தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் CGT union convicted of embezzling funds of France’s biggest works committee பிரான்சின் மிகப்பெரிய பணிக்குழுவின் நிதி மோசடி மீது CGT தொழிற்சங்கத்திற்கு குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டது
By Pierre Mabut Use this version to print| Send feedback தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் அமைப்புகள் அல்ல மாறாக பெருநிறுவன மற்றும் முதலாளித்துவ அரசின் இணையுறுப்புகள் என்பதை எடுத்துக்காட்ட மேற்கொண்டு ஏதேனும் ஆதாரம் வேண்டுமானால், பிரெஞ்சு மின்உற்பத்தி நிறுவனம் EDF-GDFஇன் (Electricit é et Gaz de France) மத்திய பணிக்குழுவுக்கு (Comité central d’entreprise) எதிரான அக்டோபர் 1ஆம் தேதி தீர்ப்பே போதுமானதாகும். தொழிலாளர்களிடம் இருந்து பெறப்படும் அவர்களின் சந்தாமுறை பொறிந்து போவதை சமாளிக்க, தொழிலாளர் பொதுக் கூட்டமைப்புக்கும் (CGT) மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆளும் வர்க்கத்தால் பாரியளவிலான நிதி, முறைகேடாக வழங்கப்பட்டு வந்துள்ளன. EDF-GDF மத்திய பணிக்குழுவுக்கு எதிரான ஊழல் வழக்கு எட்டு தனிநபர்களையும் மற்றும் நான்கு அமைப்புகளையும் முறைகேட்டிற்கு குற்றவாளிகளாக காட்டியது, CGTஆல் நடத்தப்படும் சமூக நடவடிக்கை நிதியம் (la caisse centrale des activités sociales - CCAS) பிரான்சிலேயே மிகப்பெரியதாகும். அந்த தீர்ப்பு நேரடியாக நலிந்துபோன ஸ்ராலினிச நாளிதழ் l’Humanitéயும் குற்றத்தில் சிக்க வைக்கிறது. அக்குற்றத்தீர்ப்புகள், நம்பிக்கை மோசடி செய்ததாக மற்றும் நிதிகளைப் பெறுவதில் உடந்தையாய் இருந்ததாக அதை தொடர்புபடுத்துகிறது. l'Humanitéஇன் ஆண்டுவிழா உள்ளடங்கிய PCF நடவடிக்கைகளுக்கு நிதியளித்தமை மற்றும் கற்பனையான வேலைகள் உட்பட அதன் நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குவதற்காக, CGT அந்த சமூக நிதிய அமைப்பை முறைகேடாக பயன்படுத்தி இருந்தது. சம்பந்தப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு என்பது வெளியிடப்படவில்லை என்றபோதினும், அந்த சமூக நிதிய அமைப்பு ஆண்டுக்கு 400 மில்லியன் யூரோ, வரவுசெலவு கணக்கைக் கொண்டிருந்தது என்பதால், தொழிற்சங்கங்கள் தெளிவாக மில்லியன் கணக்கான யூரோக்களை முறைகேடாக பெற்றிருக்கின்றன. EDFஇன் CCASஇன் ஊழல்தன்மைக்கு இடையிலும், அல்லது அதன் காரணமாக, ஜூனில் வழக்கு தொடங்கப்பட்டதும் அந்நிறுவனம் மனுதாரரின் எந்தவித முறையீடுகளையும் உடனடியாக நிராகரித்ததன் மூலமாக, CGT உடன் அதன் உறவை பாதுகாக்க முற்பட்டது. கூறப்பட்ட தீர்ப்புகள் பெரிதும் கருணையோடு இருந்தன. Humanité நாளிதழுக்கு 75,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டது, அதேபோல CCASஇன் ஒலி-ஒளியமைப்பு பிரிவு IFOREPஉம், 1997-2005 வரையில் Humanitéஇன் ஆண்டுவிழாவை படமெடுப்பதற்கான ஒரு கூட்டு உடன்படிக்கையின்படி, CCAS நிதிகளை முறைகேடாக பயன்படுத்த உதவியதற்காக தண்டிக்கப்பட்டது, CCASக்கு இவற்றின் மொத்த செலவு 1.11 மில்லியன் யூரோவாகும். "நம்பிக்கை மோசடியை மூடிமறைத்ததற்காக" CGT க்கும் அதன் எரிசக்திதுறை பிரிவுக்கும் (Fédération des mines et de l’énergie -FNME) தனித்தனியாக 20,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டது. அந்த விவகாரத்தில் முக்கிய பிரபலமாக கருதப்பட்ட CCAS இயக்குனர் குழுவின் முன்னாள் தலைவர் ஜோன் லாவியெல்லுக்கு, 18-மாத நன்னடத்தை சிறை தண்டனையும், 4,000 யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது. PCFஇல் வேலை செய்து கொண்டே CCASஇல் போலியாக வேலையைப் பெற்றிருந்ததற்காக PCF செனட்டர் பிரீஜீட் கோன்தியேர்-மோரானுக்கு, பத்து-மாதகால நன்னடத்தை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2002இல் உறுப்பினர் ஜோன்-குளோட் லாறோஷ் CCASஇன் நிர்வாக பொறுப்பை ஏற்ற பின்னர், CGTக்குள் எழுந்த கன்னை மோதலுக்கு இடையே அந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. PCF உடன் இணைப்புபெற்ற குழுக்களுக்கு ஆறு-இலக்க தொகைகளைச் செலுத்தி, l'Humanitéஇன் பத்தாயிரக் கணக்கான பிரதிகளை CCAS வாங்கி வந்ததையும் மற்றும் அப்போதைய PCFஇன் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நின்ற ரோபர்ட் ஹூவின் தேர்தல் கூட்டங்களின் ஒலியமைப்புகளுக்காக செலவிட்டு வந்ததையும் அவர் கண்டறிந்தார். PCFஇன் ஒரு உறுப்பினரல்லாத ஆனால் முன்னாள்-PS அரசியல்வாதி ஜோன் பியர் செவனுமோவின் ஒரு கூட்டாளியான லாறோஷ், PCFக்கு அளிக்கப்பட்டுவந்த நிதியை வெளிப்படையாக வெட்ட முனைந்த போது மோதல் வெடித்தது. இதுபோன்ற ஊழல் வழக்குகளில் பார்த்ததைப் போல, அரசு எந்திரத்திற்குள் தொழிற்சங்கங்கள், PCF, மற்றும் பிரான்சின் பரந்த போலி-இடது கூட்டம் ஒருங்கிணைந்திருப்பது, தொழிலாளர்கள் மீது அவர்களது ஆழ்ந்த விரோதத்தை பிரதிபலிக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் எந்தவித பாரிய அடித்தளத்தையும் நிர்மூலமாக்க, தொழிலாளர்கள் வாழ்க்கை தரங்களைச் சீரழிக்க மற்றும் தொழிலாளர்களது போராட்டங்களின் குரல்வளையை நசுக்க பெருநிறுவனங்களால் நிதியுதவி வழங்கப்பட்ட பொலிஸ் படையாக இருந்துள்ளனர். பரந்த தொழிற்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 1949இல் தொழிலாளர்களில் 36 சதவீதத்தில் இருந்து, 2004இல் ஏழு சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. தொழிற்சங்கங்களுக்கு நிதி வழங்கியதன் மீது 2011ல் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பெருசோ அறிக்கை (Perruchot report), தொழிற்சங்கங்களின் சார்ந்திருக்கும் தன்மையை அவற்றின் உண்மையான வெளிச்சத்தில் கொண்டு வருகிறது. அந்த அறிக்கையின் தகவல்கள் 25 ஆண்டுகளுக்கு பகிரங்கப்படுத்தப்படாது என்றளவுக்கு அவை மிகவும் தூண்டக்கூயவை. எவ்வாறிருந்த போதினும், தொழிற்சங்கங்களின் 4 பில்லியன் யூரோ ஆண்டு நிதிச்செலவுகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக முதலாளிகள் மற்றும் அரசால் வழங்கப்பட்டது என்பதும் மேற்பரப்புக்கு வந்த ஒரு உண்மையாகும். வெறும் நான்கு சதவீதமே உறுப்பினர்களின் பங்களிப்பிலிருந்து வருகிறது. (பார்க்கவும்: “பிரெஞ்சுத் தொழிற்சங்கங்கள் வணிகக் குழுக்களிடமிருந்து மில்லியன் கணக்கான யூரோக்களை இரகசிய நிதி உதவியாகப் பெறுகின்றன") 1930களுக்குப் பின்னர் பார்த்திராத அளவுக்கு வறுமை மட்டங்களை உருவாக்கி வருகின்ற பிரான்சின் ஆளும் சோசலிஸ்ட் கட்சியின் (PS) சிக்கன கொள்கைகளை உழைக்கும் மக்கள் மீது திணிக்க, PCFஉம் மற்றும் தொழிற்சங்கங்களும், முதலாளிமார்களுடன் சேர்ந்து போராடி வருகின்றன. 2012 தேர்தலில் இறுதி சுற்றில் PCF, சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா ஹாலாண்டை ஆமோதித்திருந்தது. 2012இல், பிரான்சில் 8.6 மில்லியன் மக்கள் வறுமையில் இருந்ததாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன, இது 2002இல் இருந்ததை விடவும் 1.3 மில்லியன் அதிகமாகும். இரண்டாம் உலக போருக்குப் பின்னர், ஜெனரல் சார்ல்ஸ் டு கோல் மற்றும் PCFஆல் அமைக்கப்பட்ட பிரான்சின் முதலாளித்துவ அரசாங்கத்தில் இடம் பெற்றிருந்த PCFஇன் தொழில்துறை மந்திரி மார்செல் போலின் கீழ் 1946இல் CCAS ஸ்தாபிக்கப்பட்டது. CCASஇல் தற்போது 3,700 பேர் பணியாற்றி வருகிறார்கள். ஒருகாலத்தில் PCF பிரெஞ்சு தொழிலாளர் இயக்கத்தில் செல்வாக்கு பெற்றிருந்தது, ஆனால் 1980களில் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவான PS அரசாங்கங்களிலும் மற்றும் 1991இல் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்பிலும் PCF பங்கெடுத்ததும் அதன் செல்வாக்கு பொறிந்து போனது. CGT மற்றும் PCFக்கு நிதிவழங்க முதலாளித்து வர்க்கத்தால் பயன்படுத்தப்பட்ட "சட்டபூர்வ" முறைகள் தோல்வியடைந்ததும், மாற்றீடாக சட்டவிரோத முறைகள் பயன்படுத்தப்பட்டன, அவை அம்பலமாகும் போது, அவர்கள் வெறுமனே கருணையோடு தண்டிக்கப்படுகிறார்கள். அது மற்றொரு ஊழல் விவகாரத்திலும் இவ்வாறே வெளிப்பட்டது, பொறியியல்துறை பணியாளர் கூட்டமைப்பின் (IUMM) தலைவர் டெனி கோத்தியேர்-சோவெனியாக்கிற்கு, நம்பிக்கை மோசடி மற்றும் வேலைநியமனத்தை மறைத்து வைத்திருந்தமை ஆகியவற்றுக்காக கடந்த பெப்ரவரியில் வெறும் ஓராண்டு சிறை தண்டனையும், 375,000 யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது. அவரது தண்டனை மேல்முறையீட்டின் கீழ் இருக்கிறது. பொறியியல்துறை பணியாளர்களின் தொகையிலிருந்து காணாமல் போன 16.5 மில்லியன் யூரோ, 2000-2007க்கு இடையே வாரத்திற்கு 200,000 யூரோ வீதம் உறைகளில் வைத்து தொழிற்சங்கங்களுக்கு வினியோகிக்கப்பட்டு இருந்ததாக, அவரது வழக்கில் பின்னர் அவர் தாமதமாக ஒப்புக் கொண்டார். "சமூக உறவுகளை சுமூகமாக்குவதே" நோக்கமாக இருந்தது என்பதை வெளிப்படையாக முகத்திற்கு நேராக கோத்தியேர்-சோவெனியாக் விவரித்தார். UIMMஇன் தலைவராக கோத்தியேர்-சோவெனியாக்கிற்கு முன்னர் அப்பதவியில் இருந்த அர்னோ லீன்ஹார்ட், ஆளும் வர்க்கம் ஏன் தொழிற்சங்கங்களுக்கு நிதி வழங்குகிறது என்பதற்கான காரணங்களை இவ்வாறு விளக்குகிறார்: “முதலாளிகளுக்கு பலமான தொழிற்சங்கங்கள் தேவைப்படுகின்றன. வேலைநிறுத்தங்களை முகங்கொடுத்து, முதலாளிகள் பிணைகைதிகளாக பிடிக்கப்படும் போது, அத்தகைய மிதமிஞ்சிய நடவடிக்கைகளைத் திசைதிருப்பிவிடும் மற்றும் மீண்டும் வேலைக்குத் திரும்புமாறு செய்யும் தகைமை கொண்ட ஒரு தொழிற்சங்கத்தை கொண்டிருப்பது மகிழ்ச்சியானதாக இருக்கிறது." தொழிற்சங்கங்களுக்கு பண உறைகளை வழங்கியதற்கு அப்பாற்பட்டு, தொழிலாளர்களால் அரிதாகவே படிக்கப்படும் தொழிற்சங்க இதழ்களுக்கு UIMM “சட்டபூர்வமாகவே" நிதிகளை அளித்தது, மேலும் ஸ்ராலினிச l’Humanitéஇன் ஆண்டுவிழாவுக்குள் பெருநிறுவன பணம் பாய்ச்சப்படுகிறது, அங்கே நிறுவனங்கள் கூடுதல்-விலை நிர்ணயிக்கப்பட்ட கடைகளைப் பெற மற்றும் அங்கே விளம்பரங்களைச் செய்ய அடித்துபிடித்து ஓடுகின்றன. (பார்க்கவும்: France: Stalinist paper l'Humanité on verge of bankruptcy) இன்று, இத்தகைய விழா இரண்டு துணைஅம்சங்கள் இல்லாமல் இருப்பதில்லை: அவை, பிரான்சின் முன்னணி CAC-40 பங்குச்சந்தையில் பட்டியலிட்ட பெருநிறுவனங்களிடமிருந்து வரும் பணம், அவை தான் அந்நிகழ்வுக்கு மானியமளிக்கின்றன, அடுத்தது அதில் கலந்து கொள்பவர்களை இழுத்து வருகின்ற போலி-இடது கட்சிகள், புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி மற்றும் தொழிலாளர்கள் போராட்டம் ஆகியவையும் அதில் உள்ளடங்கும். இவ்விரு அம்சங்களையுமே ஆதரிக்கின்ற ஸ்ராலினிச நாளிதழ், CGT உடன் கருத்தொன்றி இருந்து, ஒவ்வொரு பிரதான பொதுவேலை நிறுத்தத்தையும் விற்றுதீர்த்துள்ளது மற்றும் 1936இல் இருந்து பிரான்சின் ஒவ்வொரு புரட்சிகர போராட்டத்தையும் நசுக்கியுள்ளது. |
|
|