World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

The demise of “bond king” Bill Gross: Financial and political implications

பங்குபத்திர மன்னன் பில் க்ராஸின் விலகல்: நிதிய மற்றும் அரசியல் ரீதியான தாக்கங்கள்

By Nick Beams 
4 October 2014

Back to screen version

உலகின் பெரும் பத்திர விற்பனையாளரான பசிபிக் நிதி மேலாண்மை நிறுவனத்திலிருந்து (Pimco) ”பங்குபத்திர மன்னனான பில் க்ராஸ் கடந்த வாரம் திடீரென வெளியேறியிருப்பது, அதன் போக்கிலேயே, அமெரிக்கா மற்றும் உலக நிதி அமைப்பின் பலமற்ற தன்மையின் மீது மேலும் வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது.

மிகச்சிறிய நிறுவனமான Janus Capital இல் ஒரு பணியை மேற்கொள்வதற்காக, தான் உருவாக்கி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை தாங்கி வந்த Pimco விலிருந்து வெளியேறுவதாக க்ராஸ் செப்டம்பர் 26 அன்று அறிவித்தார். இவர் வெளியேறாமல் இருந்திருந்தால், இவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது

Pimco இன் நிர்வாக மட்டத்தில் பிரச்சனை ஏற்ப்பட்ட ஒரு காலகட்டத்தினை அடுத்தே, அதிரடியாக இவர் வெளியேறியிருக்கிறார். ஜனவரி மாதம், இவரது வலதுகையும், வெளிப்படையான வாரிசுமான மொஹமத் எல்-ஆரியன், க்ராஸுடன் ஏற்பட்ட தீவிர பிரச்சனையை அடுத்து நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளார். பொதுவிடங்களில் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு, இவர் தன்னை ஜஸ்டின் பைபருடன் ஒப்பிட்டுக் கொண்டது, மின்னஞ்சலில் க்ராஸ் Pimco இன் பிற நிர்வாகிகளுக்கு கண்டனம் தெரிவித்தது, மற்றும் பரவலாக- பின் தொடரப்பட்ட இவரது முதலீட்டு மேற்பார்வை கடிதங்களுள் ஒன்றின் முதல் பாதியை தனது இறந்து போன பூனைக்கு அர்ப்பணிப்பதாக இவர் எடுத்த முடிவு உள்ளிட்ட, முன்னொருபோதும் இல்லாதளவுக்கு நடத்தைகள் ஒழுங்கற்று போனதை அடுத்து இச்சம்பவம் நடந்திருக்கிறது.

நீங்கள் உங்கள் வாழ்வில் சந்தித்திருப்பவர்களில் அன்பான, துணிச்சலான, இரக்கமுள்ள, மிகவும் அற்புதமான மனிதர் க்ராஸ் என்பதை நீங்கள் மீண்டும் மீண்டும் எழுத வேண்டும் என்று பத்திரிக்கையாளர்களிடம் கிராஸ் கூறியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

உண்மையில், பணம் உள்ளே வந்து கொண்டிருக்கும் வரையில், அது ஒரு குறிப்பிட்டசந்தை மேடையைக் கொடுக்கிறது எனும் முறையில் இத்தகைய நடத்தையை சகித்துக் கொள்ள முடியும், வரவேற்க கூட செய்யலாம். ஆனால், மற்ற பல நிதிகளை விட நிலையாக திறம்பட செயல்பட்டு, க்ராஸ் Pimco வை 2 டிரில்லியன் டாலர்கள் நிறுவனமாக மாற்றியிருந்தார் எனும் அந்தமாயாஜால வேலை, இவரை கைவிட்டுவிட்டது.

இந்த நிகழ்ச்சிப்போக்கில் ஒரு தனிப்பட்ட அதிர்ஷ்டத்தைக் குவித்து, க்ராஸ் உலகின் தலைசிறந்த பத்திர வியாபாரி என்ற நிலைமைக்கு உயர்ந்தார். Pimco அவருக்கு வருடத்திற்கு 200 மில்லியன் டாலர்கள் செலுத்தியதாக அறிவிக்கப்பட்டது. இவையாவும் உலக பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பில் பிரதான திருப்பம் பற்றிய முந்தைய மதிப்பீட்டினை அடிப்படையாகக் கொண்டது.

இவர் 1980களில் அமெரிக்காவில் இரு பெரும் மந்த நிலையினை அடுத்து ஆரம்பித்து, பத்திரங்கள் ஒரு பாரிய ஓட்டத்தினுள் நுழைந்ததுடன் மற்றும் பண வீக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருந்ததை கண்டார்.

முக்கியமாக இவர் பின்பற்றியமாதிரி எளிதான ஒன்று: அது குறைந்த பணவீக்கத்தில், உண்மையான வருமானங்கள் உயருமென்பதால், நிலைத்த-வருமானமுடைய பத்திரங்களின் மதிப்பும் உயரும் என்ற அனுமானத்தை அடிப்படையாகக் கொண்டது.

உதாரணமாக, 100 டாலர்கள் பத்திரத்தின் நிலையான வருமானம் 5 சதவீதம் என்றால், அதாவது வருடத்திற்கு 5 டாலர்கள் என்றால், பணவீக்கமானது 5 அல்லது 6 சதவீதமாக இருக்காது 2 சதவீதமாக இருந்தால், அதன் வருமானத்தின் அளவும் அதிகமாக இருக்கும். இதன் விளைவாக, இந்த அளவு வருமானமீட்டும் பங்குபத்திரத்தின் மதிப்பினை, நிதி சந்தைகளில் வாங்கப்படவும் விற்கப்படவும் முடியும், மேலும் இது குறைந்த பணவீக்கம் எனும் நிபந்தனையின்கீழ் அதிகரிக்கவும் செய்யும்.

முழுக்காலகட்டத்திற்கும், இந்தமாதிரி அதிக வருமானமீட்டியது. Pimco உலகின் பெரும் பத்திர விற்பனையாளரானதுடன், தனிப்பட்ட முறையில் க்ராஸால் நடத்தப்பட்ட நிறுவனத்தின் மொத்த பத்திர நிதி வருமானமும், பெரும்பாலான வருடங்களில் அதன் போட்டியாளர்களின் வருவாயை விஞ்சியது.

ஆயினும், சமீப காலகட்டத்தில் நிலைமை திரும்பிவிட்டது.

க்ராஸ் வெளியேறுவதற்கு முன்புகூட, கடந்த 12 மாதங்களில் வருவாயின் அடிப்படையில் அளவிடப்பட்ட தொழிற்துறையின் கீழ்மட்டத்தின் 20 சதவீதம் குறைவாக இருந்ததால், மொத்த வருவாயில் 43 பில்லியன் டாலர்கள் வெளியேறியிருக்கிறது. செப்டம்பர் மாதத்தில், இந்நிறுவனம் தொடர்ச்சியான 17 மாத நஷ்டங்களால் பாதிக்கப்பட்டிருந்தது. சந்தையின் பிற அம்சங்களின் காரணமாக பிற Pimco நிதிகளும் திறம்பட செயல்படவில்லை மேலும் செப்டம்பர் மாத தொடக்கம் முதல் அதன் சொத்துக்களில் 10 சதவீதத்தினை இழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மோசமான நிதி செயல்பாடுகளின் உச்சத்தில் இருக்கும்போது, இந்நிறுவன குழுமத்தின் மொத்த வர்த்தக பரிமாற்ற வருமான நிதியான 3.6 பில்லியன் டாலர்கள் பங்குபத்திர பரிமாற்ற ஆணைக்குழுவின் விசாரணையின் -SEC- கீழ் உள்ளது என்ற செய்தி வெளியானது. அதன் செயல்பாடுகள் குறித்த திரிக்கப்பட்ட தகவலை கொடுக்க வேண்டுமென்பதற்காக, Pimco முதலீடுகளை ஒரு விலையில் வாங்கி, அதன் உடமைகளின் மதிப்பினை அளவிடும்போது அதிக மதிப்பைகொடுத்து மதிப்பிட்டிருக்கிறதோ என்பதே விடயமாகும். SEC உடன் தாங்கள் ஒத்துழைப்பு நல்குவதாகவும், அதன் விலையிடும் நடைமுறைகள் முற்றிலும் பொருத்தமானதாகவும் துறையின் சிறந்த செயல்பாட்டினை கருத்தில் வைத்து செயல்படுவதை வலியுறுத்துவதாகவும் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

இதுதான் வழக்காக இருக்கலாம். ஆனால் அது உண்மையென்னவெறால், மொத்தத்தில் Pimco வை விட, நிதித்துறையை பற்றி ­அதிகம் சொல்கிறது. கடன் பத்திரங்கள் எப்போதாவது விற்பனை செய்யப்படுகின்ற சந்தைகளில், அதன் மதிப்பினைக் கணக்கிடுவது என்பது, சந்தை தகவல்கள் மற்றும் பணமாக்கும் தன்மையின் மதிப்பீடுகளை அடிப்படையாக வைத்து, மற்ற நிறுவனங்களால் செய்யப்படுகிறது என்ற உண்மையிலிருந்து முரண்பாட்டிற்கான சாத்தியக்கூறுகள் எழுகின்றன. சொத்துக்களின் மொத்த பிரிவும், இந்த வழியில் முழுமையாக மதிப்பில்லாதவையாகிவிட்டன என்று கண்டறியப்பட்ட போது, 2008 நிதி நெருக்கடிக்கு இத்தகைய வழிமுறைகள் பெரும் பங்காற்றியுள்ளன.

2008 இன் உலக நிதி நெருக்கடி மற்றும் அமெரிக்க மத்திய ரிசர்வ் மற்றும்பணத்தை அச்சடித்துவிடுதல்” (quantitative easing) என அறியப்படும் பிற மத்திய வங்கிகள் பின்பற்றிய அசாதாரணமான அளவீடுகள் ஆகியவை உருவாக்கிய பிரச்சனைகள்தான் க்ராஸ் வெளியேறியதற்கு மூல காரணம். இது ஒட்டுமொத்த நிதி அமைப்பின் சரிவினைத் தடுக்க முயற்சித்தது, பத்திரங்கள் மற்றும் பிற நிதி சந்தைகளுக்குள் டிரில்லியன் கணக்கான டாலர்களை இறைத்திருக்கிறது.

Fed சந்தையிலிருந்து விலகியதும், அரசு பத்திரங்களின் விலை சரியும் என்று 2011 இல் QE2 இன் (இரண்டாவது கட்ட பணத்தை அச்சடித்துவிடுதல்) முடிவுடன் பத்திரங்கள் மீதான பாரிய விற்பனை செயல்பாடும் முடிந்துவிட்டதாக க்ராஸ் நம்பினார். ஆயினும், Fed அதன் தலையீட்டினை அதிகரித்து, QE3 யை ஆரம்பித்து வைத்தது. 2013 இல் Fed சந்தையில் தன் செயல்பாட்டை மட்டுப்படுத்த தொடங்கும் என்பதை சுட்டிக்காட்டியபோது, க்ராஸும் அவ்வாறே மதிப்பிட்டார்.

மத்திய வங்கிகள் அரசு பத்திரங்களை வாங்குவதைத் தொடர இயலாது, அதனால் சந்தையில் அவற்றின் மதிப்பு குறையும் எனும் இவரது கணிப்புகள்அறிவுபூர்வமான அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் Fedஇன் தலையீடு தொடர்வதோடு, உண்மையில் பொருளாதாரத்தில் தேக்க நிலை மற்றும் ஒட்டுமொத்த மந்த நிலையிலும் பங்குப்பத்திரங்கள் கவர்ச்சிகரமாகவே இருந்தன.

க்ராஸின் வீழ்ச்சியினை விமர்சித்து, Financial Times இன் விமர்சகர் கில்லியன் டெட், பிரபல பிரிட்டிஷ் பொருளாதார நிபுணரான ஜோன் மேனார்ட் கீன்ஸின் (அவரே ஒரு பிரபல நிதி சந்தை வியாபாரி) ஆராய்ச்சியினை நினைவு கூர்ந்தார். ”சந்தையின் பிரச்சனை என்னவென்றால், முதலீட்டாளர்களால் நிதிசெலுத்தப்பட முடிகின்ற காலத்தை கடந்து அவைபகுத்தறிவற்றதாக இருக்க முடியும் அல்லது, ”விநோதமான முதலீட்டு குருநாதர்கள் நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என்பது இந்த நிகழ்விற்காக அவர் ஆராய்ந்தது போல் இருக்கிறது. அவரின் விலகலானது ஒரு குழப்பமான முதலீட்டு உலகத்தின் ஒரு பலமான அடையாளமாக இருக்கின்றது  என  கில்லியன் டெட் விபரித்தார்.

இந்த நிகழ்வின் நிதி வெளிப்பாடு என்னவாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் இன்னொரு முக்கிய நிதி நெருக்கடி நெருப்புக்கு எண்ணெய் ஊற்றும் திறன் இதற்கு உண்டு.

தங்கள் வாடிக்கையாளர்களில்அதி பெரும்பான்மையினர் தங்களுடனேயே இருக்கிறார்கள் எனும் ஒரு பயனுள்ள மறு உத்தரவாதத்தை Pimco அளித்திருக்கிறது. அச்சந்தையின் மீது அதிக பளுவேற்றக்கூடாது, ஏனென்றால் நிதி நிறுவனங்கள் எப்பொழுதுமே தாங்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் சரியாக வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் தான் கூறுகின்றன.

மேலும், Financial Times இன் விமர்சகர் ஜோன் ஆதர்ஸ் குறிப்பிடுவது போல், எவ்விதமான பாரியளவிலான பணத்தை திரும்ப எடுத்தலும், ஒட்டுமொத்த நிதி அமைப்பின் மீது தாக்கத்தினை ஏற்படுத்தகூடியளவிலானதாக உள்ளது. கடந்த 12 மாதங்களின் பண திரும்ப எடுப்புகள் அதிகமானதுதான் என்று கூறி, Pimco இலிருந்து கணிசமான பணம் வெளியேறுவது வெள்ளமென மாறினால்...” இது மோசமான சூழ்நிலையாகும் என எச்சரித்துள்ளார்.

இந்நிறுவனம் வர்த்தகம் செய்யும் சந்தையில் இதன் உடமைகளில் பலமிகப் பெரியவை என்பதால், குறிப்பிடும்படியான நஷ்டங்கள்நெருக்கடியினை ஏற்படுத்தக் கூடும்.

ஆதர்ஸின் கூற்றுப்படி, பெரிய பிரச்சனை என்னவென்றால், நிறுவனம் சார்ந்த முதலீட்டாளர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதுதான். அதாவது, ”உலகம் முழுவதும் முதலீட்டின் மீது அங்கீகாரமில்லாத அதிகாரம் செலுத்தப்பட்டால், அவர்களது ஒதுக்கீடுகள் பெரும்பாலும் அதிகம் பயன்படுத்திக்கொள்கின்ற பெரும் நிதி ஒதுக்கீட்டாளர்கள் (actuaries) மற்றும் ஓய்வூதிய ஆலோசகர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.

அவர்கள் Pimco வை விட்டுச்செல்வார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாத வேளையில், அவர்கள் அதிலேயே இருப்பார்கள் என்றும் எடுத்துக் கொள்ள முடியாது என்பதாக அவர் நிறைவு செய்தார்.

குறைந்தபட்சம் ஒரு முக்கிய ஓய்வூதிய ஆலோசகராவது Pimco வை குறை மதிப்பிட்டிருக்கிறார் மேலும் மற்றவர்களும் அவ்வாறு செய்தால் வெளியேறுவதற்கான அவசரம் காட்டப்படும். அப்படி நடக்கும்பட்சத்தில், நீண்டகால விளைவுகளுடன், 2008 இன் நிகழ்வுகள் எடுத்துக்காட்டியது போன்று, நிதி சந்தைகள் அதலபாதாளத்திற்குள் விழுந்துவிடும்.

பில் கிராஸ் வெளியேறுவதன் பின்விளைவு எதுவாக இருந்தாலும், இந்நிகழ்வானது ஏற்கெனவே சில முக்கிய அரசியல் பிரச்சனைகளை எழுப்பிவிட்டது.

ஓர் பிரபுத்துவ உயரடுக்கு ஒட்டுமொத்த நிதி அமைப்பினையும் ஆதிக்கம் செலுத்தும் அளவினை இது குறைவாக மதிப்பிட்டிருக்கிறது. ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளின் கொடுங்கோல் ஆட்சியின் விதிகளுக்கான வழக்கமான கண்டனங்கள் இருக்கின்றன, ஆனால் அடிப்படையில்அமெரிக்க ஜனநாயகம் வேறுபட்டது அல்ல. மேலும், ஓய்வூதிய நிதி ஒதுக்கீடுகளில் திடீர் மாறுதல்கள், அமெரிக்கா மற்றும் உலக அளவில் அதிர்ச்சிகரமான சமுதாய பின் விளைவுகளுடன் கூடிய ஒரு நிதி நெருக்கடியினை தூண்ட முடியும் என்ற உண்மை மொத்த முதலாளித்துவ நிதி அமைப்பின் பகுத்தறிவின்மையை, முட்டாள்தனத்தை பற்றி பேசாதிருப்பதை சுட்டிக்காட்டுகிறது,

மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் தங்களது மற்றும் தங்களது குடும்பங்களின் எதிர்காலத்திற்கான முயற்சியின் மூலமாக சேர்ந்திருக்கும், பில்லியன் கணக்கான பணத்தின் செயல்பாடானது ஒரு சிறிய மேல் தட்டினால் கட்டுப்படுத்தப்படுகிறது, அவர்களது முடிவுகள் அம்மக்களின் வாழ்வினை பெரும் ஆபத்திற்குள் தள்ளிவிடக்கூடும்.

க்ராஸ் விஷயத்தில் வேறெதுவும் இல்லாவிடினும், ஒட்டுமொத்த நிதி அமைப்பினையும் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் ஒரு பொது உடமையின் கீழ் கொண்டு வருவதற்கான அவசியத்தினை அது நிச்சயமாக நிரூபித்துள்ளது எனலாம்.