சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Market gyrations and the need for socialism

சந்தை ஏற்றஇறக்கங்களும், சோசலிசத்திற்கான அவசியமும்

Nick Beams
21 October 2014

Use this version to printSend feedback

கடந்த வாரம் உலகளாவிய நிதியியல் சந்தைகளில் இருந்த கொந்தளிப்பு, 2008 நிதியியல் நெருக்கடியுடன் தொடங்கிய முதலாளித்துவ அமைப்புமுறையின் முறிவுக்கு ஒரு தீர்வைக் கொண்டு வரமுடியுமென்ற உலகின் பொருளாதார மற்றும் நிதியியல் நிர்வாகிகளின் வாதங்களை நொருக்கித் தள்ளியுள்ளது.

பல விமர்சகர்கள் குறிப்பிட்டதைப் போலவே, வோல் ஸ்ட்ரீட் மற்றும் பத்திர சந்தைகளில் இருந்த கட்டுப்பாடில்லாத ஊசலாட்டங்கள், ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வெடித்த நெருக்கடி தீர்க்கப்படாமல் மட்டுமல்ல, மாறாக இன்னுமொரு மிகவும் வெடிப்பார்ந்த வடிவத்தில் திரும்பி வரக்கூடுமென்பதைக் குறித்துக் காட்டியது.

நிதியியல் அமைப்புமுறையை ஸ்திரப்படுத்த எதுவும் செய்யப்படவில்லை என்று உணரப்பட்டிருப்பது, இப்போது நிஜமான பொருளாதாரத்தின் அடித்தளமே கவலை கொள்ளத்தக்கதாக உள்ள நிலையில், உலகம் ஒரு தேக்கநிலைமை மற்றும் இன்னும்-ஆழமான பின்னடைவு காலக்கட்டத்திற்குள் நகர்ந்து வருகிறது என்பதை ஒப்புக்கொள்வதுடன் பொருந்தியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் நடந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆண்டு கூட்டம், உலகின் அரசு கருவூலத்துறை உயரதிகாரிகளையும், மத்திய வங்கியாளர்களையும் மற்றும் பொருளாதார நிபுணர்களையும் ஒன்றுகூட்டி நடந்தது. யூரோ மண்டலம் 2008க்குப் பிந்தைய அதன் மூன்றாவது பின்னடைவுக்குள் நகர்ந்து வருகிறது, சீனாவில் வளர்ச்சி மெதுவாகி வருகிறது, எழுச்சிபெற்றுவரும் சந்தைகளில் பொருளாதார விரிவாக்க வேகம் கூர்மையாக வீழ்ச்சி அடைந்துவருகிறது என்பதை புள்ளிவிபரங்கள் காட்டியிருந்ததற்கு இடையே, அக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் இந்த நிலைமையை எதிர்கொள்ள எதுவுமே முன்னெடுக்கப்படவில்லை.

Guardian இதழின் பொருளாதாரத்துறை செய்தியாளர் லாரி எலியாட் குறிப்பிட்டதைப் போல, 1930களில் சர்வதேச சங்கத்தின் கூட்டத்தில் பங்குபெற்ற அனைவரும் யுத்தம் வரவிருந்ததை அறிந்திருந்தார்கள், ஆனால் அதை தடுக்க எதுவும் செய்யவியலாது சக்தியற்று இருப்பதாக உணர்ந்தார்கள், அத்தகையவொரு கூட்டத்தை ஒத்திருப்பதில் இந்த மாநாட்டை விட வேறெதுவும் பொருந்தி இருக்காது.

அமெரிக்காவின் வளர்ச்சி, ஏதோவிதத்தில் அழுத்தத்திற்குள் இருந்தாலும் கூட, தவிர்க்கவியலாமல் உலகின் எஞ்சி பகுதியை அதற்குப் பின்னால் இழுத்துச் சென்று, உலகளாவிய விரிவாக்கத்தில் ஒரு திருப்பத்தைக் கொண்டு வருமென முன்னணி முதலாளித்துவ பொருளாதார வட்டாரங்களில், இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒரு சம்பிரதாயமான அறிவு இருந்தது.

எஞ்சியிருந்த அந்த சௌகரியமான சூழலும் இந்த வாரயிறுதியில் பொறிந்து போனது, நியூ யோர்க் பகுதியில் சில்லறை விற்பனை வீழ்ச்சி மற்றும் உற்பத்தி மெதுவாகி வருவது ஆகியவை உட்பட, அமெரிக்காவிலிருந்து வரும் புள்ளிவிபரங்களும், டாலர் மதிப்பு அதிகரிப்பதன் தாக்கம் அமெரிக்க ஏற்றுமதிகளில் ஏற்படுத்தியிருக்கும் கவலைகளும், நேரெதிரான நிலைமையைக் குறிப்பிட்டுக் காட்டின: அதாவது, ஓர் உலக மீட்சிக்கு இட்டு செல்வதற்கு மாறாக, அமெரிக்க பொருளாதாரம் சர்வதேச அளவில் பின்னுக்குத் தள்ளும் சக்திவாய்ந்த சூறைக்காற்றால் பின்னால் இழுக்கப்படக்கூடுமென்பதைச் சுட்டிக்காட்டின.

அமெரிக்காவை உலகின் எஞ்சிய பகுதிகளையும் சேர்த்து இழுத்துச்செல்லும் ஓர் இழுவை இயந்திரமாக சித்தரிக்கும் பொருளாதார முன்மாதிரியானது, கடந்தகாலத்தின் எச்சசொச்சமாகும். HSBC இன் முதன்மை பொருளாதார நிபுணர் ஸ்டீபன் கிங் பைனான்சியல் டைம்ஸில் வெளியிட்ட ஒரு கருத்தில் குறிப்பிட்டதைப் போல, “உலக திரட்சியில் அமெரிக்க பொருளாதாரத்தின் பங்கு சுருங்கி வருகிறது, ஆகவே அது உலகின் எஞ்சிய பகுதிகளின் மீது அதே ஈர்ப்புத்தன்மையை இனியும் பெற்றிருக்கவில்லை. மேலும், அதிகளவில், பொருளாதார மற்றும் நிதியியல் அபிவிருத்திகளோ, உள்நாட்டு கொள்கை உருவாக்குபவர்களால் அவ்வளவு எளிதாக சரிகட்ட முடியாதபடிக்கு, அமெரிக்க பொருளாதார செயல்திறனுக்கு மறுவடிவம் கொடுத்து வருகின்றன.

நிதியியல் சந்தைகளைப் பொறுத்த வரையில், கடந்த ஆறு ஆண்டுகளாக மத்திய வங்கிகள் மற்றும் நிதியியல் ஆணையங்களால் உலகளாவிய நிதியியல் அமைப்புமுறைக்குள் அதிதீவிர-மலிவு பணம் பாய்ச்சப்பட்டமை, இது குறைந்த-வட்டிவிகித இராஜ்ஜியத்துடன் சேர்ந்து 7 ட்ரில்லியன் டாலரிலிருந்து 10 ட்ரில்லியன் டாலர் என மதிப்பிடப்படுகின்ற நிலையில், அது மற்றொரு பொறிவுக்கான நிலைமைகளை மட்டுமே உருவாக்கி உள்ளது.

அக்டோபர் 14இல், ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே டெபெல்லெ (இவர் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கியின் சந்தை கமிட்டியின் தலைவராகவும் இருக்கிறார்), அத்தகைய கொள்கைகளின் விளைவாக நிதியியல் சந்தைகளில் "பயங்கர" சம்பவங்கள் நிகழக்கூடுமென குறிப்பிட்டார், நிதியியல் ஊகவணிகர்கள் "பாதுகாப்பான புகலிடங்களை" தேட முனையும் போது வெளியேற்றத்திற்காக அரக்கபறக்க ஓடுவதும் அதில் உள்ளடங்கும். பூஜ்ஜிய, அல்லது பூஜ்ஜியத்திற்கு நெருக்கமான நிதிச்செலவுகளைச் சார்ந்து அங்கே நிதியியல் சந்தைகளில் நிறைய எண்ணிக்கையிலான "நிலைப்பாடுகள்" இருப்பதாக தெரிவித்த அவர், வட்டிவிகிதங்கள் உயர தொடங்கும் போது, “இந்த நிலைப்பாடுகள் வெடிக்கும்," என்றார். இதற்கு ஒரு நாளைக்குப் பின்னர், நிதியியல் சந்தைகள் 2008இன் பழைய நிலைமைகளை மீண்டும் அனுபவித்தன.

பதட்டமடைந்த முதலீட்டாளர்கள் அவர்கள் பாதுகாப்பான சொத்துக்கள் என கருதியதை வாங்குவதில் பங்குகளைக் குவித்த போது, கடந்த புதனன்று ஒருசில நிமிடங்களிலேயே அமெரிக்க கருவூல பத்திரங்களின் மதிப்புகள் 35 அடிப்படை புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது, இந்த கொந்தளிப்புக்கு நிறைய எண்ணிக்கையிலான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கணினிவழி வர்த்தகத்தை முதலீட்டாளர்கள் பயன்படுத்துவதால், அது அவர்களின் பரிவர்த்தனைகளை வேகப்படுத்தி, சந்தையை பாதிப்பதாக கூறப்பட்ட விளக்கமும் அதில் உள்ளடங்கும். ஆனால், அதுபோன்ற அமைப்புகள் அனைத்தும் ஒரே அடித்தளத்தில் அமைக்கப்பட்டு, அவை மந்தை-போன்ற நடவடிக்கையை உருவாக்கி உள்ளன, அதில் நெருக்கடி சூழும் போது சொத்து நிர்வாகிகள் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேற முயற்சிக்கிறார்கள்.

இது கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸால் பிரபலமாக குறிப்பிடப்பட்டதைத் தான் ஒருவருக்கு நினைவுபடுத்தும், அதில் அவர் இவ்வாறு விவரித்தார்: முதலாளித்துவம் தனது மந்திரத்தின் வலிமையால் பாதாள உலகிலிருந்து தருவித்த சக்திகளை கட்டுப்படுத்த முடியாமற்போன மந்திரவாதியின் நிலையில் இருக்கக் காண்கின்றோம்.

நிதியியல் சந்தைகளில் கொந்தளிப்பும், மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் அது காட்டும் நிமித்தங்களாக தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமையின் கூடுதலான சீரழிவும், 100 ஆண்டுகளுக்கு முன்னர் ரோசா லூக்சம்பேர்க்கின் ஓர் உள்ளார்ந்த பகுப்பாய்வையும் நினைவுகூரச் செய்கிறது. அவர் குறிப்பிட்டு காட்டினார்: பொருளாதார மற்றும் நிதியியல் நெருக்கடிகள், மனிதகுலம் நிராதரவாக விடப்பட்டிருந்த மத்தியகாலப்பகுதியில் உலகை நாசமாக்கிய பஞ்சங்கள் மற்றும் பிளேக் நோய்களைப் போல அல்லது இந்த சம்பவங்கள் ஏதோ கண்ணுக்குத் தெரியாத சக்தியின் விளைவைப் போல, பெரும்பாலும் —"சூறாவளி" மற்றும் "மண்டலத்தை சூழ்திருக்கும் இருண்ட மேகங்கள்" போன்ற வானிலை விவரிப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளில் சித்தரிக்கப்படுகின்றன.

எவ்வாறிருந்த போதினும், பொருளாதார மற்றும் நிதியியல் அமைப்புமுறை வானிலிருந்து வந்து விழுந்ததில்லை, அது சமூகத்தின் விளைபொருள். இருந்தாலும் கூட, அதன் "நிழலுலக சட்டதிட்டங்களின்" விளைவுகள், முந்தைய கால நாசகரமான பஞ்சங்கள் மற்றும் பிளேக் நோய்களின் விளைவுகளைப் போலவே சித்தரிக்கப்படுகின்றன.

லுக்சம்பேர்கின் பகுப்பாய்வு தீர்வையும் சுட்டிக்காட்டியது. சமுதாயத்தின் சமூக-பொருளாதார ஒழுங்கமைப்பானது, அதுவே உருவாக்கியுள்ள பரந்த சக்திகளை, இவை நிதியியல் சந்தைகளில் அதுபோன்ற சிதைந்த மற்றும் கொடிய வெளிப்பாட்டைக் காணுகின்ற நிலையில், பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவதற்காக ஒட்டுமொத்தமாக சமூகத்தின் நனவுபூர்வமான கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.

இந்த நோக்கத்தை எட்ட அங்கே ஒரேயொரு வழி தான் இருக்கிறது: அதுவாவது, சர்வதேச தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, தனியார் சொத்துடைமை அமைப்புமுறையை தூக்கியெறிந்து, வங்கிகள் மற்றும் நிதியியல் அமைப்புகளின் பொதுவுடைமையை தொடங்கி, அவற்றை உலகளவில் விஸ்தீரணமான ஒரு சோசலிச பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதன் முதல்படியாக ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.

கடந்த வார நெருக்கடிக்கான அவர்களது எதிர்வினையில், வங்கிகள் மற்றும் நிதியியல் மூலதனத்தின் செய்திதொடர்பாளர்கள் கவனக்குறைவாக இந்த முன்னோக்கிற்கான போராட்டத்தின் அத்தியாவசிய அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்கள். இந்த சமீபத்திய நெருக்கடி 2008இல் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நிதியியல் நெறிமுறைகளால் உருவாக்கப்பட்டிருந்ததாக உலகம் முழுமைக்கும் அவர்கள் வலியுறுத்தி இருந்தார்கள்.

இது என்ன எடுத்துக்காட்டுகிறதென்றால், சீர்திருத்துவதன் மூலமாக நெருக்கடியற்ற நிதியியல் அமைப்புமுறையை ஏற்படுத்துவதற்கோ, முதலாளித்துவ அமைப்புமுறையின் கட்டமைப்புக்குள் உலக மக்களின் மீது தொங்கி கொண்டிருக்கும் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கோ அங்கே எந்த சாத்தியக்கூறும் இல்லை என்பதையும், மற்றும் அதை நெறிப்படுத்துவதற்குரிய முயற்சிகள் புதிய கொந்தளிப்புக்கு ஆதாரமாக மாறும் என்பதையும் ஒப்புக் கொள்வதாகவே உள்ளது.

இதைவிட பெரிய ஒப்புதல் கிடைக்காது. அவர்களின் சொந்த வார்த்தைகளிலேயே, அவர்கள் நிதியியல்-பெருநிறுவன மேற்தட்டைப் பறிமுதல் செய்ய மற்றும் ஒரு புதிய உயர்ந்த வடிவத்தில் சமூக-பொருளாதார ஒழுங்கமைப்பை ஸ்தாபிக்க களத்தை அமைத்துள்ளனர்.