World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

UAW holds one-day strike at Indiana auto parts plant

இண்டியானா வாகன உதிரிப்பாக தொழிற்சாலையில் ஐக்கிய வாகன தொழிலாளர்கள் (UAW) ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்

By Kristina Betinis 
16 September 2014

Back to screen version

ஒரு ஒப்பந்தமும் இல்லாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக பணியாற்றிய பின்னர், இண்டியானாவில் உள்ள ஹேமண்டில் லியர் கார்ப்பரேஷனில் 760 பணியாளர்கள் சனிக்கிழமையன்று காலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் பணியாளர்கள் வேலைநிறுத்த செய்ய வாக்களித்திருந்த போதிலும், எந்த நடவடிக்கையையும் எதிர்த்து வந்த ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கம், ஞாயிறன்று வேலை நிறுத்தத்தை கைவிட்டு, புதிய ஐந்தாண்டு ஒப்பந்தம் ஒன்றிற்கான தற்காலிக உடன்பாட்டினை அடைந்ததாக அது அறிவித்தது.

இதில் முக்கிய பிரச்சனையாக இருப்பது இரு அடுக்கு கூலி முறையாகும். தொழிற்சாலையில் பெரும்பாலான பணியாளர்கள் தங்களது பணியினை மணிக்கு 20 டாலர்கள் பெறும், மூத்த முதல்-அடுக்கு பணியாளர்கள் போன்றே செய்தாலும்கூட, அவர்களது ஊதியம் மணிக்கு 11 டாலர்கள் அல்லது அவர்கள் கூறுவதுபோல் துரித உணவிற்கான கூலிதான்-“fast-food wages”. இரண்டாம்-அடுக்கு பணியாளர்களுக்கான ஊதியம் மணிக்கு 16 டாலர்களாக உச்சவரம்பாக வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு சிறிய உடல்நல கொடுப்பனவுகளே உள்ளன.

இந்த ஹேமண்ட் தொழிற்சாலை, அருகில் சிகாகோவில் அமைந்துள்ள ஃபோர்ட் மோட்டார் நிறுவன ஆலைக்கான இருக்கைகளை உற்பத்தி செய்கிறது. தொடர்ச்சியான வேலைநிறுத்தம் ஃபோர்ட் இன் Taurus மாதிரியினதும் மற்றும் புதிய மாதிரிகளினதும் உற்பத்தியை விரைவாக முடக்கியுள்ளன. ஃபோர்டில் செயல்பாடுகளுக்கு அல்லது பிற லியரில் தொழிற்சாலைகள் தீவிரமாக பாதிக்கப்படுவதற்கு முன்பாக UAW அதனை முடிவுக்கு கொண்டுவந்தது.

அமெரிக்காவிலுள்ள லியரின் 23 பிற இருக்கைகள் தயாரிக்கும் ஆலைகள், மின்துறை மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த மாபெரும் உற்பத்தியாளர் உலகம் முழுவதிலும் 36 நாடுகளில் 221 உற்பத்தி தொழிற்சாலைகளை நடத்தி வருகின்றனர். அதில் 1,34,000 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர் என்பதை அதன் வலைத் தளம் தெரிவிக்கின்றது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலையிலிருந்து வரும் பாகங்களுடன் சிகாகோ ஃபோர்ட் தொழிற்சாலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும், லியர் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள் என்று ஃபோர்ட் பணியாளர்களுக்கு அவர்களது UAW தெரியப்படுத்தவில்லை என்றும் லியர் நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கங்களில் பணியாளர்கள் புகார்களை எழுதினர்.

உடன்பாடு பற்றி அடுத்த வார இறுதியில் நடைபெறுவதாக எதிர்பார்க்கப்படும் வாக்கெடுப்பில் அது உறுதிப்படுத்தப்படும்வரை, அதுதொடர்பான விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படாது என்ற போதிலும், இந்த வேலை நிறுத்தத்தை ஒரு வியப்பான வெற்றியாக UAW அதிகாரிகள் கூறுகின்றனர். ”தொழிலாளர்கள் ஒன்றிணையும்பொழுது, நம்மால் உயர் ஊதியங்களைப் பெற முடியும், அது நமது குடும்பங்களை ஆதரிக்க உதவும். தொழிற்சாலையில் இருக்கும் 760 பணியாளர்களுக்கு மட்டுமல்ல, நாம் உழைப்பது போன்றே கடினமாக உழைக்கிற மற்றும் நடுத்தர வர்க்கத்தை எட்ட முடியும் என்று விரும்புகின்ற, நாடெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான வாகன பணியாளர்களுக்கும் இது ஒரு வெற்றிதான் என்பதையே இந்த ஒப்பந்தம் காட்டுகிறதுஎன்று ஞாயிறு அன்று UAW 2335 தலைவரான ஜெய்மி லூனா தெரிவித்தார்.

புதிய பணியாளர்களை குறைந்த ஊதியத்திற்கு கட்டுப்படுத்துவதை இந்த ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வருகிறது, அனைத்து லியர் தொழிற்சாலை பணியாளர்களும் முன்னேறுவதற்கும் அவர்களது குடும்பங்களுக்கு வசதியளிக்கவும் இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறதுஎன்று விவரங்களைக் கொடுக்காமல் லூனா தெரிவித்தார்.அவர் செய்தியாளர்களுக்கு கொடுத்த ஒரேயொரு தகவல் புதிய உடன்படிக்கையின்படி அதியுயர் ஊதியம் $21.58 என்பதே.

2003 ல் டெட்ராய்ட் வாகன உற்பத்தியாளர்களுடனான ஒப்பந்தம் ஒன்றில் UAW முதலில் இருஅடுக்கு அமைப்பிற்கு ஒப்புக் கொண்டது. பின்பு அது, 2007 ல் UAW கையெழுத்திட்ட பணியாளர்களின்நிலைமாற்ற ஒப்பந்தத்தில்அதிக சதவீதத்தை எட்டும் அளவிற்கு நீட்டிக்கப்பட்டது மேலும் 2009 இன் ஆரம்பத்தில், ஜெனரல் மோட்டர்ஸ், கிறைஸ்லரில் ஒபாமா நிர்வாகத்தினால் கட்டாயப்படுத்தப்பட்ட திவால் நிலைமை காலகட்டத்தில், புதிதாக நியமிக்கப்படும் அனைத்து பணியாளர்களுக்கும் அதுவே நிலையான ஊதிய அளவாகவும் ஆனது.

1980 மற்றும் 1990களில், டெல்பி உள்ளிட்ட பல தொழிற்சாலைகளில் ஒரு தொடர் வேலைநிறுத்தங்களை தொடர்ச்சியாக காட்டிக்கொடுத்த பின்னர் விரைவாக உதிரிப்பாக தொழிற்சாலையில் UAW இரு-அடுக்கு அமைப்பினை சுமத்தியது. டெட்ராய்ட் வாகன உற்பத்தியாளர்களை அதிகபோட்டித்தன்மையுள்ளதாக்கும்அதன் கூட்டுழைப்புவாத கொள்கையின் கீழ், வாகன உதிரிப்பாகங்கள் தொழிற்சாலையில் ஊதியங்களை குறைப்பது என்பது UAW இன் ஒரு திட்டமிட்ட கொள்கையாக இருந்தது.

குறிப்பாக லியர் நிறுவன ஊழியர்கள் கோபத்தில் உள்ளனர். ஏனென்றால், அந்நிறுவனம் வரலாறு காணாத விற்பனை மற்றும் வருமானத்தை பதிவு செய்கிறது. இந்த காலாண்டில் அந்த நிறுவனத்தின் வருமானம் 839 மில்லியன் டாலர்கள். இது 10 சதவீதம் அதிகமாகும். அதன் பகுதியாக, ஃபோர்ட் இவ்வருடம் 2.04 பில்லியன் டாலர்களை காலாண்டு இலாபமாக பெற்றிருப்பதுடன் 8 பில்லியன் டாலர்கள் 2014 க்கான இலாபமாக இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறது.

வாகன தொழிற்துறையின் மறு கட்டமைப்பிற்கு 5 ஆண்டுகள் மற்றும் உலக நிதியஉடைவின் 6 ஆண்டுகளுக்கு பின்னர், பங்கு சந்தை எட்டியிருப்பதைப் போன்றே பெருநிறுவனங்களின் இலாபங்கள் புதிய உயர்வினை எட்டியுள்ளன அதே வேளையில் பணியாளர்களின் குடும்ப வருமானம் அதே காலகட்டத்தில் 12 சதவீதமாக குறைந்துள்ளது. (பார்க்கவும் The collapse of household income in the US”) இரண்டாம் உலக யுத்தத்திலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மிகக் குறைந்த சதவீதத்திற்கு ஊதியங்கள் குறைந்துள்ளன.

வாகன பாகங்கள் தொழிற்சாலையின் குறைந்த ஊதியங்கள், முதுகுமுறிக்கும் உற்பத்திவேகம், நீண்ட வேலைநேரங்கள் போன்ற மோசமான நிலைமைகள் பல பத்தாண்டுகளாக காட்டிக்கொடுக்கப்பட்ட வேலை நிறுத்தங்கள் மற்றும் நிர்வாகத்துடனான UAW யின் கூட்டு ஆகியவற்றின் நேரடி விளைவுகள்தான். GM மற்றும் பிற நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலையை மெக்ஸிக்கோ, சீனா மற்றும் பிற குறைந்த ஊதிய நாடுகளிலிருந்து திரும்பவும் அமெரிக்காவிற்கே மாற்றுமளவிற்கு, ஊதிய அளவுகள் குறைக்கப்பட்டிருப்பதாக UAW தொடர்ச்சியாக செருக்குடன் பேசியிருக்கிறது. இதுதான் ஒபாமாவின்உற்பத்தியை உள்நாட்டினுள் கொண்டுவரும்கொள்கையுடன் ஒரேநிலைப்பாட்டினை கொண்டதாகும்.

இந்த ஆண்டுதான், UAW அதன் தலைவராக டென்னிஸ் வில்லியம்ஸை நியமித்திருக்கிறது. 2000ல், கட்டர்பில்லருடனான தலைமை பேச்சுவார்த்தையாளராக UAWவின் இரு-அடுக்கு ஊதிய ஒப்பந்தங்களில் சிலவற்றில் இவர் கையெழுத்திட்டுள்ளார். குறிப்பாக ஜூன் மாதம் நடந்த அதன் கொள்கையாக்க மாநாட்டில், சந்தாக்களில் 25சதவீகித அதிகரிப்பை திணித்தமையால் நிர்வாகம் சாமானிய பணியாளர்களிடமிருந்தும் கோபத்தை எதிர்கொண்டிருக்கிறது. இதனால் வில்லியம்ஸ் இரு அடுக்கு அமைப்பிற்கு எதிரானவராக காட்டிக்கொண்டு ஜெனரல் மோட்டர்ஸ், ஃபோர்ட் மற்றும் கிறிஸ்ட்லர் உடனான அடுத்த வருட பேச்சுவார்த்தையில் தான் இந்தஇடைவெளியை மூடிவிடவிரும்புவதாகக் கூறியுள்ளார்.

ஹேமண்டில் UAW இனால் அழைப்பு விடப்பட்டிருக்கும் இந்த அடையாள வேலைநிறுத்தம் அதிகரித்தளவில் UAW வெறுக்கும் கிளர்ச்சிசெய்யும் புரட்சிகரமான தொழிலாளர்களின் எதிர்ப்பை அடக்கிவைக்கும் முயற்சியின் ஒரு பகுதிதான். டெட்ராய்ட் வாகன உற்பத்தியாளர்களுடனான ஒப்பந்தம் அடுத்த வருடம் காலாவதியாகும் வேளையில், UAW அதிகாரிகளும் மில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பு குறித்து கவலைப்படுகிறார்கள். மேலும் மிச்சிகன் மற்றும் இண்டியானா போன்றே மாநிலங்களில் இயற்றப்பட்டவேலைசெய்வதற்கான உரிமைசட்டத்தின் கீழ் அவர்களது ஊதியங்களில் எந்த வித சந்தாப்பணமும் குறைக்கப்படப்போவதில்லை.