தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
This week in history: October 13-19 வரலாற்றில் இந்த வாரம்: அக்டோபர் 13-1913 October 2014 Use this version to print| Send feedback 25 ஆண்டுகளுக்கு முன்னர்: தோல்விகண்ட பனாமா சதியில் அமெரிக்க பங்கு அம்பலத்துக்கு வந்தது
1989 அக்டோபர் 13, அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் H.W. புஷ், பனாமாவில் ஜெனரல் மானுவல் நொரீகாவின் ஆட்சியை தூக்கிவீச மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்தார். பத்து நாட்களுக்கு முன்னர், அக்டோபர் 3, பெருந்தொகையான “கிளர்ச்சியாளர்கள்” சுற்றிவளைக்கப்பட்டதோடு பல தலைவர்கள் சுட்டுத் தள்ளப்பட்டதன் விளைவாக, நொரீகாவுக்கு எதிரான ஒரு சதி முயற்சி அழிவில் முடிந்தது. பல மாதங்கள், நொரீகாவை தூக்கி வீசுமாறு பனாம இராணுவப் படையை பகிரங்கமாக தூண்டிவந்த புஷ், மே மாதம், “அவர்கள் அவரை வெளியேற்றுவதை நான் காண விரும்புகிறேன்” என பிரகடனம் செய்தார். தோல்விகண்ட சதி முயற்சியில் இருந்து அது பகிரங்கமாக தூர விலகியிருந்த போதிலும், புஷ் நிர்வாகமானது தகுதியின்மை மற்றும் திட்டமின்மைக்காக ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளது அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களதும் அதிகரித்துவந்த தாக்குதலுக்கு உள்ளானது. தொலைக் காட்சியில் மறுப்புத் தெரிவித்த புஷ், “இது ஒரு அமெரிக்க நடவடிக்கை என்ற வதந்தி பரவுகிறது” என்றார். அது ஒளிபரப்பப்பட்டு சில நாட்களுக்குள் விடயங்கள் வெளியில் வந்தன: · சதியின் போதும் அதற்கு முன்னரும், சதிகாரர்களுடன் அமெரிக்க தெற்கு கட்டளையகத்தில் உள்ளவர்களும் அதேபோல் சிஐஏ அதிகாரிகளும் விரிவான சத்திப்புகள் நடத்தியிருந்தனர். · சுற்றிவளைக்கப்பட்டிருந்த பனாமா பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தை விடுவிக்க வரும் நொரீகாவுக்கு விசுவாசமான துருப்புக்களை தடுப்பதன் பேரில் பனாமா வீதிகளைத் தடுக்க அமெரிக்க இராணுவப் பிரிவுகள் நிலைகொண்டிருந்தன. அமெரிக்கா போர் ஹெலிகாப்டரில் இருந்து விமானப்படை உதவி வழங்குவதாக உத்தரவாதம் அளித்திருந்த போதும், அது இடம்பெறவில்லை என சில செய்திகள் தெரிவித்திருந்தன. · பனாமாவில் இருந்த அமெரிக்க படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் மெக்ஸ்வெல் துர்மன், சதியின் போது இரகசியமாக நொரீகாவை கடத்தி அவரை அமெரிக்க தளத்துக்கு இடம் மாற்றுவதற்கு அதிகாரமளிக்கப்பட்டிருந்தார். பனாமா ஆட்சியாளரை கைது செய்வதற்கு பனாமா நகருக்குள் அமெரிக்க துருப்புக்கள் நகர்வதற்கான திட்டம் ஒன்றை அபிவிருத்தி செய்யுமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. நொரீகா போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் ஒரு போதைப்பொருள் கும்பல் தலைவர் மற்றும் பனாமாவிலான அமெரிக்க தட்டும் பரந்தளவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதாகும் என்பதே அமெரிக்காவின் வெளிவேட நிலைப்பாடாகும். எனினும், போதைப் பொருள்களில் நொரீகாவின் ஈடுபாடானது நிகரகுவா போராளிகளுக்கு நிதி வழங்குவதற்காக சிஐஏயின் சொந்த “போதைப் பொருள்கள் துப்பாக்கியால் அபகரிக்கும்” நடவடிக்கை பயன்பாட்டுடன் இணைந்ததாகும். தோல்வியடைந்த சதியின் பின்னர், அமெரிக்க நிர்வாகம் பனாமாவில் ஒரு நேரடி இராணுவத் தலையீட்டுக்கான தயாரிப்புகளைத் தொடங்கியது. 50 ஆண்டுகளுக்கு முன்னர்: சோவியத் தலைவர் பதவியில் இருந்து குருஷ்சேவ் அகற்றப்பட்டார்
1964 அக்டோபர் 16, கம்யூனிஸட் கட்சியின் முதல் செயலாளரும் சோவியத் அரசின் தலைவருமான நிகிடா குருஷ்சேவ், ஒரு உள்ளக அதிகாரப் போராட்டத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் பதிவியில் இருந்து அகற்றப்பட்டதோடு அவருக்குப் பதிலாக லியோனிட் பிரெஷ்னேவ் மற்றும் அலெக்ஸி கொசிஜின்னும் பதவியில் அமர்த்தப்பட்டனர். 1930களில் ஸ்ராலினின் கொலைகார சுத்திகரிப்பில் பங்குபற்றியவர்களில் ஒருவரான குருஷ்சேவ், 1939ல் அரசியல் குழுவில் முழு உறுப்புரிமை பெற்றார். ஸ்ராலினின் இறப்பின் பின்னர், அதிகாரத்துவத்திக்கு நெருக்கடியான காலகட்டமாக இருந்த 1953ல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவத்தை எடுத்தார். 1956 பெப்பிரவரியில் தனது “இரகசிய உரையில்” ஸ்ராலினின் குற்றங்களில் ஒரு பகுதியை அம்பலப்படுத்த தள்ளப்பட்ட அவர், அந்த ஆண்டு பிற்பகுதியில் ஹங்கேரிய தொழிலாளர்களின் புரட்சியை நசுக்குமாறு செஞ்சேனைக்கு கட்டளையிட்டார். சுத்திகரிப்பின் போதும் இரண்டாம் உலக யுத்தத்தின் போதும் அதிகாரத்துவத்தின் உறுப்பினர்கள் ஊடாக ஒரு எழுச்சியை அனுபவித்ததை ஒரு முன்னாள் பொறியியலாளரான பிரெஸ்லெவ், எப்போதும் தனது வாடிக்கையாளரான குருஷ்சேவுடன் கூட்டாகவே நகர்ந்துகொண்டிருந்தார். ஸ்ராலினின் இறப்பிற்கு சற்று முன்னதாக மத்திய குழுவில் இணைந்துகொண்ட அவர், பின்னர் மலென்கொவ்வுக்கும் ஏனயை ஸ்ராலினிச விசுவாசிகளுக்கும் எதிராக குருஷ்சேவின் ஆதரவாளராக உயர்மட்ட தலைமைத்துவத்துக்கு உயர்த்தப்பட்டதுடன், 1960ல் பெயரளவிலான அரச தலைவராக ஆனதுடன், கட்சி தலைமைத்துவத்தில் குருஷ்சேவின் இணைத் தலைவராகவும் ஆனார். வளர்ச்சியடைந்து வந்த பொருளாதார நெருக்கடி தொழிலாளர்களின் அமைதியின்மை மற்றும் வேலைநிறுத்தங்களை ஆழமாக்கிய நிலையில் குருஷ்சேவ்வை அகற்றுவதற்கு அதிகாரத்துவம் உந்தப்பட்டது. 1962ல் நொவொசெர்காஸ்க் படுகொலைகளும் இதில் அடங்கும். இதில் வேலைநிறுத்தம் செய்த 26 தொழிலாளர்கள் செம்படை துருப்புக்களால் சுட்டுக் கொல்லப்பட்டதோடு மேலும் 90 பேர் காயமடைந்தனர். இத்தகைய சம்பவங்கள் கனதியான தொழிற்துறைக்கு முன்னதாக நுகர்வோர் பொருட்களை வைக்கும் ஒரு உற்பத்திக் கொள்கைக்கு அழைப்பு விடுக்க குருஷ்சேவ்வை நெருக்கின. 1962ல் கியூப ஏவுகனை நெருக்கடியின் போது கென்னடி நிர்வாகத்திலிருந்து வந்த சலசலப்புகளின் எதிரில் சோவியத் தலைவர் பின்வாங்க நெருக்கப்பட்டதை அடுத்தும்; கொடூரமான உணவுப் பற்றக்குறையை தணிக்க கொண்டுவந்த விவசாயக் கொள்கையின் தோல்வி; மற்றும் சோவியத் மற்றும் சீன ஸ்ராலினிஸ்டுகளுக்கு இடையிலான வெளிப்படையான பிளவினையும் அடுத்தே குருஷ்சேவ் பதவி அகற்றப்பட்டார். 75 ஆண்டுகளுக்கு முன்னர்: சோசலிச தொழிலாளர் கட்சி உள்ளக கலந்துரையாடலில் கனன் சோவியத் ஒன்றியத்தை பாதுகாத்தார்
1939 அக்டோபர் 15, அமெரிக்க ட்ரொட்ஸ்கிச தலைவரான ஜேம்ஸ் பி கனன், சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) நியூ யோர்க் கிளையில், “ரஷ்யப் பிரச்சினை” பற்றி உரை நிகழ்த்தினார் –ஒன்று அல்லது பல ஏகாதிபத்திய சக்திகளால் சோவியத் ஒன்றியத்தின் மீது ஒரு தாக்குதல் தொடுக்கப்படும் போது, அதைப் பாதுகாக்க வேண்டுமா இல்லையா என்பதைப் பற்றியே அவர் உரையாற்றினார். ஏகாதிபத்திய தாக்குதல்களுக்கு எதிராக சோவியத் ஒன்றியத்தை பாதுகாப்பதானது, குறிப்பாக ஹிட்லர்-ஸ்ராலின் உடன்படிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து போலாந்து மற்றும் பால்டிக் அரசுகள் சோவியத்தில் இணைக்கப்பட்ட பின்னரும், கட்சியின் உள்ளேயும் அதைச் சூழவும் இருந்த மத்தியதர வர்க்க புத்திஜீவிகளால் மேலும் மேலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. பரந்த கொந்தளிப்புகளை உருவாக்கிவிட்ட இத்தகைய அபிவிருத்திகள், அமெரிக்க ஏகாதித்தியம் அதன் கூட்டாளிகளின் சார்பில் போரில் நுழைய ஆயத்தமாகி வந்ததுடன் சம்பந்தப்பட்ட வர்க்க அழுத்தங்களுடன் பிணைக்கப்பட்டிருந்தன. தொழிலாள வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றிய மற்றும் போல்ஷிவிக் கட்சி புரட்சியில் மார்க்சிச முன்னணிப் படையின் தீர்க்கமான பாத்திரத்தை காட்சிப்படுத்திய ரஷ்யப் புரட்சி, “22 ஆண்டுகளாக எல்லா நாடுகளிலும் தொழிலாளர் இயக்கத்தின் ஊடாக ஒரு கூர்மையான பிரிக்கும் கோட்டை வரைந்தது, மற்றும் இந்த ஆண்டுகள் முழுவதும் சோவியத் ஒன்றியம் தொடர்பாக எடுக்கப்பட்ட நிலைப்பாடுகள், முதலாளித்துவ உலகின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து போன அனைவரில் இருந்தும்… உண்மையான புரட்சிகர போக்கை வேறுபடுத்திக் காட்டிய தீர்க்கமான காரணிகளாக இருந்தன,” என கனன் விளக்கினார். சோவியத் ஒன்றியம் பற்றிய ட்ரொட்ஸ்கிச நிலைப்பாடு பற்றி கனன் தெரிவித்ததாவது: “(1)அதன் தேசியமயப்படுத்தப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட, புரட்சியின் பலனான சோவியத் ஒன்றியம், ஒரு சீரழிந்த வடிவத்தின் ஊடாக, இன்னமும் ஒரு தொழிலாளர் அரசாங்க இருக்கின்றது; (2) அந்த வகையில், நாம் முன்னரைப் போலவே, ஏகாதிபத்திய தாக்குதலுக்கு எதிராக சோவியத் ஒன்றியத்தை நிபந்தனையின்றி பாதுகாக்கும் நிலைப்பாட்டில் உள்ளோம்; (3) சிறந்த பாதுகாப்பு –முடிவில் அதன் முரண்பாடுகளை தீர்ப்பதே சோவியத் ஒன்றியத்தை காக்கக் கூடிய ஒரே விடயம்- தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச புரட்சியே ஆகும்; (4) தொழிலாளர் அரசை மீண்டும் இயக்குவதற்காக ஒரு அரசியல் புரட்சி மூலம் அதிகாரத்துவத்தை தூக்கிவீச நாம் அழைப்பு விடுக்கின்றோம்.” 100 ஆண்டுகளுக்கு முன்னர்: சுவிட்சர்லாந்து, லௌசானில் லெனின் போர்-எதிர்ப்பு விரிவுரையை ஆற்றினார்
1914 இந்த வாரம், ரஷ்ய மார்க்சிஸ்டும் போல்ஷிவிக் தலைவருமான விளாடிமீர் லெனின், ஆகஸ்ட்டில் வெடித்த ஏகாதிபத்திய உலக யுத்தமான முதலாம் உலக போருக்கு எதிரான ஒரு சோசலிச மற்றும் அனைத்துலக முன்னோக்கை விளக்கி, சுவிட்ஸர்லாந்தில், லௌசானில் இரண்டு விரிவுரைகளை நிகழ்த்தினார். “பாட்டாளி வர்க்கமும் போரும்” என்ற தலைப்பில், அக்டோபர் 14 நிகழ்த்தப்பட்ட அந்த விரிவுரையானது மூன்று நாட்களுக்கு முன்னர், பிரான்ஸ் மற்றும் ரஷ்ய போர் முயற்சிகளுக்கு ஆதரவான ஒரு முன்னோக்கை வரைந்து ஜோர்ஜி பிளெக்ஹானோவ் ஆற்றிய உரைக்கு ஒரு பதிலிறுப்பாக இருந்தது. பிளெக்ஹானோவ், புரட்சிகர இயக்கத்தின் ஆரம்ப காலகட்டத்தில் அதன் கோட்பாட்டு அடித்தளங்களை அபிவிருத்தி செய்வதில் தீர்க்கமான பாத்திரம் ஆற்றியதோடு, “ரஷ்ய மார்க்சிசத்தின்” தந்தை என்றும் பெயர்பெற்றார். எவ்வாறெனினும், அதன் பிரமாண்டமான கட்சியான ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி உட்பட இரண்டாம் அகிலத்தின் அநேகமான தலைமைத்துவத்துடன், போரின் வெடிப்புக்கு ஒரு தேசிய-சந்தர்ப்பவாத விதத்தில் பிரதிபலித்த பிளெக்ஹானோவ், யுத்தத்தில் ஜாரிச எதேச்சதிகாரத்தின் பங்குபற்றலை ஆதரித்தார். அக்டோபர் 11 நடத்திய விரிவுரையில், பிளெக்ஹானோவ், ஜேர்மனியின் யுத்த இலக்குகளின் ஏகாதிபத்திய பண்பை கண்டனம் செய்த போதிலும், ரஷ்யாவின் மிகவும் முக்கியமான பங்காளியான பிரான்சின் இராணுவவாத நடவடிக்கைகளை ஒரு முற்போக்கான விடயமாக முன்வைக்க முயற்சித்தார். இதற்குப் பிரதிபலிப்பாக, அவையில் இருந்து பேசிய லெனின், பிளெக்ஹானோவ் ஏகாதிபத்திய இராணுவவாதத்துக்கு அடிபணிந்துள்ளதை கண்டனம் செய்ததோடு, எல்லா பெரும் வல்லரசுகளதும் போர் இலக்குகள் வளங்கள், சந்தைகள் மற்றும் இலாபங்களுக்கான அவர்களின் முயற்சியினால் கட்டளையிடப்படுகின்றன, என வலியுறுத்தினார். இரண்டாம் அகிலத்தின் பகுதிகள், 1912ல் நடத்திய பாசெல் காங்கிரசில் பூகோள மோதல்களை முன்கணித்ததோடு ஏகாதிபத்திய யுத்தத்துக்கு எதிரான ஒரு இடையறாத போராட்டத்தின் அவசியத்தையும் வலியுறுத்தியதையும் அவர் நினைவூட்டினார். இரண்டாம் அகிலத்தின் தலைவர்களால் அத்தகைய கொள்கைகள் காட்டிக்கொடுக்கப்பட்டதற்கு குறிப்பாக பதிலிறுத்த லெனின், “ஒரு நடுநிலை நாட்டுக்குச் சென்று அங்கிருந்து உண்மையைச் சொல்வது சிறந்தது, ஒரு அமைச்சராக ஆவதை விட பாட்டாளி வர்க்கத்துக்கு சுயாதீனமாக அழைப்புவிடுப்பது சிறந்தது”, என்று பிரகடனம் செய்து பிளெக்ஹானோவின் விரிவுரை குறித்த தனது கருத்துக்களை நிறைவு செய்தார். அவரது அக்டோபர் 14 விரிவுரையில், உலகப் போரை அதன் வரலாற்றுச் சூழ்நிலையில் இருத்திய லெனின், 18ம் நூற்றாண்டின் மற்றும் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்த யுத்தங்கள், நிலப்பிரபுத்துவ தளைகளுக்கு எதிராக தேசிய அரசுகளை பலப்படுத்துவதை இலக்காகக் கொண்டிருக்கையில், தற்போதைய போர், மனித குலத்தின் முழு கலாச்சாரத்துக்கும் அச்சுறுத்தல் விடுக்கும், நிதி மூலதனத்தின் போட்டிக் கன்னைகளால் முன்னெடுக்கப்படும் ஒரு ஏகாதிபத்திய மோதலாகும் என சுட்டிக் காட்டினார். தொழிலாளர்கள் தமது “சொந்த நாட்டுக்கு” ஆதரவளிக்க வேண்டும் என்று இரண்டாம் அகிலத்தின் பகுதியினர் வளர்த்த கூற்றுக்களை நிராகரித்து, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நலன்களை அபிவிருத்தி செய்கின்ற புதிய அமைப்புகளின் தேவையை வலியுறுத்திய லெனின், ஏகாதிபத்திய போர்கள் சமுதாயத்தின் சோசலிச மாற்றத்தை இலக்காகக் கொண்ட உள்நாட்டு யுத்தங்களாக மாற்றப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார். உரையை செய்தியாக்கிய நிருபர், “லெனினின் விரிவுரை ஒரு பெரும் மக்கள் கூட்டத்துக்கு முன்னால் இடம்பெற்றது” என குறிப்பிட்டிருந்தார். |
|
|