தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா India: Four workers killed in Tamil Nadu plastic depot blaze இந்தியா: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் கிடங்கு பற்றி எரிந்ததில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்
By our
correspondents Use this version to print| Send feedback கடந்த வாரம் தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் தலைநகரம் சென்னையின் ஒரு புறநகர் பகுதி, திருவேற்காட்டில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மறுசுழற்சி செய்யும் ராஜாகனி டிரேடர்ஸ் கிடங்கில் ஏற்பட்ட தீயில் நான்கு இளம் பிளாஸ்டிக் தொழிலாளர்கள் எரிந்து இறந்தனர்.
தீப்பிடித்த ஆகஸ்ட் 21 அன்று பலியான எஸ். ரகு குமார், எஸ்.சரத் குமார், அமர் (அனைவரும் 26 வயது), ராஜா (25) அனைவரும் வளாகத்திற்குள்ளேயே ஒரு சிறிய பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த போது உள்ளே சிக்கிக் கொண்டார்கள். ஒரு காவலாளி அதிர்ஷ்டவசமாக தப்பித்துக்கொண்டார். வளாகத்திற்குள் பிளாஸ்டிக் கழிவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன, பிளாஸ்டிக்குடன், ரப்பர் மற்றும் காகிதங்கள் கட்டிடத்திற்கு வெளியே குவிந்து கிடந்தன. தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை ஆனால் கிடங்கு உரிமையாளரை போலீஸ் கைது செய்துள்ளது. விதிமுறைகளை மீறி, ஒரு குடியிருப்பு பகுதியில், கிடங்கு மற்றும் ஏனைய பல தொழிற்சாலைகளின் அமைவிடம் குறித்து தொடர்ச்சியாக உள்ளூர் புகார்கள் இருந்தபோதும் ராஜாகனி டிரேடர்ஸ் எட்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்திருக்கிறது. எவ்வாறிருப்பினும் மாநில அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைவான மாநில அரசு ஆய்வாளர்களிடமிருந்து சட்டப்படியான பாதுகாப்பு மற்றும் சுற்றுசூழல் அனுமதிகள் இன்றி பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதித்து இருப்பதன் மூலம் ஊழல் மலிந்து கிடக்கிறது. இந்த துயரச்சம்பவத்திற்கு பிறகு ஒரு நாள், சென்னையில் ஒரு மின்னனு பொருட்கள் கடையில் இன்னொறு தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு நாள் கழித்து, நகர எல்லையில் ஒரு தொழிற்சாலையில் ஒரு இரசாயன வெடிப்பு ஏற்பட்டு ஒருவர் கொல்லப்பட்டார் இன்னும் இருவர் காயமடைந்தனர். தற்போதைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகம் உள்ளிட்ட அடுத்தடுத்த தமிழ்நாட்டு அரசாங்கங்களோ அல்லது மத்திய இந்திய அரசாங்கமோ அதிகரிக்கும் தொழிற்சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியாவில் தொழிற்சாலை உயிரிழப்புகளின் துல்லியமான புள்ளிவிபரங்களை பெறுவது கடினமானது. 2009 ஆம் ஆண்டின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஒரு அறிக்கையின்படி, ஒவ்வொரு வருடமும் அல்லது தினமும் 1000 பேருக்கும் மேலாக என்று 40,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்தியாவில் தொழில் சார்ந்த நோய்களால் அல்லது தொழில் செய்யும் இடங்களில் நடக்கும் விபத்துக்களால் இறக்கிறார்கள். ஒவ்வொரு 100,000 தொழிலாளர்களில் 11 தொழிலாளர்கள் தொழிற்சாலை விபத்துக்களில் இறக்கிறார்கள் என்று இன்னொரு அறிக்கை பகிரங்கப்படுத்தியது. 100,000 பேருக்கு இருவர் என்று அமெரிக்காவிலும் ஜப்பானில் 100,000 பேருக்கு ஒருவருக்கும் கீழே என்று விகிதாசாரத்தில் உள்ளது. ராஜாகனி டிரேடர்ஸில் இருந்த அபாயகரமான நிலைமைகள், இந்தியா முழுவதும் இருக்கின்ற சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களில் பொதுவானதாக இருக்கின்றது. கிடங்கில் 25 தினக்கூலி தொழிலாளர்கள் அதிலும் பெரும்பாலாவர்கள் 44 க்கும் 65 வயதுக்கும் உட்பட்ட பெண்களாவர். பெண்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.150 ($US2.48) மற்றும் ஆண் தொழிலாளர்களுக்கு அதில் இரண்டு மடங்கும் பெறுகிறார்கள். ஓய்வூதிய நிதியோ அல்லது மருத்துவ காப்பீட்டுத் திட்டமோ அங்கு இல்லை. உலக சோசலிச வலைத் தள பத்திரிகையாளர்கள் ராஜகனி டிரேடர்ஸ் தொழிலாளர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களிடமும் இந்த துயரச்சம்பவம் குறித்து பேசினார்கள். பிரபாகரன் என்ற 43 வயது உள்ளூர்வாசி விவரித்தாவது: "புதன்கிழமை இரவு 11.50 வாக்கில் ஒரு பெரிய சத்தத்தை நான் கேட்டேன். பிளாஸ்டிக் கிடங்கில் தீப்பிடித்ததை பார்த்த நான், உடன் அருகிலிருக்கும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தேன். தீயணைப்பு வீரர்கள் வந்து சேர வெறும் 10 நிமிடங்களே எடுக்கும் ஆனால் தீயணைப்பு அலுவலர்கள் என்னுடைய அழைப்பிற்கு எந்த பதிலும் அளிக்காதபோது, தீயணைப்பு நிலையம் அருகில் இருக்கும் என்னுடைய சகோதரரை தொலைபேசியில் அழைத்து அவர்களுக்கு தகவல் சொல்ல சொன்னேன். “தீயணைப்பு படை வீரர்கள் 20 நிமிடங்கள் தாமதமாக வந்தார்கள் ஆனால் அவர்கள் மேலும் உதவிக்கு அழைக்க வேண்டியிருந்தது. 40 தீயணைப்பு படை வீரர்களினால் மூன்று மணிநேரத்திற்குப் பிறகு தீ கட்டுப்படுத்தப்பட்டது. எவ்வாறிருப்பினும், அந்த இடைப்பட்ட நேரத்தில், அறையின் உள்ளே மாட்டிக்கொண்ட நான்கு தொழிலாளர்கள் தீயில் கொல்லப்பட்டார்கள்.” தீயணைப்பு படை விரைவாக வந்திருந்தால், தொழிலாளர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். மேலும் கொழுந்து விட்டெரியும் தீ அருகிலிருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு பரவியிருந்தால் அது பேரழிவாக இருந்திருக்கும் என்று பிரபாகரன் கூறினார்.
பிளாஸ்டிக் கிடங்கு அருகில் வசித்துவரும் 65 வயதான இராஜேஸ்வரி என்பவர், “நள்ளிரவில் போலீஸ் என் வீட்டுக்கதவை தட்டி எங்களை தீக்கு அருகிலிருந்து தூரத்திற்கு செல்லுமாறு கூறினார்கள். நான் கதவை திறந்தபோது, பிளாஸ்டிக் கிடங்கிலிருந்து வந்த கடுமையான வெப்பத்தினால் நான் உடனடியாக பின்னால் செல்ல கொண்டுசெல்லப்பட்டேன். என்னுடைய கண்கள் மூடிக்கொண்டன அத்தோடு என் மீது தீப்பற்றி எரிவதுபோல் எனக்கு இருந்தது. குளிர்விக்க நான் உடனடியாக என் முகத்தின் மீது தண்ணீரை ஊற்றிக்கொண்டேன் ஆனால் என்னுடைய நெற்றியில் கொப்புளங்கள் வந்துவிட்டன. அடக்க முடியாத வெப்பம் அங்கு குடியிருந்தவர்களை அவர்களுடைய வீட்டிலிருந்து ஓட வைத்தது மேலும் தொலைதூர இடத்திற்கு இடம் பெயர வைத்தது. எங்கள் அருகாமையில் ஒரு கிரனைட் தொழிற்சாலை மற்றும் இந்த பிளாஸ்டிக் தொழிற்சாலை அமைப்பதற்கு இங்கு அயலில் இருக்கும் மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஒரு குடியிருப்புப் பகுதியில் இந்த பிளாஸ்டிக் தொழிற்சாலை பொருத்தமானதாக இல்லை எனக் கூறி அதன் உரிமையாளரிடம் கிடங்கை மூடிவிடக் கூறினோம். சில மாதங்களுக்கு முன் அவர் ஒப்புக்கொண்டாலும், அது குறித்து ஒன்றும் செய்யப்படவில்லை. 65 வயதான, ராமாயி என்ற ராஜாகனி டிரேடர்ஸ் தொழிலாளி விவரித்தார்: “நான் அதிர்ச்சியடைந்தேன், நான்கு இளைஞர்களின் இறப்பினால் துயரமடைந்தேன். அவர்கள் என் மகன்களைப் போன்றவர்கள். இந்த பிளாஸ்டிக் தொழிற்சாலையில் மூன்று வருடங்களாக வேலை செய்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய ஆரம்ப ஊதியம் தினசரி 90 ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து தினசரி 150 ரூபாய் பெற்றேன். ஒரு மணிநேர மதிய உணவு இடைவேளையுடன் காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை நாங்கள் வேலை செய்கிறோம். எங்கள் ஊதியங்கள் தவிர நாங்கள் எந்தவொரு பிற சலுகைகளுக்கும் உரிமை கொண்டவர்கள் இல்லை. “எனக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். என்னுடைய கணவர் ஒரு நோயாளி. அவர் வேலை செய்யவில்லை. என்னுடைய மகன்களிடமிருந்து நான் பொருளாதார ரீதியான ஆதரவை பெறவில்லை, ஏனென்றால் அவர்களுடைய ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும் நடத்த அவர்கள் கடுமையாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது அந்த தொழிற்சாலை எரிந்து போய்விட்டது, எனக்கு வேறு எந்த வேலையும் கிடைக்கப் பெறாமல் போகலாம் அத்துடன் என்னுடைய வாழ்க்கை கடினமாக இருக்கப்போகிறது.”
பசுபதி என்பவர் கூறியதாவது “45 வருடங்களாக நான் காடுவெட்டி கிராமத்தில் வாழ்ந்திருக்கிறேன் எனக்கு குடும்பம் இல்லை. ஒன்பது வருடங்களுக்கு முன்னால் இந்த தொழிற்சாலையில் நான் கூலியாக வேலை செய்ய ஆரம்பித்தேன். இந்த வேலையுடன் நான் வாழ முடியவில்லை, ஆனால் இப்பொழுது எனக்கு 65 வயதாகிறது, இதன் பிறகு எந்த ஒரு வேலையும் கிடைக்கப் பெறாமல் போகலாம். நான் ஒரு சிறிய அறையில் வசித்த வருகிறேன் அதற்கு மாத வாடகையாக ரூபாய் 1,000 செலுத்துகிறேன்.” எந்த அரசியல் கட்சிகள் அதிகாரத்திற்கு வந்தாலும் எங்களுக்கு அடிப்படை மாற்றங்களோ அல்லது நலன்களோ கிடையாது.” இறந்துப்போன தொழிலாளர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியை உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர்கள் பார்வையிட்டார்கள். இறந்தவர்களின் உறவினர்களில் சிலர் தங்களுடைய தொலைதூர கிராமங்களுக்கு உடல்களை தங்களால் எடுத்துசெல்ல இயலாது என்பதை விளக்கினார்கள். இறந்த தொழிலாளர்களில் ஒருவர், எஸ். ரகு குமார் என்பவர் தென் தமிழ் நாட்டின் திருச்செந்தூரை சேர்ந்தவர். அவர் விவசாய தொழிலாளர் குடும்பத்திலிருந்து வந்தவர், அந்த குடும்பம் அவர் வருமானத்தையே சார்ந்திருந்தது. ரகு குமாரின் தந்தை ஒரு ஊனமுற்றவர் அவருடைய தாய் ஒரு நோயாளி. தீயில் பலியான இன்னொருவர் எஸ். ரவி குமார், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு கிராம தச்சு தொழிலாளி. அவருடைய சகோதரர் உலக சோசலிச வலைத் தளத்திடம் இவ்வாறு கூறினார்: “நானும் ஒரு தச்சு தொழிலாளி, ஒரு நாளைக்கு ரூபாய் நானூறு பெறுகிறேன் ஆனால் எனக்கு தொடர்ச்சியாக வேலை கிடைப்பதில்லை. [தமிழ்நாடு முதலமைச்சர்] ஜெயலலிதா தீயில் சிக்கி இறந்தவர்களுக்கு எந்தவொரு நஷ்டஈடும் அறிவிக்கவில்லை, அதனால் எல்லா செலவுகளுக்கும் எங்கள் சொந்தப் பணத்தையே செலவழிக்க வேண்டியிருந்தது. |
|
|