World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் French Socialist Party plans to scrap post-World War II job security rules பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வேலை பாதுகாப்பு சட்டங்களை நீக்க திட்டமிடுகிறது
By
Kumaran Ira தொழிலாளர்களின் வேலை பாதுகாப்புகள் வணிக போட்டித்தன்மைக்கு குழிபறிப்பதாக கருதுவதால், பிரெஞ்சு பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ், நிரந்தர வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை (CDI, contrat à durée inderterminée) நீக்க பரிந்துரைத்து வருகிறார். இது, இரண்டாம் உலக போருக்குப் பின்னரில் இருந்து தொழிலாளர்களை விருப்பம் போல வேலைக்கு எடுப்பதற்கும்-நீக்குவதற்கும் பிரெஞ்சு வணிகங்களது அதிகாரத்தின் மீதிருந்து வந்த தடைகளை அகற்றுவதற்கு, ஆளும் சோசலிஸ்ட் கட்சியின் (PS) ஒரு நகர்வாகும். வியாழன்று, Le Nouvel Observateurக்கு அளித்த ஒரு நேர்காணலில் வால்ஸ் கூறுகையில், நிரந்த வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் (CDI) மற்றும் குறுகிய-கால ஒப்பந்தங்களை (CDD) ஒரே ஒப்பந்த முறைக்குள் இணைப்பது குறித்து அறிவுறுத்தினார். “தொழிலாளர் சந்தையின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை, அது போதியளவுக்கு வேலைகளை உருவாக்கவில்லை என்பதோடு, பெரிதும் பாதுகாப்பாக இருக்கும் CDI தொழிலாளர்களுக்கும் மற்றும் ஏனையவர்களுக்கும், அதாவது CDD ஒப்பந்தங்கள் மற்றும் இதர தற்காலிக வேலைகளில் உள்ள மிகவும் பாதுகாப்பற்ற தொழிலாளர்களுக்கும் இடையே, அது ஆழ்ந்த சமத்துவமின்மையை உருவாக்குகிறது," என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், “தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கும்போது பெரிதும் அதிக செலவாவதால், அனைத்திற்கும் மேலாக நிச்சயமற்றதன்மையை அளிக்கும் அதிக நீதித்துறை தலையீடுகள் இருப்பதால் வணிகங்கள் வேலைக்கு ஆளெடுக்க விரும்புவதில்லை," என்றார். CDD ஒப்பந்தங்களில் உள்ள பணியாளர்கள் குறித்து கவலைப்படுவதாக வால்ஸ் காட்டிக்கொள்வது, ஒரு அருவருக்கத்தக்க வஞ்சக முயற்சியாகும். சோசலிஸ்ட் கட்சி CDI ஒப்பந்தங்கள் மூலமாக பத்து மில்லியன் கணக்கான பிரெஞ்சு தொழிலாளர்கள் பெற்றிருக்கும் ஒப்பீட்டளவிலான வேலை பாதுகாப்பை அழிக்க தயாரிப்பு செய்து வருகிறது. வேலையிழந்து விடுவோமோ என நிரந்தரமான அச்சத்துடன் மற்றும், உலக சந்தைகளில் தங்களின் இடத்தை உயர்த்திக் கொள்வதற்காக வணிகங்கள் என்னென்ன ஊதிய மற்றும் சலுகை வெட்டுக்களைக் கோருகின்றனவோ அதற்காக அவற்றை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டிருப்பதாக உணரும் ஒரு தொழிலாளர் சக்தியை உருவாக்குவதே அதன் முடிவான நோக்கமாகும். வேலைவாய்ப்பு புள்ளிவிபரங்களைத் தொகுத்து வழங்கும், அரசு அமைப்பான DARES (ஆய்வுகள் மற்றும் புள்ளிவிபரங்களுக்கான முகமை) தகவலின்படி, பிரான்சில் அங்கே தற்போது 15.4 மில்லியன் தொழிலாளர்கள் CDI ஒப்பந்தங்களில் இருக்கிறார்கள். பொருளாதார துறையில் புதிய பிரெஞ்சு நோபல் பரிசு வென்ற ஜோன் திரோல் இன் பரிந்துரைகளை வால்ஸ் மேற்கோளிடுகிறார். பிரெஞ்சு தொழிலாளர் அமைப்புமுறையைக்கு திரோல் கண்டனம் தெரிவித்திருந்ததுடன், CDI மற்றும் CDD ஒப்பந்தங்களை ஒன்றிணைக்கவும் ஆலோசனை வழங்குகிறார். Europe1க்கு திரோல் கூறுகையில், “CDI ஒப்பந்தங்களை உருவாக்க வணிகங்கள் மிகவும் பயப்படுகின்றன. அங்கே பிரச்சினைகள் என்று வந்தால், அவர்களுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும்தன்மையே இல்லை. ஆகவே அவர்கள் நிறைய CDD ஒப்பந்தங்களையும், தொழிற்பயிற்சி முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். இளைஞர்கள் ஒரு வேலை மாற்றி இன்னொன்றுக்கு என மாறுகிறார்கள் என்பதுடன், வேலைவாய்ப்பின்மைக்குள்ளும் வீழ்கிறார்கள்," என்றார். வெள்ளியன்று, பேங்க் ஆஃப் பிரான்ஸ் இன் ஆளுநர் தியேரி நுவையே ம் CDI ஒப்பந்தங்களை "மிகவும் இறுக்கமானவை" என்று தாக்கியதோடு, விருப்பம் போல தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கும் உரிமை முதலாளிகளுக்கு இருக்க வேண்டுமென கோரினார். “அங்கே ஒரு வீழ்ச்சியோ அல்லது ஒரு பொருளாதார சோதனையோ ஏற்படும் போது, நிறுவனங்கள் முடங்கும் நிலையிலோ, திவால்நிலைமைக்குக் குற்றஞ்சாட்டப்படக்கூடிய நிலையிலோ இருக்கக்கூடாது, அவற்றைச் சமாளிக்க அவற்றிற்கு நாம் சில வாய்ப்புகளை அளிக்க வேண்டும்," அவர் தெரிவித்தார். வணிகங்களுக்கு-சாதகமான சமீபத்திய பல தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்களுக்கு இடையே, வங்கிகளும் பெருவணிகங்களும் பிரான்சில் உள்ள தொழிலாளர் பாதுகாப்பை மிகவும் அதிகப்படியானதாக பார்க்கின்றன மற்றும், தொழிலாளர்களின் வேலை உரிமைகள் மீது சோசலிஸ்ட் கட்சி அதன் தாக்குதல்களை ஆழப்படுத்த வேண்டுமென்றும் முறையிடுகின்றன. கடந்த மாதம் மெடெஃப் தொழில்வழங்குனர்கள் அமைப்பு வாதிடுகையில், 50 பில்லியன் யூரோ சமூக வெட்டுக்கள், அத்துடன் பெருநிறுவன வரிகளில் 40 பில்லியன் யூரோ வெட்டு ஆகியவற்றை உள்ளடக்கிய ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் "பொறுப்புறுதி உடன்படிக்கை", போட்டித்தன்மையை அதிகரிக்க போதாதென்று வாதிட்டது. அது ஒரு "துணைத்திட்டத்தைக்" கோரியது. சோசலிஸ்ட் கட்சியின் கடுமையான சிக்கன கொள்கைகள் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள், பிரான்சில் முதலாளித்துவ "இடதின்" முழு சிதைவையும் மெய்பிக்கிறது. நூறு பில்லியன் கணக்கான யூரோக்கள் பல்வேறு வங்கி பிணையெடுப்புகளுக்காக வாரியிறைக்கப்பட்டு வருகின்ற அதேவேளையில், சோசலிஸ்ட் கட்சி தொழிலாள வர்க்கத்திற்கு அங்கே பணமில்லையென்று வாதிடுவதோடு, ஒரு மிகச்சிறிய பெருநிறுவன மேற்தட்டுக்களின் ஆதாயத்திற்காக வலதுசாரி கொள்கைகளையும் வடிவமைத்து வருகிறது. தீவிரமடைந்துவரும் உலகளாவிய பொருளாதார பின்னடைவுக்கு இடையே, அதன் கொள்கை ஒரு சமூக பேரழிவைக்கு அச்சுறுத்துகிறது, அதில் அடுத்த பெரிய நெருக்கடி பிரான்ஸ் எங்கிலும் பாரிய வேலைநீக்கம் மற்றும் கூலி வெட்டுக்களின் ஓர் அலைக்கு இட்டுச் செல்லும். வால்ஸ் தொடர்ச்சியாக அவரது அரசாங்கத்தை "வணிகம்-சார்ந்த" அரசாங்கமாக மேலுயர்த்தியதற்கு பின்னர் தான், CDIஐ நீக்கவேண்டுமென்ற அவரது இந்த அழைப்பு வருகிறது. அவர் சமீபத்தில் அறிவித்திருந்தார், “காலங்கடந்த இடதை நாம் தீர்த்துக்கட்ட வேண்டும்,” அது, நாஜி ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலை பெற்றதற்குப் பின்னர் பிரான்சின் 1945-75 பொருளாதார செழிப்பின் "முப்பதாண்டுகால ஒளிமயமான நினைவுகளோடு, மார்க்சிச மிகைப்படுத்தலால் துரத்தப்பட்டு, ஒரு மரணித்துப்போன நீண்ட இறந்தகாலத்தின் நினைவுகளாக தங்கியுள்ளது.” “தனிநபர்களின் விடுதலையை வேகப்படுத்த நவீனத்துவத்தை எவ்வாறு திசைதிருப்புவது என்ற கேள்வி மட்டுமே மதிப்புடைய கேள்வியாகும்," என்றார். மெடெஃப் தலைவர் பியர் கட்டாஸ் பட்டவர்த்தனமாக தெரிவித்தார், “விடுதலை மற்றும் ஒளிமயமான முப்பதாண்டுகளிலிருந்து மரபைப் பெற்றுள்ள நமது சமூக மற்றும் பொருளாதார மாதிரி, மரணித்துவிட்டது." அவர் "ஒரு புதிய பொருளாதார மற்றும் சமூக மாதிரியை மறுகட்டமைக்க அழைப்புவிடுத்தார்." இத்தகைய அறிக்கைகள், 2012 ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்றில் ஹோலாண்டை ஆதரித்த, புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி போன்ற, போலி-இடது குழுக்களின் தொழிலாள-வர்க்க விரோத குணாம்சத்தையும் அடிக்கோடிடுகின்றன. தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்துவரும் கோபம் மற்றும் எதிர்ப்புக்கு இடையே, அவை வணிகம்-சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஒருசில வெற்று விமர்சனங்களை வெளியிடும் அதேவேளையில், தொடர்ந்து PS மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு ஆதரவளிக்கின்றன. தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு அவர்களின் ஆதரவு மற்றும், வேலைநிறுத்தங்களை திணறடிப்பதில் அவர்கள் வகிக்கும் பாத்திரம் ஆகியவை, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய சீர்திருத்தங்களை மேற்பார்வையிட்ட அதிகாரிகளுக்கு நெருக்கமாக அவர்களைக் கொண்டு வருவதை விடவும், 1914இல் நாஜி-ஒத்துழைப்புடன் இருந்த விச்சி ஆட்சியால் பிரகடனம் செய்யப்பட்ட தொழிலாளர் சாசனத்தை எழுதுவதில் பாத்திரம் வகித்த அதிகாரிகளுக்கு நெருக்கமாக கொண்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளில், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு குழிபறித்துள்ளன—தற்காலிக வேலை ஒப்பந்தங்கள் அடிப்படையில் தொழிலாளர்களை நியமிப்பது, அதிகமாக வளைந்து கொடுக்கும்தன்மையை திணிப்பது, தொழிலாளர்களுக்கு CDI ஒப்பந்தங்கள் அளிக்கலாமா அல்லது அவர்களை வெளியேற்றலாமா என்பதை நிறுவனங்கள் தீர்மானிப்பதற்கு முந்தைய ஆய்வுக் காலங்களை நீடிப்பது, அத்துடன் ஓய்வூதியங்கள் மற்றும் வேலைவாய்ப்பின்மை சலுகைகளை வெட்டுவது ஆகியவை ஆகும். சமீபத்திய ஆண்டுகளில் வெகுசில தொழிலாளர்களே CDI ஒப்பந்தங்களைப் பெற்றிருக்கின்றனர் என்பதும் இத்தகைய வணிகம்-சார்ந்த சீர்திருத்தங்களின் ஒரு விளைவாகும். Le Monde இன் செய்தியின்படி, “பாரிய பெரும்பான்மை வேலைகள் குறுகிய-கால ஒப்பந்தங்களில் உள்ளன: 2012இல், CDD 49 சதவீதமாக இருந்தது, 43 சதவீதத்தினர் ஏனைய தற்காலிக ஒப்பந்தங்களில் இருந்தனர், வெறும் 9 சதவீதத்தினர் மட்டுமே CDIஇல் இருந்தனர்." வேலை பாதுகாப்பு மீதான இந்த தாக்குதலுக்கு, தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றை ஆதரிக்கும் போலி-இடது கட்சிகளிடமிருந்து சுயாதீனப்படுவதன் மூலமாக மட்டுமே தொழிலாள வர்க்கம் போராட முடியும். இந்த புதிய சுற்று வணிகம்-சார்ந்த கொள்கைகளுக்கு ஒப்புதல் பெறவும், நடைமுறைப்படுத்தவும் சோசலிஸ்ட் கட்சியே மிகத் தெளிவாக தொழிற்சங்கங்களை சார்ந்திருக்கிறது. தொழிலாளர் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அவர் "சமூக பங்காளிகளை", அதாவது தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்வழங்குனர் அமைப்புகளை, நம்பி இருப்பதாக வால்ஸ் அறிவித்தார். அவர் கூறினார், “சமூக பேச்சுவார்த்தைகளே இந்த ஆட்சியில் முக்கியமானது. அங்கே இடைநிலை அமைப்புகளின் ஒரு நெருக்கடி இருக்கிறது. ... ஆகவே நாம் அவற்றை மதிக்க வேண்டும் மற்றும் ஆதரிக்க வேண்டும், அதன் மூலமாக தான் சமூக பங்காளிகள் முன்னேற முடியும்." CDIஐ நீக்குவதற்கான வால்ஸின் பரிந்துரைக்குப் எதிர்வினையாற்றி, தொழிற்சங்கங்கள் எரிச்சலூட்டும் விமர்சனங்களை வெளியிட்ட அதேவேளையில், PS நடவடிக்கைகளுக்கு அவை ஆதரவளித்து வருவதைக் குறைத்துக் காட்ட முயன்று வருகின்றன. ஸ்ராலினிச அமைப்பான, தொழிலாளர் சங்கங்களின் பொதுக்கூட்டமைப்பின் (CGT) தலைவர், தியேரி லுப்போன் கூறினார்: “இது நிரந்தர வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதைக் குறிக்கும், அது CDIஐ கேள்விக்குரியதாக்குகிறது. ... தொழிலாளர் சந்தை மீதான, குறிப்பாக வாழ்க்கை, வேலை மற்றும் ஊதிய நிலைமைகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த தொழில்வழங்குனர்கள் வேண்டுமென்றே அந்த சட்டத்தை நீக்க முயன்று வருகிறார்கள்," என்றார். சமீபத்திய தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களின் காரணமாக, நிறைய நிறுவனங்கள் தற்காலிக ஒப்பந்தங்களை கொண்டு தொழிலாளர்களை நியமிக்கும் என்பதை ஒப்புக் கொள்ளும் லுப்போன், “குறுகிய-கால ஒப்பந்தங்கள் மீதான சட்டத்தைப் பலப்படுத்துமாறு" அழைப்புவிடுத்தார். என்னவொரு சிடுமூஞ்சித்தனமான மோசடி! இத்தகைய சட்டங்களுக்கு தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டன என்பதோடு தொழிலாளர்களின் சமூக உரிமைகளுக்கு குழிபறிக்க சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதற்கு முந்தைய வலதுசாரி அரசாங்கங்களுடன் மறைமுகமாக வேலை செய்துள்ளன. CDD ஒப்பந்தங்களை பலப்படுத்துமாறு அழைப்புவிடுப்பதன் மூலமாக வால்ஸின் சமீபத்திய பரிந்துரைகளுக்கு அவர்கள் எதிர்வினை காட்டி வருகிறார்கள் என்றால், அது ஏனென்றால் அவர்களின் நோக்கம் CDI மீதான தாக்குதலை அனுமதிப்பதாகும். தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்வழங்குனர்களால் கையெழுத்திடப்பட்ட ஒரு சந்தைசார்பு தொழிலாளர் சீர்திருத்தத்தை சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது, அது எதேச்சதிகார கூலி வெட்டுக்கள், நீடித்த வேலை நேரங்கள் மற்றும் வேலைநீக்கங்களுக்கு எதிரான தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு மேற்கொண்டும் குழிபறித்தது. அந்த தொழிலாளர் சட்ட நடவடிக்கைகள், பொருளாதார வீழ்ச்சிகாலத்தில் வேலை நேரம் மற்றும் சம்பளங்களைக் குறைக்க நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கும் ஜேர்மன்-பாணியிலான "வளைந்து கொடுக்கும்-பாதுகாப்பு" கொள்கையை உள்ளடக்கி இருந்தது. |
|