தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
OPEC decision a shot in oil price war எண்ணெய் விலை போரில் OPECஇன் முடிவு ஒரு பலத்த அடியாகும்
By Nick Beams Use this version to print| Send feedback சவூதி அரேபியா தலைமையில் உள்ள சர்வதேச எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பான OPECஇன் நேற்றைய அறிவிப்பு, அதாவது சரிந்து வரும் எண்ணெய் விலைகளை முகங்கொடுத்துள்ள நிலையில் உற்பத்தியைக் குறைக்கப் போவதில்லை என்ற முடிவு, உலகளாவிய நிதியியல் அமைப்புமுறையில் சாத்தியமான முக்கிய துணை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுடன், எரிசக்தி தொழில்துறையின் மீது ஒரு கடுமையான தாக்கத்தைக் கொண்டிருக்கும். OPEC நாளொன்றுக்கு 30 மில்லியன் பேரல்கள் அளவுக்கு உற்பத்தியை பராமரிக்க வேண்டும் என்ற செய்தி வந்த உடனேயே, எண்ணெய் விலை கூடுதலாக 8 சதவீதம், பேரலுக்கு சுமார் 70 டாலர்கள் என்றளவிற்கு சரிந்தது. இது ஜூன் மாதத்திற்குப் பின்னர், மொத்த வீழ்ச்சியை ஏறத்தாழ 40 சதவீதத்திற்குக் கொண்டு வந்துள்ளது. சரிவடைந்துவரும் எண்ணெய் விலை இரண்டு காரணிகளின் ஒரு விளைபொருளாகும்: ஒன்று ஷெல் வாயு அகழ்விலிருந்து அமெரிக்க உற்பத்தி அதிகரிக்கப்பட்டமை, அடுத்தது, சரிந்துவரும் வளர்ச்சி மற்றும் உலக பொருளாதாரத்தின் பெரும்பகுதியில் நிலவும் தேக்கநிலை, இது தேவை குறைவுக்கு இட்டுச் சென்றுள்ளது. விலை வீழ்ச்சி சவூதி தலைமையிலான நடவடிக்கையுடன் சேர்ந்து கொள்கிறது, அந்நாடு தெளிவாக அமெரிக்க ஷெல் எண்ணெய் தொழில்துறைக்கு குழிபறிக்க திரும்பியுள்ளது. இந்த முடிவின் மிக உடனடி விளைவுகள் வெனிசூலா, அல்ஜீரியா மற்றும் ஈரானில் உணரப்படும், இவையனைத்தும் OPEC நாடுகள், அந்த அரசாங்கங்களின் வருவாய்கள் பேரலுக்கு சுமார் 100 டாலர்கள் என்றளவில் இருப்பதைச் சார்ந்துள்ளன, 2011இல் இருந்து ஜூனில் வீழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் வரையில் அவை அதில் தான் தங்கியிருந்தன. வெனிசூலாவும் அல்ஜீரியாவும் நாளொன்றுக்கு சுமார் 2 மில்லியன் பேரல்கள் அளவுக்கு OPEC உற்பத்தியை வெட்ட வேண்டுமென அழுத்தம் அளித்து வந்தன. ஒரு OPEC உறுப்பு நாடல்லாத ரஷ்யாவும் கடுமையாக பாதிகப்படக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது. அதன் பொருளாதாரம் மீதான தடைகள் அதற்கு குறிப்பிட்டளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதுடன் சேர்ந்து, ரஷ்யா அதன் வரவு-செலவு திட்டத்தை சமநிலையில் வைத்திருக்க, அதற்கு எண்ணெய் விலை பேரலுக்கு $80 மற்றும் $100க்கு இடையே இருப்பது அவசியமாகிறது. விலை வீழ்ச்சிக்கு சவூதி காட்டிய எதிர்நடவடிக்கை, 2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்கு விடையிறுப்பாக இருந்த அதன் நடவடிக்கைகளுக்கு முற்றிலும் முரண்பட்டதாகும். அப்போதும் அங்கே எண்ணெய் விலைகள் சரிந்து வந்தபோது, அது உற்பத்தி வெட்டுக்களைச் செய்யும் வழியில் வழிநடத்திச் சென்றது, அதன் விளைவாக 2011இல் விலைகள் பேரலுக்கு 100 டாலரை கடந்து உயர்ந்தன. அப்போதிருந்து எரிசக்தி சந்தைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நடந்துள்ளன. அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு, அதை ஒரு எரிசக்தி இறக்குமதியாளர் சந்தையிலிருந்து பெரிதும் வெளியே கொண்டு வந்துள்ளது. 2005இல் 60 சதவீதமாக இருந்த இறக்குமதியுடன் ஒப்பிடுகையில், அடுத்த ஆண்டு அமெரிக்க திரவ எரிபொருள் இறக்குமதி நுகர்வு 21 சதவீதம் மட்டுமே இருக்குமென அனுமானிக்கப்படுகிறது. ஆனால் எண்ணெய் விலைகள் பேரலுக்கு சுமார் 80 டாலருக்கு அதிகமாக இருந்த போதுதான், அந்த விலையுயர்ந்த ஷெல் எண்ணெய் அகழ்வு தொழில்துறையின் விரிவாக்கம் அதிகரிக்கப்பட்டது. விலைகள் அந்த மட்டத்திற்குக் கீழே வீழ்ச்சி அடைய தொடங்கினால், சிறிய உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சந்தை ஆய்வாளர்கள் பலருடைய கருத்துப்படி, விலையை உயர்த்துவது மேற்கொண்டும் அமெரிக்காவின் உற்பத்தியை அதிகரிக்க மட்டுமே செய்யுமென்று கருதியதால் தான் சவூதியர்கள் உற்பத்தியைக் குறைக்க முடிவெடுக்கவில்லை. அமெரிக்கா உற்பத்தியை அதிகரிப்பதென்பது உலகளாவிய சந்தைகளில் OPEC அதன் பங்கை இன்னும் அதிகமாக இழக்கச் செய்கிறது. உண்மையில், அமெரிக்க தொழில்துறையைப் பாதிக்கச் செய்வதற்காக மேற்கொண்டும் விலையைக் குறைக்கும் அதிரடி நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். இது இரும்பு எஃகு சந்தையில் பின்பற்றப்படும் ஒரு தந்திரோபாயமாகும், அத்துறையில் BHP-பில்லிடன் மற்றும் ரியோ டின்டோ போன்ற மலிவு-விலை உற்பத்தியாளர்கள், சந்தை வீழ்ச்சி அடைந்து வரும்போதும் கூட, விலையுயர்ந்த உற்பத்தியாளர்களைத் தடுக்க நிர்பந்திக்கும் நம்பிக்கையில், உற்பத்தி அளவுகளை உயர்த்தி வருகின்றன. அந்த முடிவு குறித்த பல கருத்துரைகளில், சவூதி நடவடிக்கைகளின் ஆக்ரோஷமான உள்நோக்கமே மையப்புள்ளியாக இருந்தது. அங்கே குறைந்தபட்சம் $60க்கு குறைந்தாலுமே கூட, அந்தவொரு சந்தை விலையையும் OPEC ஏற்க வேண்டி இருக்குமென குவைத் எண்ணெய் மந்திரி அலி சலாஹ் அல்-ஒமெர் தெரிவித்தார். ஏனையவர்கள் அதையும் விட அதிகமாக அப்பட்டமாக இருந்தனர். “வரவிருக்கும் ஆண்டுகளில் $80க்கு கூடுதலான விலையில் இன்னும் ஸ்திரமாக அமைப்பதற்காக, குறுகிய காலத்திற்கு பேரலுக்கு $60 என்றளவுக்கு எண்ணெய் விலைகளைக் குறைக்க வேண்டியிருக்கிறதென்ற யோசனையை சவூதி அரேபியா கொண்டு செல்கிறது என்று தான் இதை நாம் விளக்கப்படுத்துகிறோம்," பெட்ரோமேக்ஸ் கன்சல்டன்சியின் ஓலிவர் ஜேகோப் ராய்டருக்குத் தெரிவித்தார். “வேறுவார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்காவின் அபிவிருத்தி திட்டங்களை மெதுவாக்குவதற்காக சிறிது காலத்திற்கு OPEC எண்ணெய் விலைகளைக் குறைத்து வைக்கும் ஆர்வத்தில் இருக்க வேண்டும்." OAO Lukoilஇன் துணை தலைவரும், ரஷ்ய எண்ணெய் நிறுவன வர்த்தக அதிபருமான லியோனிட் ஃபெடுன் கூறுகையில், OPEC கொள்கை அமெரிக்க ஷெல் தொழில்துறையின் ஒரு பொறிவை உறுதிப்படுத்தும். பேரலுக்கு சுமார் $70 என்ற இன்றைய விலையில் அகழ்ந்தெடுப்பதென்பது பல உற்பத்தியாளர்களை இலாபமில்லா நிலைமைக்கு நெருக்கமாக கொண்டு வருவதாக தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில், OPECஇன் நோக்கமே "அமெரிக்க சந்தையைத் துடைத்தழிப்பது தான்", அங்கே ஷெல் வளர்ச்சி டாட்.காம் குமிழிக்கு நிகராக உள்ளது என்றார். பேரலுக்கு 80 டாலரை விட குறைந்த விலையில் இருந்தால் அமெரிக்காவில் உள்ள 12 மிகப்பெரிய ஷெல் எண்ணெய் பேசின்கள், அதாவது சுமார் 80 சதவீதம், பெரிதும் இலாபமற்றதாகிவிடும் என்று ஜேபி மோர்கன் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் ஓர் ஆய்வு அறிவித்திருந்தது. எவ்வாறிருந்த போதினும், உயர்செலவு கொண்ட அமெரிக்க ஷெல் உற்பத்தியாளர்களைத் துடைத்தெறியும் முனைவு, உலகளாவிய நிதியியல் சந்தைகளில் நீண்டகால விளைவுகளைக் கொண்டிருக்கும். அமெரிக்காவினது எரிசக்தி திட்டங்களுக்கு பெருமளவில் உயர்-அபாய அல்லது பெருமதிப்பற்ற கடன்பத்திர (junk bonds) வெளியீடுகளில் இருந்து நிதியளிக்கப்பட்டுள்ளன. 2010இல், எரிசக்தி பொருட்களது நிறுவனங்கள் அமெரிக்க உயர் இலாப குறியீட்டு பட்டியலில் 18 சதவீதமாக இருந்தன, இது துணை முதலீடு தரத்தில் கடன் பெறுபவர்கள் என்றழைக்கப்படுபவர்களை அளவிடுவதாகும். அகழ்வு நிறுவனங்கள் வாங்கிய பாரிய கடன்களின் விளைவாக இன்று அவை 29 சதவீதமாக உள்ளன. எண்ணெய் விலைகள் பேரலுக்கு 60 டாலர் அளவுக்கு வீழ்வது பெரிதும் சாத்தியமாக கூடியதே என்ற நிலையில், அவ்வாறு நிகழ்ந்தால், அங்கே அமெரிக்க கடன் பெறுவோர் சிலரின் மத்தியில் அதிகபட்சமாக 30 சதவீதம் அளவுக்கு வாராக்கடன் விகிதம் (default rate) ஏற்படக்கூடுமென ஜேர்மன் வங்கியின் ஆய்வு எடுத்துக்காட்டியது. பிரிட்டிஷ் Telegraphஇல் இந்த மாத தொடக்கத்தில் பிரசுரிக்கப்பட்ட ஒரு அறிக்கை இவ்வாறு எச்சரித்தது: “அமெரிக்காவில் அதிக எண்ணெய் வழங்குவதற்காக நெருக்கித் தள்ளிக்கொண்டு ஓடிய ஓட்டம், பயங்கர கொந்தளிப்பு மிகுந்த பிரிவான பெருநிறுவனங்களுக்கான கடன்வழங்கு சந்தையில் ஓர் அபாயகரமான கடன் குமிழியை உருவாக்கி உள்ளது, அது உலகின் அந்த மிகப்பெரிய பொருளாதாரத்திற்கு ஒரு பரந்த அமைப்புரீதியிலான அபாயத்தை முன்னிறுத்தக்கூடும்." பிரதான வங்கிகள் மீது எண்ணெய் விலை வீழ்ச்சியின் தாக்கத்திற்கு சான்று, நேற்றைய பைனான்சியல் டைம்ஸில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் வெளிப்படையாக வெளிச்சத்திற்கு வந்தது. “எண்ணெய் விலையின் கடுமையான வீழ்ச்சி எவ்வாறு அந்த பரந்த பொருளாதாரத்தின் மூலமாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது என்பதற்கு அறிகுறியாக,” இரண்டு பிரதான வங்கிகள், பார்க்லே மற்றும் வேல்ஸ் ஃபார்கோ ஆகியவை, “இரண்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கு அளித்த $850 மில்லியன் கடன்கள் மீது சாத்தியமான அளவுக்கு கடுமையான இழப்புகளை" முகங்கொடுக்கின்றன என்று அது எழுதியது. பேங்க் ஆஃப் அமெரிக்கா மெர்ரில் லின்ச் உயர்-இலாப குறியீட்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள 180 இடர்பாட்டில் சிக்கியுள்ள பத்திரங்களில், சுமார் 52, அல்லது சுமார் 29 சதவீதம், எரிசக்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டிருந்தன என்பதையும் அவ்வறிக்கை குறிப்பிட்டது. உலகின் எஞ்சிய பகுதிகள் தேக்கநிலையையோ அல்லது பின்னடைவையோ அனுபவித்து வருகின்ற அதேவேளையில், அமெரிக்க பொருளாதாரம், ஆக்கபூர்வமாக மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலமாக, எவ்வாறு பலத்தோடு முன்னோக்கி செல்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமெரிக்காவில் ஷெல் எண்ணெய் உற்பத்தி உயர்வு புகழ்ந்துரைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் மற்றொரு பிரதான நிதியியல் நெருக்கடிக்கு ஆதாரமாக திரும்பக் கூடும். |
|
|