சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Chronic kidney disease spreads in rural Sri Lanka

இலங்கை கிராமங்களில் கடுமையான சிறுநீரக நோய்கள் பரவுகின்றன

By W. A. Sunil
5 March 2014

Use this version to printSend feedback

இலங்கை கிராமங்களில் நாட்பட்ட சிறுநீரக நோய்கள் பாரிய சுகாதாரப் பிரச்சினையாக மாற்றமெடுத்துள்ளன. முன்னர் இந்த நோய் தாக்கம் வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மட்டும் காணப்பட்டது. அது தற்போது வடமேல், கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மட்டுமன்றி வடக்கு மாகாணத்தின் பல பாகங்களுக்கும் பரவியுள்ளது.

வறுமையில் வாடும் மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை விவசாயிகளில் அநேகமானவர்கள் நெல் மற்றும் சேனைப் பயிர் செய்கையில் ஈடுபடுபவர்களாவர். பாதிக்கப்பட்ட அநேகர்கள் ஆண் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள். எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

உலக சுகாதார நிறுவனத்தின் படி, வடமத்திய மற்றும் ஊவா மாகாணத்தில் உள்ள 15-70 வயதானவர்களிடையே 15 வீதத்துக்கும் மேலானவர்கள் கடும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாட்பட்ட சிறுநீரக நோய் கண்டுபிடிக்கப்பட்ட 1991ம் ஆண்டு முதல், வடமத்திய மாகாணத்தில் உள்ள அநுராதபுர மாவட்டத்தில் இந்த நோய் காரணமாக 22,000 க்கும் அதிகமானவர்கள் மரணமடைந்துள்ளார்கள்.

இலங்கையில் மாதாந்தம் 1,100 கடுமையான சிறு நீரக நோயாளர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்ற அதேவேளை, ஒவ்வொரு வருடமும் 300 பேர் மரணமடைகின்றார்கள் என பதிவுகள் கூறுகின்றன. உண்மையில் மரணவீதம் இதைவிட அதிகமாக இருக்கும், ஏனெனில், நோயாளிகள் பலர் வீட்டிலேயே மரணமடைகின்றார்கள்.

சிறுநீரக நோய் பரவல் அதிகரிக்கின்ற போதிலும், அதன் மூல காரணம் இன்னமும் உறுதியாக ஸ்தாபிக்கப்படவில்லை. “பிரத்தியேக இரசாயன நீர்கலப்பினால் உண்டாகும் தண்ணீர் மாசுபடுதலே இதற்கு காரணம் என சில ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். பல சிறிய விவசாயிகள், பெரிய உற்பத்தியாளர்களுக்கு எதிரான போட்டியின் காரணமாக, தங்களின் விளைச்சல்களை அதிகரிப்பதற்காக, தரங்குறைந்த மற்றும் நச்சு விவசாய இரசாயனங்களையும் உபயோகிக்கின்றார்கள்.

பல வகையான காரணங்கள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு நம்புகின்றது. உலக சுகாதார அமைப்பின் நாட்பட்ட நோய் தடுப்பு மற்றும் முகாமைத்துவ சிரேஸ்ட்ட இணைப்பாளர் டாக்டர் சாந்த மென்டிசின் கூற்றின்படி, தரங்குறைந்த உணவு, கட்மியம் அல்லது சிறுநீரகத்தைத் தாக்கும் இரசாயனம், ஆர்சனிக் மற்றும் ஈயம் போன்றவற்றின் தாக்கத்திற்கு நீண்ட நாட்கள் ஆளாகுதல், மரபுரீதியான சிறுநீரக செயலிழப்பு மற்றும் ஆயுர்வேத அல்லது சப்சந்தா செடிகள் அடங்கிய உள்ளூர் மூலிகை பாவனை போன்றவை இதற்கான காரணங்களில் அடங்கும்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக கடும் சிறுநீரக நோய் பரவுவதற்கான காரணத்தினை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தோல்வி, ஆட்சியிலிருந்த இலங்கை அரசாங்கங்கள் மற்றும் தனியார் இலாபநோக்கு அமைப்புமுறை மீதான ஒரு குற்றப் பத்திரிகையாகும். மருத்துவ விஞ்ஞானத்தில் புதிய அபிவிருத்திகளை பயன்படுத்துவதன் மூலம் நூற்றுக் கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பல திட்டங்களை சிபார்சு செய்துள்ள உலக சுகாதார அமைப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சில நிவாரணங்களையும் வழங்கியிருந்தது. உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்களைக் கட்டுப்படுத்தல், நாட்பட்ட சிறுநீரக நோய் தாக்கம் உள்ள பிரதேசங்களில் பாதுகாப்பான குடிநீருக்கான ஏற்பாடு செய்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கான தரமான சுகாதார வசதிகள் மற்றும் நிதி உதவிகள் என்பன இவற்றுள் அடங்கும். மக்கள், விசேடமாக குழந்தைகள், சந்தேகிக்கக்கூடிய நச்சுகளால் தாக்கப்படுவதை கட்டுப்படுத்துவதற்கு உடனடியான பல வகையான நடவடிக்களுக்குஉயர் முன்னுரிமைகொடுத்து செயற்படுமாறு மென்டிஸால் அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், 2009 மற்றும் 2012ம் ஆண்டுகளில் வந்தவை உட்பட உலக சுகாதார அமைப்பிடம் இருந்து பல அறிக்கைகளை பெற்றுக் கொண்டுள்ளது. அந்த அறிக்கைகள் வெளியிடப்படவோ அல்லது சுபலமாக கிடைக்கவோ இல்லலை, அவற்றின் சிபார்சுகள் மிகப்பெருமளவில் அலட்சியம் செய்யப்பட்டுள்ளன. அரசாங்கம், 2011ல் கிளைபோசாட் மற்றும் காபோபியூரன் கொண்ட தரம் குறைந்த சில உரங்களை தடைசெய்திருந்தது. ஆனால்விவசாய இராசயன கம்பனிகளின் அழுத்தம் காரணமாக அந்த தடையை விலக்கிவிட்டது.

சுத்தமான குடிநீர் பற்றாக்குறை மற்றும் தரம் குறைந்த உர வகைகளின் பரந்தளவிலான பாவனையும் கடும் சிறுநீரக நோய் பரவுவதற்கான பிரதான காரணிகளாக கருதப்படுகின்றன இலங்கை மக்களில் 40 வீதமானவர்கள் மட்டுமே குழாய் நீரைப் பெறுகின்றனர். நாட்டில் உள்ள 25 கிராமப்புற மாவட்டங்களில் 15 தவிர மீதியான மாவட்டங்கள் நிலத்தடி நீரையே சார்ந்துள்ளன.

இந்த விடயம் தொடர்பாக கடந்த 15 வருடங்களாக ஆராய்ச்சி செய்து வரும் பேராசிரியர் சுனில் ஜே.விமலவன்ச, வடமத்திய மாகாணத்துக்காக நீர் தொடர்பான உட்கட்டுமானத்துக்கு மேலதிக நிதியை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார். தற்போதைய ஓதுக்கீட்டின் கீழ் உட்கட்டுமான தேவைகளைக் கட்டியெழுப்புவதற்கு 50 வருடங்கள் செல்ல்லாம் என அவர் எச்சரித்தார்.

மருத்துவ உபகரணங்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் தாதிகள் பற்றாக்குறையும் நாட்பட்ட சிறுநீரக நோய் பரவுவதற்கான அடுத்த பிரதான காரணியாகும். 2007ல், இலங்கைக்கு 1,000 இரத்த சுத்தீகரிப்பு இயந்திரங்கள் தேவை என சுகாதார அதிகாரிகள் மதிப்பீடு செய்திருந்தார்கள். தற்பொழுது பொது வைத்தியசாலைகளில், எட்டு இரத்த பிரிப்பு நிலையங்களில் மற்றும் இரண்டு சிறுநீரக மாற்று நிலையங்களிலுமாக 178 இயந்திரங்களே உள்ளன. கொழும்பு தேசிய வைத்தியசாலையில், ஆறு குருதிநாளம் சம்பந்தமான நிபுணர்களும் மாற்று சிகிச்சை நிபுணர்களும் மற்றும் ஒன்பது சிறுநீரக நிபுணர்களுமே உள்ளனர்.

கடந்த டிசம்பரில் அநுராதபுரம் வைத்தியசாலையின் சிறுநீரக நோய் நிபுணர் டாக்டர் ரஜீவ திசாநாயக்க, ஒரு சிறுநீரக நோய் சம்பந்தமான கருத்தரங்கில் பேசும் போது, தனது வைத்தியசாலையில் நிலவும் வசதி குறைவுகள் சம்பந்தமாக வெளிப்படுத்தினார். சிறுநீரக பிரிவு சரியாக செயற்படுவதற்காக 18 டாக்டர்கள் மற்றும் 36 தாதிகளும் தேவையாக உள்ள போதிலும் 8 டாக்டர்களும் 12 தாதிகளுமே உள்ளனர், என அவர் கூறினார்.

இலங்கை டாக்டர்கள், 2007 தொடக்கம் 2011 வரை, 699 சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகளை மட்டுமே மேற்கொண்டுள்ளனர். தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவது என்பது அதி கூடிய செலவாகும். ஏழை தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் உண்மையிலேயே இது சாத்திமற்றதாகும். உதாரணமாக ஒரு தனியார் ஆஸ்பத்திரியில், குருதி சுத்தீகரிப்பு ஒரு முறை மேற்கொள்ளவதற்கு 8,000 ரூபா (61 அமெரிக்க டாலர்) தேவையாகும். ஒரு கடுமையான நோயாளி இந்த சிகிச்சையை வாரத்துக்கு இரு தடவையாவது செய்ய வேண்டும். ஒரு சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கான செலவு ஒரு மில்லியன் ரூபாவாகும் (7,647 அமெரிக்க டாலர்). இது இலங்கையின் உழைக்கும் மக்களுக்கு ஒரு கனவு மட்டுமே.

உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்கள், வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் உள்ள சியபலான்கமுவ மற்றும் தலாவ கிராமங்களில் நாட்பட்ட சிறுநீரக நோயாளிகளுடன் பேசினார்கள். 600 குடும்பங்கள் வாழும் கிராமத்தில் 90 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அண்மைய வருடங்களில் இந்த இரண்டு கிராமங்களிலும் 17 பேர் நோயால் இறந்துள்ளார்கள்.

இந்தப் பிரதேசத்தில் பெரும்பாலனவர்கள் வறுமையான நெற் செய்கையாளர்களாவர். சிலர் சேனைப் பயிர் செய்பவர்கள். அவர்கள் எல்லோரும் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் கிணற்று நீரையே உபயோகிக்கின்றனர். நாட்பட்ட சிறுநீரக நோய் தாக்கத்துக்கான காரணம், குடிதண்ணீரில் அதிக தொகையான புளோரைட் கலந்துள்ளமையே என பிரதேச வாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சியபலான்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த பி.எம். சிசிரகுமார, நாட்பட்ட சிறுநீரக நோயால் கடந்த மூன்று வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ளார். “நான் மருத்துவ பரிசோதனைக்கு மட்டும் 20,000 ரூபா செலவழித்துள்ளேன். ஆஸ்பத்திரியில் மருந்துகள் இல்லாத போது, அவற்றினை நான் வெளியில் வாங்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறையும் 1500 முதல் 2000 ரூபா வரை செலவாகும்.” என அவர் கூறினார். “எனக்கு நிரந்தர வேலை கிடையாது, கூலி வேலை மட்டுமே செய்கின்றேன், இத்தோடு எனது வயதான தாயாரையும் நனே பராமரிக்க வேண்டியுள்ளது. இந்த நோய் எல்லாவற்றையும் சமாளிப்பதை கடினமாக்கி உள்ளது.”

சியபலான்கமுவ கிராமத்தினைச் சேர்ந்த 61 வயது விவசாயியான பண்டாரநாயக்க, நோய் கண்டுபிடிக்கப்பட்டு 8 வருடமாகி, தற்போது கடுமையான நிலமைக்கு வந்துவிட்டதாக கூறுகின்றார். “நான் கூடுதலான மருத்துவ பரிசோதனைகளை ஆயிரக் கணக்கான ரூபாய்கள் செலவழித்து தனியார் நிலையங்களிலேயே எடுத்தேன். நான் கடுமையான நிலமையில் குருநாகல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது, அங்கு போதுமான வசதி இல்லாததால், அவர்கள் இரத்தச் சுத்தீகரிப்புக்காக 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்டி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். எனினும் அங்கு போதுமான வசதிகள் கிடையாது. டாக்டர்கள் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு ஆலோசனை கூறியுள்ளார்கள். ஆனால் அதற்குப் போதுமான பணம் என்னிடம் கிடையாது. எனக்கு வேறு தெரிவு இல்லை அதனால் நான் மரணத்துக்காக காத்திருக்கின்றேன்.” என்றார்

அதே கிராமத்தினைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான, டபிள்யூ.எம்.ஜி சோமரட்ண, தனது 48 வயதில் கடந்த 2012ம் ஆண்டு நோயினால் மரணத்தை தழுவினார். 2012 ஆகஸ்ட் மாதம் நோய் கண்டுபிடிக்கப்பட்டதாக அவரது மனைவி கூறினார். “அந்த நேரத்தில் நோய் கடுமையான மட்டத்தினை எட்டிவிட்டது, சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு கூட நேரம் இல்லாமல் போய்விட்டது. மூன்று மாதத்தின் பின்னர் அவர் இறந்து விட்டார்,” என அவர் கூறினார்.

இந்த பிரதேசம், நிக்காவெவ ஆதார வைத்தியசாலையில் இருந்து மட்டுமே மருத்துவ உதவிகளைப் பெறுகின்றது. இங்கு கடும் சிறுநீரக நோய்க்கு பொருத்தமான வசதிகள் கிடையாது. கடுமையான நோயாளிகள், குருநாகல், அநுராதபுரம் அல்லது கண்டி வைத்தியசாலைக்கே பயணம் செய்ய வேண்டியுள்ளது. இவை முறையே 46, 76, மற்றும் 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளன.

கடும் சிறுநீரக நோய் நாடுமுழுவதும் பயங்கரமான மட்டத்தில் உள்ளதற்கு ஆட்சியில் இருந்து வரும் அரசாங்கங்களே பொறுப்பாகும். அவை பொருத்தமான கருவிகள், சுகாதார வசதிகள் மற்றும் உத்தியோகத்தர்களை வழங்குவதை நிராகரித்துள்ளதுடன், நோய் பரவுவதை தடுப்பதற்கான எந்தவிதமான அக்கறையான நடவடிக்களைகளையும் எடுக்கத் தவறியுள்ளன. இராஜபக்ஷ அரசாங்கமும் அதன் முன்னோடிகளைப் போலவே, சிறிய விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் இன்றியமையாத தேவைகளை அலட்சியப்படுத்தி வருகின்றது.