World Socialist Web Site www.wsws.org |
இங்கிலாந்து சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் பொதுக்கூட்டங்கள்: ஒரு புதிய சோசலிச யுத்த-எதிர்ப்பு இயக்கத்திற்காக!23 September 2014 முதலாம் உலக போருக்கு 100 ஆண்டுகள், மற்றும் இரண்டாம் உலக போருக்கு 75 ஆண்டுக்குப் பின்னர், உலக முதலாளித்துவ அமைப்புமுறை மீண்டும் ஒரு பேரழிவுடன் மனிதயினத்தை அச்சுறுத்துகிறது. 2008இன் பூகோள பொருளாதார உடைவால் தீவிரப்படுத்தப்பட்டு, ஏகாதிபத்திய சக்திகள் அவற்றின் உள்பிரச்சினைகளை முயன்று கடந்து வரவும் மற்றும் அவற்றின் எதிர்விரோதிகளுக்கு எதிராக அத்தியாவசிய சந்தைகள் மற்றும் ஆதாரவளங்களின் மீது கட்டுப்பாட்டை எடுக்கவும், யுத்தத்தைப் புகலிடமாக்கி வருகின்றன. கடந்த மாதங்களில், ஏகாதிபத்திய சக்திகளின் முழு ஆதரவுடன் இஸ்ரேல் காஜாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக ஒரு மரணகதியிலான போரை நடத்தியதை உலகம் பார்த்திருந்தது. பிரிட்டனும் அமெரிக்காவும், 2003இல் அவற்றின் குற்றகரமான படையெடுப்பால் அவர்களே உருவாக்கி இருந்த நெருக்கடியைப் பயன்படுத்தி, ஈராக்கில் இராணுவ நடவடிக்கையை நடத்தி வருகின்றன. அவர்களின் நடவடிக்கைகள் சிரியா மற்றும் ஈரானை இலக்கில் கொண்டுள்ளன, அது மத்திய கிழக்கில் ஒரு பரந்த பிராந்திய போரைத் தூண்டிவிட அச்சுறுத்தி வருகிறது. உக்ரேனில் மேற்கத்திய சக்திகளால் திட்டமிடப்பட்ட வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதி ஓர் இரத்தந்தோய்ந்த உள்நாட்டு யுத்தத்திற்கு இட்டுச் சென்றுள்ளது, அது நேட்டோ ஆத்திரமூட்டல்களை அதிகரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது, இந்நடவடிக்கை ரஷ்யாவிற்கு எதிரான யுத்த அச்சுறுத்தலைக் கொண்டு வந்துள்ளது. ஒரு புதிய சோசலிச யுத்த-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவது ஓர் உடனடி அவசியமாகும் என்பதை சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பு (IYSSE) வலியுறுத்துகிறது. இராணுவ வன்முறை வெடித்திருப்பதற்கு எதிரான பாரிய எதிர்ப்பு தற்போது எவ்வித அரசியல் வெளிப்பாட்டையும் காணவில்லை. அதற்கு மாறாக, போலி-இடது குழுக்களும் முன்னாள் சமரசவாதிகளும், லிபியா, சிரியா, உக்ரேன் மற்றும் எங்கெங்கிலும் "மனிதாபிமான" தலையீடுகளின் ஊதுகுழல்களாக மாறியிருக்கிறார்கள்—அல்லது அவர்கள் ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்கள். யுத்தத்திற்கு எதிர்ப்பு என்பது ஒரு புரட்சிகர பணியாகும். முதலாளித்துவமும், தேசிய-அரசு அமைப்புமுறையுமே யுத்தத்திற்கான வேர் காரணமாக இருக்கின்றன. இலாபகர அமைப்புமுறையை அகற்றுவதற்கான மற்றும் சோசலிசத்தின் அடிப்படையில் சமூகத்தை மறுஒழுங்கு செய்வதற்கான ஒரு போராட்டத்தின் மூலமாக மட்டுமே ஒரு மூன்றாம் அணுஆயுத மோதலின் அபாயத்தைத் தடுக்க முடியும். இத்தகைய அபிவிருத்திகளின் தாக்கங்களை விவாதிக்க மற்றும் அதுபோன்றவொரு இயக்கத்தைக் கட்டமைக்கத் தொடங்க, IYSSE புதிய பல்கலைக்கழக வருடத்தின் தொடக்கத்தில் தொடர்ச்சியான பல கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.
Liverpool
Bradford
Manchester
London |
|