World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India tilts still closer to Washington

இந்தியா வாஷிங்டனுக்கு அதிக நெருக்கமாக சாய்கிறது

By Deepal Jayasekera and Keith Jones
3 October 2014

Back to screen version

இந்த வார தொடக்கத்தில் இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியினதும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவினதும் உயர்மட்ட சந்திப்பின் முடிவில் அவர்களால் வழங்கப்பட்ட நீண்ட "கூட்டு அறிக்கையானது", புது டெல்லி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் மூலோபாய நிகழ்ச்சிநிரலுடன் இன்னும் மிக நெருக்கமாக தன்னைத்தானே நிறுத்திக் கொண்டிருப்பதற்கு சமிக்ஞை காட்டுகிறது

தேசிய, பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பிற்கு ஆதரவளிக்க" அமெரிக்க மற்றும் இந்திய இராணுவங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு எந்திரங்களுக்கு இடையிலான கூட்டுறவை விரிவாக்கும் பல நடவடிக்கைகளை அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. அமெரிக்க மற்றும் இந்திய அரசு தலைவர்களின் ஒரு கூட்டறிக்கையில் முதன்முறையாக, தென்சீனக் கடல் குறித்த குறிப்பை அது வெளிப்படையாக அறிவிக்கிறது, அப்பிராந்தியத்தில் பெய்ஜிங்கிற்கு எதிராக அவற்றின் பிராந்திய உரிமைகோரல்களை ஆக்ரோஷமாக பின்தொடர, பிலிப்பைன்ஸ் போன்ற அதன் பிராந்திய கூட்டாளிகளை அமெரிக்கா ஊக்கப்படுத்தி வருகிறது. தென்சீனக் கடல் பிராந்தியத்தில் "கடல்வழி பாதுகாப்பைப் பாதுகாப்பது மற்றும் சுதந்திர கடல்வழி போக்குவரத்து மற்றும் சுதந்திர விமான போக்குவரத்தை உறுதிப்படுத்துவது" மீது அந்த அறிக்கையின் வலியுறுத்தல், சீனாவை ஒரு "ஆக்கிரமிப்பாளனாக" முத்திரை குத்தும் வாஷிங்டனின் பிரச்சாரத்துடன் சரியாகப் பொருந்துகிறது.     

அமெரிக்க அரசியல் ஆளும்வர்க்கமும், இராணுவ-பாதுகாப்பு ஸ்தாபகமும், சீனாவை மூலோபாயரீதியில் தனிமைப்படுத்த மற்றும் சுற்றி வளைக்கும் அவற்றின் திட்டங்களுக்காக நீண்டகாலமாகவே இந்தியாவை முன்னணியில் வைக்க முனைந்து வந்துள்ளன. அந்த முடிவுக்கேற்ப, முதலில் ஜோர்ஜ் டபிள்யு. புஷ் மற்றும் இப்போது ஒபாமாவின் கீழ், அமெரிக்கா இந்தியாவுடன் அதன் இராணுவ-பாதுகாப்பு உறவுகளை வேகமாக விரிவாக்க முனைந்துள்ளது. அது அதன் ஏனைய முக்கிய இந்தோ-பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன், முத்தரப்பு மற்றும் நாற்தரப்பு கூட்டுறவுக்கு அழுத்தம் அளித்துள்ளதுடன், இந்தியாவின் ஆளும் மேற்தட்டு அதன் வல்லரசாகும் அபிலாஷையை அடைவதில் அதற்கு உதவ உறுதியளித்துள்ளது.   

வாஷிங்டனைப் பொறுத்த வரையில், இந்தியாவின் பிரதம மந்திரியாக மோடியின் முதல் அமெரிக்க விஜயம், முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசாகங்கத்துடன் அதிகரித்துவந்த கருத்துவேறுபாடு காலங்களுக்குப் பின்னர், இந்தோ-அமெரிக்க உறவுகளை "மீட்டமைக்க" அழுத்தமளிப்பதற்குரிய சந்தர்ப்பமாக நோக்கப்பட்டது. இத்தகைய கருத்துவேறுபாடுகள், வாஷிங்டனின் மூலோபாய நிகழ்ச்சிநிரலுடன் முழுமையாகவும், பகிரங்கமாகவும் நிலைத்திருக்க மற்றும் அமெரிக்க முதலீட்டுக்கு இருக்கும் அனைத்து தடைகளையும் நீக்க இந்தியா மீதான இடைவிடாத அமெரிக்க அழுத்தத்திற்கு பெரிதும் காரணமாக இருந்தன.       

2002 முஸ்லீம்-விரோத குஜராத் படுகொலையில் அவர் வகித்த பாத்திரத்திற்காக இந்த ஆண்டு வரையில் அமெரிக்காவிற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருந்த ஒரு அதிதீவிர வலதுசாரி தலைவரான மோடி, ஒபாமா நிர்வாகத்தால், குடியரசு கட்சியினர் மற்றும் அமெரிக்க தேசிய-பாதுகாப்பு ஸ்தாபகத்தால் விருந்து உபச்சாரத்துடன் வரவேற்கப்பட்டார்.  

திங்களன்று இரவு, மோடி ஒபாமாவுடனான ஒரு பிரத்யேக வெள்ளை மாளிகை விருந்தில் கலந்துகொள்ள வந்தபோது, அந்த இரண்டு தலைவர்களும் "சலே சாத் சாத்" (ஒன்றுசேர்ந்து முன்னேறுவோம்) என்று தலைப்பிட்ட ஒரு "இலட்சிய அறிக்கையை" வெளியிட்டார்கள், அத்துடன் செவ்வாயன்று மோடியும் ஒபாமாவும் "இணைந்து-எழுதியிருந்த" ஒரு தலையங்கத்தை வாஷிங்டன் போஸ்ட் பிரசுரித்தது. போஸ்டின் அந்த கட்டுரையில், இந்தோ-அமெரிக்க "மூலோபாய நட்புறவின்" ஆழம் குறித்த ஆர்வம் பொங்கிபெருகியது. அதேவேளையில் அது "நமது நட்புறவின் உண்மையான வாய்ப்புகள் இனிமேல் தான் உணரப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டது.   

மோடி குறித்த இந்த அனைத்து முகஸ்துதியும் மற்றும் அமெரிக்கா மற்றும் இந்திய "ஜனநாயக மதிப்புகளின்" பலம் மற்றும் பொருத்தமானதன்மை குறித்த பாசாங்குத்தனமான அலம்பல்களும், இந்தியாவின் புதிய பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம் இந்தியாவை அமெரிக்காவுடன் இன்னும் மிக இறுக்கமாக பிணைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அளிக்கப்பட்டன.  

இந்த விதத்தில் மோடி ஏமாற்றவில்லை. சீனாவுடனான இந்தியாவின் உறவு சம்பந்தமாகவும் மற்றும் அதன் நீண்டகால மூலோபாய பங்காளி ரஷ்யாவுடனான உறவுகள் பற்றி வாஷிங்டனால் கட்டளை இடப்படுவது தொடர்பாகவும் தான் ஒரு அமெரிக்க துணை ஆட்சியாக குறைக்கப்பட்டு வருவதுபற்றி இந்தியாவின் ஆளும் மேற்தட்டு கவனித்து வருகிறது. எவ்வாறிருந்த போதினும், இந்திய ஆளும் வர்க்கம் தடுமாறிக் கொண்டிருக்கும் இந்திய பொருளாதாரத்தை புத்துயிர்ப்பு பெறச்செய்ய அமெரிக்க மற்றும் ஜப்பானிய முதலீட்டிற்காக பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது. இந்தியா அதன் வல்லரசாகும் அபிலாஷையை எட்ட வேண்டுமானால் அதற்கு அமெரிக்காவின் ஆதரவு அத்தியாவசியமென்றும் அது கணக்கிடுகிறது

வாஷிங்டனும் புது டெல்லியும் அவற்றின் 2005 பாதுகாப்பு கட்டமைப்பு உடன்படிக்கையை புதுப்பிக்க உடன்பட்டுள்ளதாக அந்த கூட்டறிக்கை அறிவித்தது. இந்த உடன்படிக்கையின் கீழ் அங்கே அமெரிக்க-இந்திய இராணுவ உறவுகள் பன்மடங்கு அதிகரிக்கும், அத்துடன் கடந்த ஆண்டு வெளிநாட்டு ஆயுத தளவாடங்கள் மற்றும் ஆயுத அமைப்புமுறைகளில் இந்தியாவின் மிகப்பெரிய ஆதாரமாக இருந்த ரஷ்யாவை அமெரிக்கா புறந்தள்ளும். பென்டகன் வேறெந்த நாட்டு இராணுவத்தையும் விட இந்திய இராணுவத்துடன் நிறைய கூட்டு ஒத்திகைகளை நடத்தி உள்ளது.  

புது டெல்லியும் அமெரிக்காவும், “ஒருவரையொருவர் அவர்களின் நெருங்கிய பங்காளிகளாக அதே மட்டத்தில் கையாள" மற்றும் கூட்டு-உற்பத்தி மற்றும் ஆயுத உற்பத்தியைத் தொடங்கவும் அவர்களின் பொறுப்புறுதிக்கு மறுஉத்தரவாதம் அளித்தார்கள்.

"நிபுணர் பரிமாற்றங்கள்", “கூட்டு பயிற்சி மற்றும் ஒத்திகைகள்", “படைத்துறைசாரா மற்றும் இராணுவ உளவு தகவல்களை" பகிர்ந்து கொள்வது உட்பட "இராணுவத்திற்கும் இராணுவத்திற்கும் இடையிலான நட்புறவை" மேற்கொண்டு விரிவாக்குவதன் மீது மற்றும் அவர்களின் கடற்படைகளுக்கு இடையே "கடல்வழி பாதுகாப்பு" மற்றும் "சுதந்திர கடல் போக்குவரத்தை" உறுதிப்படுத்துவதில் அவர்களின் கூட்டுறவை தீவிரப்படுத்துவதன் மீதும் கூட ஒபாமாவும் மோடியும் உடன்பட்டார்கள். இந்திய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஸ்தாபிப்பதிலும் அமெரிக்கா ஓர் ஆக்கபூர்வமான பாத்திரம் வகிக்கும்.

அந்த அறிக்கை இந்தியாவின் "கிழக்கில் செயல்படும் கொள்கை" (Act East policy) மற்றும் அமெரிக்காவின் "ஆசியாவில் மறுசமநிலை" (அதாவது அதன் சீன-விரோத "முன்னெடுப்பு") ஆகியவற்றைக் குறிப்பிடுவதுடன், புது டெல்லியும் வாஷிங்டனும் "பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரப்பாட்டை"—அதாவது, தற்போதைய அமெரிக்க-மேலாதிக்க புவிசார் அரசியல் ஒழுங்கமைப்பைதாங்கிப் பிடிப்பதில் "ஏனைய ஆசிய பசிபிக் நாடுகளுடன் இன்னும் நெருக்கமாக வேலை செய்யுமென" அது குறிப்பிடுகிறது.

இது தொடர்பாக அவ்வறிக்கை, அதன் சொந்த சூறையாடும் நிகழ்ச்சிநிரலைக் கொண்டிருக்கும் ஓர் ஏகாதிபத்திய சக்தியும் மற்றும் அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளியுமான "ஜப்பானுடன்" அவ்விரு நாடுகளின் "முத்தரப்பு பேச்சுவார்த்தையின்" “முக்கியத்துவத்தை அடிகோடிட்டுக் காட்டியது" "மற்றும்" அவற்றின் வெளியுறவு மந்திரிகள் வழக்கமாக முத்தரப்பு கூட்டங்களை நடத்துவதற்கான "வாய்ப்புகள் ஆராயப்படுமென முடிவெடுத்தது." 

இந்தியாவின் "கிழக்கில் செயல்படும்" கொள்கையில் அமெரிக்கா ஒரு ஆக்கபூர்வமான பங்களிப்பாளராக இருந்து வருவதாக பின்னர் மோடி தெரிவித்தார். அந்த கொள்கை பெரிதும் ஜப்பான் மற்றும் ஆசியான் நாடுகளுடனும் இந்தியாவின் பொருளாதார மற்றும் இராணுவ-பாதுகாப்பு உறவுகளை விரிவாக்க நோக்கம் கொண்டிருக்கிறது. இந்த ஆசியான் நாடுகள் ஒருபுறம் பெய்ஜிங்கிற்கும் மறுபுறம் வாஷிங்டன் மற்றும் டோக்கியோவுக்கும் இடையிலான தீவிர பொருளாதார மற்றும் புவிசார்-அரசியல் போட்டியின் விடயமாக உள்ளன.

அந்த அறிக்கையும் சரி, மோடி-ஒபாமா வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையும் சரி இரண்டுமே ஒரு "புதிய பட்டுப் பாதைக்கான" அமெரிக்க திட்டத்திலிருந்து இந்தியாவுக்கு கிடைக்கும் சலுகைகளையும் குறிப்பிட்டுக் காட்டின. அந்த "புதிய பட்டுப்பாதை" திட்டம் மத்திய ஆசியாவை மற்றும் அதன் திரளான எரிசக்தி வளங்களைத் தெற்காசியாவுடனும், இறுதியாக மேற்கிற்குடனும் இணைக்கும் (அவ்விதத்தில் அது ரஷ்யாவைத் துண்டித்துவிடும்).

புது டெல்லியின் மூலோபாய நோக்கங்களை ஆமோதிக்கும் விதத்தில், பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையே உளவுத்தகவல் கூட்டுறவை அதிகரிப்பதன் மீதான கூட்டறிக்கையின் பகுதிகள், பாகிஸ்தானை மையமாக கொண்ட பல இந்திய-விரோத குழுக்களை, அத்துடன் ஹக்கானி வலையமைப்பையும் இலக்கில் வைத்து பெயரிட்டன.

சமீபத்திய வாரங்களில் மோடி பாகிஸ்தான் மீது அழுத்தத்தை இறுக்கி உள்ளார். இந்திய-விரோத "பயங்கரவாதத்தை" எதிர்க்க பாகிஸ்தான் போதியளவுக்கு ஒன்றும் செய்வதில்லை என்ற அடித்தளத்தில், ஐநா பொது நிகழ்வுடன் சேர்ந்து பாகிஸ்தான் பிரதம மந்திரியைச் சந்திக்க மறுத்ததும் அதில் உள்ளடங்கும். இந்த பிரச்சாரத்தின் பாகமாக, ஜம்மு & காஷ்மீரில் உத்தியோகபூர்வமாக சகித்துகொள்ளப்பட்ட இந்திய-விரோத குழுக்களுடன் பாகிஸ்தான் கலந்தாலோசிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென புது டெல்லி முறையிட்டு வருகிறது, ஆனால் அதுபோன்ற தொடர்புகளுக்கு நீண்ட காலத்திற்கு முன்னரே புது டெல்லி அனுமதி வழங்கியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவை இலக்கில் கொண்ட அதன் புதிய போர் கூட்டணியில் சேர அமெரிக்கா இந்தியாவைக் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் இந்தியா மறுத்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மோடி மற்றும் ஒபாமாவுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், இந்திய வெளியுறவு விவகாரங்களுக்கான இந்திய அமைச்சகத்தின் (அமெரிக்காவிற்கான) இணை செயலர் விக்ரம் துரைசாமி கூறுகையில், மத்திய கிழக்கில் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" சம்பந்தப்பட்ட "எந்த கூட்டணியிலும்" இந்தியா இணையாதென தெரிவித்தார்.  

இது ஆச்சரியப்படுவதாக இல்லை. 1947 சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியா அமெரிக்க தலைமையிலான யுத்தத்தில் பங்கெடுத்திருக்கவில்லை என்பதுடன், இப்போதும் அது அவ்வாறு செய்யுமானால் அது உலக புவிசார்அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கும். எவ்வாறிருந்த போதினும், புது டெல்லி அமெரிக்காவிற்கு அதன் மௌனமான ஆதரவை வழங்கியுள்ளது. அனைத்திற்கும் மேலாக, அந்த கூட்டறிக்கை அமெரிக்க போக்கை வெறுக்கும் ஈரானைக் குறித்த ஒரு குறிப்பையும் சேர்த்திருக்கிறது, அதுவாவது, அதன் அணுசக்தி திட்டங்கள் குறித்த அனைத்து ஐநா பாதுகாப்பு அவை தீர்மானங்களுக்கும் ஈரான் அனுசரித்து போக வேண்டும் என்பதாகும்இந்த தீர்மானங்கள் ஜோடிக்கப்பட்ட மற்றும் ஆதாரமற்ற வாதங்களின் அடிப்படையில் இருப்பது குறித்து அங்கே எந்த கவலையும் இல்லை.   

மோடியும் ஒபாமாவும் இந்தோ-அமெரிக்க உறவுகளை "ஒரு புதிய மட்டத்திற்கு" கொண்டு செல்வது குறித்து பேசினார்கள். வாஷிங்டனின் திசையில் இன்னும் அதிகமாக இந்தியா சாய்வதுடன் சேர்ந்து, உண்மையில் இராணுவ-பாதுகாப்பில் துறையில்தான் தான் அவ்வாறு இருக்கின்ற போதினும், அமெரிக்கா கணிசமான புதிய முதலீடுகள் குறித்தோ அல்லது அவற்றின் பொருளாதார சச்சரவுகளின் மீது இந்தியாவுக்கு எந்தவித விட்டுக்கொடுப்புகளை அளித்தோ கைமாறு செய்யவில்லை.   

புதிய உலக வர்த்தக அமைப்பு உடன்படிக்கை மீதான அவர்களின் சச்சரவுகளை அவற்றின் "அதிகாரிகள் அவசரமாக பரிசீலிக்க" அவ்விரு நாடுகளும் வழிநடத்துமென அந்த உயர்மட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதேபோல பொதுத்துறைக்கான அணுசக்தி வர்த்தகம் மீதான அவர்களின் நீண்டகால பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிப்பதற்கு ஒரு புதிய குழுவையும் அவர்கள் அறிவித்தார்கள்

இந்தியா கணிசமான விட்டுகொடுப்புகளை வழங்க இட்டுச் செல்லக்கூடிய, குறிப்பாக மருந்து காப்புரிமைகள் குறித்து, அந்த அறிக்கை குறிப்பிடுகையில், “வருடாந்த உயர்மட்ட அறிவுசார் சொத்துடைமை செயற்குழுவை ஸ்தாபிக்க" அவ்விரு நாடுகளும் "பொறுப்பேற்றிருப்பதாக" குறிப்பிட்டது

அவரது விஜயத்தின் போது மோடி பல வணிக தலைவர்களையும் சந்தித்தார். பல தலைமை செயலதிகாரிகள் நவ-தாராளவாத சீர்திருத்தத்தை முன்னோக்கி கொண்டு செல்ல அழுத்தம் அழுப்பதற்கு மோடி அளித்த வாக்குறுதிக்கு அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். எவ்வாறிருந்த போதினும், எந்த புதிய முதலீடுகளும் அறிவிக்கப்படவில்லை, இந்தியாவை சீனாவுக்கு மாற்றீடாக ஒரு மலிவு-உழைப்பு உற்பத்தி மையமாக மாற்றும் மோடியின் "இந்தியாவில் உற்பத்தி" (Make in India) திட்டத்திற்கு கையெழுத்திடுவதற்கு முன்னதாக, இந்தியாவின் புதிய அரசாங்கம் "பெரு வெடிப்பு" முதலீட்டாளர்-சார்பு சீர்திருத்தங்களுக்கான அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் முறையீடுகளை பூர்த்தி செய்ய அது உத்தரவாதத்தை விரும்புகிறது என கூறி, எந்த புதிய முதலீடுகளும் அறிவிக்கப்படவில்லை. (பார்க்கவும்: “Modi promotes India as world’s sweatshop”) 

மோடி-ஒபாமா உயர்மட்ட சந்திப்புக்கு ஒருநாள் அடுத்து, சீன அரசாங்க ஊதுகுழலான People’s Daily அதன் ஒரு கட்டுரையில், இந்தியா ஒருபோதும் அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பில்" வாஷிங்டனுடன் சேராது என வாதிட்டது. ஏனைய விடயங்களுக்கு மத்தியில், சீன ஜனாதிபதி ஜி'இன் சமீபத்திய இந்திய விஜயத்தின் போது இரண்டு நாடுகளும் ஒரு "நெருக்கமான அபிவிருத்தி பங்காண்மையை" ஏற்படுத்திக் கொள்ள உறுதி செய்திருந்ததாகவும், மற்றும் இந்தியா முன்மொழியப்பட்ட அமெரிக்க தலைமையிலான சீன-விரோத வர்த்தக அணியில், அதாவது பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை, அல்லது TPPஇல் இணைய அழைப்புவிடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டது

இது விரும்பமான ஒரு சிந்தனைதான். இப்போதிருப்பதை போலவே, முன்பைவிட கூடுதலாக வாஷிங்டனை நோக்கிய சாய்வை உபதேசித்து வரும் இந்திய மேற்தட்டு, சீனாவுக்கு எதிரான அதன் ஆக்ரோஷமான மற்றும் இரக்கமற்ற உந்துதலில் அமெரிக்காவை ஊக்கப்படுத்தி வருகையில், இந்த உந்துதல் ஆசிய மற்றும் உலக மக்களுக்கு கணப்பிடமுடியாத விளைவுகளுடன் ஒரு மோதலை உருவாக்க அச்சுறுத்துகிறது.