சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

IYSSE antiwar campaign resonates with workers and youth in Berlin

IYSSE இன் யுத்த-எதிர்ப்பு பிரச்சாரம் பேர்லினில் தொழிலாளர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிர்வலையை உண்டாக்குகிறது

By our correspondents
23 October 2014

Use this version to printSend feedback

ஜேர்மன் இராணுவவாத புத்துயிரூட்டலுக்கு எதிராக சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் (IYSSE) பிரச்சாரம், பேர்லினில் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தைக் கண்டுள்ளது.

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (Partei für Soziale Gleichheit—PSG) இளைஞர் அமைப்பான IYSSE, இன்று வியாழனன்று ஒரு கூட்டத்தை நடத்தவுள்ள, அது பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழக மாணவர்களுடன் மட்டும் உரையாற்றவில்லை, மாறாக தொழிலிடங்கள், வேலைவாய்ப்பின்மை அலுவலகங்கள் மற்றும் வயதுவந்தோருக்கான கல்வி அமைப்புகளின் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடனும் உரையாற்றியது.

தொழிலாளர்களுக்கு எவ்வித ஆதரவும் கொடுக்காமல் திருப்பி அனுப்பி வைக்கும் அதிகாரத்துவத்திற்கு எதிராக, அவர்கள் சக்தியற்றவர்களாக இருப்பதாக உணர்வதால், தொழிலாளர்கள் மிகப் பெரும்பாலும் வேலைவாய்ப்பின்மை அலுவலகத்தில் விரக்தியோடு அகலாதிருப்பார்கள். இருந்தபோதினும், வேலைநீக்கத்திலிருந்த பல தொழிலாளர்களும் யுத்தத்திற்கு எதிரான பிரச்சாரம் குறித்து கேட்க நின்றிருந்தனர். பலர் ஜேர்மன் இராணுவவாதத்திற்கு திரும்புதலும் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும் என்பதன் நகல்களை வாங்கியதுடன், அவர்கள் அக்கூட்டத்தில் பங்கெடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

நிக்கோ என்ற ஒரு தொழிலாளர், பேர்லின் மாவட்டத்தில் உள்ள Wedding என்ற இடத்து வேலைவாய்ப்பின்மை அலுவலகத்திலிருந்து பெயர் நீக்கம் செய்திருந்த இவர், இராணுவவாதம் மற்றும் சமூக வேலைத்திட்டங்கள் மீதான தாக்குதல்களுக்கு இடையிலான தொடர்பைக் குறித்து கருத்துக் கூறினார். “அவர்கள் இராணுவத்தைக் கட்டமைக்கிறார்கள் என்றால், அது கல்வி மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கான ஆதரவிலிருந்து இன்னும் நிறைய பணத்தை எடுக்கும்," என்றார்.

ஓராண்டுக்கு முன்னர் அவரது அடுக்குமாடி கட்டிட புதிய உரிமையாளர்கள் கட்டிடத்தைப் புதுப்பித்த பின்னர் வாடகையை உயர்த்தியதும் அவர் அதில் குடியிருக்க முடியாமல் போனதாக விவரித்தார். முதலில் அவர் நண்பர்களுடன் சேர்ந்து வசித்து வந்ததாகவும், ஆனால் அவர் வேலை இழந்ததும், அவரது நண்பர்கள் வட்டாரமும் சுருங்கிப் போனதாக அவர் தெரிவித்தார்.

அதுவொரு நச்சுத்தனமான வட்டம்" என்றார். “கொடுப்பதற்கு என்னிடம் எந்த நிலையான முகவரியும் இல்லை, ஏனென்றால் என்னால் ஒரு நண்பரின் முகவரியையோ அல்லது வீடில்லாமல் தற்காலிக தங்குமிடங்களின் முகவரியையோ அதிகாரிகளிடம் பதிவு செய்ய முடியாது. ஒரு நிலையான இருப்பிடம் இல்லாமல், என்னை யாரும் வேலைக்கும் எடுக்க மாட்டார்கள். அதேசமயத்தில் ஒரு பாதுகாப்பான வருமானத்தில் ஒரு வேலை இருப்பதை நான் காட்டாமல் போனால், வீட்டுக்கு சொந்தக்காரர் யாரும் எனக்கு ஒரு வீட்டை வாடகைக்குத் தர மாட்டார்," என்றார்.

சமூகநல அலுவலகம் ஒரு வசிப்பிடத்தை வழங்காதா எனக் கேட்ட போது, இல்லை கிடைக்காது என்றவர் பதிலளித்தார். “அங்கே அதிகளவில் தேவை கொண்டவர்கள் நிறைய பேர் இருப்பதாகவும், அவர்களுக்கு முதலில் கொடுக்க வேண்டுமென்றும் தான் அவர்கள் எப்போதும் கூறுகிறார்கள்". “சிலகாலத்திற்குப் பின்னர் நானும் அதை விட்டுவிட்டேன். மக்கள் குற்றகரமான நிலைமைக்குள் தள்ளப்படும் போது, அவர்கள் ஆச்சரியப்பட வேண்டியதே இல்லை. எப்போதெல்லாம் அது நடக்கிறதோ, அங்கே பெரிய அலறல் கேட்கிறது, அவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்," என்றார்.

ஒரு வேலை மற்றும் ஒரு நல்ல வருமானத்தை சமூக உரிமையாக பாதுகாக்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடித்தளத்தில் தொழிலாளர்களை சர்வதேசரீதியில் ஐக்கியப்படுத்த முனையும், ஒரு இளைஞர் அமைப்பு மற்றும் கட்சி இருப்பதைக் குறித்து நிக்கோ சாதகமான விடையிறுப்பை வெளிப்படுத்தினார்.

மற்றொரு வேலைநீக்கப்பட்ட தொழிலாளரான ஏவாவும், ஐரோப்பா முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சிக்கன நடவடிக்கைகளுக்கும் மற்றும் யுத்த தயாரிப்புகளுக்கும் இடையிலான தொடர்பைக் குறித்துக் காட்டினார். அவர் ஊடகங்களின் ஒருதலைபட்சமான செய்திகளால், அதுவும் குறிப்பாக உக்ரேனிய மோதல் குறித்தவற்றால் பெரிதும் அதிர்ச்சி அடைந்திருப்பதாக தெரிவித்தார்.

எவ்வித உதவியும் பெறாமல் அவரும் Wedding வேலைவாய்ப்பின்மை அலுவலகத்திலிருந்து வெறியேறிக் கொண்டிருந்தார். “பேர்லினின் ஒரு பள்ளிக்கூடத்தில் எனக்கு ஒரு நல்ல வேலை இருந்தது," என்றவர் தெரிவித்தார். “கல்வி கற்பதில் மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் குழந்தைகளுக்கு உதவுவதே என்னுடைய வேலையாக இருந்தது. தங்களைத்தாங்களே மிகத் தெளிவாக வெளிப்படுத்த அவர்களுக்கு கற்பிக்க மற்றும் படிப்பிக்க குழந்தைகளுக்கு உதவுவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஆனால் பின்னர் பேர்லின் செனட்டால் ஒப்புதல் வழங்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளின் பாகமாக என்னுடைய வேலை பறிபோனது, இதுவரையில் என்னால் ஒரு புதிய வேலையைப் பெற முடியவில்லை," என்றார்.

அவரது பழைய பள்ளிக்கூட தலைமையாசிரியர் மருத்துவ விடுப்பில் இருப்பதாகவும், பிரதியீடு செய்துள்ள தலைமையாசிரியர் ஒரு சான்றாதாரம் வழங்க மறுத்துவிட்டதால், புதிய வேலைக்கு விண்ணப்பிப்பதிலும் அவருக்கு சிக்கல் நிலவுவதாக தெரிவித்தார். “என்னால் வழங்கக்கூடிய உதவிகள், நிஜமாகவே நிறைய குழந்தைகளுக்கு தேவைப்படுவதைப் பார்க்கும் போது, அது மிகவும் நிலைகுலைய செய்துவிடுகிறது. பள்ளிக்கூட நிர்வாகமும் செனட்டும் வேலைகளை வெட்டி வருகின்றபோதிலும், அவை குறைந்தளவிலான எதிர்ப்பையே எதிர்கொள்ளக்கூடும்."

பேர்லினின் மிகப்பெரிய சுறுசுறுப்பான வியாபார வளாகமான டெம்பெல்ஹோபெர் ஹாபெனுக்குள் நுழையும் பல தொழிலாளர்கள், நடைபெறவிருக்கின்ற கூட்டத்தில் பங்குபெற கோரும் துண்டறிக்கைகளை வாங்க, IYSSEஇன் தகவல் மேசையின் முன்னால் நின்றிருந்தார்கள். பலர் ஊடக செய்திகளின் மீது அவர்களின் கோபத்தை வெளிப்படுத்தியதோடு, PSG தீர்மானத்தின் நகல்களையும் வாங்கினர். உக்ரேன் மீதான தொலைக்காட்சி செய்தியின் வலதுசாரி குணாம்சத்தை மிதவாத தேசிய ஒளிபரப்பு கவுன்சிலே விமர்சித்திருந்ததன் மூலமாக அதை அறிந்திருந்ததாக ஒரு தம்பதியினர் தெரிவித்தனர்.

வயதுவந்தோருக்கான கல்வி பள்ளிக்கூடங்களில், பல மாணவர்கள் IYSSEஇன் துண்டறிக்கைகளைப் பெற்றதுடன், யுத்த முனைவுக்கு எதிரான இந்த பிரச்சாரத்தில் அவர்களின் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினர். பேர்லினின் Neukölln மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் ஒரு மாணவர் மிக்கைல் WSWS ஆதரவாளர்களை அணுகியதோடு, அவரது நண்பர்களுக்கும் தெரிவித்தார்: “WSWS ஒரு நல்ல செய்தி வலைத் தளம், அதை நீங்கள் எப்போதும் வாசித்து வர வேண்டும். நான் அதை வழக்கமாக வாசிக்கிறேன், அரசியல் சம்பவங்களைக் குறித்த பகுப்பாய்வுகள் மிகவும் சிறப்பாக இருப்பதாக உணர்கிறேன்," என்றார்.

ஜேர்மன் ஊடகங்களில் சமீபத்தில் அதிகளவில் பேசப்பட்ட ஜேர்மன் இராணுவத்தின் பழுதுபட்ட ஆயுதங்களைக் குறித்த விவாதத்தின் மீது அவர் தமது கருத்துத் தெரிவித்தார்: “அதை அவர்கள் இப்போது தான் கண்டுபிடித்தார்களா என்ன! அவற்றை குறித்து அவர்களுக்கு நீண்டகாலத்திற்கு முன்பே தெரியும். ஆனால் இப்போது அவர்களுக்கு ஒரு விவாதம் தேவைப்படுகிறது, ஏனென்றால் அதன்மூலமாக இராணுவ செலவினங்களை மக்கள் ஒப்புக்கொள்ள செய்ய முடியுமல்லவா. கோபானியில் மனிதாபிமான நெருக்கடி குறித்த செய்திகள், ஆயுத ஏற்றுமதியை மற்றும் அன்னிய நாட்டில் ஓர் இராணுவ தலையீட்டை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது," என்றார்.

யுத்தத்திற்கு எதிராக மக்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதால், IYSSEஇன் இந்த இராணுவவாதத்திற்கு எதிரான கூட்டத்தை அவர் மிக முக்கியமானதாக பார்ப்பதாக தெரிவித்தார்.