகிகளும் மக்களை அச்சுறுத்தியதுடன், பாரிய சமூக செலவின வெட்டுக்கள், வேலைநீக்கங்கள், ஆலை மூடல்கள், மற்றும் மானிய ஒப்பந்தங்களுக்கு அங்கே வேறெந்த மாற்றீடும் இல்லை என்று வலியுறுத்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த அதே வனப்புரைகளைப் பயன்படுத்தி பகட்டாரவாரம் செய்தார்கள்.

"பிரிந்துசெல்ல வேண்டுமென்று" வாக்களித்தால் அதுவொரு பொருளாதார பேரிடரை ஏற்படுத்துமென்றும், முதலீட்டாளர்களை வெளியேறுமாறு செய்து அந்த மாநிலத்தின் கடன்தர மதிப்பீடு வானளாவ உயர்ந்துவிடுமென்றும் அவர்கள் எச்சரித்தார்கள். அனைத்திற்கும் மேலாக, ஒரு சுதந்திர கியூபெக் தானாகவே வடஅமெரிக்க கட்டுப்பாடற்ற வர்த்தக உடன்படிக்கையில் (NAFTA) இணைவதையோ அல்லது கனேடிய டாலரை அதன் செலாவணியாக பயன்படுத்துவதையோ கனடாவின் மீதப்பகுதி ஏற்றுக் கொள்வதற்கு அங்கே வழியே இல்லையென, PQ மற்றும் அதன் கூட்டாளிகளின் வாதங்களுக்கு எதிராக, அவர்கள் அறிவித்தார்கள்

"பிரிந்துசெல்ல வேண்டாமென்ற" தலைவர்களின் மீதிருந்த உழைக்கும் மக்களின் கோபத்தையும் மற்றும் அவர்களது கோரிக்கையான சந்தைகளின் அறிவுநுட்பத்திற்கு அம்மக்கள் தலைவணங்குகிறார்கள் என்பதையும், கியூபெக்கியர்கள் தங்களின் சொந்த விவகாரங்களைக் கையாள தகைமை அற்றவர்கள் என்ற ஓர் ஆங்கில கனேடியரின் கருத்தை கியூபெக் மக்கள் மீதான ஓர் அவமதிப்பாக கியூபெக் சுதந்திர கட்சி (indépendantiste) தேசியவாதிகளால் திரித்துக்காட்ட முடிந்தது .

பிரிந்துசெல்ல வேண்டுமென்ற" பிரச்சாரத்திற்கான ஆதரவை மேலெழச்செய்வதில், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடதுகளால் ஒரேகுரலில் அளிக்கப்பட்ட ஆதரவே, இரண்டாவதும் மற்றும் இன்னும் அதிக முக்கியமானதுமாக இருந்தது. ஒரு சுதந்திர முதலாளித்துவ கியூபெக்கின் உருவாக்கத்தை ஒரு "முற்போக்கான" திட்டமாக, “ஏகாதிபத்தியத்திற்கு-எதிரானதாகவும்" கூட, சித்தரிக்க அவை களைப்படையும் வரையில் வேலை செய்தன, சுதந்திரமடைந்தால் "அனைத்தும் சாத்தியமாகும்" என்ற "பிரிந்துபோக ஆதரித்தவர்களின்" உத்தியோகபூர்வ மோசடி பிரச்சார முழக்கத்தை அவை தம்பட்டமடித்தன.  

சுதந்திரத்திற்கான பிரச்சாரமானது, மிகப்பெரிய பெரு வணிக ஆதரவுக்கு பின்னால் அணிதிரட்டுவதை மற்றும், வாஷிங்டன் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் ஆதரவை நாடுவதை நோக்கமாக கொண்டு, முதலாளித்துவ ஆளும்தட்டின் ஒரு பிரிவால் அவர்களின் நலன்களுக்காக தலைமையேற்கப்பட்டு வந்தது என்பதையோ, அவர்கள் வெட்கமில்லாமல் ஒரு வலதுசாரி வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வந்தார்கள் என்பதையோ கூற வேண்டியதே இல்லை.

ஒரு சுதந்திர கியூபெக்கானது நேட்டோவில், NORADஇல் (அதாவது கனடா-அமெரிக்கா விமானப்படை கூட்டணியில்) மற்றும் வடக்கு அமெரிக்க கட்டுப்பாடற்ற வர்த்தக உடன்படிக்கையில் உறுப்பினர் அந்தஸ்து கோரலாமென அந்த வெகுஜன வாக்கெடுப்பை அங்கீகரித்த சட்டம் குறிப்பிட்டிருந்தது. அச்சட்டம் கியூபெக் தேசிய சட்டமன்றம், அல்லது கனடாவின் மத்திய நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் மூன்று கட்சிகளின் தலைவர்களால் கையெழுத்திடப்பட்ட ஓர் உடன்படிக்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தது—PQ தலைவரும் கியூபெக் பிரதம மந்திரியுமான ஜாக் பாரிஸோ (Jacques Parizeau), கியூபெக்கோஸ் அணியின் (BQ) லூசியன் புச்சார்ட் (Lucien Bouchard) மற்றும் வலதுசாரி வெகுஜன கியூபெக் ஜனநாயக நடவடிக்கை கட்சியின் (Action Démocratique du Québec) தலைவர் மரியோ டுமோன்ட் (Mario Dumont) அந்த மூவரும் ஓர் "இறையாண்மை" கியூபெக்கிற்கான முயற்சியை ஆதரித்து வந்தார்கள்.

அவர்கள் மூவருமே தொழிலாள வர்க்கத்தை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்கள். கியூபெக்கின் மிகப் பணக்கார குடும்பங்களில் இருந்து வந்தவராக தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் பாரிஸோ, 1982-83இல் நிதிமந்திரியாக இருந்தவர், அப்போதைய PQ அரசாங்கம் சமூக செலவுகளை வெட்டியதுடன், அரசு ஆணையைக் கொண்டு 400,000 பொதுத்துறை தொழிலாளர்களின் வேலையிட நிலைமைகள் மற்றும் ஊதியங்களை வெட்டிய ஒப்பந்தங்களைத் திணித்தது, அவர்கள் எதிர்த்து போராடிய போது பாரிய வேலைநீக்கங்களுடன் ஆசிரியர்களை அச்சுறுத்தியது.

கியூபெக்கின் தாராளவாத பிரதம மந்திரி ரோபர்ட் புராஸ்சாவின் ஆதரவுடன் BQவை உருவாக்குவதற்காக, 1990இல் பிரையன் முல்ரேனேயின் (Brian Mulroney) பழமைவாத அரசாங்கத்திலிருந்து பதவி விலகும் வரையில் புச்சார்ட் அதில் ஓர் உயர்மட்ட மந்திரியாக இருந்துள்ளார்.

"பிரிந்துசெல்ல வேண்டுமென்ற" பிரச்சாரத்தின் தலைமையை இறுதி வாரங்களில் ஏற்ற புச்சார்ட், ஒரு சுதந்திர கியூபெக் "வடக்கு அமெரிக்கா முழுவதிலும் அதிகரித்துவரும் வலதுசாரி அலைக்கு எதிராக ஒரு பாதுகாப்பு அரணாக" இருக்குமென்ற வாதத்துடன் ஆதரவு கோரி முறையிட்டார். ஆனால் அவரும், பாரிஸோவும், ஏனைய "பிரிந்துசெல்ல ஆதரித்தவர்களின்" தலைவர்களும் வணிக பெருமக்களின் முன்னால் சென்ற போது அவர்கள் வாதிட்டது இதுதான்: சுதந்திரம் பெற்ற அரசை மறுஒழுங்கமைப்பு செய்வதென்பது, “இரண்டுமடங்காக்குவதை" நீக்குவது என்ற பெயரில், சமூக செலவினங்களை வெட்டவும் மற்றும் அவர்களுக்கு வரிகளைக் குறைக்கவும், ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கும் என்றார்கள்.

பல ஆண்டுகளாக, தொழிற்சங்கங்களோ தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக பெரு வணிக PQக்கு அடிபணிய செய்ய முனைந்திருந்தன. கியூபெக் தாராளவாத கட்சியிலிருந்து பிரிந்து 1968இல் உருவான PQ, தொழிற்சங்க அதிகாரத்துவம் 1960களின் இறுதியிலும் 1970களின் முதல் அரைபகுதியின் போதும் பெரும்பான்மை பிரெஞ்சு மொழி-பேசும் கனடாவின் அந்த ஒரே மாநிலத்தை அதிர வைத்த கியூபெக் தொழிலாள வர்க்கத்தின் போர்குணமிக்க மேலெழுச்சியை தனிமைப்படுத்தவும் மற்றும் பணிய வைக்கவும் ஒரு கருவியாக அரவணைத்துக் கொண்டிருந்தது. 1976இல் PQ அதிகாரத்திற்கு வந்தபோது, பெருநிறுவன முக்கூட்டு வணிகம், அரசு மற்றும் தொழிற்சங்கங்களின்கூட்டுறவின் ஒரு பரந்த அமைப்புமுறையை ஸ்தாபிக்க, அதிகாரத்துவம் அதனுடன் சேர்ந்து வேலை செய்தது.

குட்டி-முதலாளித்துவ இடது, அல்லது குறைந்தபட்சம் அதன் பெரும்பகுதி, வெளிவேஷத்திற்கு PQஇன் எதிர்ப்பாளர்களாக இருந்தன. ஆனால் அவை அனைத்துமே "பிரிந்துசெல்வதை ஆதரித்த" பிரச்சாரத்திற்குப் பின்னால் அணிதிரண்டிருந்தன. கியூபெக் நகர மற்றும் ஒட்டாவா தொழிலாளர்களின் அரசாங்கங்களுக்காக மற்றும் வடஅமெரிக்காவின் சோசலிச ஐக்கிய அரசுகளுக்கான போராட்டத்தில், முதலாளித்துவத்தின் அனைத்து கன்னைகளுக்கு எதிராகவும் கனடா முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் எந்தவொரு போராட்டத்தையும் தீவிரமாக எதிர்ப்பதன் மூலமாகவும், வடஅமெரிக்காவில் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையின் எல்லைகளை மாற்றியமைப்பதன் மூலமாகவும், முதலாளித்துவத்தினது ஒரு பிரிவின் வர்க்க நலன்களை முன்னெடுக்க, கியூபெக் தொழிலாளர்களை அவற்றின் உந்துதலுக்குப் பின்னால் அணித்திரட்டுவதை நியாயப்படுத்துவற்காக அவை எல்லா விதமான பிற்போக்கு வாதங்களையும் முன்னெடுத்தன.

கியூபெக்கின் பிரிவினை, ஏகாதிபத்திய கனேடிய அரசுக்கு ஒரு பெருத்த அடியாக இருக்குமென அவை வாதிட்டன. ஆனால் ஏகாதிபத்தியத்தை சோசலிச புரட்சியால் மட்டும் தான் தூக்கியெறிய முடியும், ஓர் ஏகாதிபத்திய ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதன் மூலமாக தூக்கியெறிய முடியாது. கனடாவின் ஏனைய பகுதியின் தொழிலாளர்களிடமிருந்தும் மற்றும் சர்வதேச தொழிலாளர்களிடமிருந்தும் கியூபெக் தொழிலாளர்களை துல்லியமாக பிரித்து வைக்க, அவர்களை அரசியல்ரீதியாக கியூபெக்கியர்களாக அடையாளப்படுத்துமாறு தூண்டிவிட, மற்றும் கியூபெக் முதலாளித்துவத்தின் பிரதான ஆளும் கட்சிகளில் ஒன்று முன்னிலை வகித்த ஓர் அரசியல் திட்டத்திற்குப் பின்னால் அவர்களை அணித்திரட்ட, கியூபெக் தொழிலாளர்கள் மிகவும் "இடது-சாரிகளாக" புகழப்பட்டார்கள். ஆனால் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பது தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்குஎல்லைகோடுகளின் வடிவத்திலும் மற்றும் போட்டி தேசிய அரசுகளின் வடிவத்திலும்புதிய தடைகளை எழுப்புவதாக இருந்தது.

பொதுவிடங்களில் ஏனைய மொழிகளை பயன்படுத்துவதைத் தடுக்கும் மற்றும் நிர்வாக பதவிகளில் பிரெஞ்சு-மொழி பேசுவோரின் (francophone) செல்வாக்கை உறுதிபடுத்தும் பேரினவாத சட்டங்களை நடைமுறைப்படுத்த கியூபெக் ஆளும் மேற்தட்டை உறுதி செய்து வைப்பதே, ஒரு சுதந்திர கியூபெக்கிற்காக "பிரிந்துசெல்ல வேண்டுமென்ற" பிரச்சார தலைவர்களின் முன்னெடுப்பிற்கு இருந்த பிரதான காரணங்களில் ஒன்றாக இருந்தது. அது உற்சாகத்துடன் போலி-இடதால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

தொழிலாள வர்க்கத்திற்குள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆதரவை அணித்திரட்டுவதற்காக தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடதின் ஆதரவைப் பெற வேண்டியதன் தேவை குறித்து "பிரிந்துசெல்வதை ஆதரித்த" தலைவர்கள் துல்லியமாக நனவுபூர்வமாக இருந்தார்கள். பாரிஸோவினது தலைமையின் கீழ், “பிரிந்துபோக ஆதரித்த" பிரச்சாரம் வலது மற்றும் இடதை ஐக்கியப்படுத்திய ஒரு "வானவில் கூட்டணியாக" முன்வைக்கப்பட்டது. போலி பப்லோவாத நான்காம் அகிலத்தின் கியூபெக் பிரிவான கோஷ் சோசலிஸ்ட் (இடது சோசலிஸ்ட்- Gauche Socialiste) “பிரிந்துபோக ஆதரித்த" கூட்டணியில் ஓர் உத்தியோகபூர்வ பங்காளியாக இருந்தது.

இன்று ஸ்காட்லாந்தில் போலவே, 1995இல் கியூபெக்கிலும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஆதரவாளர்களால் மட்டுமே ஒரு சோசலிச சர்வதேச முன்னோக்கு முன்னெடுக்கப்பட்டது, இரண்டு முதலாளித்துவ முகாம்களையும் —"பிரிந்துபோக ஆதரித்த" மற்றும் "பிரிந்துபோக ஆதரிக்காத" பிரச்சாரங்களை எதிர்க்கவும், மற்றும் ஒட்டுமொத்த கனேடிய முதலாளித்துவத்தை, அதன் கூட்டாட்சியை மற்றும் கியூபெக் இறைமை கட்சிகளை மற்றும் அதன் மத்திய அரசுசை எதிர்த்து, தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான போராட்டத்தின் பாகமாக ஒரு சுதந்திர முதலாளித்துவ கியூபெக் "வேண்டாமென" வாக்களிக்குமாறு தொழிலாளர்களுக்காக ICFI போராடியது.

1995இல் கியூபெக்கில் ஏற்பட்ட அபிவிருத்திகளுக்கும், இன்று ஸ்காட்லாந்தின் அபிவிருத்திகளுக்கும் இடையே அதிர்ச்சியூட்டும் சமாந்தரங்கள் நிலவுகின்ற நிலையில், ஸ்காட்லாந்து, பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் உள்ள தொழிலாளர்கள் கியூபெக் வெகுஜன வாக்கெடுப்புக்குப் பின்னர் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்வதும் முக்கியமானதாக இருக்கிறது.

அந்த வாக்கெடுப்பு தோல்விக்குப் பின்னர் ஏறத்தாழ உடனடியாக, மாகாணத்தின் ஆண்டு வரவு-செலவு திட்டப்பற்றாக்குறையைக் குறைப்பது கியூபெக்கின் எதிர்கால சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு முக்கியமென PQ அரசாங்கம் அறிவித்த போது, தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது வகித்த பாத்திரத்தின் காரணமாக, தொழிலாள வர்க்கம் முற்றிலும் அரசியல்ரீதியாக நிராயுதபாணியாக்கப்பட்டு இருந்தது. 1996இல் நடந்த இரண்டு "தேசிய பொருளாதார உச்சிமாநாட்டில்" PQஇன் பூஜ்ஜிய-பற்றாக்குறை உந்துதலை ஏற்றுக் கொண்டிருந்த தொழிற்சங்கங்களின் முழு ஆதரவுடன் மற்றும் வோல் ஸ்ட்ரீட் முறையீடுகளுக்கேற்ப செயல்பட்டு வந்த PQ அரசாங்கம், கியூபெக்கின் வரலாறில் மிகப்பெரிய சமூக செலவின வெட்டுக்களைத் திணித்தது. பத்து ஆயிரக் கணக்கான மருத்துவ காப்பீடு மற்றும் கல்வித்துறை வேலைகள் இல்லாதொழிக்கப்பட்டதும் அதில் உள்ளடங்கும். 1999இல் வெட்டுக்களுக்கு எதிராக செவிலியர்கள் எதிர்ப்பில் இறங்கியதும், PQ அரசாங்கம் அவர்களின் வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமாக ஆக்கிய போது, தொழிற்சங்கங்கள் அப்போராட்டத்தை தனிமைப்படுத்தி, ஒடுக்கின.

புச்சார்ட் "வலது-சாரி அலையின்" ஒரு எதிர்ப்பாளராக காட்டிக்கொண்ட போதினும், ஒருசில மாதங்களுக்குள்ளேயே அவரும் மற்றும் அவரது கூட்டாட்சி எதிர்ப்பாளர்களான தாராளவாத பிரதம மந்திரி ஜோன் கிறித்தியான் மற்றும் ஒன்டாரியோ பழமைவாத பிரதம மந்திரி மைக் ஹாரிஸூம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அதே சிக்கன நடவடிக்கையை எடுத்து வந்தார்கள்.   

கனேடிய ஆளும் வர்க்கத்தின் செல்வாக்குபெற்ற பிரிவால், இரண்டாவது திட்டம் (Plan B) என்று கூறப்பட்ட ஒருபுதிய கடுமையான பிரிவினைவாத-எதிர்ப்பு மூலோபாயம் ஏற்கப்பட்டதானது, 1995 வெகுஜன வாக்கெடுப்பைத் தொடர்ந்து வந்த மற்ற முக்கிய நிகழ்வாக இருந்தது.

அந்த வாக்கெடுப்பு பிரச்சார மற்றும் அதற்குப் பிந்தைய அரசியலமைப்பு நெருக்கடி ஆண்டுகளின் போது, கனேடிய சோசலிச சமத்துவ கட்சியின் முன்னோடி அமைப்பு பின்வருமாறு எச்சரித்தது: தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தின் அனைத்து கன்னைகளையும் தீர்க்கமாக எதிர்க்காதவரையில், அது தேசிய-இன அரசியல் அணித்திரள்வில் மற்றும் குழப்பத்தில் சிக்கக்கூடிய மரணகதியிலான அபாயங்கள் அங்கே இருக்கின்றன என்றது.

கியூபெக்கியர்களது பெரிதும் அறியப்பட்ட "தேசிய ஒடுக்குமுறைக்கு" எதிராக அவர்கள் அணிதிரண்ட போதும் கூட, போலி-இடதானது, PQ மற்றும் BQ அரசியல்வாதிகளின் வாதங்களையே கிளிப்பிள்ளை போல திரும்ப திரும்ப கூறி வந்தன, “பிரிந்துபோக ஆதரித்த" வாக்குகளின் நிகழ்வில் அங்கே "சுமூகமாக பிரிந்து" சென்றிருக்க முடியுமென அவை வாதிட்டன. போட்டி முதலாளித்துவ  பிரிவுகளின் "நேர்மையான நாடகத்தின்" மீதான எண்ணப்போக்கின் மீதும் மற்றும் தன்னலங்கருதாமை மீதும் அவர்களின் நம்பிக்கையைத் திருப்பிவிட முனைந்தன.

ஒரு போலி-இடது குழுவான ஸ்பாட்டசிஸ்ட்டின் கனேடிய பிரிவு, கனடாவின் உடைவு, உள்நாட்டு யுத்தத்தில் போய் முடியுமென எச்சரித்ததற்காக, ICFIஇன் கனேடிய ஆதரவாளர்கள் "ஆல்பேர்டா யாகூக்களை" (Alberta Yahoos) போல செயல்படுவதாக குற்றஞ்சாட்டுமளவிற்குச் சென்றது. (கனடாவில் வலது-சாரி வெகுஜன மற்றும் நவ-பழமைவாத அரசியலின் இரும்புப்பிடியில் ஆல்பெர்டா நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது.)  

இன்று இந்த எச்சரிக்கை முன்னொருபோதையும் விட நிரூபிக்கப்பட்டுள்ளன. வெகுஜன வாக்கெடுப்பைத் தொடர்ந்து சில மாதங்களிலேயே, மத்திய தாராளவாத அரசாங்கம் பகிரங்கமாக "பிரிவினை இயக்கத்துக்கு" ஆதரவு காட்டியது, அந்த இயக்கமோ பெரிதும் ஆங்கிலம் பேசும் புலம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் மேற்கத்திய கியூபெக்கின் பகுதிகளில் அபிவிருத்தி செய்யப்பட்டு, கியூபெக் பிரிவினை சம்பவங்களில் இனரீதியான பிரிவினையை வலியுறுத்தி வந்திருந்தது. கியூபெக் பிரிந்துபோக இருந்தால் கனடாவிலேயே தங்கியிருக்க முறையிட்ட பூர்வீகக்குடி குழுக்களிடமிருந்து வந்த முறையீடுகளுக்கு அது ஆதரவாக இருக்குமென ஒட்டாவாவும் அறிவித்தது. அதற்கடுத்ததாக, கனடாவின் நாடாளுமன்றம் பொருள்விளக்கச் சட்டம் (Clarity Act) என்றழைக்கப்பட்ட சட்டமசோதாவை நிறைவேற்றியது, அச்சட்டம் கியூபெக் எப்போதேனும் அதன் எல்லைகளைப் பிரித்தால் மறுபேச்சுவார்த்தைக்கு உட்படுத்த வேண்டுமென வரையறை செய்கிறது.

இன்றோ, இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் முதலாளித்துவத்தினது அமைப்புரீதியிலான நெருக்கடியுடன் சேர்ந்து, உலக தொழிலாளர்களை ஒன்றிணைந்து போராட செய்வதற்கும், பாசிசவாதிகள் தொடக்கம் தேசிய, இன மற்றும் மதவாத போக்கில் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்த முனையும் தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது வரையில், அந்த அனைத்து சக்திகளையும் அரசியல்ரீதியாக தோற்கடிப்பதற்குமான போராட்டம் முன்பிருந்ததைவிடவும் மிகவும் அத்தியாவசியமாக மாறி உள்ளது.