சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Six years since the Wall Street crash

வோல் ஸ்ட்ரீட் பொறிவிலிருந்து ஆறு ஆண்டுகள்

Nick Beams
15 September 2014

Use this version to printSend feedback

செப்டம்பர் 2008இன் இதே நாளில், அமெரிக்க முதலீட்டு வங்கி லெஹ்மன் பிரதர்ஸின் பொறிவு 1930களின் பெருமந்தநிலைக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய நிதியியல் நெருக்கடியைத் தூண்டிவிட்டது. அந்த திவால்நிலைமையின் ஒருசில நாட்களுக்குள், ஒட்டுமொத்த அமெரிக்க மற்றும் உலகளாவிய நிதியியல் அமைப்புமுறையும் சிதையும் புள்ளிக்கு வந்திருந்தது.

செப்டம்பர் 16, 2018 இல் லெஹ்மன் பேரிடரைக் குறித்து உலக சோசலிச வலைத் தளம் அறிவிக்கையில், “அமெரிக்க முதலாளித்துவத்தினது கொந்தளிப்பான நெருக்கடியில் ஒரு புதிய கட்டத்தை" அது குறிப்பதாக சுட்டிக் காட்டியது.

WSWS தொடர்ந்து குறிப்பிடுகையில், “1930களின் பெருமந்தநிலைமைக்குப் பின்னர் ஒருபோதும் பார்த்திராத ஒரு பேரழிவுகரமான பரிமாணங்களுக்கு முன்னறிப்பாக, அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் கட்டவிழ்ந்து வருகிறதென," குறிப்பிட்டது. இந்த நிதியியல் கரைவு, தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்த வரையில், “வேலைவாய்ப்பின்மை, வறுமை, வீடின்மை மற்றும் சமூக அவலத்தின் வேகமான வளர்ச்சியைக் குறிக்கிறது," அதேவேளையில் "இந்த பொருளாதாரப் பேரிடரைக் கொண்டு வந்த பலருக்கு... இது அவர்கள் விட்டுச் சென்றுள்ள மிச்சமீதிகளிலிருந்து கணிசமான அளவுக்கு இலாபங்களை வழங்கும்," என்று எச்சரித்தது.

அந்த பகுப்பாய்வு முற்றிலுமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன, உலக பொருளாதாரம் மீட்சிக்குத் திரும்பவில்லை என்பது மட்டுமல்ல, அது அதிகரித்துவரும் ஒரு புதிய நிதியியல் நெருக்கடியின் அச்சுறுத்தலுடன், தொடர்ந்து தேக்கத்தை அனுபவித்து வருகிறது. யூரோ மண்டலத்தில், பொருளாதார வெளியீடு இதுவரையில் 2007இல் அது எட்டிய அளவுகளை எட்டவில்லை; ஜப்பான் மீண்டுமொருமுறை பின்னடைவின் விளிம்பில் நிற்கிறது; மற்றும் சீன பொருளாதார விரிவாக்கம் தடுமாறி வருகிறது. அமெரிக்க பொருளாதார வளர்ச்சி விகிதம், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சுமார் 80 சதவீதமாக திரண்ட ஒட்டுமொத்த வெளியீட்டு இழப்புகளுடன், இப்போது 2005-2007இல் இருந்ததை விடவும் 16 சதவீதம் குறைந்து இருக்கிறது.

நிஜமான பொருளாதாரத்தின் தேக்கத்திற்கு இடையிலும், நெருக்கடிக்குப் பொறுப்பான நிதியியல் அமைப்புகள் மற்றும் வங்கிகளுக்கு அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் இதர மத்திய வங்கிகளிடமிருந்து அதிமலிவு பணம் வழங்கப்பட்டதால் ஊக்குவிக்கப்பட்டு, பங்கு சந்தைகளோ சாதனையளவிலான உயரத்தை எட்டியுள்ளனலெஹ்மன் பொறிவுக்குப் பின்னர் உடனடியாக தொடங்கப்பட்ட அந்த கொள்கை தொடரப்பட்டு வந்தது.

உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை பொறுத்த வரையில், கடந்த ஆறு ஆண்டுகள் குறைந்த ஊதியங்கள், அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மை மற்றும் ஒரேயடியாக வறுமையைக் கொண்டு வந்துள்ளன. அமெரிக்காவில், “மீட்சியின்" ஆண்டுகள் என்று கூறப்பட்ட 2010 மற்றும் 2013க்கு இடையே மத்தியதட்டு குடும்ப வருமானங்கள் நிஜமான வரையறைகளில் 5 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது.

நிதியியல் நெருக்கடி முன்னொருபோதும் இல்லாதளவிற்கு சட்டமீறலின் அளவுகளை அம்பலப்படுத்தியது, பிரதான நிதியியல் அமைப்புகளும் வங்கிகளும் நஷ்டமீட்டுமென தெரிந்த, பிரச்சினைக்குரிய நிதித் திட்டங்களை விற்றுவிட்டு, பின்னர் அந்த விளைவிலிருந்து இலாபமீட்டின. 2011இன் ஓர் அமெரிக்க செனட் அறிக்கையில் காட்டப்பட்ட உண்மைகளும், புள்ளிவிபரங்களும் அத்தகைய நடவடிக்கைகள் குற்றகரமான நடவடிக்கைகள் அல்லாமல் வேறொன்றுமல்ல என்பதை எடுத்துக்காட்டின.

ஆனால் ஒரு பிரதான அமெரிக்க அல்லது சர்வதேச வங்கியின் ஒரேயொரு உயர்மட்ட நிர்வாகி கூட, சிறையில் அடைக்கப்படவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், விசாரணைக்குள்ளும் கூட இழுக்கப்படவில்லை. ஒபாமா நிர்வாகத்தின் அட்டார்னி ஜெனரல் எரிக் ஹோல்டர், அது அமெரிக்க மற்றும் அநேகமாக உலக வங்கியியல் அமைப்பையே கூட ஸ்தம்பிக்கச் செய்யக்கூடுமென்ற அடித்தளத்தில் எந்தவொரு விசாரணையையும் திட்டவட்டமாக நிராகரித்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நிதியியல் மூலதனமும் அதன் ஊகவணிக மற்றும் ஒட்டுண்ணித்தனமான நடவடிக்கைகளும் அவர்களுக்குள் ஒரு சட்டமாகவே இருக்கின்றன. நிதியியலில் இருக்கும் குற்றத்தன்மை மற்றும் சட்டவிரோததன்மையின் இந்த கலாச்சாரம் அரசியலில் அதன் வெளிப்பாட்டைக் காண்கிறது: அமெரிக்க குடிமக்கள் உள்ளடங்கலாக ஒபாமா நிர்வாகத்தால் நடத்தப்பட்ட சட்டவிரோத டிரோன் நடவடிக்கைகள் மற்றும் படுகொலைகள்; உலகெங்கிலும் தேசிய பாதுகாப்பு முகமை (NSA) மற்றும் அதற்கு சமாந்தர அமைப்புகளால் நடத்தப்பட்ட பாரிய உளவுவேலைகள்; மற்றும் ஒரு பொலிஸ் அரசு எந்திரத்தை வலுப்படுத்தியமை ஆகியவற்றில் வெளிப்பாட்டைக் கண்டது.

நிகழ்ந்துவரும் பூகோளமயப்பட்ட பொருளாதார உடைவு இராணுவவாதத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிடுகிறது, இது ஒரு புதிய உலக யுத்தம் வெடிப்பதற்கான நிலைமைகளை உருவாக்கி வருகிறது: இங்கேயும் அமெரிக்க ஆக்கிரமிப்பே முதலிடத்தில் இருக்கிறது.

2008இன் பொறிவில் சித்திரம் போல வெளிப்பட்ட அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார பிரச்சினைகளும் முரண்பாடுகளும், அப்போதிருந்து அதிகரித்து மட்டுமே வந்திருக்கின்றன. இது தான் யுத்தத்திற்கான பொருளாதார தூண்டுபொருளாக இருக்கின்றது, அதேவேளையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பொருளாதார வீழ்ச்சியை தலைகீழாக திருப்பவும் மற்றும் அதன் உலகளாவிய மேலாதிக்கத்தை வலியுறுத்தவும் அதன் இராணுவ பலத்தை பிரயோகிக்க முனைகிறது.

பொருளாதார போக்குகள் மற்றும் அரசியல் அபிவிருத்திகளுக்கு இடையிலான தொடர்புகள் ஒருபோதும் நேரடியாகவும் உடனடியாகவும் இருப்பதில்லை, மாறாக அவை எப்போதும் சிக்கலாக இருக்கின்ற போதினும், ஆழமடைந்துவரும் பொருளாதார நலிவில் ஒன்றாக, இந்த ஆண்டு, ஜேர்மனும் ஜப்பானும் இரண்டுமே இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய அவற்றின் புவிசார் அரசியல் கட்டமைப்பை உடைத்துள்ளன என்ற உண்மைக்கு அங்கே ஓர் ஆழ்ந்த முக்கியத்துவம் உள்ளது.

ஜேர்மன் ஆளும் மேற்தட்டும், பரந்த ஊடகங்களின் சக்திவாய்ந்த பிரிவுகளும், மற்றும் வெளியுறவு கொள்கை ஸ்தாபகமும் ஜேர்மனி வகிக்கும் பாத்திரத்தை ஐரோப்பாவிற்குள் மேலாதிக்கம் மிக்க சக்தியாக மட்டுமல்ல, மாறாக ஓர் உலக சக்தியாக காட்டும் —1930களின் ஹிட்லரது நிகழ்ச்சிநிரலுக்குத் திரும்பும்ஒரு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு வருகின்றன.

இதேபோல, ஜப்பானில் ஷின்ஜோ அபேயின் வலதுசாரி தேசியவாத அரசாங்கம் ஒரு சர்வதேச இராணுவ பாத்திரம் வகிக்க ஜப்பானை அனுமதிக்கும் வகையில் அந்நாட்டின் அரசியலமைப்பிற்கு "மறுவிளக்கம்" அளித்துள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளின் முக்கியத்துவம் தவறான புரிதலுக்கு இடமின்றி இருக்கிறது, இவற்றில் இரண்டாம் உலக யுத்தத்தின் மூன்று பிரதான ஏகாதிபத்திய போராளிகள் அவற்றின் உலகளாவிய பாத்திரத்தை வலியுறுத்தி வருகின்றன. பூகோளமயப்பட்ட பொருளாதார முறிவுக்குள் ஆறு ஆண்டுகள் இருந்த பின்னர், சுருங்கிவரும் சந்தைகளையும் மற்றும் தேக்கமுற்ற அல்லது எதிர்மறை வளர்ச்சியையும் முகங்கொடுத்துள்ள பிரதான சக்திகள் அவற்றின் நலன்களுக்காக இராணுவ வழிவகைகளைக் கொண்டு சண்டையிட தீர்மானகரமாக உள்ளன.

யுத்தத்திற்கான உந்துதல் என்பது உள்நாட்டில் இராணுவவாதத்துடன் இணைந்துள்ளது. நிகழ்ந்துவரும் இலாப அமைப்புமுறையின் நெருக்கடிக்கு அவர்களிடம் எந்தவொரு பொருளாதார தீர்வும் இல்லையென்பது ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் ஆளும் வர்க்கங்களுக்கு நன்றாக தெரியும்.

வரவிருக்கின்ற G20 உச்சிமாநாட்டிற்காக உலக வங்கி, பொருளாதார அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் தயாரிக்கப்பட்ட ஓர் அறிக்கையின்படி, “முன்காணும் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க கீழ்நோக்கிய அபாயங்களுடன்" பொருளாதார வளர்ச்சி "வீழ்ச்சி போக்கிலேயே இருக்கும்”, அதேவேளையில் "உற்பத்தி மற்றும் தரமான வேலைகளை உருவாக்குவதற்கு அங்கே எந்தவித உலகளாவிய சூத்திரமும்" கிடையாது என்று குறிப்பிட்டது.

ஒரு வரவிருக்கின்ற சமூக வெடிப்பின் அச்சுறுத்தலில் வாழ்ந்து கொண்டு, ஒவ்வொரு இடத்திலும் உள்ள ஆளும் வர்க்கம் அவற்றின் ஒடுக்குமுறை எந்திரங்களை ஒழுங்கமைத்து வருகிறது. மிசோரி ஃபேர்க்குஷனின் பொலிஸ்-இராணுவ நடவடிக்கை எந்த விதத்திலும் முற்றிலும் ஓர் அமெரிக்க சம்பவம் அல்ல, மாறாக அது மற்றொரு நிதியியல் நெருக்கடியின், இதற்கான நிலைமைகள் நன்கு அபிவிருத்தி அடைந்திருக்கின்ற நிலையில், அதன் சமூக விளைவுகளை எதிர்கொள்ள ஒவ்வொரு நாட்டிலும் செய்யப்பட்டு வருகின்ற தயாரிப்புகளைப் பிரதிபலிக்கிறது.

மத்திய வங்கிகளின் வங்கி என்று சிலவேளைகளில் அறியப்படும், சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கி (BIS), ஞாயிறன்று, அதன் காலாண்டு ஆய்வறிக்கையில், பூகோள நிதியியல் சந்தைகளில் தற்போது கொந்தளிப்பு இல்லாதிருப்பது பலத்தின் ஓர் அறிகுறி அல்ல, மாறாக புதிய அபாயங்களின் ஒரு முன்னறிவிப்பாகுமென எச்சரித்தது.

BIS தலைமை பொருளியல்வாதி கிளேடியோ போரியோ (Claudio Borio) அந்த ஆய்வறிக்கையின் மீது ஒரு சிறிய அறிமுகம் வழங்குகையில் செய்தியாளர்களிடையே பின்வருமாறு தெரிவித்தார்: “அது எல்லாமே பரிச்சயமற்றவையாக தெரிகின்றன. தவிர்க்க முடியாமல் இசை நிற்கும் வரையில் ஆட்டம் தொடர்கின்றது. இசை இசைக்கப்படுகின்ற வரையில், மேலும் அது எந்தளவிற்கு உரக்க போகிறதோ, அதை தொடர்ந்து வரும் மவுனமும் அதைவிட அதிக நிசப்தமாக இருக்கிறது," “பரிமாற்றத்தன்மை மிகவும் அவசியமாக தேவைப்படும் போது" துல்லியமாக அந்த தருணத்தில் சந்தைகள் நிதியிழந்து இருக்கும்."

லெஹ்மன் பொறிவுக்கு அடுத்த நாள், உலக சோசலிச வலைத் தளம் ஒரு தெளிவான அரசியல் மூலோபாயத்தை வரையறுத்தது: “ஒட்டுமொத்த நிதியியல் அமைப்புமுறையும் தனியார் கரங்களில் இருந்து எடுக்கப்பட வேண்டும்.... வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மையை ஒழிக்கவும் மற்றும் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கை தரங்களை மற்றும் கலாச்சார மட்டங்களை பரந்தளவில் முன்னேற்றுவதற்காக உற்பத்தி சக்திகளை அபிவிருத்தி செய்வதில் மற்றும் விரிவாக்குவதில் அர்பணிக்கப்பட்டு, மக்களின் சமூக தேவைகளுக்கு அர்பணிக்கப்பட வேண்டும்," என்று குறிப்பிட்டது.

ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன, அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும், தொழிலாள வர்க்கத்தின் பெரும் பிரிவுகள் வறிய நிலைமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அல்லது அவர்களின் வாழ்க்கை தரங்கள் வீழ்ச்சியைக் கண்டிருக்கின்ற நிலையில், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு தலைமுறை முதலாளித்துவத்தின் கீழ் வறுமை மற்றும் யுத்தத்தின் ஒரு எதிர்காலத்தை முகங்கொடுத்திருக்கின்ற காலத்திற்கு வந்திருக்கின்ற நிலையில், இந்த முன்னோக்கிற்கான போராட்டம் முன்பைவிட மிகமிக அவசரமானதாக மாறியுள்ளது.