World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி German train drivers vote to strike ஜேர்மன் இரயில் சாரதிகள் வேலைநிறுத்தத்திற்கு வாக்களிக்கிறார்கள்By
Ulrich Rippert கடந்த வியாழன் அன்று, 91 சதவிகித உறுப்பினர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய வாக்களித்துள்ளதாக இரயில் சாரதிகள் சங்கம் GDL அறிவித்துள்ளது. ஏராளமான வேலைநிறுத்த எச்சரிக்கைகளைத் தொடர்ந்து செப்டம்பரின் ஆரம்பத்தில், பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததாக GDL அறிவித்ததைத் தொடர்ந்து ஜேர்மன் இரயில்வேயில் (DB) தொழிற்துறை சச்சரவு ஒரு புதுக் கட்டத்தை அடைந்தது. அவர்கள் ஒரு 5 சதவீத சம்பள உயர்வு மற்றும் ஒரு வேலை வாரத்தில் இரண்டு மணி நேரத்தை குறைக்க கோருகின்றனர். எதிர்காலத்தில், நடத்துநர்கள், தள உணவக பணியாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அனுப்பி வைப்பவர்கள் அத்துடன் சாரதிகளுக்கும் சங்கம் பிரதிநிதித்துவம் செய்ய விரும்புகிறது. ஜூன் மாத இறுதியில் காலாவதியான ஒரு "அடிப்படை ஒப்பந்தம்" என்று அழைக்கப்படுவதின் ஒரு பகுதியாக இரயில் மற்றும் போக்குவரத்து சங்கத்தினால் (EVG) மட்டுமே இந்த தொழில்சார் குழுக்கள் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டன. அதே நேரத்தில், லுப்தான்சா விமான நிறுவன விமானிகளால் ஏற்பட்ட தொழிற்துறை தகராறும் தீவிரமடைகிறது. லுப்தான்சா விமான நிறுவனம், விமானிகளின் காக்பிட் (Cockpit -VC) சங்கத்துடன் மோதல் போக்கை கொண்டிருக்கிறது. இருந்தபோதிலும் ஏராளமான எச்சரிக்கை வேலை நிறுத்தங்கள், முன்கூட்டியே ஓய்வுபெறும் முறையை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. இரயில் சாரதிகள் மற்றும் விமானிகளின் கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானது. அநேக வருடங்களாக, போக்குவரத்து சம்பந்தப்பட்டவைகளில் இடையறா தாக்குதல்களை எதிர்நோக்கி வருகிறார்கள். நிலையான கூடுதல் நேர வேலைக்கு வழிவகுக்கும் விதமாக ஜேர்மன் இரயில்வே 2002 மற்றும் 2012-க்கு இடையே தன்னுடைய தொழிலாளர்களின் எண்ணிக்கையை 3,50,000-லிருந்து 1,90,000 ஆக குறைத்துள்ளது. கடந்த வருடம் கிட்டத்தட்ட 8 மில்லியன் மணிநேரங்கள் கூடுதல் நேர வேலையாக இரயில் தொழிலாளர்கள் வேலைப் பார்த்தார்கள். எவ்வாறாயினும், இரயில் மற்றும் விமான நிறுவன தொழில் தகராறுகளில் வெறும் ஊதிய உயர்வுகளை விட அதிகமாக, ஓய்வூதிய பாதுகாப்பு மற்றும் வேலை நேரங்களில் ஒரு குறைப்பு ஆகியவை சம்பந்தப்பட்டுள்ளன. முதலாளிகள் சங்கம் மற்றும் ஜேர்மன் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (DGB) ஆகியவற்றுடன் நெருக்கமான ஒத்துழைப்பில், வேலை நிறுத்தம் செய்வதற்கான உரிமை மீது ஒரு பாரிய தாக்குதலுக்கு ஆயத்தமாகி கொண்டிருக்கிறது. இந்த மூலோபாயத்தின் மையம் "ஒருங்கிணைக்கப்பட்ட ஒப்பந்த பேச்சுவார்த்தைகள்" என்றழைக்கப்படும் ஒரு புது சட்டமாக இருக்கிறது, அதன் கீழ் ஒரு நிறுவனத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட சங்கம் பேச்சுவார்த்தைக்கான உரிமையை கொண்டிருக்கும். GDL, காக்பிட், UFO (விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள்) மற்றும் Marburger Bund (மருத்துவர்கள்) போன்ற சிறிய சங்கங்களை வெளியே தள்ளிவிட்டு, DGB-யை சேர்ந்த சங்கங்களுக்கு ஏகபோக அதிகாரத்தை அளிக்கும். DGB மற்றும் அதன் இணைந்துள்ள சங்கங்கள் முதலாளிகள் மற்றும் அரசாங்கத்துடன் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன, வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை நடைமுறையில் ஒழித்தல் என்பதுதான் இதன் அர்த்தம். DGB தொழிற்சங்கங்களின் இணை-மேலாண்மை கொள்கைகளை நிராகரிக்கும் தொழிலாளர்களின் தொழிற்துறை நடவடிக்கைகள் சட்ட விரோதமானவையாக இருக்கும். இது, அரசியல் அமைப்பின்படி வேலை நிறுத்த உரிமையை மீறுகிறது. இருந்தபோதிலும், ஒருங்கிணைக்கப்பட்ட ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் மீது ஒரு சில வாரங்களில் ஒரு சட்டத்தை முன்வைக்க தொழிற்துறை அமைச்சர் ஆன்ட்ரியாஸ் நால (SPD, சமூக ஜனநாயகக் கட்சி) எண்ணம் கொண்டிருக்கிறார். DGB-யின் தலைவர் ரைய்னர் ஹாஃப்மானுடன் நெருக்கமாக வேலை செய்து கொண்டிருக்கிறார். முதலாளிகளின் சங்கங்கள் மற்றும் DGB-யின் கோரிக்கையின்படி புதுச்சட்டம் வருங்காலத்தில் பெரும்பான்மை பிரதிநிதித்துவத்துடனான சங்கம் மட்டுமே ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும். நடப்பு பிரச்சினையில், அரசாங்கத்தின் ஜேர்மன் ரயில்வே ஒரு உதாரணத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. மூத்த சிவில் ஊழியர்கள் மற்றும் EVG-யின் தலைவர் அலெக்சாந்தர் கிர்ஷனர் மற்றும் அவருடைய துணை தலைவர் கிளவுஸ் டீற்றர் ஹோமெல் ஆகியோரை DB கண்காணிப்பு குழு உள்ளடக்கியுள்ளது. "ஒப்பந்த ஒற்றுமையை" GDL ஏற்கனவே அங்கீகரிக்கிறது அத்துடன் EVG-யுடன் ஒரு ஒத்துழைப்பு உடன்பாட்டை முடிவு செய்ய நிறுவனம் வற்புறுத்திக் கொண்டிருக்கிறது. இது, DGB சங்கத்திற்கு அதன் சுதந்திரத்தை அடிபணிய செய்வதற்கு ஒப்பானதாக இருக்கப்போகிறது. Transnet மற்றும் GdED சங்கங்களின் வழி தோன்றல் EVG, அது கடந்த காலங்களில் பாரிய வேலை குறைப்புகளில் DB உடன் இணைந்து செயல்பட்டுள்ளது. இது GDL உடனான தொழில்துறை சர்ச்சையில் ரயில் முதலாளிகளுக்கு ஆதரவளிக்கிறது. கடந்த வாரம் Süddeutsche Zeitung க்கு GDL தலைவர் க்ளவுஸ் வெஸல்ஸ்கீ அளித்த பேட்டி ஒன்றில், வேலை நிறுத்தும் வேண்டுமென்றே நிர்வாகத்தால் தூண்டிவிடப்பட்டது என்று கூறினார். அவர் மேலும் கூறும்போது, "மேலும், அதே நேரத்தில் லுப்தான்சாவில் நடந்த விமானிகள் பிரச்சனை போன்றே இது இருந்தது." ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகளில், GDL-ஐ தனியாக பேச்சுவார்த்தைக்கு அனுமதித்து அதன் கோரிக்கைகளை அங்கீகரிக்க DB மறுத்துவிட்டது. என்ன செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை இங்கு ஒவ்வொருவரும் பார்க்க முடியும். “திட்டமிடப்பட்ட, ஆனால் பிரச்சனைக்குள்ளான, ஒப்பந்த ஒற்றுமை மீதான சட்டத்திற்கான காரணத்தை இந்த இரண்டு தொழில்சார் குழுக்கள் அளிக்க இருக்கின்றன. அதைக்கொண்டு பெரிய துறை தொழிற்சங்கங்களால் ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள தொழில்சார் சங்கங்கள் நிர்பந்தப்படுத்தப்பட இருக்கின்றன. வேலை நிறுத்தத்திற்கான வாக்கெடுப்புக்கு ஒரு நாள் முன்னதாக, DB-யினால் வழி நடத்தப்படும் பேச்சுவார்த்தையாளர் வேர்னர் பைரூத்தெர் ஒரு "திறந்த கடிதத்தில்" GDL தலைவர் வெஸல்ஸ்கீயை தாக்கி எழுதியிருந்தார், அது ஊடகங்களுக்கும் அளிக்கப்பட்டது. அதில், சூழ்நிலையை கடுமையாக்குகிறார் அத்துடன் இப்பொழுது தானே ஒரு முட்டுச்சந்தில் இருக்கிறார் என்று முன்னாள் நீதிபதி மற்றும் வணிக ஆலோசகர் வெஸல்ஸ்கீக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார்கள். உண்மையான பேச்சுவார்த்தை நடத்துவதில் வெஸல்ஸ்கீக்கு ஆர்வமில்லை. மாறாக, தொழிலாளர்கள் மத்தியில் அதிகமான உறுப்பினர்களை வெல்லுவதற்கு ஏதுவாக ஜேர்மானிய ரயில்வே மற்றும் EVG-க்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று பைரூத்தெர் கூறினார். “எங்களுடைய தொழிலில் இரயில் சாரதிகள் குதிரைக்கு முன்னால் வண்டியை பூட்டினார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை, நிறுவனத்திற்குள் விரிவாக்கம் செய்ய (உறுப்பனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க) பல வருடங்களாக அவர்கள் விரும்புகிறார்கள்" என்று பைரூத்தெர் எழுதுகிறார். ஒரு "கடைசி வாய்ப்புடன்" அவர் முடிவுக்கு கொண்டு வருகிறார், அது ஒரு ஆத்திரமூட்டல் என்று தான் விவரிக்க முடியும். இந்த விதிமுறைகளின் கீழ், "ஒப்பந்த அடிப்படையிலான ஒற்றுமை" மீதான புது சட்டம் தயாராகும் வரை பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.“ அத்துடன் ஏற்கனவே அறிவித்த சட்டப்படியான புகார்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் முடிவு செய்திருந்தது. “பல ஆண்டுகள் எதிர்பார்த்தவாறு இந்த இடை நிறுத்தத்திற்கான காலத்திற்கு இரயில் சாரதிகள் ஒரு மாதத்திற்கு கூடுதலாக 2 சதவிகிதம் சேர்த்து பெறுவார்கள். இந்த சூழ்நிலையை எதிர்கொள்கையில், அரசாங்கத்துடன் நெருக்கமான உடன்பாட்டில் ஜேர்மனிய இரயில்வே (DB) நிர்வாகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது, அத்துடன் சாரதிகள் மற்றும் நடத்துநர்களால் நடத்தப்படும் ஒரு வேலைநிறுத்தம் அரசாங்கத்துக்கு எதிரான ஒரு மோதலை குறிக்கிறது. ஜேர்மனிய இரயில்வே (DB) நிர்வாகம், அரசாங்கம் மற்றும் DGB தொழிற்சங்கம், இரயில் சாரதிகளின் வேலை நிறுத்த உரிமையை மட்டுப்படுத்துவதுற்கு ஏதுவாக, இரயில் சாரதிகள் தாங்களே பணிய நிர்பந்தப்படுத்த மற்றும் அனைத்து தொழிலாளர்களின் ஊதியங்கள், சமூக நலன்கள் மற்றும் பணியிட சூழ்நிலைகள் மீது பாரிய தாக்குதல்களின் ஒரு புதிய சுற்றின் மூலமாக வீழ்த்த விரும்புகிறது. ஏற்கனவே அவர்கள் ஊடகங்களையும் நடவடிக்கைக்கு கொண்டு வந்துவிட்டார்கள், சமீபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது வேலைநிறுத்த போராட்டக்காரர்களுக்கு எதிராக அவர்களின் கிளர்ந்தெழுந்தார்கள். வேலைநிறுத்தக்காரர்களை குற்றவாளிகளாக ஆக்குவதற்கும் வேலை நிறுத்தம் தடை செய்யப்படுவதற்கும் நீதிமன்றத்துக்கு செல்வதற்குக் கூட அவர்கள் தயங்கமாட்டார்கள். இதற்கு எதிராக போராட, GDL-இன் மட்டுப்படுத்தப்பட்ட கருத்தாக்கங்களுக்கு அப்பால் செல்லும் ஒரு அரசியல் வேலைத்திட்டம் தேவையாக இருக்கிறது. இரயில் சாரதிகள் ஆரம்பத்திலிருந்தே, இதேபோன்ற பிரச்சனைகளை அதிகமாக எதிர்கொள்ளும் மற்ற எல்லா பிரிவு தொழிலாளர்களின் ஆதரவையும் அணிதிரட்ட முற்பட வேண்டும். வளர்ந்து வரும் தனியார்மயம் மற்றும் உலகளாவிய போட்டி ஆகியவை அதிகரிக்கும் சுரண்டல்களாக உள்ளன. விமானம் மற்றும் இரயில் போக்குவரத்தில் மட்டும் இல்லை ஆனால் இவைகள் மற்ற அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் சேவைகளிலும் கடுமையான தாக்குதலுக்கு வழிவகுத்து கொண்டிருக்கின்றன. இரயில் சாரதிகள் தங்கள் வேலை நிறுத்தத்தை அரசாங்கத்திற்கு எதிராக ஒரு பரந்த அரசியல் இயக்கத்தின் ஆரம்பமாக ஒழுங்கமைக்க வேண்டும். முதலாளித்துவ இலாபநோக்கு தர்க்கவியலை எதிர்க்கும் அத்துடன் ஒரு சோசலிச முன்னோக்கு மற்றும் ஒரு சர்வதேச மூலோபாயத்தை பரிந்துரைக்கும் ஒரு அரசியல் வேலைத்திட்டத்திற்கு இது அழைப்பு விடுக்கின்றது.. ஒரு தொழில் முறை தொழிற்சங்கமாக இருக்கும் GDL-ன் மட்டுப்படுத்தப்பட்ட தேசிய முன்னோக்கிற்கு வேலைநிறுத்தம் அடிபணிந்து விடக்கூடாது. ஜேர்மன் ரயில்வே மற்றும் அதன் பின்னால் நிற்கும் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு நிலையான போராட்டத்தை நடத்த அது ஆயத்தமாக இல்லை என்பது GDL இன் முந்தைய தொழில்துறை பூசல்களில் ஏற்கனவே தெளிவாகி இருக்கிறது. மார்ச் 2008-ல், ஒரு மாத கால வேலைநிறுத்தத்தை முறித்துக்கொண்டது ஏனென்றால் அதன் விரிவாக்கம் அரசாங்கத்துடனான ஒரு மோதலுக்கு கொண்டு சென்றிருக்கக் கூடும். GDL ஜேர்மன் சிவில் பணியாளர்கள் தொழிற்சங்கத்தின் (DBB) ஒரு பகுதியாக உள்ளது, அத்துடன் தொழிற்சங்க தலைவர் க்ளவுஸ் வெஸல்ஸ்கீ, DBB யின் ஒரு செயற்குழு உறுப்பினர் மட்டுமல்ல, ஆனால் கிறிஸ்துவ ஜனநாயக சங்கத்தையும் (CDU) கூட சேர்ந்தவராவர். உலகளாவிய நெருக்கடி காலத்தில், காக்பிட் போல அதிக போர்குணமுள்ளதாகவும், குறைவான ஊழல் உள்ளதாகவும் இருந்தால், குழுவாரியாக தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க முடியும் என வெஸல்ஸ்கீயும் மற்றும் GDL ம் நடந்துக்கொள்கிறது. ஆனால் இது ஒரு மாயை. உண்மையில், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் தேட்டங்களை பாதுகாப்பதற்கான போராட்டம் அரசியல் கண்ணோட்டத்தின் கேள்வியை உடனடியாக காட்டுகிறது. அத்துடன் இங்கு, தொழில்சார் சங்கங்கள் அவற்றின் எல்லா முரண்பாடுகளுடனும் DGB சங்கங்களுடன் உடன்பாடு கொண்டுள்ளன. இரண்டுமே முதலாளித்துவ இலாப முறையை ஏற்கின்றன. ஜேர்மானிய பொருளாதாரத்திற்கு இழப்பு ஏற்படுத்த கூடாது என்பதில் வெஸல்ஸ்கீ கவனம் எடுத்துக்கொண்டார். செப்டம்பர் ஆரம்பத்தில் வேலை நிறுத்த போராட்டங்களின் போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த இருந்த லுஃப்தான்சா மற்றும் பிரெஞ்சு விமானிகளுடன் எந்த வேலைநிறுத்த கூட்டு நடவடிக்கைக்கும் அவர் மறுத்துவிட்டார். "தொழில்சார் சங்கங்களான நாங்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கான எங்கள் உரிமை தொடர்பாக பொறுப்புடன் நடந்துக்கொள்வோம்,” என்று அவர் அந்த நேரத்தில் கூறினார். பிரான்ஸிலும் கூட, தொழிலாளர் வர்க்கத்தின் ஏனைய பிரிவுகள் தங்களின் ஆதரவை தெரிவித்த அந்த சரியான தருணத்தில் விமானிகள் சங்கம் வேலைநிறுத்தத்தை கொடூரமாக நெரித்தது, அதுமட்டுமல்ல அது ஹாலண்ட் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு அணிதிரட்டலுக்கு ஆரம்ப இடமாக ஆகி இருக்கக்கூடும். ரயில் சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் போராடுவதற்கான தயார் நிலை மிகவும் வரவேற்கதக்கது. ஆனால் ஒரு சர்வதேச சோசலிச திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான சுயாதீனத்தை ஸ்தாபிப்பதற்கான அவசரத்தை இது ஏற்படுத்துகிறது. |
|