சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Turmoil rips through global financial markets

உலகளாவிய நிதியியல் சந்தைகளைக் கொந்தளிப்பு பிளக்கிறது

By Nick Beams
16 October 2014

Use this version to printSend feedback

உலகின் பிரதான மத்திய வங்கிகள் வழங்கிய அதிமலிவு பணத்தால் தோற்றுவிக்கப்பட்ட நிதியியல் சீட்டு அட்டை-வீடு அனேகமாக பொறிந்து வருவதற்கான அதிகரித்துவரும் அறிகுறிகளுக்கு இடையே, புதனன்று உலகளாவிய நிதியியல் சந்தைகள் ஒரு கடும்-அதிர்வு நாளைக் கண்டன.

முதலீட்டாளர்கள் அதிக அபாயகரமான சொத்துக்களுக்கு அவர்களின் விருப்பத்தைத் தவிர்க்க முயன்றதால், ஐரோப்பிய பங்குகள் அவற்றின் மூன்று ஆண்டுகளின் மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டன. 2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் ஐரோப்பிய பொருளாதாரம் அதன் மூன்றாவது பின்னடைவுக்குள் சரிந்து வருகிறது மற்றும் உலகளாவிய வளர்ச்சி மெதுவாகி வருகிறது என்ற கவலைகள் அதிகரித்து வருகின்றன.

முதல் 300 ஐரோப்பிய பங்குகளின் FTSE Eurofirst குறியீடு, அதே நாளில் 3 சதவீதத்தையும் விட அதிகமாக சரிந்தது, இது 2011இன் இறுதிக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய ஒரேநாள் சரிவாகும். செப்டம்பர் தொடக்கத்திலிருந்து அந்த முக்கிய குறியீடு 11 சதவீதம் சரிந்திருக்கிறது.

சிலவேளைகளில் "அச்சத்தின் அளவுமானியாக" குறிப்பிடப்படும் ஒரு முக்கிய ஐரோப்பிய நிலையற்றத்தன்மையின் குறியீடு, 2012இன் மத்தியபகுதிக்குப் பின்னரிலிருந்து அதன் உயர்ந்த அளவை எட்டியது, அப்போது பல நாடுகளின் இறையாண்மை கடன் மீதான கவலைகள் ஒரு நெருக்கடியைத் தூண்ட அச்சுறுத்தி இருந்தது. அனைத்து பிரதான ஐரோப்பிய குறியீடுகளும், முக்கியமாக ஜேர்மன் குறியீடு 10 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்திருந்ததுடன் சேர்ந்து, இந்த ஆண்டில் எதிர்மறை பகுதிக்குள் உள்ளன.

ஐரோப்பிய விற்றுத்தள்ளல் தொடர்ந்த போது, பங்கு விலை-நிர்ணய (equity) மற்றும் பத்திர சந்தைகள் இரண்டிலும் கடுமையான வர்த்தகம் நிலவிய அதேநாளில் வோல் ஸ்ட்ரீட்டும் அதில் இணைந்து கொண்டது. இது பீதிஅடைவதைப் பிரதிபலிக்கவில்லை என்றாலும், அதீத பதட்டத்தைப் பிரதிபலிக்கிறது.

அந்நாளின் ஒரு கட்டத்தில், பணம் ஒரு பாதுகாப்பான புகலிடத்தைத் தேடி அமெரிக்க கருவூலத்துறை பத்திரங்களுக்குள் பாய்ந்த போது, டோவ் ஜோன்ஸ் குறியீடு ஏறத்தாழ 460 புள்ளிகள் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. பணத்தின் நகர்வு எந்தளவுக்கு இருந்ததென்றால், ஒரு கட்டத்தில் ஒருசில நிமிடங்களிலேயே கருவூலத்துறையிலிருந்து கிடைத்த இலாபம் 35 அடிப்படை புள்ளிகள் சரியுமளவுக்கு இருந்தது. இலாபங்களுக்கு நேர்மாறான தொடர்பில் நகரும் பத்திரங்களின் விலைகள், வாங்கும் தேவை உயர்வதால் தூக்கிவிடப்படுகின்றன.

இந்த நாடகபாணியிலான இயக்கத்தைக் குறித்து குறிப்பிடுகையில், பைனான்சியல் டைம்ஸின் சந்தை கட்டுரையாளர் ஜோன் ஆதெர்ஸ் இவ்வாறு குறிப்பிட்டார்: பொதுவாக பத்திர சந்தையைத் திசைதிருப்பும் பொருளாதார தகவல் அடிப்படையில் அங்கே எந்த "சாத்தியமான விளக்கமும்" இல்லை. “புதனன்று கருவூல பத்திரங்களின் இலாபங்களில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி, அவற்றில் பெரும்பாலானவை நியூ யோர்க் வர்த்தக நாளின் முடிவில் தலைகீழாக இருந்த போதினும் கூட, 2008 நெருக்கடியின் போது நாம் அனைவரும் அறிந்திருந்த சந்தை பேதலிப்புகள் மீண்டும் திரும்பி வருகின்றன என்பதையே அறிவுறுத்துகின்றன."

அந்நாளின் தொடக்கத்தில் இருந்த அதன் வீழ்ச்சியைத் தொடர்ந்து, டோவ் குறியீடு அந்நாளில் அதிகரித்த பின்னர் இறுதியாக 1.06 சதவீத வீழ்ச்சியோடு முடிவுக்கு வந்தது, S&P குறியீடு 0.81 சதவீத வீழ்ச்சியோடு முடிந்தது.

வேகமாக மெதுவாகிவரும் உலகளாவிய மற்றும் ஐரோப்பிய வளர்ச்சி, அமெரிக்காவைக் கடுமையாக பாதிக்கும் என்ற அச்சமே சரிவுக்கான பிரதான காரணங்களில் ஒன்றாக இருந்தது.

இரண்டாம் காலாண்டில் ஜேர்மன் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுருங்கியமை மற்றும் ஆகஸ்டில் தொழில்துறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கேட்பாணைகளில் இருந்த கூர்மையான வீழ்ச்சி ஆகியவற்றைத் தொடர்ந்து, பொருளாதார அமைச்சகம் 2014க்கான அதன் பொருளாதார வளர்ச்சி முன்மதிப்பீட்டை 1.8 சதவீதத்திலிருந்து 1.2 சதவீதமாக வெட்டியுள்ளது, அத்துடன் 2015க்கான அதன் முன்கணிப்பை 2 சதவீதத்திலிருந்து 1.3 சதவீதமாக வெட்டியுள்ளது. பிராங்க்பேர்டில் உள்ள பார்க்லேயில் மூத்த ஐரோப்பிய பொருளியல்வாதியான தோமஸ் ஹார்ஜெஸ் புளூம்பெர்க்கிற்குக் கூறுகையில், “நிதியியல் முதலீட்டாளர்கள் ஜேர்மன் பொருளாதாரத்தின் வாய்ப்புவளங்கள் மீது அதிகளவில் உற்சாகமிழந்து வருகிறார்கள்," என்றார்.

தொழில்துறை பண்டங்களின் விலைகள் சரிவடைந்து வருகின்ற நிலையில், ஏற்றமதி-சார்ந்த ஜேர்மன் பொருளாதாரத்தின் பலவீனம் மோசமடைந்துவரும் உலகளாவிய போக்குகளுக்கு ஓர் அறிகுறியாகும். ஜூனில் இருந்து, பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 28 சதவீதம் சரிந்துள்ளது, அதேபோல இரும்பு தாதுவின் விலை இந்த ஆண்டில் இதுவரையில் 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. சோளம், கோதுமை மற்றும் சோயாபீன்ஸின் விலைகளும் 20 மற்றும் 30 சதவீதத்திற்கு இடையே சரிந்துள்ளன.

பெரிதும்-பேசப்பட்டுவந்த அமெரிக்க மீட்சி, பலவீனமாக இருப்பதோடு, ஒரு முடிவுக்கு வரக்கூடுமென்ற அச்சங்களை இத்தகைய அபிவிருத்திகள் தூண்டிவிட்டுள்ளன. சில்லறை விற்பனை ஆகஸ்டில் உயர்ந்த பின்னர் செப்டம்பரில் 0.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதைக் காட்டிய புள்ளிவிபரங்கள் வெளியான பின்னர் தான், வோல் ஸ்ட்ரீட்டின் கூர்மையான சரிவு தொடங்கியது.

டான்க்சி வங்கி பகுப்பாய்வாளர் ஆலென் வொன் மெஹ்ரன், பைனான்சியல் டைம்ஸிற்குக் கூறுகையில், ஒரு வளர்ச்சி காலக்கட்டத்திற்குப் பின்னர் ஒரு வீழ்ச்சி என்பது பெரிதும் வழக்கமான ஒன்று தான் என்றாலும், “அமெரிக்கா எதிர்பார்த்ததையும் விட மெதுவாகி வருகிறதோ, அதாவது அமெரிக்காவை உலகின் ஏனைய பகுதிகள் தொடுவதற்கு மாறாக, அமெரிக்கா உலகின் ஏனைய பகுதிகளின் அளவுக்கு 'வீழ்ச்சி அடைந்து வருகிறதோ' என்ற அச்சத்தை அது உருவாக்குகிறது," என்றார்.

வீழ்ச்சி அடைந்துவரும் உலக வளர்ச்சி விகிதத்தால் தோற்றுவிக்கப்பட்ட அச்சங்களைச் சுற்றியே, நிதியியல் சந்தைகளின் குழப்பம் நிலவுகிறது. அமெரிக்காவில், அங்கே அமெரிக்க பெடரல் ரிசர்வ் வழிகாட்டலின் மீது நிச்சயமற்றதன்மை அதிகரித்து வருகிறது. இந்த மாத இறுதியில் அதன் சொத்து வாங்கும் திட்டம் முடிவுக்கு வந்ததும், அது வட்டி விகிதங்களை உயர்த்தத் தொடங்கும் பாதைக்கு வருமென கூறப்படுகிறது.

எவ்வாறிருந்த போதினும், சமீபத்திய மாதங்களில் அமெரிக்க டாலரின் உயர்வு அமெரிக்க ஏற்றுமதி சந்தைகளை பாதித்து வருவதுடன், பெடரல் வட்டி விகிதத்தை உயர்த்த திரும்புவதைத் தள்ளிப்போடக் கூடுமென்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

அங்கே சர்வதேச பிளவுகள் ஆழமடைந்து வருகின்றன. ஐரோப்பிய மத்திய வங்கி தனியாரிடம் உள்ள நிதியியல் சொத்துக்களை வாங்குவதிலிருந்து அரசு பத்திரங்களை வாங்குவது வரையில் அதன் "பணத்தைப் புழக்கத்தில்விடும்" திட்டத்தை நீடிக்க வேண்டுமென அமெரிக்க நிதியியல் துறை விரும்புகிறது. ஆனால், இது ஜேர்மனியால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது, அதுபோன்றவொரு நகர்வு அதன் நிதியியல் நிலைமையைப் பலவீனப்படுத்துமென அது நம்புகிறது.

நிதியியல் கொள்கை மீது அமெரிக்கா மற்றும் ஜேர்மனுக்கு இடையிலான விரிசல் தான், அக்டோபர் 1987இல் அமெரிக்க மற்றும் உலகளாவிய பங்குச்சந்தை பொறிவுக்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது. நிதியியல் சந்தைகளுக்கு கட்டுப்பாடில்லாத பணத்தை வினியோகிக்க அடைப்புகளைத் திறந்துவிட்டதன் மூலமாகவும், கடந்த 27 ஆண்டுகளில் ஒரு நிதியியல் குமிழி மாற்றி ஒரு குமிழியை உருவாக்கியுள்ள கொள்கையைத் தொடங்கி வைத்தும், அந்த நெருக்கடிக்கு அமெரிக்க பெடரல் விடையிறுப்பு காட்டியது, அத்தகைய குமிழிகள் ஒவ்வொன்றும் பெரும் தீவிர விளைவுகளோடு வெடித்துள்ளன.

2008 நிதியியல் நெருக்கடிக்கு விடையிறுப்பாக தொடங்கப்பட்ட பெடரலின் பணத்தைப் புழக்கில் விடும் கொள்கை, வங்கிகள் மற்றும் நிதியியல் அமைப்புகளின் கஜானாவுக்குள் 3 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தைப் பாய்ச்சியுள்ளது. உலகளாவிய முதலாளித்துவ வரலாறில் இதுபோன்று வேறெதுவும் நடந்ததில்லை, அத்துடன் உத்தியோகப்பூர்வ வட்டிவிகிதங்களில் சிறிய அதிகரிப்பும் கூட என்ன மாதிரியான விளைவுகளைக் கொண்டு வருமென்பதை யாராலும் எந்தவித நம்பிக்கையோடும் கணிக்க முடியாதவாறு உள்ளது. பெடரல் அதன் சொத்து வாங்கும் திட்டத்தைக் "குறைக்க" தொடங்க உள்ளது என்பதை அது வெளிப்படுத்திய போது, கடந்த ஆண்டு அது உலக சந்தைகளில் அதிர்வுகளின் சில அறிகுறிகளை வெளிப்படுத்தியது.

உலகின் மிகப்பெரிய பத்திர வர்த்தக நிறுவனமான பிம்கோவின் முன்னாள் துணை பொறுப்பாளரும், தற்போது ஜேர்மன் காப்பீட்டு நிறுவனம் அல்லெய்ன்ஸின் ஒரு பொருளாதார ஆலோசகருமான மொஹம்மத் எல்-எரென், அமெரிக்க பெடரலின் கொள்கைகளுக்கும் மற்றும் ஐரோப்பா மற்றும் ஜப்பானின் மத்திய வங்கிகளின் கொள்கைகளுக்கும் இடையிலான ஒரு விரிசலின் விளைவாக, செலாவணி ஏற்றத்தாழ்வுகள் உட்பட "தீவிரமான சிக்கல்களைக்" குறித்து எச்சரித்துள்ளார். “வரலாற்றைக் கொண்டு முடிவெடுத்தால், கூர்மையான மற்றும் வேகமான செலாவணி சரிக்கட்டல்கள் பெரும்பாலும் எதையாவது உடைப்பதில் தான் போய் முடியும்," என்று அவர் பைனான்சியல் டைம்ஸிற்குத் தெரிவித்தார்.

நிதியியல் சந்தைகள் எதை நோக்கி போய் கொண்டிருக்கின்றன என்பதன் மீதான ஒரு கூர்மையான எச்சரிக்கையும் கூட, செவ்வாயன்று ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி துணை ஆளுநர், கே டெபெல்லேவினால், சிட்னியில் வழங்கப்பட்ட ஓர் உரையில் விடுக்கப்பட்டது.

சர்வதேச கொடுக்கல்-வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கியில் சந்தை கமிட்டியின் தலைவராகவும் இருக்கும் டெபெல்லே, முதலீட்டாளர்கள் மத்திய வங்கிகளின் மலிவு பணக் கொள்கைகள் தொடரப்பட்டதன் மீது பலமாக சார்ந்திருப்பதால், ஒரு "வன்செயலில் ஈடுபடும் கொடுமையான" மற்றும் தீவிரமான சந்தை விற்றுத்தள்ளல் குறித்து எச்சரித்தார்.

பல முதலீட்டாளர்கள் "பணத்திற்கு பரிமாறிக்கொள்ளத்தக்கநிலை இல்லாதநிலையில் அதனை ஊகிப்பதன் மீதாக சொத்துக்களை வாங்கி" வந்திருந்ததாக எச்சரித்தார். ஒரு குறிப்பிட்டளவிலான எண்ணிக்கையில் முதலீட்டாளர்கள், அங்கே எவ்வித விற்றுத்தள்ளல் ஏற்பட்டாலும் அவர்களின் நிலைகளிலிருந்து ஒதுங்கிக் கொள்ள கருதி இருந்தனர். ஆனால் "வெளியேறுவதென்பது எதிர்பாராத விதத்திலும் மற்றும் வேகமாகவும் ஸ்தம்பிப்பில் சிக்கிக் கொள்ளும்" என்பதையே வரலாறு காட்டியது.

எந்தவித விற்றுத்தள்ளலும் "வன்முறைகொண்டதாய் கொடுமையாக" இருக்கும் என்பதற்கான மற்றொரு காரணம் பூஜ்ஜிய வட்டிவிகித முறையாகும். “அங்கே (நெருக்கமாக) பூஜ்ஜிய நிதிய செலவுகள் மீது சார்ந்திருந்த நிலைகள் ஐயத்திற்கிடமின்றி வெளியேற்றப்படும். நிதிச்செலவுகள் பூஜ்ஜியமாக இல்லாத போது, அந்த நிலைகள் வெடித்து சிதறும்," என்று அவர் தெரிவித்தார்.

இரண்டுக்கும் குறைந்த நாட்களுக்குப் பின்னர், அவரது எச்சரிக்கை நிதியியல் சந்தைகளின் வேகமான இயக்கங்களில் குறைந்தபட்சம் பகுதியாக உறுதிப்பாட்டை பெற்றன.

அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தில் "கட்டமைப்பு சீர்திருத்தங்கள்" என்றழைக்கப்படுவது அதிகரிக்கப்பட வேண்டுமென்பதே அமெரிக்க வியாபார தொலைக்காட்சி சேனல்களில் உரையாற்றும் பல்வேறு "தலைமை பேச்சாளர்களின்" மற்றும் நிதியியல் பகுப்பாய்வாளர்களின் விடையிறுப்பாக உள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சாத்தியமானளவுக்கு 2008ஐ விட பேரழிவுகரமான விளைவுகளுடன், மற்றொரு நிதியியல் நெருக்கடி வெடிப்பதற்கான நிலைமைகள் அபிவிருத்தி அடைகையில், உலகளாவிய நிதியியல் மேற்தட்டுக்களின் ஊதுகுழல்களோ தொழிலாளர் வர்க்கத்திற்கென என்ன சமூக பாதுகாப்புகள் எஞ்சியிருக்கிறதோ அவற்றையும் முற்றிலுமாக தகர்க்க முறையிட்டு வருகின்றன.