World Socialist Web Site www.wsws.org |
Afghan factions form power-sharing government ஆப்கான் போட்டிப்பிரிவுகள் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும் அரசாங்கத்தை அமைக்கின்றன
By James Cogan ஒபாமா நிர்வாகத்தினால் பல மாத நிப்பந்தத்தின் பின்னர், இறுதியாக ஆப்கானிஸ்தானின் ஜூன் 14 சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலின் அந்த இரண்டு வேட்பாளர்களையும் ஞாயிறன்று ஒரு சிக்கலான அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை அறிவிக்க நிர்பந்தப்படுத்தியது. அஷ்ரப் ஹானி மற்றும் அப்துல்லா அப்துல்லாவிற்கு இடையிலான ஒப்பந்தத்தின் மூலம் ஹமித் கர்சாய்க்கு பதிலாக அனைத்தையும் ஒன்றிணைக்கும் ஜனாதிபதியாக ஒரு அமெரிக்க பயிற்சி பெற்ற பொருளாதார நிபுணரும், உலக வங்கியின் முன்னாள் அதிகாரி மற்றும் முன்னாள் நிதி மந்திரி ஹானி பதவிப் பிரமாணம் எடுப்பார். ஒரு முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா 2009 மற்றும் 2014 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் போட்டியிட்டார். அவர், இன்னும் தெளிவற்ற முறையில் வரையறுக்கப்பட்ட ஒரு பங்குடன் அரசாங்கத்தின் "தலைமை நிர்வாகியாக" ஆவார். அதாவது அதிக பலவீனமானதாக இருக்கக்கூடும் என்று குறிப்பிடுவதுடன் ஒப்பந்தம் பற்றிய விவரங்கள் இன்னும் தெளிவற்றதாக இருக்கிறது. வாஷிங்டனை பொறுத்தவரை, படைகளின் (SOFA) நிலை குறித்த ஒரு ஒப்பந்தத்தில் ஹானி மற்றும் அப்துல்லா கையெழுத்திடும் தங்களின் பரஸ்பர உறுதி மொழியை நிறைவேற்ற வழி ஏற்படுத்துகிறது. அது ஆண்டு இறுதியில் அமெரிக்க மற்றும் நேட்டோ இராணுவ நடவடிக்கைகளின் உத்தியோகபூர்வ முடிவுக்கு பின்னர் ஆப்கானிஸ்தானில் தண்டனையின்றி அமெரிக்க படைகள் தொடர்ந்து இயங்க உதவும். தனது ஆட்சியின் இறுதி வருடத்தின் போது கர்சாய் இது போன்ற ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். 2001 படையெடுப்பிற்கு பின்னர், பொதுமக்கள் படுகொலையுடன் ஒத்துழைத்த பின்னர், அவர் அமெரிக்க விமான தாக்குதல்கள் மற்றும் சிறப்பு படைகளின் திடீர் தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் உயிரிழப்புக்களின் அளவிற்கு, தான் ஆட்சேபனை தெரிவித்ததாக ஏமாற்றுகரமான முறையில் அறிவித்தார். தனிப்பட்ட முறையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜோன் கெர்ரியின் வழிக்காட்டுதலின் பேரில் ஜூலை பேச்சுவார்த்தைகளின் போது ஒரு அதிகார பகிர்வு ஒப்பந்தத்திற்கான எண்ணம் உருவாக்கப்பட்டது. தேர்தலில் அவரின் வெற்றி என்று கருதப்பட்டதை தில்லுமுல்லு செய்தது என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஒரு ஆட்சி கவிழ்ப்பை நடத்த அச்சுறுத்தி கொண்டிருக்கும் அப்துல்லாவிற்கு ஆதரவான அதிகார தரகர்களுடன் அவசர பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எட்டு மில்லியன் வாக்குகளில் இரண்டு மில்லியன் அளவுக்கு சந்தேகத்துக்கு உரியவையாக இருந்தன என்று அப்துல்லா குற்றம் சாட்டினார். நேரடி மோதலை தடுக்க, ஒரு மறு வாக்கு எண்ணிக்கையிலிருந்து இரண்டு பக்கமிருந்தும், வென்றவருக்கு அதிபர் பதவி அளிக்கவும், தோற்றவர் குறிப்பிட்ட நிறைவேற்று அதிகாரங்களுடன் பிரதம மந்திரி ஆவதற்குமான உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டார். 2016இல் அதிகாரங்களை பகிர்ந்துகொள்வதை நடைமுறைப்படுத்த அரசியலமைப்பு திருத்தப்பட இருக்கிறது. வாக்கு மறுஎண்ணிக்கை பற்றிய இரண்டு மாத பதட்டங்களுக்குப் பின்னர், இறுதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட போவதில்லை என்பதையே ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு அர்த்தப்படுத்தப்படுத்துகிறது. உடனடியாக செப்டம்பர் 29 அன்று எளிமையாக ஹானி அதிபராக பதவி பிரமாணம் எடுத்தக்கொள்ளக் கூடிய சாத்தியம் இருக்கிறது. தலைநகர் காபூலில் ஞாயிறன்று ஒரு கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தில், இத்தகைய ஏற்பாட்டிற்கு ஹானி, அப்துல்லா, கர்சாய் ஒவ்வொருவரும் தங்கள் ஆதரவை அறிவித்தார்கள். ஒபாமா நிர்வாகம் இந்த இழிந்த முடிவை "ஆப்கானிஸ்தானில் ஒற்றுமை மற்றும் அதிகரித்திருக்கும் ஸ்திரத்தன்மைக்கான ஒரு முக்கிய தருணமாக" வரவேற்றது. உண்மையில், கடந்த 2001இல் தலிபான் இஸ்லாமிய ஆட்சியை தூக்கியெறிந்ததை தொடர்ந்து பதின்மூன்று வருட அமெரிக்கா தலைமையிலான ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு காலத்தின்போது ஏற்படுத்தப்பட்ட முழுமையான கைப்பாவை அரசாங்கத்தின் ஸ்திரமற்ற நிலையை ஆதரிப்பதுதான் ஒப்பந்தத்தின் பின்னால் உந்து சக்தியாக இருக்கிறது. மிகப்பெருமளவில் அமெரிக்கர்களாக இருக்கின்ற சர்வதேச பாதுகாப்பு உதவி படை (ISAF) துருப்புக்கள் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆப்கான் இராணுவத்திற்கு முன்னரங்கில் நின்று சண்டையிடும் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. தலிபான் கிளர்ச்சியாளர்கள் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை ஸ்தாபிக்க தங்கள் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர். நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை ஆதாரங்களின் படி 2014இன் முதல் ஆறு மாதங்களில் குறைந்தது 700 தாலிபான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அந்த கால கட்டத்தில் 1,368 அரசாங்கத்தின் போலீஸ் மற்றும் 800 துருப்புகள் கொல்லப்பட்டனர். உதாரணத்திற்கு, பிரிட்டிஷ் படைகள் வருடக்கணக்கில் நடத்திய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட ஹெல்மாண்டின் தெற்கு மாகாணம் பகுதிகளில் பெரும்பாலானவை கிளர்ச்சியாளர்களின் கைகளில் மீண்டும் விழுந்து விட்டன. பொருளாதார ரீதியாக, ஆப்கான் அரசு திவாலாகி இருக்கிறது. காபூலில் இருக்கும் அரசாங்கம் பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கு தேவையான அளவுக்கு கூட போதுமான வருவாயை அதிகரிக்கவில்லை என்று டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது. ஒரு அரசியல் ஒப்பந்தத்திற்கு அழுத்தம் அளிப்பதற்கு ஏதுவாக, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச நிதி உதவிகளையே அது பெருமளவு சார்ந்திருக்கிறது. மற்ற நாடுகளிடமிருந்து பெறப்படும் மேலதிக தொகைகளுடன் ஆண்டுக்கு 5 பில்லியன் டாலருக்கும் 8 பில்லியன் டாலருக்கும் இடையிலான தொகையை வாஷிங்டன் தொடர்ந்து அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பெரும்பாலும் அவை ஹானி மற்றும் அப்துல்லாவினால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் போட்டி உட்குழுக்களின் கைகளுக்குள் செல்லும். ஹானியின் அதிபர் பதவிக்கான பிரச்சாரத்திற்கு தெற்கு மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஏராளமான பஷ்டூன் இனவழி படைத்தளபதிகள் மற்றும் உஸ்பெக் இனவழி செல்வாக்குடைய அப்துல் ரஷிட் டோஸ்டம் ஆகியோரின் ஆதரவு இருந்தது. அவர்கள் அனைவரும் முன்னதாக கர்சாயை ஆதரித்தார்கள். ஏனென்றால் அவர்கள் பெரும்பாலும் தங்கள் பகுதிகளில் தனியாகவே ஆட்சி செய்ய விடப்பட்டிருந்தனர். முன்னாள் வடக்கு கூட்டணியின் அதிகார தரகர்கள்தான் அப்துல்லாவின் முக்கிய ஆதரவுத்தளமாக இருந்தனர். அவர்கள் 1990 மற்றும் 2000களின் ஆரம்பத்தில் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியத்தின் பெரும்பான்மையான தாஜிக் இன பகுதிகளில் இருந்து தாலிபானுடன் சண்டையிட்டார்கள். அமெரிக்க தலைமையிலான படையெடுப்பிற்கு பின்பு, நிலைத்திருக்கும் பொருளாதார அபிவிருத்தி இருந்திருக்கவில்லை. பாரியளவில் நிலையான வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமை ஆகியவற்றை ஆப்கான் மக்கள் எதிர்கொள்கிறார்கள். அதாவது ஹெரோயின் மற்றும் ஓப்பியத்தின் பரவலான ஏற்றுமதியிலிருந்து இலாபங்களுடன் இணைந்த, சர்வதேச பண உதவியின் மிகப்பெரிய பங்கை பறித்து விடுவது, பல்வேறு படைத்தளபதிகள் மற்றும் அதிகார தரகர்களின் வருவாய் அதிகரிப்புக்கான முதன்மையான ஆதாரமாக இருக்கிறது. ஆப்கானிஸ்தான் தற்சமயம் உலகின் 75 சதவிகித அதாவது 5.5 மில்லியன் கிலோகிராம் அளவுக்கு சட்ட விரோத ஓப்பியத்தை தயாரிக்கிறது. ஆப்கனிஸ்தான் மறுநிர்மாணத்திற்கான அமெரிக்க சிறப்பு உயர் ஜெனரலின் மே மாத அறிக்கை ஒன்று இவ்வாறு விமர்சித்துள்ளது: “போதை மருந்து கூடங்கள், சேமிப்பு தளங்கள் மற்றும் பெரிய அளவிலான கடத்தல் வலைப்பின்னல் கிராமப்புற பகுதிகளில் குவிந்து கிடக்கின்றன. ISAF திரும்பப் பெறப்பட இருப்பது மற்றும் இந்த பகுதிகளில் பாதுகாப்பு வீழ்ச்சியடைந்து வருவது போன்ற காரணங்கள் ஆப்கானிய படைகளுக்கு அதிகரித்தளவில் தடையாக இருக்கின்றன.” இந்த மாத ஆரம்பத்தில் ஆப்கனிஸ்தான் மறுநிர்மாணத்திற்கான அமெரிக்க சிறப்பு உயர் ஜெனரலின் ஒரு குற்றம்சாட்டும் உரையில், "ஒரு போதைப்பொருள் குற்றம்மிக்க நாடாக மாறவுள்ள ஒன்றை உருவாக்க அமெரிக்கா 104 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவு செய்திருக்கிறது" என்று அறிவித்தார். எவ்வாறாயினும், வாஷிங்டன் இது போன்ற ஒரு நாட்டுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும். காபூலில் இருக்கும் அமெரிக்காவின் கைப்பாவை அரசாங்கத்திற்கு கூறப்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக தொடர்ச்சியான விமான தாக்குதல்கள், ஆளில்லா விமான தாக்குதல்கள், சிறப்பு படைகளின் நடவடிக்கைகளுக்காக பக்ராம் வான்படைத் தளம் போன்ற இடங்களில் ஒரு 5,000 இலிருந்து 7,000 வலையிலான வலிமையான இராணுவப் படை ஆப்கனிஸ்தானில் தங்கி இருக்கும். முறைப்படியான ஆக்கிரமிப்பு ஒரு முடிவிற்கு வருகையில் ஆப்கானிஸ்தானில் சமூக மற்றும் அரசியல் சூழ்நிலைகள் 2001 படையெடுப்பு, தீவிரவாதத்தை எதிர்ப்பதை ஒருபோதும் நோக்கமாக கொண்டிருக்கவில்லை என்றிருக்கையில் ஆப்கான் மக்களுக்கு ஜனநாயகத்தை கொண்டுவருவதைப்பற்றி கூறத்தேவையில்லை. மூலோபாயம் மற்றும் எரிசக்தி வளம் நிறைந்த மத்திய ஆசிய பகுதியில் ஒரு அமெரிக்க இராணுவத்தின் பாதச்சுவட்டை பதியச்செய்வதை ஒபாமா நிர்வாகம் கைவிடுவதற்கான நோக்கம் எதையும் கொண்டிருக்கவில்லை. |
|