World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை SEP (Sri Lanka) to hold antiwar meeting in Galle, Gampaha and Hatton இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி காலி, கம்பஹா மற்றும் ஹட்டனில் போர் எதிர்ப்பு கூட்டங்களை நடத்தவுள்ளது03 October 2014 இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், அமெரிக்காவின் "ஆசியா நோக்கிய திருப்பமும்" உலகப் போர் அச்சுறுத்தலும் என்ற தொனிப்பொருளில் மத்திய மலையக நகரமான ஹட்டனிலும், தென் நகரான காலியிலும் மற்றும் மேல் மாகாணத்தில் கம்பஹாவிலும் பொதுக் கூட்டங்களை நடத்தவுள்ளன. முதலாம் உலகப் போர் வெடித்து நூறு ஆண்டுகளின் பின்னரும் இரண்டாம் உலகப் போர் வெடித்து 75 ஆண்டுகளின் பின்னரும், அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகள் மீண்டும் மனிதகுலத்தை உலகப் போர்பேரழிவை நோக்கி, அதுவும் இம்முறை அணுவாயுதங்களுடன், இழுத்துச் செல்கின்றன. ஒரு பாசிச தலைமையிலான ஆட்சி கவிழ்ப்பு மூலம், உக்ரேனில் ஒரு அதிவலதுசாரி ஆட்சியை நிறுவிய பின்னர், அமெரிக்காவும் ஜேர்மனியும் ரஷ்யாவை ஒரு அரை காலனியாக குறைக்கும் நோக்கில் அதனுடன் ஒரு மோதலை ஈவிரக்கமின்றி தூண்டி வருகின்றன. மேலும் அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய வல்லரசுகளின் ஆதரவுடன், இஸ்ரேல் காசா பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக ஒரு கொலைகார போரை முன்னெடுத்து, மத்திய கிழக்கில் நிலவும் வெடிக்கும் சூழ்நிலைக்கு மேலும் எண்ணெய் வார்க்கின்றது. நடுநிலை என்ற போர்வையில், இலங்கை மற்றும் இந்தியாவும், பாலஸ்தீனிய போராளிகளின் மட்டுப்படுத்தப்பட்ட தற்காப்பு நடவடிக்கையை இஸ்ரேல் பொதுமக்களை படுகொலை செய்வதுடன் சமப்படுத்துவதன் மூலம் இஸ்ரேலை ஆதரித்தன. இப்போது ஒபாமா நிர்வாகம் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் முயற்சியில் சிரியா மற்றும் ஈராக்கில் அதன் சொந்தவான்வழிப் போரை முன்னெடுத்துள்ளது. ஒபாமா நிர்வாகம் ஆசியா முழுவதும் இராணுவ படைகளை கட்டியெழுப்புவதோடு சீனாவை சுற்றிவளைப்பதை இலக்காகக்கொண்ட கூட்டணிகள் மற்றும் மூலோபாய பங்கான்மை நடவடிக்கைகளை துரிதமாக பலப்படுத்துகின்றது. ஆசியாவில் அமெரிக்காவின் "முன்னிலை", இந்தியா மற்றும் இலங்கை உட்பட ஒவ்வொரு நாட்டையும் நீர்சுழிக்குள் இழுத்துப் போடுகின்றது. போர் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கான ஒரே வழி,முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தை சர்வதேச ரீதியில் ஐக்கியப்படுத்துவதே ஆகும். உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி, ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தைகட்டியெழுப்புவது இன்றைய அவசரமான பணியாகும். சோசக மற்றும்நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதர கட்சிகளும் மட்டுமே இந்த முன்னோக்குக்காகப் போராடுகின்றன. இந்த இன்றியமையா அரசியல் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாட ஹட்டன், காலி மற்றும் கம்பஹாவில் நடக்கும் எமது கூட்டங்களில் பங்குபற்றுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் WSWS வாசகர்களுக்கும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். காலி அக்டோபர் 7, ஞாயிறு, பி.ப. 2 மணி
ஹட்டன் நகர மண்டபம், அக்டோபர் 12, ஞாயிறு, பி.ப.2 மணி
கம்பஹா சனச சிறிய மண்டபம் அக்டோபர் 12, ஞாயிறு, பி.ப. 3 மணி |
|