World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The New York Times and Flight MH17

நியூ யோர்க் டைம்ஸூம், MH17 விமானமும்

By Bill Van Auken
30 August 2014

Back to screen version

உக்ரேனுக்கு எதிராக ஆக்ரோஷமாக ... அதன் மிகப் பெரிய மற்றும் ஏற்கமுடியாத தீவிரத்தன்மைக்காக" ரஷ்யாவிற்கு எதிரான ஒரு பழிவாங்கும் கொள்கையை ஏற்குமாறு அமெரிக்கா மற்றும் நேட்டோக்கு நியூ யோர்க் டைம்ஸ் ஆகஸ்ட் 29 தலையங்கத்தில் அழைப்பு விடுத்திருந்தது, கிழக்கு உக்ரேனிய கிளர்ச்சியாளர்கள் "மலேசிய விமானத்தை ஒரு ரஷ்ய ஏவுகணையை கொண்டு சுட்டுவீழ்த்தியதற்கு" பின்னர்"... ரஷ்யாவின் ஈடுபாடு இன்னும் அதிகமாக பகிரங்கமாக மாறி இருப்பதாக" அது வலியுறுத்தியது.

விமானத்தின் கருப்புப்பெட்டிகள் உட்பட மிக முக்கிய ஆதாரங்கள் புலனாய்வாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற நிலையிலும் கூட, பரந்த பெரும்பான்மை மேற்கத்திய ஊடகங்களைப் போலவே டைம்ஸூம், MH17 விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதன் மீது தோற்றப்பாட்டளவிற்கு மவுனமாகி சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர், இப்போது இந்த வலியுறுத்தல் வந்திருப்பது தான் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

அந்த விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு, கிழக்கு உக்ரேனில் உள்ள கியேவ்-விரோத படைகளும் மற்றும் ரஷ்யாவுமே கூட பொறுப்பாகின்றன என்பதை ஒரு சர்ச்சைக்கு இடமில்லாத உண்மையாக டைம்ஸால் எவ்வாறு வலியுறுத்த முடிந்தது?

MH17 துயரத்தில் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்கு இடமில்லாத உண்மைகள் அங்கே இருக்கின்றன. ஜூலை 17இல் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாம்பூருக்குச் சென்று கொண்டிருந்த அந்த விமானம், கிழக்கு உக்ரேனிய யுத்த மண்டலத்திற்குள் விழுந்து நொறுங்கியது, அதிலிருந்த 298 பயணிகளும் மற்றும் விமானக்குழு உறுப்பினர்களும் உயிரிழந்தார்கள்.

இந்த உண்மைகளுக்கு அப்பாற்பட்டு, அந்த விமான வெடிப்பிற்கு காரணமாக அங்கே வெவ்வேறு ஊகங்கள் நிலவுகின்றன. அந்த பேரிடர் நிகழ்ந்த வெறும் சிலமணி நேரங்களுக்குள் அபிவிருத்தி செய்யப்பட்டதும், சமூக ஊடகத்தில் பதியப்பட்ட பெரிதும் கேள்விக்குரிய பதிவுகளைத் தவிர வெறெந்த மிகவும் நம்பகமான ஆதரவும் இல்லாமல் வெளியானதுமான ஒரு ஊகம் என்னவென்றால், கிழக்கு உக்ரேனில் உள்ள கியேவ்-விரோத கிளர்ச்சியாளர்கள் ரஷ்யாவினால் வினியோகிக்கப்பட்ட தரையிலிருந்து வானில் தாக்கும் ஒரு ஏவுகணையோடு அந்த விமானத்தைச் சுட்டுவீழ்த்தினார்கள் என்று கூறப்பட்டதாகும், அந்த மாதிரியான ஒரு ஆயுதம் அவர்களிடம் இல்லையென்றும், அதை கையாளும் திறனும் அவர்களுக்கு இல்லையென்றும் அந்த கிளர்ச்சியாளர்கள் அதை மறுத்திருந்தார்கள்.

இந்த ஊகம் உடனடியாக டைம்ஸினால் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை, மாறாக தோற்றப்பாட்டளவில் அனைத்து மேற்கத்திய ஊடகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது என்ற தீர்மானத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை, ஏனென்றால் அது ரஷ்யாவிற்கு எதிர்ப்பாக வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகளால் பின்தொடரப்பட்டு வரும் ஒரு தீர்க்கமான வெளியுறவு கொள்கை நிகழ்ச்சிநிரலை விஸ்தரிக்க உடனடியாக தயாரிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறிருந்த போதினும், அங்கே இன்னும் பல ஊகங்களும் இருக்கின்றன. சான்றாக, மலேசியாவின் பிரதான தினசரி ஆங்கில-மொழி நாளிதழான New Straits Times ஆகஸ்ட் 7இல் வெளியிட்ட செய்தியில், அந்த விமானம் ஒரு உக்ரேனிய சுகோய்-25 போர்விமானத்திலிருந்து வானிலிருந்து வானில் ஏவும் ஏவுகணை மற்றும் எந்திர-துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்டிருக்கலாம் என்பதையே நம்பகமான ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்று குறிப்பிட்டது. அந்த காட்சிக்குள் வரும் அமெரிக்க உளவுத்துறை பகுப்பாய்வாளர்களும் மற்றும் புலனாய்வாளர்களும், அது ஒரு உக்ரேனிய போர்விமானத்திலிருந்து ஏவப்பட்ட "வானிலிருந்து வானில் ஏவும் ஏவுகணையால் சிதைக்கப்பட்டதா அல்லது பீரங்கி குண்டினால் ஒழித்துக் கட்டப்பட்டதா" என்பதை சுட்டிக்காட்டும் அந்த விமானத்தின் உடற்பாகம் சேதமாகி இருப்பதாக தெரிவிக்கிறார்கள் என்பதை அந்த அறிக்கை மேற்கோளிட்டு காட்டியது.

இந்த அறிக்கையின் ஆதாரம் மிக முக்கியமாக குறிப்பிடத்தக்கதாகும். இந்த New Straits Times நாளிதழ், அந்த விமானச்சேவையை நிர்வகிக்கும் மற்றும் நெதர்லாந்திற்கு அடுத்தபடியாக அந்த வெடிப்பில் அதன் 43 குடிமக்களை இழந்த மலேசிய அரசாங்கத்தின் மற்றும் ஆளும் கட்சியின் கண்ணோட்டங்களைப் பிரதிபலிக்கும் ஒரு செய்திதாளாகும். இருந்தபோதினும் டைம்ஸூம், அதனோடு சேர்ந்து மேற்கில் உள்ள பரந்த பெரும்பான்மை ஊடகங்களும், அந்த அறிக்கையை இருட்டடிப்பு செய்திருந்தன.

MH17 பேரிடரை ஏதோவொரு வழியில் விளங்கப்படுத்துவதற்கு, மறுக்கமுடியாத ஆதாரம் இருக்கிறதென்று உலக சோசலிச வலைத் தளம் வாதிடவில்லை. ஆனால் என்ன அதிர்ச்சியூட்டுகிறதென்றால், ஊடகங்கள், குறிப்பாக சாதனை நாளிதழாக கருதப்படும் டைம்ஸ் இதழ், எந்தவொரு பெரிய நகரத்திலும் வழக்கமாக நடக்கும் ஒரு ஆட்கொலையில் ஒருவர் எதிர்பார்க்கும் விசாரணை மாதிரியிலான ஒன்றை கூட இந்த படுபயங்கர துன்பத்தில் இருக்கும் உண்மைகளுக்குக் கொடுக்க தவறுகிறது என்பது தான் அதிர்ச்சியூட்டுகிறது. அதற்கு மாறாக, அது ஒபாமா நிர்வாகம் மற்றும் அமெரிக்க அரசுத்துறையால் வெளியிடப்படும் வரிகளையே திரும்ப திரும்ப வெறுமனே கிளிப்பிள்ளை போல வழங்குகிறது.

இந்த சம்பவத்தைக் குறித்து, உண்மையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிப்படை நலன்கள் மீது எந்தவொரு தீவிரபோக்கை எடுக்கும் எந்தவொரு சம்பவங்களைக் குறித்தும், டைம்ஸ் வழங்கிய செய்திகள் என்ன குணாம்சப்படுத்துகிறதென்றால், அது அமெரிக்க அரசாங்கம் மற்றும் ஆளும் அரசியல் ஸ்தாபகத்துடனான உறவில் விமர்சன பாதையை முற்றிலுமாக இழந்துள்ளது என்பதையே ஆகும்.

அந்த செய்தியிதழ் அரசுடன் ஒரு விமர்சனரீதியிலான மற்றும் எதிர்ப்புடன் கூடிய உறவை ஏற்று ஒரு "கண்காணிப்பாளரை" போல அல்லது "நான்காம் ஸ்தாபகத்தை" (Fourth Estate) போல செயல்படவில்லை, மாறாக அதன் கூட்டாளியைப் போல அதன் சேவகரைப் போல செயல்படுகிறது. கடந்தகாலத்தின் ஒவ்வொரு முக்கிய சம்பவத்திலும், 9/11 சம்பவங்களில் இருந்து ஈராக்கில் ஆக்ரோஷ யுத்தத்திற்கான தயாரிப்பு வரையில், லிபியாவிலிருந்து சிரியா வரையில் மற்றும் இப்போது உக்ரேன் வரையில் நீளும் மிக சமீபத்திய தொடர்ச்சியான உலகளாவிய தலையீடுகள் மற்றும் தூண்டுதல்கள் வரையில், ஒருவரால் இந்த அணுகுமுறையைக் காண முடியும்.

டைம்ஸின் மிக மூத்த கட்டுரையாளர்கள் மற்றும் இதழாளர்கள் மத்தியில், தோமஸ் பிரெட்மன்ஸ், ரோஜர் கோஹென்ஸ் மற்றும் ஏனையவர்களும் அதிகார மையத்தில் இருப்பவர்களுடன் கொண்டிருக்கும் அருவருக்கத்தக்க தொடர்பு இந்த நன்கு-உயர்ந்த அடுக்கின் சுயநலன்களால் முட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது மற்றும் ஒளிவுமறைவின்றி இருக்கிறது. இதே கண்ணோட்டம் ஒட்டுமொத்தமாக கொள்கை ஆவண தலையங்கத்திலும் ஊடுருவுகிறது, அது மேற்படி வாஷிங்டனின் நிகழ்ச்சிநிரலுக்கு சம்பவங்களை வடிவமைக்கும் ஒரு பாணியை விதைக்க, அதன் ஒரு நல்லெண்ண ஒத்துழைப்பாளராக அதை மாற்றிவிடுகிறது.

செய்தியிதழ் தலையங்கத்தின் உள்ளார்ந்த நோக்கம்—அதாவது "அச்சிடுவதற்கு பொருத்தமான எல்லா செய்திகளுக்காக" என்பது—மிக உண்மையாக, “அமெரிக்க அரசாங்கத்தின் பிரச்சார சொல்லாடலுக்குப் பொருந்துகிற அனைத்து செய்திகளுக்காக" என்றே வழங்கப்பட வேண்டும், மேலும் MH17 விமான சம்பவம் காட்டுவதைப் போல, செய்திகள் அந்த வகைப்பாட்டிற்குள் வர தவறும் போது அது இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.

"பாரிய பேரழிவு ஆயுதங்கள்" குறித்த பொய்களை டைம்ஸ் ஊக்குவித்தமை, அமெரிக்க மக்களை ஒரு யுத்தத்திற்குள் இழுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டது, அந்த யுத்தத்தில் ஒரு மில்லியன் ஈராக்கியர் வாழ்க்கை இழந்தனர், சுமார் 4,500 அமெரிக்க துருப்புகள் கொல்லப்பட்டனர், அதேவேளையில் பத்து ஆயிரக் கணக்கானவர்கள் காயமடைந்தனர், அவை அனைத்தும் ஊடகங்கள் இந்த மாதிரியான பாத்திரம் வகிக்கும் போது அளிக்கப்படும் கொடூரமான விலையை எடுத்துக்காட்டுகின்றன. ஒரு மூன்றாம் உலக யுத்தத்திற்கு சாத்தியமான விதைகளைப் பணயமாக கொண்டிருக்கும் பிரச்சினையான MH17 விவகாரத்தில், அது இன்னும் துரோகமானதாக மற்றும் மரணகதியிலான அபாயத்திற்குரியதாக மாறுகிறது.