தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR NATO summit begins as anti-Russian measures heighten war danger ரஷ்ய-எதிர்ப்பு நடவடிக்கைகள் போர் அபாயங்களை அதிகரிக்கையில், நேட்டோ உச்சிமாநாடு தொடங்குகிறது
By
Chris Marsden Use this version to print| Send feedback
புதன்கிழமை, உக்ரேன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ஒரு "நிரந்தர போர்நிறுத்தம்" என்ற குறைந்தபட்ச சுருக்கமான அறிவிப்புடன் தொடங்கிய, வேல்ஸின் இன்றைய நேட்டோ உச்சிமாநாடு, அதற்கு முந்தைய நாட்களில் எதிரொலித்ததைப் போன்ற அதேமாதிரியான யுத்ததொனி வனப்புரைகளோடு தான் முடிந்திருந்தது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடனான ஒரு தொலைபேசி கலைந்துரையாடல் டோன்பாஸ் பகுதியில் ஒரு நிரந்தர போர்நிறுத்த உடன்பாட்டில் முடிந்ததாகவும், சமாதானத்தை ஊக்குவிக்க ஒரு பரஸ்பர புரிதல் ஏற்பட்டிருப்பதாகவும், உக்ரேன் ஜனாதிபதி பெட்ரோ பொறொஷென்கோ காலையில் ட்விட்டரில் எழுதினார். ஒரு மணிநேரத்திற்குள், புட்டினின் செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ், ஒரு போர்நிறுத்தம் மீது அங்கே எந்த உடன்பாடும் இல்லை ஏனென்றால் கியேவ் ஆட்சிக்கும் ரஷ்யாவை-ஆதரிக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான கிழக்கு உக்ரேனிய மோதலில் ரஷ்யா ஒரு பங்காளி இல்லை என்று தெரிவித்தார். இதற்கிடையே, பொறொஷென்கோ அறிக்கையின் வார்த்தைகள் "நிரந்தர போர்நிறுத்தம்" என்பதிலிருந்து "போர்நிறுத்த ஆட்சிமுறை" என்று மாற்றப்பட்டது. அதன் பின்னர், திங்களன்று பெலாரஸில் தொடங்கிய பேச்சுவார்த்தைகளைச் சுட்டிக்காட்டி, வெள்ளிக்கிழமை வாக்கில் கிழக்கில் கியேவிற்கும், எதிர்ப்பு குழுக்களுக்கும் இடையே ஒரு போர்நிறுத்தம் சாத்தியமாகலாம் என புட்டின் தெரிவித்தார். டொனெட்ஸ்க் மற்றும் லூஹன்ஸ்கை நோக்கி "முன்னேறுவதை நிறுத்துமாறு" கிளர்ச்சியாளர்களை வலியுறுத்துவதன் மூலமாக மற்றும் "மக்கள்தொகை மிகுந்த பகுதிகளில் ஏவுகணை தாக்குதல்களையோ அல்லது இதர தாக்குதல்களையோ நடத்த சாத்தியமில்லாத தூரத்திற்கு" கிழக்கிலிருந்து அதன் துருப்புகளை விலக்குமாறு உக்ரேனை வலியுறுத்துவதன் மூலமாக சமாதானத்தை எட்ட முடியுமென அவர் தெரிவித்தார். இலோவாய்ஸ்க் நகரம் சுற்றி வளைக்கப்பட்டு குறைந்தபட்சம் 87 உக்ரேனிய சிப்பாய்கள் கொல்லப்பட்ட பின்னரும், சண்டை தொடர்ந்து கொண்டிருந்தது, அது கிளர்ச்சியாளர்கள் சமீபத்தில் முன்னேறி இருந்ததை உறுதிப்படுத்தியது, அவர்களது அந்த முன்னேற்றத்தில் லூஹன்ஸ்க் விமான நிலையம் மற்றும் அஜோவ் கடற்கரை பகுதி மீதிருக்கும் நோவோஜோவ்ஸ்க் நகரம் மீது உக்ரேன் கட்டுப்பாட்டை இழந்திருந்தது. தொடர்ச்சியாக பல ரஷ்ய-விரோத நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்குரிய நேட்டோ உச்சிமாநாட்டின் தயாரிப்புகளைச் சிதைக்கும் எந்த நடவடிக்கையின் மீதும் அவருக்கிருக்கும் குரோதத்தை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவால் அரிதாக தான் மூடிமறைக்க முடிந்தது. "உள்நாட்டில் பிறந்து வளர்ந்திராத அந்த பிரிவினைவாதிகளைச் சாக்காக கொண்டு துல்லியமாக ரஷ்யா டாங்கிகளையும், துருப்புகளையும், ஆயுதங்களையும், ஆலோசகர்களையும் நாங்கள் தொடர்ந்து அனுப்பவிருக்கிறோம் என்று கூறினால், எந்தவொரு உண்மையான அரசியல் தீர்வையும் எட்ட முடியாது, உக்ரேன் அதன் பிராந்தியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் அல்லது அதன் இறையாண்மையை விட்டுக் கொடுக்க வேண்டும் அது தான் ஒரே சாத்தியமான தீர்வாக இருக்கும்," என்றார். எஸ்தோனிய தலைநகர் டாலின் விஜயத்தின் போது ஒபாமா ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். நேட்டோ உறுப்பு நாடுகளான எஸ்தோனியா மற்றும் லாட்வியா மற்றும் உக்ரேன் போன்ற நேட்டோவில் அங்கத்துவம் வகிக்காத அரசுகளினது கூட்டணியின் ஆதரவை ரஷ்யாவிற்கு எதிராக மீண்டும் உறுதி செய்வது தான் அவரது வரையறுக்கப்பட்ட நோக்கமாக இருந்தது. ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ ஆக்ரோஷத்தை சட்டபூர்வமாக்குவதற்காக நிஜத்தைத் தலைகீழாக்கி ஒபாமா அறிவித்தார், சமாதானம் மற்றும் சுதந்திரத்திற்கு அர்பணிக்கப்பட்ட ஐரோப்பிய குறிக்கோள் "உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்ரோஷத்தால் அச்சுறுத்தப்பட்டு" வருகிறது என்றார். "நாம் நமது நேட்டோ கூட்டாளிகளைப் பாதுகாப்போம், அதன் அர்த்தம் ஒவ்வொரு கூட்டாளியையும் பாதுகாப்பதாகும்," என்றவர் குறிப்பிட்டார்—அதாவது இராணுவ நடவடிக்கைகளை நேட்டோ நாடுகளுக்கு மட்டும் உறுதி செய்வதில்லை என்றும் இந்த சூத்திரத்தை அர்த்தப்படுத்த முடியும், ஆனால் நேட்டோ சாசனத்தின் ஐந்தாவது ஷரத்து அங்கத்துவ நாடுகளுக்கு மட்டுமே பரஸ்பர பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிடுகிறது. அர்லி பர்க் ரகத்தைச் சேர்ந்த ஏவுகணை தகர்ப்பு போர்க்கப்பல் USS Ross; பிரெஞ்சு போர்க்கப்பல் Birot; ஹலிபேக்ஸ் ரக கனடிய போர்க்கப்பலான HMCS Toronto; மற்றும் ஸ்பானிஷ் போர்க்கப்பல் Almirante Juan de Borbon ஆகிய நான்கு நேட்டோ போர்க்கப்பல்களும் செப்டம்பர் 7க்கு முன்னதாக கருங்கடலுக்குள் நுழையுமென அதேநாளில் அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 16-26இல் போலாந்திற்கு அருகில் உள்ள உக்ரேனிய எல்லைக்கருகில் அமெரிக்கா Rapid Trident இராணுவ ஒத்திகையையும் முன்னெடுக்க உள்ளது. தொடக்கத்தில் ஜூலையில் திட்டமிடப்பட்டிருந்த Rapid Trident ஒத்திகை, உக்ரேனின் கிழக்கில் உள்நாட்டு யுத்தம் வெடித்ததற்குப் பின்னர் உக்ரேனுக்குள் நிலைநிறுத்தப்பபடும், அமெரிக்க மற்றும் இதர சிப்பாய்களின் முதலும் முக்கியமுமான நிலைநிறுத்தும் நடவடிக்கையாகும். அக்டோபர் சூழ்ச்சிகளுக்காக அமெரிக்கா போலந்து மற்றும் எஸ்தோனியா, லாட்வியா மற்றும் லித்துவேனியா ஆகிய பால்டிக் அரசுகளுக்கு டாங்கிகளையும் மற்றும் 600 துருப்புகளையும் நகர்த்தி வருகிறது. வாஷிங்டனிலிருந்து வரும் ஆழ்ந்த அழுத்தங்களுக்கு அடிபணிந்து, பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் அரசாங்கம், ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்தபடி அக்டோபரில் ரஷ்யாவிற்கு பிரெஞ்சு மிஸ்ட்ரல் ரக போர்க்கப்பல்கள் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது, அத்துடன் விற்க திட்டமிட்டிருந்ததையும் நவம்பரில் மறுபரிசீலனைக்கு உட்படுத்துமென புதனன்று அறிவித்தது. பாரீஸ் "சர்வதேச சமூகத்திலிருந்து வரும் அழுத்தங்களை" செவிமடுத்திருப்பதாக கூறி, அமெரிக்க அரசுத்துறை செய்தி தொடர்பாளர் ஜேன் ப்சாகி அந்த முடிவைப் பாராட்டினார். வேல்ஸ் உச்சிமாநாடு இரண்டு ஒன்றோடொன்று தொடர்புபட்ட இராணுவப் படைகளைக் குறித்து விவாதிக்கும். பால்டிக் நாடுகள் மற்றும் நெதர்லாந்து, நோர்வே மற்றும் டென்மார்க் ஆகியவற்றுடன் இணைந்து 10,000 துருப்புகளைக் கொண்ட ஒரு கூட்டு அதிரடி படையை உருவாக்க ஆறு பங்காளி நாடுகளுடன் ஒரு விருப்பக் கடிதம் கையெழுத்தாகுமென அது எதிர்பார்ப்பதாக நேட்டோவின் ஏற்பாட்டாளர் பிரிட்டன் தெரிவித்துள்ளது. அது பத்து கிழக்கு ஐரோப்பிய பங்காளி நாடுகளின் தகைமைகளை அதிகரிக்க அவற்றுடன் வேலை செய்துவரும் பேர்லினுடன் இணைந்து ஒரு ஜேர்மன் முன்முயற்சிக்கு இணையாக செயல்படும். இந்த படை பிரத்யேகமானது என்றாலும், பொதுச் செயலாளர் ஆண்டர்ஸ் ஃபோக் ராஸ்முஸ்சென் திங்களன்று விவரித்த 4000 சிப்பாய்களைக் கொண்டதும் உச்சபட்ச தயார்நிலையில் இருக்குமென மதிப்பிடப்பட்டதுமான ஒரு பலமான நேட்டோ படைக்கு துணையாக இருக்கும். ஒரு சுழற்சி முறை நிலைநிறுத்தல்களுக்கு உதவியாக வான்வழி, கடல்வழி மற்றும் சிறப்பு படைகளுடன் கூட்டாளிகள் கிறிஸ்துமஸ் வாக்கில் பல ஆயிரக் கணக்கான துருப்புகளை வழங்குவார்கள் என்பதுடன், அதை எந்தவொரு நேட்டோ உறுப்பு நாட்டிற்கும் 48 மணிநேர அறிவிப்புக்குள் நகர்த்தக்கூடியதாக இருக்கும். அது உத்தியோகபூர்வமாக கிழக்கு ஐரோப்பாவில் நிலைநிறுத்தப்படாது, ஆனால் உபகரணங்களும் மற்றும் படைத்தளவாட வசதிகளும் முன்கூட்டியே அங்கே அமைந்திருக்கும். இந்த படை 2004இல் செயல்பாட்டிற்கு வந்த தற்போதிருக்கும் நேட்டோ அதிரடி படைக்கு ஒரு "தாக்குமுகப்பாக" இருக்குமென வர்ணிக்கப்பட்டது. இலக்கை தெளிவுபடுத்தி ராஸ்முஸ்சென் கூறுகையில், “ரஷ்யா நேட்டோவை ஒரு கூட்டாளியாக பார்க்கவில்லை என்ற யதார்த்தத்தை நாம் முகங்கொடுக்க வேண்டும்... நாம் அந்த சூழலுக்கு தகவமைப்போம்" என்றார். 1997 நேட்டோ-ரஷ்யா அஸ்திவார சட்டத்தை, குறைந்தபட்சம் உத்தியோகபூர்வமாக, உடைக்காதபடிக்கு, பெயரளவிற்கு படைகள் நிறுத்தப்படும் இடங்கள் குறித்த முன்னறிவிப்புகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. நேட்டோ உறுப்பு நாடுகளைச் சேர்க்க கிழக்கை நோக்கி விரிவாக்க திட்டமிட்டு வருவதாக வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அந்த உடன்படிக்கை “தற்போதைய மற்றும் முன்அனுமானிக்கக்கூடிய பாதுகாப்பு சூழ்நிலைகளில், இந்த கூட்டணி முக்கிய போர் படைகளைக் கூடுதலாக நிரந்தரமாக நிறுத்துவதை விட, அவசியப்படும் உள்இயக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் பலப்படுத்துவதற்கான தகைமைகளை உறுதிப்படுத்துவதன் மூலமாக அதன் கூட்டு பாதுகாப்பு மற்றும் இதர நடவடிக்கைகளை நடத்தும்" என அந்த உடன்பாடு ரஷ்யாவிற்கு மறுஉத்தரவாதம் அளித்தது. கிழக்கில் நேட்டோ துருப்பு நிலைநிறுத்தப்படுவது "நிரந்தரமாக" என்று குறிப்பிடாமல் "நீடித்து" என்று குறிப்பிடப்பட்டு வருகிறது. ஐரோப்பிய அரசியல் பிரபலங்களோ, ரஷ்யாவை இலக்கில் வைத்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்பதை அறிவிக்க வரிசைகட்டி நிற்கிறார்கள். பிரதானமாக ஜேர்மன் அரசாங்கத்தின் பக்கத்தில் பரந்தளவில் தயக்கம் இருப்பதையொட்டி, பிரிட்டன் உடன் சேர்ந்து அமெரிக்கா வெறுமனே பொருளாதார நகர்வுகளை அல்லாமல் இராணுவ நடவடிக்கைகளை முறையிட்டு வருகிறது. சனியன்று, புருசெல்ஸில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடந்த ஒரு ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில், பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூன் 1938இல் முனிச்சில் ஹிட்லர் குறித்து பிரிட்டிஷ் பிரதம மந்திரி நெவில் சேம்பர்லினால் சாந்தப்படுத்தப்பட்ட அதே அபாயம் திரும்ப நடக்கக்கூடுமென்பதை மேற்கோளிட்டுக் காட்டியதாக இத்தாலியின் La Repubblica பத்திரிகை அறிவித்திருந்தது. “இந்த முறை புட்டினின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யவியலாது," என்று அவர் அறிவித்தார். “ரஷ்யர்கள் எஸ்த்தோனியா அல்லது லாட்வியா அல்லது போலாந்து போன்ற நாடுகளைப் பார்க்கும் போது அவர்கள் வெறுமனே எஸ்த்தோனியா, லாட்வியா மற்றும் போலாந்து சிப்பாய்களை மட்டும் பார்க்கவில்லை--அவர்கள் பிரெஞ்சு, ஜேர்மன், பிரிட்டிஷ் சிப்பாய்களையும் சேர்த்துத் தான் பார்க்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமாகும்," என்றார். நேட்டோ அரசுகள் அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை அவற்றின் இராணுவ செலவுகளுக்கென உயர்த்த வேண்டுமென ஒபாமா மீண்டும் எஸ்த்தோனியாவில் வலியுறுத்தினார்--இந்த இலக்கு இரண்டு முக்கிய இராணுவ சக்திகளால், அமெரிக்கா மற்றும் பிரிட்டனால், மட்டுமே தற்போது எட்டப்பட்டிருக்கிறது, மற்றவை கிரீஸ் மற்றும் எஸ்த்தோனியா இதை எட்டியுள்ளன. ஐரோப்பாவில் முழு-அளவிலான யுத்த அபாயம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. Spiegel Onlineக்கு கருத்துக்களைக் கூறுகையில், ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் சமீபத்திய சம்பவங்களின் போக்கைக் குறித்து ஓரளவிற்கு துல்லியமான சித்தரிப்பை வழங்கினார். எதிர்பார்க்கக்கூடிய விதத்தில், அதிகரித்துவரும் அச்சுறுத்தல்களுக்கு "உக்ரேன் மற்றும் குறிப்பாக ரஷ்யாவைக்" குறை கூறிய அதேவேளையில் அவர் எச்சரித்தார்: “கிழக்கு உக்ரேன் சமீபத்திய நாட்களில் ஒரு பகிரங்கமான யுத்தத்திலோ, அல்லது ஒரு பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தத்திலோ இல்லை என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், விவகாரம் இப்போதிருப்பதை போல, இராணுவ விரிவாக்கத்தின் இயக்கவியல் அதிகளவில் அரசியல் நடவடிக்கையைத் தீர்மானிக்கும் போது, ஆனால் மாறாக இல்லாமல் இருந்தால், அது முற்றிலும் அபாயகரமானது. “உக்ரேன் மற்றும் ரஷ்ய இராணுவ படைகள் ஒரு நேரடி மோதலுக்குள் இறங்குமா என்பது தான் அச்சுறுத்துகிறது. அது கிழக்கு உக்ரேனில் வாழும் மக்களைப் பொறுத்திருக்கிறது, அது உக்ரேனிய ஒற்றுமையைப் பொறுத்திருக்கிறது, அது ஐரோப்பிய சமாதானத்தைப் பொறுத்திருக்கிறது, சுருக்கமாக, அது ஐரோப்பாவில் ஒரு புதிய இரும்புத்திரையை தடுப்பதைப் பொறுத்திருக்கிறது," என்றார். நேட்டோ ஆக்ரோஷத்திற்கு ரஷ்யாவின் விடையிறுப்போ தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலமாக ஒரு தீர்வுக்கு வர கோருகிறது. ஆனால் நேற்று, தென்-மத்திய ரஷ்யாவின் அல்டாயில் முன்னொருபோதும் இல்லாத அளவில் MiG-31 இடைமறிக்கும்-போர் விமானங்கள் மற்றும் Su-24MR வேவுபார்க்கும் விமானங்கள் உள்ளடங்கிய, 4,000க்கும் அதிகமான சிப்பாய்கள் பங்குபெறும் மிகப் பெரிய ஒத்திகை இம்மாதம் நடத்தப்படுமென அறிவித்தது. புட்டினின் பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் மிகெல் போபொவ் கூறுகையில், நேட்டோ விரிவாக்கம் ஒரு தேசிய அச்சுறுத்தல் என்பதை அடையாளப்படுத்த மற்றும் ரஷ்யாவின் இருப்பு ஆபத்திற்குட்பட்டால் அணுஆயுதங்களை பயன்படுத்தும் ரஷ்யாவின் உரிமையை மறுஉத்தரவாதம் செய்ய, ரஷ்யாவின் சொந்த இராணுவ கோட்பாடு, முதலில் 2010இல் திருத்தப்பட்டுள்ளதுடன், மீண்டுமொருமுறை திருத்தி வரையப்படும் என்றுரைத்தார். "அந்த அணியை பெரிதாக்குவது உட்பட, அதனூடாகவும் நமது எல்லைகளுக்கருகில் அந்த கூட்டணியின் இராணுவ கட்டமைப்பை நகர்த்தும் திட்டங்களை ரஷ்யாவால் ஏற்க முடியாமல் இருப்பது நேட்டோ உடனான உறவுகளில் தீர்மானகரமான காரணியாக இருக்கிறது," என்று அவர் தெரிவித்தார். ஒரு மூத்த இராணுவ அமைச்சக அதிகாரி ஜெனரல் யூரி யாகூபொவ் நாசுக்காக குறிப்பிடுகையில், அந்த புதிய கோட்பாடு மிகத் தெளிவாக அமெரிக்கா மற்றும் நேட்டோவை மாஸ்கோவின் பிரதான எதிரியாக அடையாளப்படுத்த வேண்டும், மற்றும் எந்த நிலைமைகளின் கீழ் ரஷ்யா ஒரு முன்கூட்டிய அணுஆயுத தாக்குதல் நடத்தும் என்பதற்குரிய நிலைமைகளையும் குறிப்பிட வேண்டும் என்றார். “முதலும் முற்றிலுமாக, ரஷ்யாவின் எதிரி போன்றவற்றை இந்த மூலோபாய ஆவணம் தெளிவாக அடையாளம் காட்ட வேண்டும், இவ்விதத்திலானது 2010 இராணுவ கோட்பாட்டில் இடம் பெற்றிருக்கவில்லை," என்று அவர் தெரிவித்தார். |
|
|