World Socialist Web Site www.wsws.org |
Obama announces open-ended war in Iraq and Syria ஈராக் மற்றும் சிரியாவில் ஒபாமா முடிவில்லா யுத்தத்தை அறிவிக்கிறார்
By
Patrick Martin புதனன்று இரவு தேசிய தொலைக்காட்சியில் வழங்கிய ஒரு மேலோட்டமான உரையில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ வன்முறை முடிவில்லாமல் தீவிரப்படுத்தப்படும் என்பதை அறிவித்தார். முஸ்லீம் அடிப்படைவாத குழு ISISஇன் குற்றங்களை ஒரு போலிக்காரணமாக பயன்படுத்தி, ஒபாமா ஈராக்கிற்கு மற்றுமொரு 475 அமெரிக்க துருப்புகளை அனுப்பி வருவதாகவும், அந்நாட்டில் உள்ள ISIS இலக்குகள் மீது குண்டுவீசுவதை அதிகரிக்க இருப்பதாகவும், மற்றும் எல்லைதாண்டிய விரிவாக்கமாக சிரியாவிற்குள் குண்டுவீசும் நடவடிக்கைக்குத் தயாரிப்பு செய்து வருவதாகவும் அறிவித்தார். அதற்கும் கூடுதலாக, கடந்த மூன்று ஆண்டுகளாக அப்பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதான இலக்கான, ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் ஒருங்கிணைந்துள்ள ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் சிரிய அரசாங்கம் மற்றும் ISIS இரண்டினோடும் சண்டையிட சிரியாவில் உள்ள "போராளிகள்" படைகளுக்கு பயிற்சியளிக்கவும், ஆயுத உதவிகள் வழங்கவும் மற்றும் அமெரிக்க நியமனங்களில் பெரிதும் ஓர் அதிகரிப்பைச் செய்யவும் நிதி வழங்குமாறு காங்கிரஸிற்கு அவர் அழைப்புவிடுத்தார். வெறும் 12 மாதங்களுக்கு முன்னர் தான், நரம்புகளைப் பாதிக்கும் விஷவாயு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுக்களை உருவாக்கி (இது பின்னர் மதிப்பிழந்து போனது) அசாத் ஆட்சிக்கு எதிரான அமெரிக்க விமான தாக்குதல்களுக்கு அரசியல் நிலைமைகளை உருவாக்க முயன்று ஒபாமா தோல்வி அடைந்தார். இப்போது அவர் சிரியாவிற்குள் அமெரிக்க இராணுவ படைகளை நுழைப்பதற்கு ஒரு போலிக்காரணமாக ISISஐ பயன்படுத்தி, வேறு வழியாக அதே இலக்கை அடைய முனைந்து வருகிறார். அமெரிக்க இராணுவ படைகள் பின்னர் அங்கே சிரியாவில் அசாத்தைத் தூக்கியெறியவும் மற்றும் டமாஸ்கஸில் அமெரிக்க-ஆதரவு தலையாட்டி ஆட்சியை நிறுவும் பிரச்சாரத்திற்கும் முன்னிலை வகிப்பதாக மாறும். மத்திய கிழக்கில் நீண்டகால அமெரிக்க இராணுவ தலையீட்டுக்கு ஒரு எதிர்ப்பாளராக முன்னர் காட்டிவந்த நிலைப்பாட்டிலிருந்து மாறி—அமெரிக்க வெளியுறவு கொள்கையில் ஒரு வேகமான மாற்றத்தை ஊக்குவிப்பதில் 15 நிமிடங்களுக்கும் குறைவாக அர்பணித்த அந்த உரையில், ஒபாமா, அமெரிக்க மக்கள் மீதும் மற்றும் எந்தவொரு ஜனநாயக கருத்துருவின் மீதும் அவருக்கிருக்கும் வெறுப்பை எடுத்துக்காட்டினார். குறிப்பாக கடந்த மாதம் இரண்டு தனிப்பட்ட அமெரிக்க இதழாளர்களைக் கொடூரமாக தலையறுத்த நடவடிக்கையுடன் ஏனைய ISISஇன் நடவடிக்கைகளையும் குறிப்பிட்டதைத் தவிர, மத்திய கிழக்கின் எண்ணெய் கொப்பரைக்குள் மீண்டுமொருமுறை இறங்குவதற்கு அவர் எடுத்த முடிவின் மீது வேறெந்த ஆழமான காரணத்தையும் ஒபாமா வழங்கவில்லை. அவர் ISISஐ ஒரு விளங்கப்படுத்த முடியாத சாபக்கேடாக சித்தரித்தார், ஆனால் அந்த குழுவோ மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய தலையீடுகளின் ஒரு துணைவிளைவாக தான் உருவாயின. அவர் கூறினார், அந்த அமைப்பு "ஈராக்-சிரியா எல்லையின் இருதரப்பிலும் பிராந்தியங்களை அபகரிக்க குறுங்குழுவாத மோதலையும் மற்றும் சிரிய உள்நாட்டு யுத்தத்தையும் ஆதாயமாக்கிக் கொண்டிருக்கிறது.” அந்த குறுங்குழுவாத மோதலும் மற்றும் உள்நாட்டு யுத்தமும் இரண்டுமே அமெரிக்காவால் தான் தூண்டிவிடப்பட்டன என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஈராக்கில் சுன்னி பழங்குடியின சக்திகள் மற்றும் ஷியைட் போராளிகள் குழுக்களால் அது தோற்கடிக்கப்பட்ட பின்னர், ஈராக்கிய அல் கொய்தா ஈராக்-சிரியா எல்லையின் இருதரப்பிலும் செயல்படும் ISISஆக தன்னைத்தானே மாற்றிக் கொண்டது. அது அசாத் ஆட்சிக்கு எதிரான அமெரிக்க-ஆதரவு நடவடிக்கைகளில் இருந்து பெரிதும் இலாபமடைந்தது. கட்டார் மற்றும் சவூதி அரேபியா போன்ற சிஐஏ மற்றும் அமெரிக்க கூட்டாளிகளால் வழங்கப்பட்ட உதவிகளிலிருந்து தன்னைத்தானே மறுகட்டமைப்பு செய்து கொண்ட ISIS, பின்னர் ஈராக்கிற்குள் மீண்டும் திரும்பி, பாக்தாத்தில் உள்ள அமெரிக்க-ஆதரவு கைப்பாவை ஆட்சிக்கு எதிராக அதன் தற்போதைய தாக்குதலைத் தொடங்கியது. இந்த வரலாறு அவர் தொடங்கியுள்ள புதிய சுற்று இராணுவ தலையீட்டின் பொறுப்பற்ற மற்றும் கொடூர குணாம்சத்தை அடிக்கோடிடும் என்பதால், ஒபாமா அவரது தொலைக்காட்சி உரையில் இந்த வரலாற்றில் இருந்து எதையும் விவாதிக்கவில்லை. ஒருவிஷயம் நிச்சயமானது: இன்னும் அதிகமான அமெரிக்க குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் சிப்பாய்கள் ஈராக் மற்றும் சிரியாவில் மனிதாபிமான பேரழிவை மோசமாக்க மட்டுமே செய்யும், அதேவேளையில் மத்திய கிழக்கு முழுவதிலும், அதை கடந்தும், உள்மோதல்கள் ஒரு பொதுவான யுத்தத்திற்குள் பரவுவதை அதிகரிக்கச் செய்ய வாய்ப்பிருக்கிறது. அவர் அறிவித்த புதிய யுத்தத்திற்கு புவியெல்லை எதுவும் இல்லை என்பதையும் அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தினார். “இந்த பயங்கரவாதத்திற்கு-எதிரான நடவடிக்கை ஒரே சீராக, பாரபட்சமின்றி அவர்கள் [ISIS] எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நடத்தப்படும்,” என்றவர் தெரிவித்தார். இது, ஈராக் மற்றும் சிரியாவில் மட்டுமல்ல லெபனான், ஜோர்டான் மற்றும் வேறு எங்கெல்லாம் இஸ்லாமியவாதிகள் எழுச்சி அடைவார்களோ அங்கெல்லாம் வாஷிங்டன் குண்டுவீச தயாராக இருக்கிறது என்றவொரு பிரகடனத்தைத் தான் அர்த்தப்படுத்துகிறது. அமெரிக்காவின் "அடிப்படை நலன்களுக்கு"—அதாவது, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு— ஒரு அச்சுறுத்தலை முன்னிறுத்துவதாக அது தீர்மானிக்கின்ற எந்தவொரு இடத்திலும், எவரொருவருக்கு எதிராகவும் யுத்தம் தொடுக்கும் உரிமை அமெரிக்காவிற்கு இருப்பதாக ஒபாமா அவரது கொள்கையை அழுத்தந்திருத்தமாய் வெளியிட்டார். அவரது உரையின் முடிவு பகுதியில், “ஒரு நிச்சயமற்ற உலகில் அமெரிக்க தலைமை ஒன்றே நிலையானது,” என்று கூறி, ஒவ்வொரு கண்டத்திலும் தோற்றப்பாட்டளவில் ஒவ்வொரு சர்வதேச நெருக்கடியிலும் அமெரிக்கா வகிக்கும் முன்னணிப் பாத்திரத்தை ஒபாமா வலியுறுத்தினார். அவர் தொடர்ந்தார், “பயங்கரவாதிகளுக்கு எதிராக உலகை ஒன்றுதிரட்ட அமெரிக்காவிடம்தான் தகைமையும், விருப்பமும் இருக்கிறது. ரஷ்ய ஆக்ரோஷத்திற்கு எதிராக அமெரிக்கா தான் உலகை ஒன்றுதிரட்டி உள்ளது...” என்றார். ISISஐ இலக்கில் வைப்பதிலிருந்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய அணுஆயுத நாடான ரஷ்யாவை எதிர்கொள்வதற்கு மாறிய திடீர் மாற்றம் குறிப்பாக அச்சுறுத்தலாகும். ரஷ்ய "ஆக்ரோஷத்தைப்" பொறுத்த வரையில், உக்ரேனிய நெருக்கடியானது பாசிச சக்திகளால் ஆதரிக்கப்பட்ட ஒரு வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு அமெரிக்க மற்றும் ஜேர்மன் உதவியதால் தூண்டிவிடப்பட்டதாகும். ஈராக் மற்றும் சிரியா மீதான புதிய கொள்கை எந்தவிதத்தில் ஒழுங்கமைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டதோ அது முற்றிலுமாக அமெரிக்க ஜனநாயகத்தின் சீரழிவையே எடுத்துக்காட்டுகிறது. இராணுவ-உளவுத்துறை ஸ்தாபகத்துடன் வாரக்கணக்கிலான விவாதத்திற்குப் பின்னர், ஒபாமா திங்களன்று வெளியுறவு கொள்கை ஸ்தாபகத்தின் முன்னணி பிரமுகர்களுடன் நடத்திய பல மணிநேர கூட்டத்தில் அவரது பரிந்துரைகளை முன்வைத்தார். இருகட்சிகளின் காங்கிரஸ் தலைவர்களும் இராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்க தயாராகவே இருக்கிறார்கள் என்பது ஒருபுறம் இருக்க, செவ்வாயன்று அவர்களுடன் நடத்திய ஒரு சிறிய சந்திப்பில், அந்நடவடிக்கைக்காக அவர்களின் ஒப்புதல் அவருக்குத் தேவையில்லை என்பதனை கூறினார். யுத்தம் மற்றும் சமாதானம் குறித்த மிக அடிப்படை கேள்விகள் மீது முற்றிலும் எதையும் கூறாது, அமெரிக்க மக்களை இணங்குவிக்கும் முயற்சியின் மிக அப்பட்டமான வெறும் பாசாங்குத்தனத்துடன், புதனன்று, ஒபாமா அந்த மேலோட்டமான ஒரு தொலைக்காட்சி உரையை வழங்கி இருந்தார். |
|