தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lankan SEP/YSSE public lecture series: Fifty years since the LSSP’s Great Betrayal லங்கா சம சமாஜக் கட்சியின் மாபெரும் காட்டிக்கொடுப்பில் இருந்து ஐம்பது ஆண்டுகள்4 October 2014 Use this version to print| Send feedback இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், லங்கா சம சமாஜக் கட்சி 1964ல் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் நுழைந்துகொண்டதன் மூலம் செய்த "மாபெரும் காட்டிக்கொடுப்பின்" விளைவுகள் மற்றும் படிப்பினைகளைப் பற்றி தொடர் பகிரங்க விரிவுரைகளை நடத்துகின்றன. ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எனக் கூறிக்கொண்ட ஒரு கட்சி முதல் முறையாக முதலாளித்துவ அரசாங்கத்துக்குள் நுழைந்ததன் 50 ஆண்டுகளை கடந்த ஜூன் மாதம் குறித்து நிற்கிறது. இந்தக் காட்டிக் கொடுப்பு, இலங்கை மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது. இலங்கையில், தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் வடக்கில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற இனவாத அரசியலை அடிப்படையாகக் கொண்ட குட்டி முதலாளித்துவ தீவிர அமைப்புக்கள் தோன்றுவதற்கு கதவை திறந்துவிட்டதோடு 1983ல் உள்நாட்டு யுத்தம் வெடிப்பதற்கும் களம் அமைத்தது. லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பு, இந்தியா மற்றும் ஆசியா முழுவதும், குறிப்பாக பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியாவிலும், ஸ்ராலினிசத்தின் மாவோயிச வகைகள் உட்பட, ஸ்ராலினிசத்திற்கு உதவியதோடு, அந்த அமைப்புக்களின் பிற்போக்கு முதலாளித்துவ-சார்பு அரசியலையும் நியாயப்படுத்தியது. லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுத்த கொள்கை ரீதியான போராட்டம், 1968ல் அனைத்துலகக் குழுவின் இலங்கை பகுதியாக, சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்படுவதற்கு வழிவகுத்தது. லங்கா சம சமாஜக் கட்சியின் சீரழிவுக்கான உண்மையான வேர்கள், பப்லோவாதத்திலேயே தங்கியிருக்கின்றன என அனைத்துலகக் குழு விளக்கியது. 1950களின் ஆரம்பத்தில் நான்காம் அகிலத்தினுள் எழுந்த திருத்தல்வாத போக்கான பப்லோவாதம் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தை நிராகரித்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது பப்லோவாதிகளில் இருந்து பிரிந்து 1953ல் ஸ்தாபிக்கப்பட்டது. லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புக்கு எதிராக அனைத்துலகக் குழுவும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்/சோசலிச சமத்துவக் கட்சி ஆகியவையும் முன்னெடுத்த கொள்கை ரீதியான போராட்டத்தின் அரசியல் மற்றும் தத்துவார்த்த படிப்பினைகள், இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் இன்று தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இன்றியமையாததாகும். நாம் தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் அனைவரையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறோம். பொதுக் கூட்டம் இடம்: வீரசிங்கம் மண்டபம் நவம்பர் 2, ஞாயிறு, 2 மணி |
|
|