தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Economic data show gathering global slump திரண்டுவரும் உலகளாவிய வீழ்ச்சியை பொருளாதார புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன
By Nick
Beams Use this version to print| Send feedback ஐரோப்பா, ஜப்பான் மற்றும் சீனாவிலிருந்து வரும் சமீபத்திய பொருளாதார புள்ளிவிபரங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் ஆழமடைந்துவரும் பின்னடைவு போக்குகளைச் சுட்டிக்காட்டுகின்றன. பூகோளமயப்பட்ட நிதியியல் நெருக்கடியின் சூழலில் யூரோ மண்டல பொருளாதாரம் இப்போதும், ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அது எட்டியிருந்த மட்டத்திற்கும் கிழே இருக்கிறது; சீன உற்பத்தி வெளியீடு மந்தமாகி வருகிறது; மற்றும் கட்டுப்பாட்டு கொள்கை மூலமாக ஜப்பானிய பொருளாதாரத்திற்கு ஊக்கப்பொதியளிப்பதை நோக்கமாக கொண்டதென கூறப்பட்ட "அபேனோமிக்ஸ்" வறண்டு வருகிறதென அங்கே கவலைகள் அதிகரித்துள்ளன. ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) வியாழனன்று பிராங்க்பேர்ட்டில் கூடும் போது, அது நிதியியல் சொத்துக்களை வாங்கும் அடிப்படையில் "பணத்தைப் புழக்கத்தில் விடும் கொள்கையின்" ஏதோவொரு வடிவத்தை அறிமுகப்படுத்த, நிதியியல் சந்தைகளின் அழுத்தத்தின் கீழிருக்கும். கடந்த மாதம் யூரோ மண்டல பணவீக்கம், வெறும் 0.4 சதவீதமாக இருந்தவொரு சூழலை —வங்கியின் இலக்கு விகிதத்தில் ஐந்தில் ஒருபங்கு— முகங்கொடுத்திருந்த நிலையில், ECB தலைவர் மரியோ திராஹி ஜேக்சன் ஹோலின் ஒரு மத்திய வங்கி மாநாட்டில் கூறுகையில், "விலை ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அவசியப்படும், கையிலிருக்கும் அனைத்துக் கருவிகளையும்" அது பயன்படுத்துமென தெரிவித்திருந்தார். குறைந்த பணவீக்கம் அல்லது ஒட்டுமொத்த பணச்சுருக்கம் என்பது நிதியியல் அமைப்புமுறையை ஸ்திரமின்மைக்கு இட்டுச் செல்லும் மிகப்பெரிய ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது, ஏனென்றால் அது தனியார் மற்றும் அரசின் இரண்டினது கடனின் நிஜமான சுமையை அதிகரிக்கிறது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் ஒரு பாத்திரம் வகிக்க, சிக்கன திட்டங்களை மற்றும் அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்கு அங்கே வாய்ப்பிருப்பதாக அவர் நம்புவதாகவும் திராஹி குறிப்பிட்டார், தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளின் மீது இன்னும் கூடுதலாக தாக்குதல் நடத்த இது "கட்டமைப்பு சீர்திருத்தங்களுடன்" இணைந்ததாகும். எவ்வாறிருந்த போதினும், அவரது குறிப்புகள் ஏதோவொருவித அதிர்வலையை உருவாக்கியது, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல்லும் மற்றும் நிதியியல் மந்திரி வொல்ஃப்காங் ஷொய்பிளவும் ECB தலைவரிடம் ஒரு விளக்கம் கேட்டிருந்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன. புளும்பேர்க் உடனான ஒரு நேர்காணலில் ஷொய்பிள "கட்டமைப்பு சீர்திருத்தங்கள்" தேவைப்படுவதாகவும், அதை ECB நடைமுறைபடுத்துவதற்கு அவை எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லை என்றும் தெரிவித்தார். நாணய கொள்கை, அவகாசத்தை மட்டுமே பெற்றுத் தரக்கூடும். அதை நடைமுறைப்படுத்த ECBயிடம் வழிவகைகள் எதுவும் இல்லையென கூறி, பணவீக்கத்தைச் சமாளிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் அவர் உதறித் தள்ளினார். வட்டி விகிதங்கள் வரலாற்றளவிற்கு குறைந்திருந்ததாக அவர் தெரிவித்தார். சந்தைகளில் பரிமாற்றத்தன்மை மிக குறைவாக இருப்பதற்கு மாறாக, அது மிகவும் அதிகமாக இருந்தது. திங்களன்று வெளியான உற்பத்தித்துறை புள்ளிவிபரங்கள் யூரோ மண்டலமெங்கிலும் மோசமடைந்துவரும் நிலைமையை அடிக்கோடிடுகிறது. ஓராண்டிற்கும் அதிகமான காலத்தில் அதன் மிகக் குறைந்த அளவை ஆகஸ்டில் எட்டியிருந்தது. சுருக்கத்திலிருந்து வளர்ச்சியை பிரித்துக் காட்டும் முக்கிய PMI குறியீடு (purchasing manager’s index) 50 குறியீட்டிற்கும் அதிகமாக, 50.7இல் இருக்கின்ற அதேவேளையில், அது ஒரு மாதத்திற்கு முன்னர் இருந்த 51.8 குறியீட்டிலிருந்து சரிந்திருந்தது. பிரெஞ்சு உற்பத்தித்துறை கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து மிக வேகமான விகிதத்தில் சுருங்கியது, அதேவேளையில் இத்தாலி விரிவாக்கத்திலிருந்து மந்தநிலைமைக்கு சென்றுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிபரங்களும் அதே போக்கைக் காட்டுகின்றன. யூரோமண்டல வெளியீட்டில் ஏறத்தாழ 30 சதவீதமாக இருக்கும் ஜேர்மன் பொருளாதாரம், இந்த ஆண்டின் இரண்டாவது மூன்று மாதங்களில் சுருங்கியது, மேலும் 18-உறுப்பு நாடுகளைக் கொண்ட யூரோமண்டல அணி சுத்தமாக வளர்ச்சியைக் காட்ட தவறியது. 2008-2009இல் வெடித்த நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் இத்தாலி இப்போது அதன் மூன்றாவது பின்னடைவில் இருக்கிறது. பிரச்சினை, இந்த புள்ளிவிபரங்கள் காட்டுவதையும் கடந்து ஆழமாக செல்கிறது. யூரோமண்டல பொருளாதாரம் அதன் வளர்ச்சி விகித போக்கிற்கு 20 சதவீதம் குறைவாக செயல்பட்டு வருவதாக தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. நோபல் விருது பெற்ற அமெரிக்க பொருளியல்வாதி ஜோசப் ஸ்டிக்லிட்ஜ், “ஜப்பானின் கடந்த தசாப்தத்தையும் மிஞ்சி, அங்கே ஆண்டுக்கணக்கில் நீடித்திருக்கும் ஒரு மந்தநிலை அபாயம் இருக்கிறது," என்றார். உலக பொருளாதாரத்தின் இரட்சகனாக சீனாவைக் கருத முடியுமென்ற நாட்கள் முற்றிலுமாக, நிஜமாகவே முடிந்து போய்விட்டன என்பதையே சமீபத்திய புள்ளிவிபரங்கள் அடிக்கோடிடுகின்றன. கடந்த மாதம், சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ PMI குறியீடு பெப்ரவரிக்குப் பின்னர் முதல்முறையாக வீழ்ச்சி அடைந்தது, இரண்டு ஆண்டுகளின் பெரிய உயர்வாக ஜூலையில் 51.7இல் இருந்த அது 51.1க்கு சரிந்தது. உற்பத்தித்துறை மந்தமானதற்குப் பின்னர் வெளியான புள்ளிவிபரங்கள், ஜூலையில் கடன் வழங்குவது சுருங்கியதையும், சொத்து விலைகளின் வீழ்ச்சியையும் எடுத்துக்காட்டின. உற்பத்தித்துறை புள்ளிவிபரங்களைக் குறித்து குறிப்பிடுகையில், பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது: “சீன பொருளாதாரம் பல ஆண்டுகளாக மந்தமாகி வருகிறது, ஆனால் சமீபத்திய மாதங்களில் வீட்டு-நில விற்பனை (real estate) சந்தைகளில் ஏற்பட்ட ஒரு கூர்மையான திருத்தம், அந்த மந்தநிலை மேலதிக கடுமையான வீழ்ச்சிக்குள் திரும்புமோ என்ற கவலைக்கு இட்டுச் சென்றது." சீன அரசாங்கம் ஒரு "சிறிய ஊக்கப்பொதியாக" வர்ணிக்கப்பட்ட தொடர்ச்சியான முறைமைகளோடு வீட்டு-நில விற்பனை சந்தையின் பிரச்சினைகளுக்கு விடையிறுப்பு காட்டியுள்ளது. ஆனால் PMI குறியீட்டில் ஏற்பட்ட வீழ்ச்சியானது, இந்த முறைமைகள் எதுவும் வேலைக்கு ஆகாதென்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. பைனான்சியல் டைம்ஸின் தகவலோ, கடந்த மாத உற்பத்தித்துறை பலவீனம், "பிரதானமாக மந்தமான உள்நாட்டு தேவையின் விளைவாகும்" என்கிறது—ஆனால் நுகர்வு செலவுகளை ஊக்குவிப்பதற்காக என்று கூறப்படும் உத்தியோகபூர்வ அரசாங்க கொள்கையோ சிறகை விரித்திருந்தது. ஜப்பானில், அரசாங்க ஊக்கபொதி முறைமைகள் மற்றும் பேங்க் ஆஃப் ஜப்பானின் நிதியியல் சொத்து வாங்கும் ஒரு திட்டத்தை அடிப்படையாக கொண்ட "அபினோமிக்ஸ்", 1990களுக்குப் பின்னர் பொருளாதாரத்தை பீடித்துள்ள பணச்சுருக்கத்திலிருந்து வெளியே மீட்பதற்காக கொண்டு வரப்பட்டிருந்தது. ஆனால், ஏப்ரலில் ஒரு நுகர்வு வரி உயர்வால் விளைந்த விளைவுகளில் ஒன்றால் திருத்தப்பட்ட பின்னர், ஜப்பானிய பொருளாதாரம் 2013க்கு மத்தியிலிருந்து 2014இன் மத்திய காலப்பகுதி வரையில் தோற்றப்பாட்டளவில் பூஜ்ஜிய வளர்ச்சியை எட்டியது. மோர்கன் ஸ்ரான்லியின் தலைமை ஜப்பானிய பொருளியல்வாதி சேத்தன் அஹ்யா, “அபேனோமிக்ஸ் சிக்கலில் இருக்கிறது," என்று பைனான்சியல் டைம்ஸிற்குத் தெரிவித்தார். இரண்டாம் காலாண்டின் ஒரு வீழ்ச்சிக்குப் பின்னர் சில குறியீடுகள் மேல்நோக்கி சுட்டிக்காட்டினாலும் கூட, “ஒரு கூர்மையான மீள்எழுச்சிக்கு உறுதியாக நம்பிக்கையளிப்பதில் அந்த வேகம் மிகவும் மெதுவாகவே இருக்கிறது," என்றார். மாதாமாத புள்ளிவிபரங்களில் இருந்து பின்னோக்கி நகர்ந்து, ஒரு நீண்டகால காலகட்டத்தில் பொருளாதார அபிவிருத்திகளை மீளாய்வு செய்தால், என்ன நடந்து வருகிறது என்பதன் அடியிலிருக்கும் முக்கியத்துவம் முன்னுக்கு வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில், மத்திய வங்கிகளும் கட்டுப்பாட்டு ஆணையங்களும் வரலாற்றில் பார்த்திராத அளவிற்கு மிகப்பெரிய நிதியியல் ஊக்கப்பொதிகளை வழங்கியுள்ளன. அமெரிக்க பெடரல் மட்டுமே நிதியியல் சந்தைகளுக்குள் 4 ட்ரில்லியன் டாலரைப் பாய்ச்சி உள்ளது. சீன கடன்வழங்கு சந்தைகள் ஒட்டுமொத்த அமெரிக்க வங்கியியல் அமைப்புமுறைக்கு இணையான ஒரு தொகைக்கு விரிவடைந்துள்ளது. உலக பொருளாதாரம் "மீட்சிக்கு" வருவதில் தோல்வியடைந்தது மட்டுமல்ல, அது முற்றுமுதலாக ஒரு பின்னடைவிற்குள் இல்லையென்றாலும், தெளிவாக ஒரு மந்தநிலைமையின் காலக்கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. அதேநேரத்தில், எடுக்கப்பட்ட முறைமைகள் மற்றொரு நிதியியல் நெருக்கடிக்கு நிலைமைகளை உருவாக்கி உள்ளது. நிஜமான பொருளாதாரம் அரிதாகவே வளர்ந்திருக்கின்ற நிலையில், நிதியியல் சந்தைகளோ பண ஊக்கப்பொதிகள் அளிக்கப்பட்டதன் விளைவாக சாதனையளவிற்கான உயரங்களை எட்டியுள்ளது. எவ்வாறிருந்த போதினும், நிதியியல் வெகுமதிக்கு இட்டுச் சென்றுள்ள நிலைமைகள் வரவிருக்கும் மாதங்களில் மாறவிருக்கின்றன. அடுத்த மாதம், அமெரிக்க பெடரல் அதன் "பணத்தைப் புழக்கத்தில் விடும்" திட்டத்தை (quantitative easing) முடிவுக்குக் கொண்டு வருமென்றும், அநேகமாக அடுத்த ஆண்டு ஜூனில் இருந்து வட்டிவிகிதங்களை உயர்த்துவதை நோக்கி நகருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஐரோப்பாவிலும் ஜப்பானிலும், மத்திய வங்கிகள் நிதியியல் ஊக்கப்பொதி முறைமைகளை வழங்கி வருகின்றன அல்லது அதிகரிக்கவே கூட செய்துள்ளன. இந்த கொள்கை விரிசலின் விளைவாக நிதியியல் சந்தைகள் ஸ்திரமின்மையின் ஒரு காலக்கட்டத்திற்குள் செல்லக்கூடுமென்ற எச்சரிக்கைகள் எழுந்துள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளாக, உலகின் பிரதான மத்திய வங்கிகள் அனைத்தும் அதே நிகழ்ச்சி நிரலைத் தான் பின்தொடர்ந்து வந்துள்ளன. Colonial First Stateஇல் பொருளாதார மற்றும் சந்தை ஆய்வுக்கான தலைவரும், ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய சொத்து மேலாளருமான ஸ்டீபன் ஹால்மாரிக் Sydney Morning Heraldக்கு கூறுகையில், மத்திய வங்கிகள் வெவ்வேறு திசைகளில் நகரும் போது, கணிசமான அளவிற்கு “உலகளாவிய கொந்தளிப்பு அபாயங்கள்" அதிகரித்து, அடுத்த ஆறில் இருந்து 12 மாதங்களில் இது "வேகமாக" மாறுமென தெரிவித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஊக்கபொதி முறைமைகள் நிதியியல் அமைப்புமுறையின் ஒரு முழு பொறிவைத் தள்ளிப் போட்டிருந்தாலும், அவை அடியிலிருக்கும் பொருளாதாரத்தை ஊக்குவிக்க தவறியிருப்பதோடு, மேற்கொண்டும் உருகுவதற்குரிய நிலைமைகளைக் கொண்டு வந்து நிறுத்தி உள்ளன. |
|
|