World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The economic roots of the drive to war

யுத்த உந்துதலுக்கான பொருளாதார மூலங்கள்

Nick Beams
10 October 2014

Back to screen version

பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பதற்கு எந்த சாத்தியக்கூறும் இல்லையென்பதைக் கண்ட, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியால் பிரசுரிக்கப்பட்ட இந்த வார அறிக்கைகளே மெய்பிப்பதைப் போல, உலளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழமடைந்துவரும் நெருக்கடியே பிரதான முதலாளித்துவ சக்திகளிடையே அதிகரித்துவரும் பதட்டங்களுக்கும் மற்றும் இராணுவவாதத்தின் அதிகரிப்புக்கும் உந்துசக்தியாக உள்ளது.

முதலாளித்துவ உடைவின் மிக முக்கிய பொருளாதார வெளிப்பாடுகளில் ஒன்றாக இருப்பது, நிஜமான பொருளாதாரத்தில் தொடர்ந்து முதலீடு செய்யப்படாமையும், இது IMF மற்றும் உலக வங்கி அறிக்கைகள் இரண்டிலுமே எடுத்துக்காட்டப்பட்டது, மற்றும் கடன்வழங்கும் குமிழியின் மீது உலக பொருளாதாரம் அதிகளவில் சார்ந்திருக்கும்தன்மையும் ஆகும், இது மற்றொரு நிதியியல் நெருக்கடிக்கு நிலைமைகளை உருவாக்கி வருகிறது.

இந்த வாரத்தின் இரண்டு சம்பவங்கள் இத்தகைய ஒன்றோடொன்று பிணைந்த நிகழ்வுபோக்கின் மீது வெளிச்சமிட்டிருந்தன. அமெரிக்க பெடரல் ரிசர்வின் தடையற்ற சந்தைக்கான குழுவிடமிருந்து (open market committee) புதனன்று குறிப்புகள் வெளியானதும் அமெரிக்க பங்குச்சந்தைகள் உயர்ந்தன. பூஜ்ஜியத்திற்கு அண்மித்தளவிலான வட்டிவிகிதங்களை (இது தான் வங்கிகள் மற்றும் நிதியியல் ஊகவணிகர்களின் இலாபங்களை உயர்த்தியது) உயர்த்துவதற்கு மத்திய வங்கி அவசரப்படாது என்பதை அந்த குறிப்புகள் சுட்டிக்காட்டி இருந்தன.

ஜேர்மன் தொழில்துறை உற்பத்தி —2009க்குப் பிந்தைய மிகப்பெரிய வீழ்ச்சியாக— ஜூலையில் 4 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்ததாக எடுத்துக்காட்டிய ஓர் அறிக்கை, அதற்கு முந்தைய நாள், அட்லாண்டிக் எங்கிலும், பிரசுரிக்கப்பட்டது, அது ஐரோப்பாவின் அந்த பிரதான பொருளாதாரம் மந்தநிலைமைக்குள் போகுமென்ற எச்சரிக்கைகளைக் கொண்டு வந்தது.

இந்த சம்பவங்கள் ஒரே நிகழ்வுபோக்கின் இரண்டு பக்கங்களைக் காட்டுகின்றன. உலகின் பிரதான உற்பத்தி மையங்களில் ஒன்றாக விளங்கும் ஜேர்மனியிலிருந்து வந்த புள்ளவிபரம், "நீடித்த மந்தநிலைமை" என்று எது கூறப்படுகிறதோ அதற்கான ஒரு கூடுதல் வெளிப்பாடாக உள்ளது. அதேவேளையில் அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட உயர்வு, ஒரு செயல்விளைவாக அபிவிருத்தி அடைந்த நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தின் ஒரு வெளிப்பாடாக இருந்தது. இவ்விரு அபிவிருத்திகளுமே பூகோளமயப்பட்ட முதலாளித்துவ பொருளாதாரத்தின் உடைவை அடிக்கோடிடுகின்றன.

மூலதனத்தில், மார்க்ஸ் இவ்வாறு விவரித்தார், இலாபங்கள் மற்றும் சந்தைகளது விரிவாக்கம் மூலமாக, விடயங்கள் சுமூகமாக போகும் வரையில், முதலாளித்துவ வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவுகள் தொழிலாள வர்க்கத்தின் உழைப்பிலிருந்து சுரண்டிய கொள்ளையைப் பகிர்ந்து கொள்கின்றன என்பதால், போட்டித்தன்மை அவற்றினிடையே ஒருவித நடைமுறை சகோதரத்துவ விளைவைக் கொண்டிருக்கிறது. ஆனால் அதுவொரு பிரச்சினையாக மாறும் போது வேறுவிதமாக இருக்கிறது, அது இலாபங்களைப் பங்கு பிரிப்பதாக இருப்பதில்லை, மாறாக சுருங்கும் சந்தை நிலைமைகளில் இழப்பைத் தவிர்க்கும் முயற்சியாக இருக்கிறது. அப்போது விரோதம் கொண்ட சகோதரர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் போட்டியாளர்கள் மீது இழப்பைத் திணிக்க முனைவதால், அவர்களுக்கிடையே போட்டித்தன்மையானது ஒரு சண்டையாக மாறுகிறது.

மார்க்ஸ் காலத்திலிருந்து மூலதனத்தின் வெவ்வேறு பிரிவுகள் பரந்தளவில் விரிவடைந்துள்ளன. இப்போதோ சண்டை ஒரு தேசிய எல்லைக்குள் செயல்படும் நிறுவனங்களிடையே நடக்கவில்லை. மாறாக அது மிகப்பெரிய, சிலவற்றின் விடயங்களில், ஒட்டுமொத்த நாடுகளினது மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகமாக பொருளாதார உற்பத்தி கொண்ட, மிகப்பெரிய நாடுகடந்த கூட்டு நிறுவனங்களால் ஒரு பூகோளமயப்பட்ட சண்டையாக நடக்கிறது.

எஃகை ஒரு பிரதான அம்சமாக கொண்டு, ஒரு பூகோளமயப்பட்ட இரும்பு தாது போர் என்று மட்டுமே வர்ணிக்கப்படக்கூடிய ஒன்று வெடித்திருப்பதை கடந்த சில வாரங்கள் கண்டிருக்கின்றன. உலகளாவிய முதலீடு வீழ்ச்சி அடைந்து வருவதன் விளைவாக, உலகின் பிரதான உற்பத்தியாளர்கள் முன்னொருபோதும் இல்லாதளவுக்கு மோசமடைந்துவரும் சந்தை நிலைமைகளை எதிர்கொண்டிருப்பதற்கிடையே இது வருகிறது.

இந்த வாரம், உலகளாவிய இரும்பு தாது பெருநிறுவனங்களில் ஒன்றான, BHP பில்லிடன், கூர்மையான விலை வீழ்ச்சியை முகங்கொடுத்துள்ள நிலையில் (2011இல் ஒரு டன்னுக்கு அதிகபட்சமாக 180 டாலராக இருந்த இரும்பு தாது இன்று 80 டாலருக்கும் குறைவாக வீழ்ச்சி அடைந்துள்ளது), ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, அதன் விடையிறுப்பு உற்பத்தியைக் குறைப்பதல்ல, மாறாக அதை அதிகரிப்பதாகும் மற்றும் ஒரு டன்னுக்கு 20 டாலர் வீதம் உற்பத்தி செலவுகளைக் குறைக்கும் நோக்கில் செலவு-குறைப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதாகும் என்று அது அறிவித்தது. இந்த நகர்வின் மற்றும், ரியோ டின்டோ மற்றும் வேல் போன்ற ஏனைய பெரிய நிறுவனங்களின் அதேபோன்ற முயற்சிகளின் நோக்கம், மேற்கொண்டும் விலை வீழ்ச்சி அடையாமல் தடுக்க இந்தியா, சீனாவிற்கு அதிக-செலவு உற்பத்தியாளர்களை உந்துவதாகும்.

ஏனைய பிரதான பண்டங்களின், அதாவது மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் இரண்டின் உற்பத்தி மற்றும் விற்பனையிலும் இவ்வாறே எதிரொலிக்கும் என்ற நிலையில், இதுவரையில் இந்த பூகோளமயப்பட்ட யுத்தம் பொருளாதார பரப்பெல்லையைத் தொடாதபடிக்குத் தடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை அங்கேயே தடுத்து வைத்திருக்க முடியாது.

முதலாம் உலக போரின் தோற்றுவாய்களை முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படை முரண்பாடுகளில் அம்பலப்படுத்தி, லியோன் டிரொட்ஸ்கி குறிப்பிடுகையில், இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் பொருளாதார வளர்ச்சியின் முடிவை எதிர்கொண்ட மிகப்பெரிய ஏகாதிபத்திய சக்திகள் "இயந்திரத்தனமான வழிவகைகள்", அதாவது, அவர்களின் போட்டியாளர்களுக்கு எதிராக இராணுவ மோதல் மூலமாக, அவற்றின் பொருளாதார அமைப்புமுறையின் நெருக்கடியைத் தீர்க்க முனைந்தன.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் டிரொட்ஸ்கி குறிப்பிட்ட பொருளாதார நிலைமைகள், இன்னும் மிகவும் பலத்தோடு இன்று மீண்டும் திரும்பி வந்துள்ளன. அதன்படி, “இயந்திரத்தனமான வழிவகைகளை" ஏற்பதற்கான தயாரிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.

மந்தநிலைமையும் அத்துடன் முற்றுமுதலான பின்னடைவும் உலக பொருளாதாரத்தின் நிரந்தர நிலைமைகளாக மாறியுள்ளன என்பது அதிகளவில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கின்ற நிலையில், கடந்த ஆண்டிலிருந்து, இராணுவவாதம் மேலெழுச்சியில் இருப்பதென்பது ஏதோ தற்செயலானதல்ல.

ஜேர்மனி மற்றும் ஜப்பான் இரண்டுமே, இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் அவை ஏற்ற அதே பாதைக்குத் திரும்ப, பட்டவர்த்தனமாக அவற்றின் யுத்தத்திற்குப் பிந்தைய வெளியுறவு கொள்கை நிலைநோக்கை உடைத்தெறிந்துள்ளன. மத்தியகிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் யுத்த முனைவைத் தீவிரப்படுத்தியும், ரஷ்யாவுக்கு எதிராக அழுத்தம் அளித்தும் மற்றும் சீனாவுக்கு எதிராக திருப்பிவிடப்பட்ட அதன் ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பைத் தீவிரப்படுத்தியும் வருகின்ற நிலையில் இது வருகிறது. ஜேர்மனியின் ஆளும் மேற்தட்டுக்கள் இனியும் வெறுமனே ஓர் ஐரோப்பிய சக்தியாக செயல்பட முடியாது மாறாக அது ஒரு உலகளாவிய பாத்திரம் ஏற்க வேண்டுமென வலியுறுத்துகையில், அபே அரசாங்கமோ அதன் எல்லைகளைக் கடந்த ஜப்பானிய இராணுவ நடவடிக்கைக்குப் பாதையைத் திறந்துவிட யுத்தத்திற்குப் பிந்தைய அரசியலமைப்புக்கு "மறுவிளக்கம்" அளித்துள்ளது.

பொருளாதார பதட்டங்கள் அதிகளவில் பகிரங்கமாகி வருகின்றன. ஜேர்மனியைத் தவிர்த்து மிஞ்சிய ஐரோப்பா மீதான ஒடுக்குமுறை நிதியியல் இறுக்கங்களாக கருதப்படுவதை நீக்கி, அவ்விதத்தில் அமெரிக்க பொருளாதாரத்திற்கு மிக-அவசியமான ஊக்குவிப்பை வழங்குவதை ஜேர்மன் ஆணையங்கள் எதிர்ப்பதற்கு, அமெரிக்காவும் மற்றும் IMF போன்ற அதன் செல்வாக்கின் கீழ் இருக்கும் பொருளாதார அமைப்புகளும், அதிகளவில் கோபமாக உள்ளன. மறுபுறம், ஐரோப்பாவிற்கு நாசகரமான விளைவுகளை ஏற்படுத்திய 2008 நெருக்கடியைத் துரிதப்படுத்திய அமெரிக்க வங்கிகள் மற்றும் நிதியியல் அமைப்புகளின் கடுமையான நடவடிக்கைகளின் மீது சீற்றத்துடன் இருக்கும் ஜேர்மன் ஆளும் மேற்தட்டுக்களோ, அவ்விதமான நடவடிக்கைகளின் மீது நாட்டமில்லாமல் இருக்கின்றன, ஏனெனில் அவை அமெரிக்க நிதியியல் மூலதனத்தின் ஆதாயத்திற்காக அவர்களது வங்கிகளின் நிலைப்பாட்டைப் பலவீனப்படுத்துமென பார்க்கின்றன.

ஒரு திசைக்காட்டியின் முள் நகர்ந்து மின்காந்த புலத்தின் இருப்பைக் காட்டுவதைப் போல, சிறிய ஏகாதிபத்திய சக்திகளின் இயக்கம் அபிவிருத்திகளின் அடிப்படை போக்கை எடுத்துக்காட்டுகின்றன.

ஆஸ்திரேலியா அந்த மாதிரியான ஒரு விடயமாக உள்ளது. 2011இல் அமெரிக்காவினது சீனாவிற்கு-எதிரான ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பில் ஓர் உள்ளார்ந்த பாத்திரம் ஏற்றிருந்த அது, கடந்த ஆண்டில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு முக்கிய நபராக பெரிதும் செயல்பட்டுள்ளது. இன்று வரையில் விளக்கமின்றி இருக்கும் மலேசிய விமானம் MH17 ஜூலையில் சுட்டுவீழ்த்தப்பட்டதன் மீது ரஷ்யாவுடன் விரோதத்தைத் தூண்டிவிடுவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது, பின்னர் சிரியா மற்றும் அதற்கு அப்பாற்பட்டும் ஓர் ஆட்சி மாற்ற நடவடிக்கையை நோக்கமாக கொண்டு, மத்திய கிழக்கில் அமெரிக்க யுத்த முனைவின் முன்னணியில் தன்னைத்தானே நிறுத்தி இருந்தது.

பூகோளமயப்பட்ட முதலாளித்துவ பொருளாதாரத்தின் உடைவிலிருந்து எழுந்துள்ள பலமான பொருளாதார சக்திகள் வேலை செய்ய தொடங்கியுள்ளன. இரும்பு தாது மற்றும் ஏனைய தொழில்துறை மூலப்பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலமாக ஆஸ்திரேலிய முதலாளித்துவம் அமைதியான விரிவாக்கத்தை அனுபவித்து வந்த காலக்கட்டம் முடிவுக்கு வந்துவிட்டது, இது வரவிருக்கிற சண்டைகளில் அமெரிக்க பொருளாதார, நிதியியல் மற்றும் இராணுவ சக்தியுடன் இன்னும் அதிக நெருக்கமாக தன்னைத்தானே அணிசேர்த்துக் கொள்ளுமாறு ஆளும் வட்டாரங்களை முடிவெடுக்க இட்டுச் செல்கிறது. ஆழமடைந்துவரும் பூகோளமயப்பட்ட முதலாளித்துவ நெருக்கடியுடன் சேர்ந்து பிரதான சக்திகளிடையிலான பிளவுகளும் விரிவடைந்து வருகையில், ஏனையவர்கள் தங்களைத்தாங்களே எங்கே நிலைநிறுத்திக் கொள்வதென்பதன் மீது அதேபோல முடிவெடுக்க விடப்படுவார்கள்.

நிச்சயமாக, பொருளாதார நிகழ்முறைக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவுகள் நேரடியானதோ அல்லது உடனடியானதோ கிடையாது, மாறாக அவை சிக்கலான வடிவமெடுக்கின்றன. ஆனால் அபிவிருத்தியின் பொதுவான போக்கு தெளிவாக உள்ளது. உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் நிகழ்ந்துவரும் வீழ்ச்சிஇது IMF அறிக்கையில் காட்டப்பட்ட போதினும் விவரிக்கப்படவில்லைவரவிருக்கின்ற காலத்தில் இராணுவவாத முனைவு தீவிரப்படும் என்பதேயே அர்த்தப்படுத்துகிறது, இது மற்றொரு உலக யுத்தம் வெடிப்பதற்கு நிலைமைகளை உருவாக்குகிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவால் அபிவிருத்தி செய்யப்பட்ட சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கிற்கான ஓர் ஆக்கப்பூர்வமான அரசியல் போராட்டத்தின் மூலமாக மட்டுமே மனிதயினத்தின் பேரழிவைத் தடுக்க முடியும்.