தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR Australian state government unveils huge asset sales ஆஸ்திரேலிய மாநில அரசாங்கம் பாரிய சொத்து விற்பனைகளை அறிவிக்கிறது
By Barry Andrews Use this version to print| Send feedback குவின்ஸ்லாந்து மாநில அரசாங்கம், அம்மாநிலத்தின் பொருளாதார மிதப்பை பெரிதும் காப்பாற்றி வைத்திருந்த ஆஸ்திரேலியாவினது இரண்டு தசாப்தகால சுரங்க ஏற்றுமதி வளர்ச்சியின் ஒரு பொறிவை முகங்கொடுத்திருக்கையில், மாநிலத்தின் கடன்பெறும் தர மதிப்பை AAAக்குத் திரும்ப கொண்டு வரும் மற்றும் உலகளாவிய நிதியியல் சந்தைகளைச் சாந்தப்படுத்தும் ஒரு பெரும்பிரயத்தன முயற்சியாக, மிகப்பெரிய 37 பில்லியன் டாலர் தனியார்மயமாக்கல் திட்டத்தை அறிவித்தது. சொத்து விற்பனைகளுக்கு பொதுமக்களின் ஆழ்ந்த எதிர்ப்பு தொடர்ந்து வருவதை மாநில முதல்வர் கேம்ப்பெல் நியூமேன் நன்கறிவார். முந்தைய மாநில தொழிற்கட்சி அரசாங்கம் ஆயிரக் கணக்கான அரசுத்துறை வேலைகளை அழித்து, 14 பில்லியன் மதிப்பில் தனியார்மயமாக்கலைத் திணித்த பின்னர், ஒரு வரலாற்று தோல்வியோடு 2012இல் பதவியிலிருந்து நீக்கப்பட்டது. தற்போதைய அரசாங்கமும் ஏற்கனவே செல்வாக்கிழந்து இருப்பதோடு, அடுத்த ஆண்டு தேர்தலில் நியூமேன் அவரது சொந்த நாடாளுமன்ற இடத்தையே இழப்பார் என்று ஊடக கருத்துக்கணிப்புகள் குறிப்பிடுகின்றன. அந்த காரணத்திற்காக, தாராளவாத தேசிய கட்சி (LNP) அரசாங்கம், 99-ஆண்டுகால ஒப்பந்த முறையில் மிஞ்சியிருக்கும் மாநில பொதுச்சொத்துக்களில் ஏறத்தாழ 12 சதவீத அளவிலான புதிய விற்றுத்தள்ளல்களை மூடிமறைக்க முயன்று வருகிறது. அரசாங்கம் ஏற்கனவே 10 பில்லியன் டாலருக்கு அதிகமான சொத்துக்களை விற்றுவிட்டதாகவும், அரசாங்கம் சொத்துக்களை விற்காது என்ற அதன் தேர்தல் வாக்குறுதியை மீறிவிட்டதாகவும் Australian Financial Review அறிவித்த போது, அந்த மூடிமறைப்பு பல்லிளித்து போனது. வணிக பத்திரிகைகளின் செய்திப்படி, அந்த "10 பில்லியன் டாலர் தனியார்மயமாக்கல் வெகுமதியில்" பெரும்பான்மை, குவின்ஸ்லாந்து முதலீட்டு பெருநிறுவனத்தின் சுங்கப்பாதைகளை 7.1 பில்லியன் டாலரில் டிரான்ஸர்பன் நிறுவனத்திற்கு விற்றதிலிருந்து வந்தது. இதர முக்கிய விற்பனைகளில் பிரிஸ்பன் நகர அலுவலக கட்டிடங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களும் உள்ளடங்கும். இந்த சமீபத்திய தனியார்மயமாக்கல் சுற்று மே மாத மாநில வரவு-செலவு திட்டக்கணக்கில் அறிவிக்கப்பட்ட போதினும், அரசாங்கம் இப்போது ஒரு மூடிமறைப்பை உருவாக்க முயன்று வருகிறது. “மக்களின் வரவு-செலவு திட்டக்கணக்கை" திட்டமிடுவதற்காக என்று வெளிவேடத்திற்கு அமைக்கப்பட்ட அதன் “Strong Choices” வலைத் தளம், “அரசாங்கம் முன்னரே அறிவித்திருந்த சொத்துக்களின் விற்பனையை அல்லது ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் தனியார் முதலீட்டுக்கு அளிப்பதை மட்டுமே இப்போதும் பரிந்துரைப்பதாக," குறிப்பிட்டது. தொழில்துறை நீர்வினியோக குழாய்கள் (SunWater), மின்சார உற்பத்தி ஆலைகள் (ஸ்டான்வெல்லின் CS Energy), மின் வினியோகம் மற்றும் மின்சாரப்பாதை சார்ந்த வியாபாரங்கள் (Energex, Powerlink), மற்றும் கிளாட்ஸ்டோன் மற்றும் டவுன்ஸ்வெல்லேயின் துறைமுகங்கள் ஆகியவை 50 ஆண்டுகால ஒப்பந்தபுள்ளியின் அடிப்படையில், அடுத்து 49 ஆண்டுகளுக்கு நீடித்துக் கொள்ளும் வாய்ப்புகளோடு, வழங்கப்படவுள்ள முக்கிய ஆலைகளில் உள்ளடங்கி உள்ளன. மாநில வரவு-செலவு திட்டக்கணக்கில் நிலவும் 80 பில்லியன் டாலர் பற்றாக்குறையை தீர்க்க சொத்துக்களை ஒப்பந்தபுள்ளியில் விடுவது "மட்டுமே எஞ்சியிருக்கும்" வாய்ப்பாக இருக்கிறதென மாநில நிதிமந்திரி டிம் நிகோல்ஸ் அறிவித்தார். சுரங்கத்துறையிலும் மற்றும் சுரங்கத்துறை முதலீடுகளிலும் கூர்மையான சரிவைச் சுட்டிக்காட்டிய அவர், வேலைவாய்ப்பு குறைவதைத் தவிர்க்க தனியார்மயமாக்கல் "மிகமிக முக்கியமாகும்" என்றார். திரட்டப்படவுள்ள பணத்தில், 25 பில்லியன் டாலர் அரசு கடன்களைத் திருப்பிச் செலுத்தவும், 8.6 பில்லியன் டாலர் ஒரு காலவரையற்ற காலத்திற்கு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிக்கும் "எதிர்கால முதலீட்டு திட்டத்திற்கு" அளிக்கவும், 3.4 பில்லியன் டாலர் தெளிவின்றி இருக்கும் "வாழ்க்கை செலவு நிதிக்கு" செலவிடப்படுமென்றும் கூறப்படுகிறது. மற்றொரு சுரங்கத்துறை மாநிலமான மேற்கு ஆஸ்திரேலியாவைப் போலவே, க்வின்லாந்து அரசாங்க வருவாய் பெரிதும் இரும்பு தாது மற்றும் நிலக்கரி உரிமங்களைச் சார்ந்துள்ளது. உலகளவில் அவற்றின் விலை சரிந்து வருவதால், தற்போது அத்துறை வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த சுரங்கத்துறை சார்ந்த வருவாய் இழப்பு, பிரதம மந்திரி டோனி அப்போட்டின் மத்திய தாராளவாத-தேசிய அரசாங்கம் எதிர்கொண்டிருக்கும் வரவு-செலவு திட்டக்கணக்கு நெருக்கடியையும் தீவிரப்படுத்தி வருகிறது. மக்கள்நல உதவிகளைக் கலைத்தும் மற்றும் சமூக செலவினங்களை வெட்டியும், மேலும் தனியார்மயமாக்கல் மூலமாகவும் வீழ்ச்சிக்கு தொழிலாள வர்க்கத்தை விலைகொடுக்க செய்ய, தேசியளவில் போலவே, குவின்ஸ்லாந்திலும் நாடாளுமன்ற ஸ்தாபகத்திற்குள் இருகட்சிகளது விடையிறுப்பாக உள்ளது. அப்போட் அரசாங்கம், முந்தைய தொழிற் கட்சி அரசாங்கத்தைப் போலவே, அரசு செலவினங்களுக்கான சில நிதிகளை சொத்து விற்பனையோடு பிணைத்துள்ளது. அடுத்த மார்ச்சில் மாநில தேர்தல் வரவிருக்கின்ற நிலையில், குவின்ஸ்லாந்து தொழிற் கட்சி தலைவர் அன்னாஸ்டாசியா பலாஸ்க்ஜக் "மின்சார கட்டணங்கள் உயர்ந்துவிடுமென" கூறி சொத்துக்களை ஒப்பந்தப்புள்ளியில் அளிக்கும் திட்டத்தை விமர்சித்தார். சொத்துக்கள் விற்கப்படமாட்டாது என்ற அதன் 2012 தேர்தல் வாக்குறுதியை அரசாங்கம் மீறுவதாக தொழிற் கட்சி குற்றஞ்சாட்டுகிறது, ஆனால் நியூமேனினுக்கு முன்னர் இருந்த அன்னா ப்ளிக்கும் துல்லியமாக 2009இல் அதையே தான் செய்தார். ப்ளிக் தேர்தலில் வென்று வெறும் மூன்று மாதங்களிலேயே தொழிற் கட்சியின் தனியார்மயமாக்கல்களை அறிவித்தார், அந்த தேர்தல்களின் போது அவர் அப்பிரச்சினை குறித்து குறிப்பிட்டிருக்கவில்லை, ஆனால் அதற்குமாறாக அவர் ஆயிரக் கணக்கான வேலைகளுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். 2012இல் 89 இடங்களுக்கான நாடாளுமன்ற தேர்தலில் வெறும் ஏழு MPகள் மட்டும் எஞ்சியிருக்குமாறு தொழிற் கட்சி வீழ்த்தப்பட்டதற்கு அதுவும் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது. (இந்த ஆண்டின் இரண்டு இடைத்தேர்தல் வெற்றிகளைத் தொடர்ந்து தொழிற் கட்சி இப்போது ஒன்பது MPக்களைக் கொண்டுள்ளது). இதேபோல, குவின்ஸ்லாந்து தொழிற்சங்கங்களின் கவுன்சிலும் (QCU) மற்றும் அதனுடன் இணைப்பு பெற்ற மின்சாரத்துறை தொழிற்சங்கம் (ETU) மற்றும் குவின்ஸ்லாந்து தாதியர் சங்கம் போன்ற சில சங்கங்களும் தனியார்மயமாக்கல் திட்டத்தை விமர்சித்துள்ளன, ஆனால் அவை அவற்றின் உறுப்பினர்களை வெறுமனே மற்றொரு வணிக-சார்பு தொழிற்கட்சி அரசாங்கத்திற்குப் பின்னால் அடைக்கும் முயற்சியாகவே அதை செய்துள்ளன. QCUஇன் செய்திதொடர்பாளர் ரோஸ் மெக்லென்னன் ஜூனில் இந்த நோக்கத்தைத் தொகுத்தளித்தார்: “அரசாங்கம் செவிசாய்க்காது, அவர்களைக் காதுகொடுத்து கேட்குமாறு செய்யும் ஒரே விடயம் வாக்குப்பெட்டி மட்டுமே ஆகும்," என்றார். இத்தகைய அதே தொழிற்சங்கங்கள் தான், மாநில அரசுக்கு சொந்தமான சரக்குரயில் வணிகமான QR Nationalஐ மற்றும் பிரிஸ்பனின் துறைமுகம், அப்போட் நுழைவாயில் சுரங்க முனை மற்றும் குவின்ஸ்லாந்து வனவளர்ப்பு (Forestry Plantations Queensland) உட்பட இதர சொத்துக்களையும் ப்ளிக் அரசாங்கம் விற்றுத்தள்ளிய போது, தொழிலாளர்கள் மத்தியில் வெடித்த எதிர்ப்பைத் திணறடிப்பதில் கருவியாக செயல்பட்டன. மட்டுப்படுத்தப்பட்ட போராட்டங்கள் மற்றும் மனுவில் கையெழுத்து வாங்குதல் போன்ற நடவடிக்கைகளுக்கு பின்னர், தொழிற்சங்கங்கள் இறுதியாக தீர்வுகளை பேரம்பேசி முடித்தன, அவை தொழிற் கட்சி அரசாங்கம் நடவடிக்கையை தொடர்வதற்கு உதவின. தொழிற்சங்கங்கள் அப்போது எதிர்த்த அளவுக்கு கூட இப்போது தனியார்மயமாக்கலை எதிர்க்கவில்லை. நிதியியல் சந்தைகள் மற்றும் பெருநிறுவன மேற்தட்டின் கட்டளைகளுடன் எந்தவித உடன்பாடின்மை கொள்வதிலிருந்தும் வெகுதூரம் விலகி நின்று, அவை அவற்றின் தொழிலாளர் மீது அமலாக்க ஆணையங்களாக நீண்டகாலமாக செயல்பட்டு வந்துள்ளன. போலி-இடது குழுக்கள், சோசலிஸ்ட் அலையன்ஸ் மற்றும் சோசலிஸ்ட் அல்டர்னேடிவ், சமீபத்திய தனியார்மயமாக்கல் முனைவை நியூமேன் அரசாங்கத்தின் ஒரு சித்தாந்த ஆட்டிப்படைப்பின் விளைபொருளாக சித்தரித்துள்ளன. அந்த முடிவை திரும்பப்பெற வைக்க, தொழிற்சங்கங்கள் அந்த விற்றுத்தள்ளலை எதிர்க்குமென்றும், LNP அரசாங்கத்திற்கு அல்லது புதிய தொழிற்சங்க அரசாங்கத்திற்கு அழுத்தமளிக்குமென்றும் அவை பிரமைகளைத் திரித்துக்கட்டி வருகின்றன. நியூமேன் அரசாங்கத்திற்கு அழுத்தமளிக்க "பாரிய பேரணிகள், மாநிலந்தழுவிய நடவடிக்கை நாட்கள், மனு அளிப்பது மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நாடுவது" ஆகியவற்றிற்கு சோசலிஸ்ட் அலையன்ஸின் Green Left Weekly அழைப்புவிடுத்துள்ளது. “அரசாங்கத்தின் கைகளை நிர்பந்திக்க," அல்லது அது தோல்வியடைந்தால், “அதை செய்வதற்கு" ஒரு புதிய தொழிற் கட்சி அரசாங்கத்திற்கு அழுத்தம் அளிக்க ETU “தொடர்ச்சியான தொழில்துறை பிரச்சாரத்தை நடத்த வேண்டுமென" சோசலிஸ்ட் அல்டர்னேடிவ்வின் Red Flag வலியுறுத்தியுள்ளது. கடந்த முறை செய்யப்பட்டதைப் போன்றே, தனியார்மயமாக்கலின் தற்போதைய சுற்றும், சித்தாந்தத்தால் உந்தப்பட்டதல்ல, மாறாக ஆழமடைந்துவரும் உலகளாவிய முதலாளித்துவ உடைவால் நடத்தப்படுவதாகும். மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளதைப் போன்று, LNPஐ போலவே, தொழிற்கட்சியும் பொருளாதார நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்த முற்றிலுமாக பொறுப்பேற்றுள்ளது. போலி-இடதுகளின் ஒத்துழைப்புடன், தொழிற்சங்கங்களால் அழைப்புவிடப்பட்ட முந்தைய போராட்டங்கள் தொடர்ந்திராதபடிக்கு முடித்துக் கொள்ளப்பட்டது, அதேவேளையில் சிக்கன நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்கப்பட்டது. இப்போதோ போலி-இடதுகள் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்காக மீண்டும் அதே சேவையைச் செய்ய அணிதிரண்டுள்ளன. LNP, தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் போலி-இடது ஆதரவாளர்களின் முதலாளித்துவ நிகழ்ச்சிநிரலுக்கு எதிராக ஒரு சோசலிச முன்னோக்கிற்கான அரசியல் போராட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக ஒன்றுதிரட்டுவது மட்டுமே, வேலைகள், நிலைமைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பாதுகாக்கும் ஒரு நிஜமான போராட்டத்தை நடத்துவதற்கான ஒரே வழியாகும். |
|
|