World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் New Anti-capitalist Party, Lutte Ouvrière hail union sellout of Air France strike ஏர் பிரான்ஸ் வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கம் விற்றுதீர்த்ததை புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி மற்றும் லூத் ஊவ்றியேர் வரவேற்கின்றன
By Alex
Lantier ஒரு வாரத்திற்கு முன்னர், விமானிகள் வேலைநிறுத்தத்தால் ஏர் பிரான்ஸ் நிதியியல் பாதிப்பில் சிக்கியிருந்ததுடன் சேர்ந்து பிரான்ஸின் செல்வாக்கிழந்த சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் அந்த வெளிநடப்புக்கு மக்கள் அனுதாபம் அதிகரித்து வருவதைக் கண்டு மிரண்டு போயிருந்த நிலையில், தேசிய ஏர்லைன் விமானிகள் தொழிற்சங்கம் (SNPL) விமானிகளை வேலைக்குத் திரும்புமாறு திடீரென உத்தரவிட்டது. வேலைநிறுத்தக்காரர்களின் பிரதான கவலையின் மீது, அதாவது செலவு குறைந்த டிரான்சாவியா (Transavia) துணைநிறுவனங்களின் உருவாக்கம், ஏர் பிரான்ஸ் ஊதியங்களும், ஓய்வூதியங்கள் மற்றும் நிலைமைகளை குறைக்க பயன்படுத்துமென்ற அவர்களின் அச்சத்திற்கு, எவ்வித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. இந்த மோசமான விற்றுத்தள்ளப்பட்டதன் விபரங்கள் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) மற்றும் லூத் ஊவ்றியேர் [LO, தொழிலாளர் போராட்டம்] அதை ஒரு வெற்றியாக பாராட்டி வருகின்றன. சான்றாக, "ஏர் பிரான்ஸ் வேலைநிறுத்தம் முடிந்தது, நிர்வாகம் மற்றும் அரசாங்கத்திற்கு பின்னடைவு," என்ற தலைப்பில் LO அதன் அக்டோபர் 3ஆம் தேதி கட்டுரையில் எழுதுகிறது: “ஊடக ஆவேசங்களுக்கு இடையிலும், தான் திசை திருப்பப்படவில்லை என்று மக்களைச் சிந்திக்க செய்ய ஆக்ரோஷமான கருத்துக்களோடு அவரது கடைசி வார்த்தையை கூற முயன்றிருந்த, [பிரதம மந்திரி மானுவெல்] வால்ஸின் அறிக்கைகளுக்கு இடையிலும், விமானிகள் டிரான்சாவியா ஐரோப்பாவிற்கான நிர்வாகத்தின் திட்டத்திலிருந்து நிர்வாகத்தை பின்வாங்க செய்தனர் ... அவர்களுக்கு மூத்த விமானிகளைப் போல சௌகரியமான ஊதியம் கிடைக்கிறதோ இல்லையோ, அல்லது அவர்கள் குறைந்தபட்ச ஊதியத்தில் அல்லது வேலைவாய்ப்பின்மையில் இருக்கிறார்கள் என்றாலும், எங்கெங்கிலும் தொழிலாளர்கள் அதே தாக்குதல்களை தான் முகங்கொடுக்கிறார்கள். அங்கே எதிர்விளைவுகள் கிடைத்திருக்கிறது, தெய்வத்திற்கு தான் நன்றி கூற வேண்டும்." டிரான்சாவியா ஐரோப்பா துணைநிறுவனத்திற்கான திட்டங்களை அது கைவிடும் என்ற ஏர் பிரான்ஸின் அறிவிப்பை, NPAஉம், “இது எல்லா தொழிலாளர்களதும் மரியாதைக்குரிய முதல் வெற்றியாகும் ... இந்த வேலைநிறுத்தமானது இதேவிதத்தில் டிரான்சாவியா திட்டத்தால் அச்சுறுத்தப்பட்டிருக்கும் ஏனைய விமான உதவியாளர்கள், விமானநிலையங்களில் பயணிகளுக்கு உதவும் அல்லது விமான பராமரிப்பில் ஈடுபட்டிருக்கும் தரைநிலைய பணியாளர்கள் போன்ற இதர பிரிவினரை ஒருங்கிணைக்க இருந்த தடையை உடைத்திருப்பதாக" எழுதி இருந்தது. ஏர் பிரான்ஸ் நிர்வாகத்தின் தவறாக வழிநடத்தும் அறிக்கையை எதிரொலித்து, விமானிகள் காட்டிக்கொடுக்கப்பட்டதை போலி-இடதுகள் பாராட்டுவது பொய்களின் தொகுப்பாகும். முதலாவதாக டிரான்சாவியா ஐரோப்பா திட்டம் திரும்பப் பெறப்படவே இல்லை. அனைத்திற்கும் மேலாக, பல்வேறு துணைநிறுவனங்கள் மற்றும் வர்த்தக பரிமாற்ற நிறுவனங்களை அமைப்பதன் மூலமாக கூர்மையான புதிய தாக்குதல்களை நடத்துவதற்கான நிர்வாகத்தின் திட்டங்களை, போலி-இடது கட்சிகளும் தொழிற்சங்கங்களும் மூடிமறைத்து வருகின்றன. அடிமட்டத்திலிருந்து "ஈடுசெய்யவியலாத" ஏர் பிரான்சின் பாதிப்பைத் தவிர்ப்பதற்காகவே SNPL வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அதற்கு கைமாறை நிர்வாகம் திரும்பசெலுத்தி வருகிறது, வேலைநிறுத்தத்தின் போது வேலை செய்ததற்காக தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு அது உழைப்பூதியம் அளிக்கிறது, அதேவேளையில் அதே நாட்களுக்கு விமானிகளுக்கு அது சம்பளம் கொடுக்க முடியாதென வலியுறுத்துகிறது. டிரான்சாவியா ஐரோப்பா திரும்ப பெறப்பட்டதாக கூறப்பட்டதைப் பாராட்டிய அதன் கட்டுரையை LO பிரசுரிப்பதற்கு முந்தைய நாள், Marianne நாளிதழ் பெருநிறுவன ஆவணங்களை பிரசுரித்தது. ஏர் பிரான்ஸ் செலவு-குறைந்த துணைநிறுவனங்களுக்கு வேலைகளை மாற்றும் அதன் திட்டங்களை வேகப்படுத்தி வருவதை அந்த ஆவணங்கள் எடுத்துக்காட்டுகின்றன. அக்டோபர் 1இல், வேலைக்குத் திரும்ப தொடங்கிய இரண்டு நாட்களுக்குப் பின்னர், டிரான்சாவியா ஐரோப்பா அப்போதும் போர்ச்சுக்கலில் பதிவு செய்யப்பட்டிருந்தது. போர்ச்சுக்கல் வர்த்தக நிறுவனங்களின் பதிவேட்டில் 513 237 810ஆக பதிவு செய்யப்பட்டு, அது இன்னும் ஆவணங்களில் இருப்பதுடன், பிரான்சில் குறைந்த ஊதியத்தில் விமானிகளை நியமிப்பதைச் செயலில் கொண்டு வருவதற்காக நிலுவையில் காத்திருக்கிறது. ஏர் பிரான்ஸ்-KLM தலைமை செயலதிகாரி அலெக்சாண்டர் டு ஜூனியாக் டிரான்சாவியா வேலைநிறுத்தத்தின் போது அவர் அளித்த வாக்குறுதிகளிலிருந்து நழுவிச்செல்வதற்கு துணைநிறுவனங்களுக்கும், வர்த்தக பரிமாற்ற நிறுவனங்களுக்குமான ஒரு வலைப்பின்னலை அமைத்து வருகிறார். டிரான்சாவியா பிரான்ஸ் துணைநிறுவனத்தில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதாக ஜூனியாக் கூறியிருந்த அதேவேளையில், குறைந்த-செலவு விமான நிறுவனத்தில் வேலை செய்யும் விமானிகளுக்கு ஏர் பிரான்சில் தற்போது வழங்கப்படும் உத்தரவாதங்கள் மற்றும் கொடுப்பனவுகள் இருக்காதென்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். எவ்வாறிருந்த போதினும், ஜூனியாக் தெளிவாக வேலைநிறுத்தக்காரர்களுடன் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வரவில்லை. Marianneஆல் பிரசுரிக்கப்பட்ட ஒரு புதிய சூழ்ச்சியில், அவர் ஏர் பிரான்ஸ்-KLM நடாத்தும் அடிக்கடி பயணிப்பவர்களுக்கான திட்டமான Mileshouse இனை செயல்படுத்திவரும் பெருநிறுவனத்தை, வேலைநிறுத்தத்தின் போது, ஒரு ஏர்லைன் டிரான்சாவியா நிறுவனமாக, சட்டபூர்வமாக மாற்றியிருந்தார். செப்டம்பர் 19இல் இருந்து, இவ்விதத்தில் ஏர் பிரான்சின் அடிக்கடி பயணிப்பவர் திட்டம் விமானங்களை ஒத்திகைக்கு விட முடியும், பணியாளர்களை தற்காலிகமாக வேலைக்கு எடுக்க முடியும் மற்றும் டிரான்சாவியா-பிரான்சில் வேலை செய்துவரும் ஏர் பிரான்ஸ் விமானிகளுக்கு தற்போது வழங்கப்படும் உத்தரவாதங்களை விலக்கிக் கொள்ள முடியும். அதன் கண்டுபிடிப்புகள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு ஏர் பிரான்சிடம் Marianne வினவிய போது, ஏர்லைன் நிர்வாகிகள் மாற்றிமாற்றி கூறியபடியே அவ்வறிக்கையை உறுதிப்படுத்தினார்கள். அது குறிப்பிட்டது, “எந்தவொரு பெருநிறுவனத்தையும் போலவே, ஏர் பிரான்ஸ்-KLMஉம் நீதித்துறை சட்டவரையறைகளுக்கு உட்பட்டதாகும், அது கூட்டிணைவதில், நிதியுதவி பெறுவதில் மற்றும் அபிவிருத்தியில் அதன் தேவைக்கேற்ப அதனால் அவற்றைச் செயல்படுத்திக் கொள்ள முடியும்." பிரான்சுவா ஹோலாண்டின் மதிப்பிழந்த PS நிர்வாகத்தின் கீழ் தொழிலாள வர்க்கத்தின் முதல் பிரதான போராட்டம் ஒரு வெட்கக்கேடாக விற்றுதீர்க்கப்பட்டு முடிக்கப்பட்டது என்ற உண்மையை, போலி-இடது குழுக்களின் எந்தவொரு தேனொழுகும் கருத்துகளாலும் மூடிமறைக்க முடியாது. இந்த தோல்விக்கு, பேரம்பேசுவதில் இருந்த விமானிகளின் நிலைப்பாடு காரணம் அல்ல, அது மிகவும் உறுதியாக இருந்தது. வேலை நிறுத்தத்தால் அதற்கு ஏற்பட்டிருந்த இழப்பை ஏர் பிரான்ஸ் திட்டமிட்டு குறைத்துக் காட்டியதாக கூட சில செய்திகள் குறிப்பிட்டன. தெரிவிக்கப்பட்டதை போல இழப்பு 290 மில்லியன் யூரோவாக இருக்கவில்லை, 350 அல்லது 400 மில்லியன் யூரோவுக்கு நெருக்கமாக [438 அல்லது 500 மில்லியன் அமெரிக்க டாலராக] இருந்தது. விமானிகளுக்கு எதிராக SNPL தொழிற்சங்கம், ஏர் பிரான்ஸ் நிர்வாகத்தை ஆதரித்தது என்பதால் தான் அந்த தோல்வி ஏற்பட்டது, மேலும் அவர்களின் உறுப்பினர்கள் ஒரு வெற்றியை பெற்றுவிடுவார்களோ என அது அஞ்சியது. விமானிகளே கூட, வேலை நிறுத்தத்திற்கு பகிரங்கமாக விரோதமான இதர தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் அரசுக்கு எதிரான ஓர் அரசியல் போராட்டத்தில் சம்பந்தப்பட்டிருந்ததை, உடனடியாக கண்டார்கள். பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ் பகிரங்கமாக வேலைநிறுத்தக்காரர்களை " மிக்க அகந்தைபோக்காளர்களாக" குற்றஞ்சாட்டினார். இந்த அசாதாரணமான அறிக்கையே PSஐ மற்றும் ஒட்டுமொத்த பிரெஞ்சு ஆளும் மேற்தட்டைக் கவ்வியிருந்த அச்சத்தைப் பிரதிபலித்தது. தொழிலாளர் செலவுகளை (அதாவது தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் நிலைமைகளை) குறைப்பதன் மூலமாக பிரெஞ்சு தொழில்துறை போட்டித்தன்மையை மீட்டமைப்பதே அதன் இலட்சியமென்று கூறியுள்ள வால்ஸ் அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்துடன் அது வேலை செய்துள்ள சிக்கன நிகழ்ச்சிநிரலுக்கு எதிராக அந்த வேலைநிறுத்தம் போராட்டங்களை தூண்டிவிடுமோ என நடுநடுங்கிப் போனது. ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் முன்னொருபோதும் இல்லாத விதத்தில் 13 சதவீத செல்வாக்கு விகிதத்தில் இருப்பதுடன், பிரான்சின் விமானநிலையங்கள் மூடப்பட்டதைப் போன்ற ஒரு சம்பவம், 1936 அல்லது 1968இல் போன்று, பாரிய போராட்டங்களையோ அல்லது ஒரு பொது வேலைநிறுத்தத்தையோ தூண்டிவிடக்கூடிய சாத்தியப்பாடு வாரத்திற்கு வாரம் அதிகரித்து வருகிறது. சிக்கன நடவடிக்கைகள் மீது மக்களின் கோபம் ஐரோப்பாவெங்கிலும் வெடிப்பார்ந்த மட்டங்களில் இருப்பதுடன், வேலைநிறுத்தம் மற்றும் பரந்த போராட்டங்களின் அபாயம் குறித்து சர்வதேச பத்திரிகைகளால் மிக உன்னிப்பாக பின்தொடரப்பட்டு வந்தன. ஜேர்மன் நிதியியல் நாளிதழ் Handelsblatt கூட விமானிகள் மிகவும் பலமான நிலைமையில் இருப்பதாக ஒப்புக்கொள்ளும் அளவுக்கு இருந்தது. இத்தகைய நிலைமைகளின் கீழ் தான், அதிகபட்ச அளவில் அதைரியத்தையும் குழப்பத்தையும் பரப்ப முயன்ற மற்றும் ஒரு தோல்வியை வெற்றியாக புகழ்ந்த NPA மற்றும் LO போன்ற போலி-இடது கட்சிகளில் உள்ள தனிச்சலுகைமிக்க மத்தியதர வர்க்க பாசாங்குக்காரர்களிடம் அந்த வேலைநிறுத்தம் விடப்பட்டது. அதில் அவர்கள், NPA மற்றும் LO உறுப்பினர்கள் பலர் பதவி வகிக்கும், பிரான்சின் தொழிற்சங்க நிர்வாகத்தை மட்டும் பாதுகாக்கவில்லை, மாறாக 2012 தேர்தல்களின் முதல் சுற்றில் அவர்கள் எதற்காக பிரச்சாரம் செய்தார்களோ, அந்த தள்ளாடிக் கொண்டிருக்கும் ஹோலாண்ட் நிர்வாகத்தையும் பாதுகாக்கிறார்கள். |
|