தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை பொலிஸ் தாக்குதலின் பின்னர் சப்ரகமுவ பல்கலைக்கழகம் காலவரையறை இன்றி மூடப்ப்பட்டுள்ளது
By Kapila Fernando Use this version to print| Send feedback கடந்த சனிக்கிழமை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் விடுதி ஒன்றை திறந்து வைப்பதற்காக வந்த உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் பயணப் பாதையை அடைத்து நடந்த மாணவர் எதிர்ப்பு, பொலிஸ் கலகம் அடக்கும் பிரிவின் தண்ணீர் தாக்குதல் மூலம் கலைக்கப்பட்டது. எதிர்ப்பின் பாகமாக, புதிய மகளிர் விடுதியில் தங்கியிருப்பதை நிராகரித்த மாணவிகள், மாணவர் விடுதியில் தங்கினர். இதை ஒழுக்க விரோதம் எனக் கூறிய பல்கலைக்கழக நிர்வாகம், காலவரையறை இன்றி பல்கலைக்கழகத்தை மூடியது. பின்னர் எதிர்ப்பில் ஈடுபட்ட மாணவர்களை வேட்டையாடுவதற்கு பொலிஸாரை நடவடிக்கையில் இறங்கியது. பல்கலைக்கழகத்தில் நடந்த விழா, சகல மாணவர்களாலும் பகிஷ்கரிக்கப்பட்டிருந்த அதேவேளை, மாணவர்கள் இன்றி நடந்த இந்த விழாவில் உரையாற்றிய திசாநாயக்க “இந்த நாட்களில் தேர்தல் காரணமாக நாங்கள் அமைதியாக இருக்கின்றோம், இல்லையெனில் அந்த சத்தியாகிரகங்களைக் கவனிப்போம்” எனக் கூறி மாணவர்கள் சம்பந்தமாக அரசாங்கத்தினதும் தனதும் கொடூர நிலைப்பாட்டை காட்சிப்படுத்தினார். மாணவர் சங்கங்களை தடை செய்வது உட்பட மாணவர் ஒடுக்குமுறைக்கு எதிராக அனத்துப் பல்கைலக்கழ மாணவர் அமைப்பு (அபமாஅ) சப்ரகமுவவில் தொடங்கியுள்ள சத்தியாகிரகம் உட்பட அரசாங்கத்திற்கு எந்தவொரு அழுத்தமும் கிடையாது என்று கூறிய திசாநாயக்க, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை “ஒட்டுண்ணிகள், கொசுக்கள் மற்றும் அட்டைகள்” என கண்டனம் செய்தார். இத்தகைய அச்சுறுத்தல்கள் மூலம், மாணவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அரச ஒடுக்குமுறை போதாது என்று திசாநாயக்க கூறியுள்ளார். கடந்த மாதம், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தை திறக்காமை தொடர்பாக கருத்து தெரிவித்த திசாநாயக்க, அரசாங்கத்தின் ‘அபிவிருத்தி திட்டங்களின்’ கீர்த்தியை, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் வெற்றியாக மிகைப்படுத்துவதற்கு மாணவர் சங்கங்கள் முயற்சிப்பதன் காரணமாக சத்தியாகிரகத்தை நிறுத்தும் வரை பல்கலைக்கழகங்களில் அபிவிருத்தி திட்டங்களை நிறுத்துவதாக அச்சுறுத்தினார். எவ்வாறெனினும், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் எதிர்ப்புகள் மற்றும் சத்தியாகிரகங்கள், கல்வி மீதான புதிய சுற்று வெட்டுக்கள் மற்றும் மாணவர் ஒடுக்குமுறையை உக்கிரமாக்குவதற்காக அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டு வருவதை தெளிவாகக் காட்டுகின்றது. திசாநாயக்கவின் வருகைக்கு முந்தைய நாள், நிருபர்கள் மாநாட்டை நடத்திய சப்ரகமுவ மாணவர்கள் ஒன்றியம் என்ற பெயரில் தோன்றிய மாணவர் சங்க தலைவர்கள், கட்டியெழுப்பப்பட்டுள்ள மகளிர் விடுதி பூரணமற்றதும் பாதுகாப்பற்றதும் என்றும், பல்கலைக்கழக வளாகத்தில் இட வசதிகள் இருக்கும் போது, பல்கலைக்கழகத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ள நன்பெரியல் என்ற பெருந்தோட்டத்தில் கட்டியெழுப்புவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள விடுதிக்கு அருகில் இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டினர். கட்டி முடிக்கப்பட்டுள்ள மாணவியர் விடுதி இரண்டு காணிகளில் கட்டப்பட்டுள்ள மாடிக் கட்டிடகங்ள் என்றும், அந்த கட்டிடங்கள் இரண்டுக்கும் இடையில் மண் சரிவு ஏற்படுவதை தடுப்பதற்காக தனியான ஒரு மதில் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் என பொறியியலாளர்கள் அறிவுறுத்தியிருந்தும் அதை கட்டியெழுப்பவில்லை என்றும், கட்டிடங்களில் மழை நீர் குழாய்கள் மற்றும் வாய்க்கால் அமைப்பு போன்றவை அல்லாமல் விடுதி பூரணமின்றி திறக்கப்பட்டுள்ளது என்றும் அங்கு அவர்கள் அம்பலப்படுத்தினர். முன்னர் திறந்து வைக்கப்பட்ட புவியியல் விஞ்ஞான பீட கட்டிடம் மற்றும் மைதானத்தின் பூரணமற்ற கட்டியெழுப்பல்கள் இதுவரை பூரணப்படுத்தப்படவில்லை என்று அவர்கள் அங்கு மேலும் கூறினர். உயர் கல்வி அமைச்சும் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவும் இந்த பிழைகள் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். மாணவர்கள் எழுப்பும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த திசாநாயக்க, இராணுவ முகாமுக்கு அருகில் மாணவர் விடுதியை கட்டியெழுப்புவதாகவும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு நாட்டில் உள்ள சட்டங்களின் படி தண்டனை கிடைக்கும் என்றும் தெரிவித்தார். திசாநாயக்க, மழை நீர் குழாய் மூலம் டெங்கு நுளம்புகள் பரவுவதன் காரணமாக விடுதியில் மழை நீர் குழாய் போடப்படவில்ல என்று கேலிக்கூத்தான முறையில் நியாயப்படுத்தினார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் ஆரம்பமும் பராமரிப்பையும் பார்க்கும்போது, எந்தவொரு முறையான தரமும் இன்றி விடுதிகள் கட்டியெழுப்பப்படுவது தொடர்பாக மாணவர்கள் எழுப்பும் குற்றச்சாட்டுக்களில் நியாயம் இருப்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி தொடர்பாக இலங்கையில் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் அலட்சியம் மற்றும் இயலாமை பற்றிய நீண்ட அறிக்கை ஒன்றை சப்ரகமுவ பல்கலைக்கழகம் வழங்குகின்றது. அது 1995ல் சமனல வெவ திட்டத்தில் கைவிடப்பட்ட கட்டிடங்கள் பலவற்றிலேயே அது ஆரம்பிக்கப்பட்டதுடன் அது பல்கலைக்கழகம் ஒன்றை தொடங்குவதற்கு பொருத்தமான இடமும் அல்ல. மொனராகலை மாவட்டத்தின் புத்தல பிரதேசத்தில் கைவிடப்பட்ட ‘கம் உதாவ’ திட்டத்தின் பொறிந்து கொட்டிய கட்டிடங்களிலேயே அதன் விவசாய பீடம் அமைக்கப்பட்டது. மேற்கு குறிப்பிடப்பட்ட காரணத்தினால், அன்று தொடக்கம் கடந்து சென்ற ஒவ்வொரு வருடத்திலும், முறையான கல்வியைப் பெற முடியாது மோசமான வசதி பற்றாக்குறைகளை மாணவர்கள் எதிர்கொண்டனர். வெளியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட பாதுகாப்பற்ற விடுதி அமைப்பொன்று பல்கலைக்கழகத்தின் முறையின்மையை தெளிவுபடுத்தும் இன்னொரு காரணியாகும். பல ஆண்டுகளுக்கு முன்னர் அதில் ஒரு விடுதியில் மின் தாக்கமுற்று ஒரு மாணவர் உயிரிழந்தார். மழை இல்லாத மாதங்களில், தூசிப் புயல்களில் பல்கலைக்கழக வளாகம் நிறைந்து போதலும் பல்கலைக்கழக வளாகத்துக்கு தேவையான நீர் இல்லாமை மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினையாகும். நிலவும் கடினமான நிலைமைகளின் காரணமாக அங்கு சேவையாற்றுவதற்கு விரிவுரையாளர்கள் காட்டும் பெரும் விருப்பமின்மையின் காரணமாக பெருமளவு விரிவுரையாளர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. இத்தகைய நிலைமைகளின் கீழ் அபிவிருத்தியடையும் மாணவர் அமைதியின்மையை நசுக்குவதற்காக, இராஜபக்ஷ அரசாங்கம் மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் மீது முன்னொருபோதும் இல்லாத தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றது. பல்கலைக்கழக மாணவர் சங்கத்தை தடை செய்வது உட்பட சகல மாணவர் எதிர்ப்பின் மீதும் பொலிஸ் தாக்குதல் தொடுக்கப்படும் அதேவேளை, போராட்டங்களில் பங்குபற்றுவதன் காரணமாக வகுப்புத் தடை மற்றும் மாணவர் உரிமை அபகரிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை டசின் கணக்காகும். இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாணவர்கள் மத்தியில் இனவாத பதட்டங்களை கிளறிவிடுவதற்காக அடிப்படைகள் இன்றி, இரு தமிழ் மாணவர்கள் கைது செய்யப்பட்ட அதேவேளை அதில் ஒரு மாணவரான சந்திரகுமார் சுதர்சன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழகம் இலங்கையில் கல்வி வெட்டு தொடர்பான ஒரு அங்கமாக மட்டுமே உள்ள அதேவேளை, அது முதலாளித்துவ அமைப்பு முறையின் கீழ் தரமான இலவச கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியாது என்ற சக்திவாய்ந்த அறிகுறியாகும். 2008ல் வெடித்து பொருளாதார வீழ்ச்சியின் திசையில் செல்லும் உலக முதலாளித்து அமைப்பு முறையின் நெருக்கடியின் கீழ், பிரதான பொருளாதார சக்திகள் முதல் இலங்கை போன்ற குறைவளர்ச்சி நாடுகள் எனக்கூறப்படுபவை வரை கல்வி உட்பட முழு தொழிலாள வர்க்கத்தின் வெற்றிகள் அனைத்தையும் துடைத்துக் கட்டுவதற்காக உலகம் பூராவும் உள்ள ஆளும் வர்க்கங்கள் சமூக எதிர்ப்புரட்சி ஒன்றை முன்னெடுத்துள்ளன. இலங்கையில் மேலும் ஒரு போலி இடது கட்சியான முன்னிலை சோசலிஸ்ட் கட்சி (முசோக) தலைமைத்துவத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், மாணவர்கள் அரசியல் ரீதியில் தடம்புரளச் செய்வதற்கான வேலையில் இறங்கியுள்ளது. தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களில் இருந்து மாணவர் போரட்டங்களை தணிமைப்படுத்தி, ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இருந்து இன்னொன்றுக்கு அல்லது இன்னொரு சத்தியாக்கிரகத்தின் மூலம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் உப்புச்சப்பற்ற வேலைத் திட்டத்துக்குள் மாணவர்களை சிறைவைத்து, சமூக வெட்டு நிகழ்ச்சி நிரலின் தோற்றுவாயான உலக முதலாளித்துவ நெருக்கடியின் உண்மையான நிலைமையை மூடி மறைப்பதே இந்த மாணவர் ஒன்றியத்தின் வேலைத் திட்டமாகும். அரசியல் வங்குரோத்தை மூடி மறைத்துக் கொள்வதற்காக இந்த மாணவர் ஒன்றியம் கடந்த நாட்களில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒடுக்குமுறைக்கும் துணை சுகாதார பட்டப்படிப்பை வெட்டியதற்கும் எதிராக மாதக் கணக்காக நீண்ட சத்தியாக்கிரகத்தில், அரசாங்கம் கொடுத்த மட்டுப்படுத்தப்பட்ட சலுகை மற்றும் காலம் தாழ்த்தலையும் பெரிய வெற்றியாக தூக்கிப்பிடிப்பதில்ல் ஈடுபட்டுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் அமைச்சரை சூழ்ந்துகொண்டு, கலந்துரையாடல் ஒன்றைக் கோரி கூச்சலிட்ட சப்ரகமுவ மாணவர் சங்க சமாசத்தின் அழைப்பாளர் ரசிந்து ஜயசிங்கவுக்கு, அதற்கு அடுத்த நாள் நடந்த மாணவர் எதிர்ப்பில், அமைச்சர் திசாநாயக்கவின் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக பின்வருமாறு கூறினார்: “ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்புக்கு வருவார்கள். அப்போது என்ன நடக்கும்?” எனக் கூறிய வாய்ச்சவாடால்கள் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அரசியல் வங்குரோத்தை வெளிப்படுத்துகின்றது. மாணவர்களை அரச ஒடுக்குமுறைக்கு இரையாக்கி, அரசாங்கத்தின் வெட்டுக்களுக்கு வழியமைத்துக் கொடுப்பது மட்டுமே மாணவர் ஒன்றியத்தின் இந்த திவால் வேலைத் திட்டத்தின் இலக்காகும். |
|
|