சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

On eve of NATO summit

US and NATO step up military preparations against Russia

நேட்டோ மாநாட்டிற்கு முந்தைய நாள்

ரஷ்யாவிற்கு எதிரான இராணுவ தயாரிப்புகளை அமெரிக்கா மற்றும் நேட்டோ அதிகரிக்கின்றன

By Niles Williamson
3 September 2014

Use this version to printSend feedback

வேல்ஸில் இந்த வாரம் நடைபெறவுள்ள அதன் கூட்டத்தில் நேட்டோ உறுப்பு நாடுகளின் அரசாங்க தலைவர்கள், எந்தவொரு நாட்டிலும் இரண்டு நாட்களுக்குள் நிறுத்துவதற்கு உகந்த ஏறக்குறைய 4,000 சிப்பாய்களைக் கொண்ட ஒரு சிறப்பு அதிரடி விடையிறுப்பு படையை உருவாக்க ஒப்புதல் அளிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவர்கள் போலந்து மற்றும் பால்டிக் அரசுகளில் நடந்துவரும் துருப்பு பிரசன்னத்தின் ஸ்தாபகத்திற்கும், அத்துடன் கிழக்கு ஐரோப்பாவில் படைத்தளவாடங்கள் மற்றும் ஆயுத சேமிப்புகிடங்குகளை கட்டியமைக்கவும் அனுமதியளிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நேட்டோ உச்சி மாநாட்டிற்கு உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொறொஷென்கோவும் அழைக்கப்பட்டிருக்கிறார் என்பதோடு, அது ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய இராஜாங்க, பொருளாதார மற்றும் இராணுவ தாக்குதலின் மீது கவனத்தைக் குவித்திருக்கும். ரஷ்ய அரசாங்கத்திற்கு ஆதரவான விக்டொர் யானுகோவிச்சை பதவியிலிருந்து இறக்கிய ஒரு பாசிசவாத-தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பை ஒழுங்கமைத்தன் மூலமாக, கடந்த பெப்ரவரியில் அமெரிக்கா மற்றும் ஜேர்மனி உக்ரேனில் நெருக்கடியை தூண்டிவிட்டதிலிருந்து ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகளின் ஆக்ரோஷமான விரிவாக்கத்திற்கு விடையிறுப்பாகவும், அத்துடன் அமெரிக்க-மேலாதிக்க மேற்கத்திய இராணுவ கூட்டணிக்குள் உக்ரேனை ஒருங்கிணைக்க கியேவ் ஆட்சியின் நகர்வுகளுக்கேற்பவும், அது அதன் இராணுவ கொள்கையை மாற்றுமென்று புதனன்று ரஷ்யா அறிவித்தது.

ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணை செயலர் மிகெல் போபொவ் RIA இன் Novosti உடனான ஒரு நேர்காணலில் கூறுகையில், “விஸ்தரிப்பது உள்ளடங்கலாக நமது நாட்டின் எல்லைகளில் நேட்டோ உறுப்பு-நாடுகளின் இராணுவ உள்கட்டமைப்பை கொண்டு வரும் பிரச்சினையானது, ரஷ்ய கூட்டமைப்பிற்கு வெளியிலிருந்து வரும் இராணுவ அச்சுறுத்தல்களாக பார்க்கப்படும்," என்றார்.

ரஷ்யாவிற்கு எதிராக இந்த வாரயிறுதியில் ஒரு புதிய சுற்று தடைகள் குறித்து முடிவெடுக்கப்படுமென, வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கை தலைவர் ஃபெடெரிகா மோக்ஹெரினி செவ்வாயன்று அறிவித்தார்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தியின்படி, ரஷ்ய அரசு நிறுவனங்கள் மூலதன சந்தைகளில் இருந்து பணம் திரட்டும் திறனின் மீதான தடைகள், புதிய கூட்டுக்கடன்களை பெறுவதிலிருந்து ரஷ்ய அரச வங்கிகள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் மீதான தடைகளை நீடித்தல், மற்றும் இரட்டை-பயன்பாட்டு பண்டங்களின் ஏற்றுமதி மீது பரந்த மட்டுப்படுத்தல்கள் ஆகியவை புதிய முறைமைகளில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

நேட்டோ உச்சிமாநாட்டிற்கு முந்தைய நாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மூன்று பால்டிக் அரசுகளின் தலைவர்களைஎஸ்தோனிய ஜனாதிபதி தூமாஸ் ஹென்ட்ரிக் இல்வ்ஸ், லித்துவேனியா ஜனாதிபதி டாலியா க்ரெபௌஸ்கைய்ட், மற்றும் லாட்விய ஜனாதிபதி ஆண்ட்ரிஸ் பெர்ஜின்ஸைசந்திக்க எஸ்தோனியாவின் டாலின்னுக்குச் சென்றிருந்தார். “ஐரோப்பாவிற்கு எதிராக ரஷ்யா நடைமுறையில் ஒரு யுத்த நிலைப்பாட்டில்" இருப்பதாக க்ரெபௌஸ்கைய்ட் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

நேட்டோ சாசனத்தின் ஐந்தாவது ஷரத்தின் கீழ் பால்டிக் அரசுகளின் அந்தஸ்துக்கு மறுஉத்தரவாதம் அளிப்பதே ஒபாமாவினது எஸ்தோனியா விஜயத்தின் முக்கிய நோக்கமாகும், அந்த ஷரத்து ஓர் உறுப்பு நாட்டை வேறெந்த நாடேனும் தாக்கும் போது கூட்டாக பாதுகாப்பளிக்க வகை செய்கிறது.

பால்டிக் அரசுகளின் வலதுசாரி தலைவர்கள் அவர்களின் நாடுகளில் அமெரிக்க மற்றும் நேட்டோ இராணுவ பிரசன்னத்தை அதிகரிக்க அழைப்பு விடுத்திருக்கிறார்கள், அந்த நாடுகள் அனைத்தும் ரஷ்யாவின் எல்லைகளை ஒட்டி இருப்பதோடு, கணிசமான அளவிற்கு ரஷ்ய சிறுபான்மை மக்களும் அங்கே இருக்கிறார்கள். பால்டிக் அரசுகள் 2004இல் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளடக்கப்பட்டன, மேலும் அவை மட்டுமே அவ்விரு அமைப்புகளிலும் அங்கத்துவம் பெற்றுள்ள முன்னாள் சோவியத் பிராந்தியங்களாகும்.

இத்தாலிய நாளிதழ் La Republica சனிக்கிழமை ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டின் மூடிய கதவுக்குப் பின்னால் நடந்த ஒரு அமர்விலிருந்து விபரங்களைக் கசியவிட்டது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை பூதாகரமாக்கி காட்டவும் மற்றும் ரஷ்யா உடனான யுத்தத்திற்கு மக்களின் கருத்துக்களை நிபந்தனைக்குட்படுத்தவும் அவை ஊடகங்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்த அமர்வில், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஜோஸ் மானுவேல் பரோஸோ வெள்ளியன்று புட்டின் உடனான அவரது ஒரு தொலைபேசி வழி உரையாடலை விவரித்திருந்தார். La Republicaஇன் கருத்துப்படி, உக்ரேனில் ரஷ்ய துருப்புகள் குறித்த பரோஸோவின் குற்றச்சாட்டுக்களுக்கு புட்டின், “பிரச்சினை இதுவல்ல, மாறாக நான் நினைத்தால் இரண்டே வாரங்களில் கியேவை என்னால் கைப்பற்ற முடியுமென" கூறி விடையிறுத்திருந்தார்.

கிரெம்ளினின் ஒரு வெளியுறவு கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ், புட்டின் மற்றும் பரோஸோவின் உரையாடலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விபரங்களை கசியவிட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். “என்னுடைய பார்வையில், இந்த வார்த்தைகள் கூறப்பட்டதா அல்லது கூறப்படவில்லையா என்பதல்ல, அந்த கூற்று ஒரு சூழலுக்காக கையிலெடுக்கப்பட்டிருக்கிறது, மேலும் அது முற்றிலும் வேறுபட்ட அர்த்தத்தை அளிக்கிறது," என்று தெரிவித்தார்.

நேட்டோவின் ஆக்ரோஷ நிலைப்பாட்டை முகங்கொடுத்திருக்கும் நிலையில், ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி சேர்ஜி லாவ்ரோவ் உக்ரேனில் அந்நாட்டின் கிழக்கு பகுதியில் கியேவிற்கும் ரஷ்யாவை-ஆதரிக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே ஒரு சமரசத்திற்கு வர ஆதரவளிக்குமாறு அமெரிக்காவிடமும் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளிடமும் முறையிட்டார். அந்த நெருக்கடியை இராணுவ நடவடிக்கைகள் மூலமாக அல்லாமல் ஓர் அரசியல் நடைமுறையில் தீர்க்க அந்த ஆட்சியை ஊக்குவிக்கவும் மற்றும் கியேவை இழுத்து பிடிக்கவும் அதன் செல்வாக்கைப் பயன்படுத்துமாறு அமெரிக்காவிற்கு அவர் அழைப்புவிடுத்தார்.

உக்ரேனிய ஜனாதிபதி பொறொஷென்கோ செப்டம்பர் 18இல் வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்யவிருப்பது, அந்நாட்டின் அரசியல் அபிவிருத்திகளைப் பொறுத்த வரையில் "அமெரிக்க நலன்களைச் சார்ந்தோ அல்லது நலன்களைச் சாராமலோ i'களுக்கு முற்றுபுள்ளி வைக்கவும், t'களை வெட்டவும் ஒரு நல்ல சந்தர்ப்பமாகும்" என்று லாவ்ரோவ் அறிவுறுத்தினார்.

மாஸ்கோவின் மற்றும் கியேவ்வின் பிரதிநிதிகளுக்கும் பிரிவினைவாத குழுக்களுக்கும் இடையே மின்ஸ்கில் நடந்த பேச்சுவார்த்தைகள் திங்களன்று எந்தவித முன்னேற்றமுமின்றி முடிவுற்றது, அது வெள்ளியன்று மீண்டும் தொடங்கப்படும். அந்த பேச்சுவார்த்தைகளுக்கு ஒபாமா நிர்வாகம் ஒரு பிரதிநிதியை அனுப்பவில்லை என்பதோடு, அது கியேவ் மற்றும் ரஷ்யாவை ஆதரிக்கும் பிரிவினைவாதிகளுக்கு இடையே எவ்விதமான அரசியல் தீர்வையும் தடுக்க வேலை செய்து வருகிறது.

கடந்த இரண்டு வாரங்களில், பிரிவினைவாதிகள் கியேவின் ஆயுதமேந்திய படைகளுக்கு எதிராக கணிசமான வெற்றிகளை பெற்றிருந்தார்கள். சமீபத்திய சண்டையில், ஏறக்குறைய 680 உக்ரேனிய சிப்பாய்கள் பிரிவினைவாதிகளால் பிடிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் பலர் இலோவாய்ஸ்க் நகரைச் சுற்றியிருந்த பிரதேசங்களில் இருந்து பிடிக்கப்பட்டிருந்தார்கள், அங்கே கிளர்ச்சியாளர்களால் நூற்றுக் கணக்கான உக்ரேனிய துருப்புகளைச் சுற்றி வளைக்க முடிந்திருந்தது.

கிளர்ச்சியாளர்கள் உடனான ஒரு இரவின் தீவிர சண்டைக்குப் பின்னர், செவ்வாயன்று உக்ரேனிய ஆயுதமேந்திய படைகள் லூஹன்ஸ்க் விமான நிலையத்திலிருந்து திரும்ப பெறப்பட்டன. டொனெட்ஸ்க் விமானநிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மோதல்கள் நடந்து வருவதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

கிளர்ச்சியாளர்கள், மூலோபாய துறைமுக நகரமான மரியுபோலிலும் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன. மரியுபோலிக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகரமான ஓலெனிவ்காவை பிரிவினைவாதிகள் கைப்பற்றியமை, வடக்கிலிருந்து ஒரு சாத்தியமான பாதையைத் திறந்துவிட்டுள்ளது. அவர்கள் கடந்த வாரம் கடற்கரை நகரமான நோவோஜோவ்ஸ்க்கைக் கைப்பற்றிய போது ஏற்கனவே அவர்கள் கிழக்கில் ஒரு பாதையைத் திறந்துவிட்டிருந்தார்கள்.

கிழக்கு உக்ரேனில் நடந்துவரும் மோதல்களில் ஆயிரக் கணக்காகவர்கள் கொல்லப்பட்டிருப்பதுடன், ஏறக்குறைய மில்லியன் கணக்கான மக்களை அது இடம்பெயர செய்திருந்தது. உக்ரேனிய ஆயுதமேந்திய படைகள் லூஹன்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் நகரங்களின் வசிப்பிட பகுதிகள் மீது கண்மூடித்தனமாக ஏவுகணை தாக்குதல் நடத்தியதன் விளைவாக, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

Human Rights Watchஇன் அறிக்கையின்படி, லூஹன்ஸ்க் நகரில் மே மாதத்திலிருந்து வெடிக்கும் ஆயுதங்களால் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆகஸ்ட் 18இல், அந்நகரின் மையத்தில் அமைந்துள்ள சந்தையை குண்டுகள் தாக்கின, அதில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன், அதனால் ஏற்பட்ட தீவிபத்தில் பல கடைகளும் எரிந்து போயின. அந்த நெருப்பை அணைக்க அவர்கள் முனைந்த போது, அவர்களால் நெருப்பை அணைக்க முடியாதபடிக்கு, பின்னர் தீயணைப்பு வாகனங்கள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன.

உக்ரேனுக்குள்ளேயே 260,000 மக்கள் இடம் பெயர்ந்திருப்பதாக ஐநா மதிப்பிடுகிறது, இது ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்தது. ரஷ்ய அதிகாரிகளின் தகவல்படி, 800,000க்கும் மேற்பட்ட உக்ரேனியர்கள் அகதிகளாக/தற்காலிக தஞ்சம் கோரி அல்லது இதர இருப்பிட வாய்ப்புகளுக்காக ரஷ்யாவிற்குள் நுழைந்திருக்கிறார்கள்.

உக்ரேனிய அகதிகள் அதிகமாக அதிகரிப்பது குறித்து அகதிகளுக்கான ஐ.நா உயர் கமிஷனர் ஆண்டொனியோ குடெர்ரெஸ் அவரது கவலையை வெளியிட்டார். “இந்த நெருக்கடி உடனடியாக தீர்க்கப்படவில்லை என்றால், அது பேரழிவுகரமான மனிதாபிமான விளைவுகளை மட்டும் கொண்டிருக்காது, மாறாக அது அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் ஸ்திரமின்மைக்கு இட்டுச் செல்லும் சாத்தியக்கூறையும் கொண்டிருக்கிறது. பால்கன்களின் படிப்பினைக்குப் பின்னர், இந்தளவிற்கான ஒரு மோதல் ஐரோப்பிய கண்டத்தில் கட்டவிழும் என நம்புவதற்கே கடினமாக இருக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.