சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

Military maneuvers and sanctions: NATO, EU escalate threats against Russia

இராணுவ போர் ஒத்திகைகளும் தடைகளும்: நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவிற்கு எதிரான அச்சுறுத்தல்களைத் தீவிரப்படுத்துகின்றன

By Johannes Stern
9 September 2014

Use this version to printSend feedback

பின்புலத்தில் ரஷ்யாவின் எதிர்ப்புகள் இருந்தபோதினும், கருங்கடலில் திங்களன்று நேட்டோ இராணுவ பயிற்சிகள் நடத்தப்பட்டன. கடல் தென்றல்" (Sea Breeze) என்ற குறியீட்டுப் பெயரை கொண்டிருந்த அந்த மூன்று நாள் கடற்படை பயிற்சி, கடந்த வாரயிறுதியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டை தொடர்ந்து வந்த மற்றொரு மேற்கத்திய ஆத்திரமூட்டல் என்பதுடன், அது மேற்கிற்கும் ரஷ்யாவிற்கும் இடைலான ஒரு நேரடி இராணுவ மோதலின் அபாயத்தை மேலும் அதிகரித்துள்ளது.

வெள்ளியன்று போர்க்கப்பல் HMCS Toronto (கனடா), SPS Almirante Juan de Borón (ஸ்பெயின்) மற்றும் ரோமானியாவின் ROS Regele Ferdinand ஆகியவை பல்கேரியாவின் பர்காஸ் துறைமுகத்தை நோக்கி பயணித்தன. இந்த மூன்று கப்பல்களும், நேட்டோ விடையிறுப்பு படையின் பாகமாக மத்திய தரைக்கடலில் உள்ள நேட்டோ கடற்படைப்பிரிவின் செயற்படையான இரண்டாவது நேட்டோ கடல் நிலைக்குழுவின் (SNMG2) கட்டளையின் கீழ் இருக்கின்றன. அமெரிக்க போர்க்கப்பல் USS Rossஉம் இந்த போர் ஒத்திகைகளில் பங்கெடுப்பதற்காக ஞாயிறன்று பிரெஞ்சு போர்க்கப்பல் Commandant Birot உடன் சேர்ந்து கருங்கடலுக்குள் பயணித்தது.

நேட்டோ சக்திகளுடன் சேர்ந்து அமெரிக்கா, கனடா, ரோமானியா, ஸ்பெயின் மற்றும் துருக்கி ஆகியவற்றுடன் உக்ரேனும் பயிற்சியில் பங்கெடுத்து வருகிறது. உக்ரேனிய பாதுகாப்பு மந்திரியின் கருத்துப்படி, உக்ரேன் ஐந்து போர்கப்பல்களையும், இரண்டு எல்லையோர ரோந்து கப்பல்களையும், மற்றும் கடற்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களையும் அனுப்பி உள்ளது.

ரஷ்யா அந்த நேட்டோ போர் ஒத்திகைகளை "முற்றிலும் முறையற்றதென்று" குறிப்பிட்டதுடன், அதன் சொந்த இராணுவ தயாரிப்புகளைக் கொண்டு மேற்கத்திய அச்சுறுத்தல்களுக்கு விடையிறுப்பு காட்டி வருகிறது. அது ஏவுகணை தாங்கிய போர்கப்பல் "மோஸ்க்வாவை" (Moskva) மத்தியத்தரைக்கடல் பகுதிக்குள் நகர்த்தி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்ய கடற்படையும் கருங்கடலில் அதன் சொந்த போர் ஒத்திகைகளை நடத்தி வருகிறது. ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்திப்படி, ரஷ்யா அப்பிராந்தியத்தில் சுமார் 20 போர்கப்பல்களையும் அத்துடன் Sukhoi Su-24 தாக்கும்-போர்விமானங்களையும் மற்றும் தாக்கும் ஹெலிகாப்டர்களையும் கொண்டிருக்கிறது.

மேலும் Russia Todayஇல் சுட்டிக்காட்டப்பட்ட Washington Free Beaconஇன் ஓர் அறிக்கையின்படி, கடந்த வார வேல்ஸ் நேட்டோ உச்சிமாநாட்டின் போது, இரண்டு ரஷ்ய Tu-95 “Bear” மூலோபாய குண்டுவீச்சு போர்விமானங்கள் அமெரிக்கா மீதான அணுஆயுத தாக்குதல்களுக்கான ஒத்திகைக்காக வட அட்லாண்டிக்கில் உள்ள முன்தீர்மானிக்கப்பட்ட ஏவுதளங்களுக்கு அனுப்பப்பட்டன. ஒவ்வொரு குண்டுவீச்சு போர்விமானமும் 1,800 மைல்கள் சென்று தாக்கும் ஆறு AS-15 அணுஆயுதமேந்திய கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளைச் சுமந்து செல்லக் கூடியதாகும். அந்த நடவடிக்கை வடக்கு அமெரிக்க வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்கு வெளியே நடந்திருந்ததாக குறிப்பிட்டு, அமெரிக்க மற்றும் கனேடிய அதிகாரிகள் அதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

Spiegel Online போன்ற மேற்கத்திய ஊடகங்களும் கூட நேட்டோவின் கருங்கடல் போர் பயிற்சிகளை "மாஸ்கோவை நோக்கிய அமெரிக்கா மற்றும் உக்ரேனின் ஒரு ஆத்திரமூட்டலாக" வர்ணித்துள்ள நிலையில், உக்ரேனிய மற்றும் நேட்டோ அதிகாரிகளோ அந்த பயிற்சிகளின் முக்கியத்துவத்தைக் குறைத்துக்காட்ட முயல்கிறார்கள்.

ஒரு நெருக்கடி பகுதியில் கடல்வழி பாதுகாப்பை" உறுதிப்படுத்துவதே அந்த இராணுவ பயிற்சியின் நோக்கமென கியேவில் பாதுகாப்பு மந்திரி அறிவித்தார். அந்த இராணுவ ஒத்திகை தற்போதைய உக்ரேனிய நெருக்கடிக்கு முன்னரே திட்டமிடப்பட்டிருந்ததாகவும், “எங்களின் கூட்டு பாதுகாப்பைப் பலப்படுத்தவும் மற்றும் நேட்டோ ஒற்றுமையின் பலத்தை எடுத்துக்காட்டவும்" அது நேட்டோ கவுன்சிலால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பாகமாகுமென்றும் ஒரு நேட்டோ செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.

உண்மையில், “பொதுவான பாதுகாப்பை பலப்படுத்தும்" நேட்டோவின் நடவடிக்கைகள் ரஷ்யாவிற்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகளினது தாக்குதலின் பகுதியாகவும் மற்றும் தொகுப்பாகவும் இருக்கின்றன. தற்போதைய கிழக்கு உக்ரேனிய போர்நிறுத்தம் மற்றும் மின்ஸ்க்கில் ஒப்புக்கொள்ளப்பட்ட 12-அம்ச திட்டத்திற்கு இடையே அவை தொய்வின்றி தொடரப்பட்டு வருகின்றன.

பெப்ரவரியில், ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும், ஸ்வோபோடா கட்சி மற்றும் Right Sectorஇன் பாசிசவாத சக்திகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து, ரஷ்யாவை ஆதரித்த யானுகோவிச் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஒழுங்கமைத்ததுடன் உக்ரேனில் மேற்கத்திய-சார்பு கைப்பாவை ஆட்சியையும் நிறுவின. அதன் விளைவாக எழுந்த நெருக்கடியை இப்போது அவை திட்டமிட்டு ரஷ்ய எல்லைகளுக்கு அருகில் நேட்டோவை முன்னுக்குக் கொண்டு செல்வதற்காக சுரண்டி வருகின்றன.

ஞாயிறன்று ஜோர்ஜியாவிற்கான ஒரு விஜயத்தின் போது, அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் சக் ஹாகெல் கூறுகையில், உக்ரேனிய நெருக்கடியானது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் ஜோர்ஜியா மற்றும் உக்ரேன் போன்ற நாடுகளை உள்ளடக்கிய ஒரு ரஷ்ய-விரோத கூட்டணியை உருவாக்கி இருப்பதாக தெரிவித்தார். அவரது ஜோர்ஜிய எதிர்தரப்பில் இருக்கும் இராக்லி அலாசானியாவைச் சந்தித்த பின்னர் ஹாகெல் கூறினார்: “இங்கேயும் உக்ரேனிலும் நடக்கும் ரஷ்ய நடவடிக்கைகளை நாங்கள் மிகவும் தீவிரமானவொரு சவாலாக ஏற்கிறோம். ஆனால் புட்டினின் நடவடிக்கைகள் அமெரிக்காவை ஜோர்ஜியா உள்ளடங்கலாக ஐரோப்பாவில் உள்ள நமது நண்பர்களுக்கு மிக நெருக்கமாக நகர்த்தி உள்ளது என்பதையும் அர்த்தப்படுத்துகிறது,” என்றார்.

நேட்டோ இராணுவ ஒத்திகை தொடங்கியதற்கு சமாந்தரமாக, ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான தடைகளை விதிக்க முடிவெடுத்தது. ஐரோப்பிய ஒன்றிய இராஜாங்க அதிகாரிகளின் கருத்துப்படி, திங்களன்று மதியம் தீவிர பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதோடு, அவை "ரஷ்யாவிற்கு எதிரான தடைகளை நீடிக்க கோட்பாட்டுரீதியில் உடன்பாட்டை எட்டின.” அந்த தடைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ இதழில் (EU Official Journal) பிரசுரிக்கப்பட்டதும் செவ்வாயன்று உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளன.

முந்தைய நடவடிக்கைகளைப் போலவே புதிய தடைகளும் அதே பிரிவுகளை இலக்கில் கொண்டுள்ளன. ரஷ்ய அரசு வங்கிகள், இராணுவத்துறை ஒப்பந்ததாரர்கள் மற்றும் எண்ணெய் உற்பத்தியில் உள்ள நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவது தடுக்கப்பட உள்ளது. இராணுவ உபகரணங்களின் ஏற்றுமதி இன்னும் கடுமையாக ஆக்கப்படும், எண்ணெய் உற்பத்தி தொழில்நுட்பங்களின் ஏற்றுமதி மீது விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்படும். அதற்கும் கூடுதலாக, ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய அரசியல்வாதிகளின் மற்றும் வர்த்தகர்களின், மற்றும் உக்ரேனிய பிரிவினைவாத தலைவர்களின் கணக்குகளுக்கும் மற்றும் பயணங்களுக்கும் கூடுதல் தடையை விதிக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் ஹெர்மன் வன் ரோம்பெ மற்றும் கமிஷன் தலைவர் ஜோஸ் மானுவல் பாரோஸோவிடமிருந்து ஐரோப்பிய தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் குறிப்பிட்டது: “உக்ரேனில் ரஷ்ய நடவடிக்கைகளின் போக்கில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதே ஐரோப்பிய ஒன்றிய தடைகளின் நோக்கமாகும்.” உண்மையில், அவை ரஷ்யாவிற்கு எதிரான ஆக்ரோஷ போக்கிற்கு ஒரு அடிப்படை உட்கூறுகளாக இருக்கின்றன, இராணுவ தீவிரத்தன்மைக்கு கூடுதலாக, அவை அதிகளவில் பகிரங்க பொருளாதார யுத்த வடிவத்தை எடுத்து வருகின்றன.

ரஷ்ய பிரதம மந்திரி டிமிட்ரி மெட்வடெவ் அறிவிக்கையில், மேற்கு அதன் தடைகள் மூலமாக சர்வதேச மோதல் அபாயத்தை அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டினார். “எங்களுக்கு எதிரான பொருளாதார தடைகள் அரசியல் விளைவுகளைக் கொண்டிருக்கும், அது வேறெந்த ஏற்றுமதி தடைகளையும் விட மோசமாக இருக்கும்,” என்றவர் தெரிவித்ததுடன், பூகோள பாதுகாப்பு கட்டமைப்பு பலவீனமடைந்திருப்பதாகவும் எச்சரித்தார். “தடைகளை யார் முதலில் தொடங்கி இருந்தாலும் சரி, அதற்கான விளைவுகளுக்கு அவரே பொறுப்பாகிறார் என்ற உண்மையைக் குறித்து தெளிவாக இருக்க வேண்டும்,” என்று ரஷ்ய பத்திரிகை Vedomostiக்கு தெரிவித்தார்.

புதிய தடைகளின் நடவடிக்கையில், ரஷ்யாவும் ஒரு பரந்த எதிர்நடவடிக்கைகளைக் கொண்டு அச்சுறுத்தி வருகிறது, ரஷ்ய பிராந்தியத்தின் மீது மேற்கத்திய விமானங்கள் பறக்க தடைவிதிப்பதும் அதில் சாத்தியமாகலாம். “மேற்கத்திய விமானச்சேவைகள் எங்களின் வான்வழியைப் பயன்படுத்த தவிர்க்க வேண்டியிருந்தால், ஏற்கனவே பிழைக்க போராடி கொண்டிருக்கும் பல விமானச்சேவைகளை அது திவால்நிலைமைக்கு இட்டுச் செல்லும்,” என்று தெரிவித்த மெட்வடெவ், தடைகளை மேலதிகமாக தீவிரப்படுத்துவது குறித்தும் எச்சரிக்கை விடுத்தார். “அது தவறான பாதை. எங்களுக்கு எதிரான தடைகள் உக்ரேனில் சமாதானத்திற்கு இட்டுச் செல்லாது,” என்றார்.

முன்பிருந்த நிலையை பாதுகாக்க ரஷ்யா பெரும்பிரயத்தனத்தோடு ஒரு உடன்பாட்டை எட்ட முனைந்து வருகின்ற நிலையில், ஏகாதிபத்திய சக்திகளும் மற்றும் கியேவில் உள்ள அவற்றின் கைப்பாவை அரசாங்கமும் ரஷ்யாவிடமிருந்து வரும் அனைத்து எச்சரிக்கைகளுக்கு இடையிலும் தீவிரத்தன்மையை அதிகரிக்க தீர்மானமாக இருப்பதாக தெரிகிறது.

திங்களன்று, உக்ரேனிய ஜனாதிபதியும் பெரும் செல்வந்தருமான பெட்ரோ பொறோஷென்கோ உத்தியோகபூர்வ போர்நிறுத்தத்திற்கு இடையிலும் கருங்கடலில், போருக்குத் தயார்நிலையில் இருக்கும் மரியுபோல் துறைமுக நகரிற்கு விஜயம் செய்தார். ராக்கெட்-வீசிகளைக் கொண்டு இந்நகரின் பாதுகாப்பை உக்ரேனிய இராணுவம் உறுதிப்படுத்துமென அங்கே அவர் அறிவித்த பின்னர் இவ்வாறு எச்சரித்தார்: “எதிரி ஒரு படுமோசமான தோல்வியை அடைவார்.” ட்விட்டரில் அவர் எழுதினார்: “இது எங்களின் உக்ரேனிய நாடு, இதை நாங்கள் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.”