தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
This week in history: November 10-16 வரலாற்றில் இந்த வாரம்: நவம்பர் 10-1610 November 2014 Use this version to print| Send feedback 25 ஆண்டுகளுக்கு முன்னர்: நிக்கரகுவா சமாதானப் பேச்சுவார்த்தைகள் கிளர்ச்சியாளர்களால் இடைநிறுத்தப்பட்டது
1989 நவம்பர் 15, அமெரிக்க ஆதரவுடைய கிளர்ச்சியாளர்களின் தலைவர்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரியதால் நியூ யோர்க்கில் நடந்த நிகரகுவா பேச்சுக்கள் குழம்பிப்போயின. சான்டினிஸ்டா தலைவர் டானியல் ஒர்டேகா ஆரம்பித்து வைத்த இந்த பேச்சுக்கள், நியூயோர்க் நகரில் புதிய ஐ.நா கட்டிடத்தில் நவம்பர் 9 தொடங்கின. நிக்கரகுவா அரசாங்க இராணுவத்துக்கும் கான்ட்ரா என அறியப்படும் எதிர்ப்புரட்சிகர படைகளுக்கு இடையே நிலவிய 19 மாத போர்நிறுத்தம் நவம்பர் 1 முடிவுக்கு வந்தது. "எங்கள் மக்களை படுகொலை செய்யும் கான்ட்ராக்கள் மீது பதிலடி கொடுக்கத் தேவையான அனைத்து படைகளையும்" சான்டினிஸ்டாக்கள் பயன்படுத்துவர் என ஒர்டேகா அறிவித்தை அடுத்தே போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. அதே நேரத்தில், அவர் சர்வதேச பேச்சுவார்த்தைகளை முன்மொழிந்தார். முதல் நாள் பேச்சுக்களில், "நாம் நிறுத்த, அவர்கள் சுடுவதை அர்த்தப்படுத்தும் ஒரு தலைப்பட்சமான போர்நிறுத்தத்தை நாம் இனிமேலும் அறிவிக்க மாட்டோம்", என நிக்கரகுவா வெளியுறவு அமைச்சர் மிகுவல் டி’எஸ்கோடோ கூறினார். அரசாங்கம் ஒரு 15 அம்ச அமைதி திட்டத்தை முன்வைத்தது. அதில், ஆயுத இறக்குமதியை ஏற்றுக்கொள்வது நிறுத்துவதற்கு சன்டினிஸ்டாக்கள் கொடுத்த வாக்குறுதி மற்றும் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட கிளர்ச்சியாளர்களுக்கு ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் திட்டங்களும் அடங்கும். அமெரிக்க ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள், அதேபோல் செயலாளர் நாயகம் சேவியர் பெரேஸ் டி கியுல்லர் கீழான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும், போர்நிறுத்தம் கைவிடப்பட்டது பற்றி "தீவிர கவலையை" மோசடித்தனமாக வெளிப்படுத்தின. கான்ட்ராக்கள் வாஷிங்டனின் உத்தரவு இல்லாமல் எதுவும் செய்யவில்லை என்று தெரிந்துகொண்ட ஒர்டேகா, அமெரிக்காவையும் அதேபோல் கான்ட்ராவை கலைத்துவிட ஏதும் செய்யாமல் அதைக் கலைக்கவேண்டும் எனக் கூறிக்கொண்ட பிராந்தியத் தலைவர்களையும் கண்டனம் செய்தார். விவசாயிகள் சமூகங்கள் மீது தாக்குதல்கள் நடத்த தெற்கு நிகரகுவாவைக் கடந்து, ஹோண்டுராஸ் அயல் பகுதிகளில் கான்ட்ராக்கள் தளங்களை அமைத்திருந்தனர். 1989 ஆகஸ்டில், ஐந்து மத்திய அமெரிக்க ஜனாதிபதிகள் கான்ட்ராக்கள் கலைக்கப்படுவதற்கும் டிசம்பர் 5ம் திகதியை காலக் கெடுவாக வைத்து டெலே உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். மறுபுறம் அமெரிக்க, 1990 பெப்ரவரி மூழுவதும் விநியோகிகப்படுவதற்காக கான்ட்ராக்களுக்கு 49.7 மில்லியன் டாலர்கள் "மனிதாபிமான உதவிக்கு" ஒப்புதல் அளித்தது. நவம்பர் 15 மாலை, கான்ட்ராக்கள் திடீரென பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்த அழைப்பு விடுத்தனர். பேச்சுக்களின் போது சன்டினிஸ்டாக்களுக்கான பேச்சாளராக செயற்பட்ட அமெரிக்க வழக்கறிஞர் போல் ரீச்லெர், பேச்சுவார்த்தைகளை இயக்குவதற்காக முந்தைய வாரத்தில் கான்ட்ராக்ளால் அமைக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட குழுவான, சிவிக் இராணுவ கமிஷனிடம் இருந்து பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொள்ள திடீர் கட்டளையை பெற்றது என்று கூறினார். தளபதி பிராங்கிளின் என அழைக்கப்படும் அதன் தளபதி இஸ்ரேல் கலேனோ, ஒரு அடையாளம் தெரியாத மாநில துறை அதிகாரியின் நிறுவனத்தில் பேச்சாவார்த்தை நடத்தப்பட்ட கட்டிடத்திற்குள் நுழைவதை காணக் கூடியதாக இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்னர்: சிரிய எல்லையில் இஸ்ரேல் மோதலைத் தூண்டியது
1964ல் இந்த வாரம், இஸ்ரேலும் சிரியாவும் ஒரு தொடர் எல்லை மோதல்கள் ஈடுபட்டன. கலிலேயா கடலின் வடக்கு எல்லைப் பகுதியிலும் ஜோர்டான், பனியஸ் மற்றும் ஹஸ்பனி ஆகிய மூன்று மூலோபாய ஆறுகளுக்கு அருகிலும் நவம்பர் 13 தொடங்கிய சண்டையில் ஏழு சிரிய படையினர் மற்றும் மூன்று இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர். நவம்பர் 14, இஸ்ரேல் சிரியா மீது ஒரு முழு அளவிலான தாக்குதலை நடத்த இந்த மோதலைப் பயன்படுத்தக் கூடும் என்ற கவலைகளின் மத்தியில், "சிரிய அராபிய குடியரசிற்கு எதிரான சமீபத்திய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை" விசாரிக்க வேண்டும் எனக் கோரி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு சிரியா ஒரு அவசர கடிதத்தை வெளியிட்டது. ஐநாவுக்கான சிரியாவின் தலைமை பிரதிநிதி ரபிக் ஆஷா, "கவனமாக திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையில்" இஸ்ரேலிய போர் விமானங்கள் சிரிய கிராமங்களை துவம்சம் செய்வதோடு நாபாம்களை (napalm-தோலில் ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்ட எரியும் திரவம் அடங்கிய குண்டு) வீசி எரிப்பதாக குற்றம் சாட்டினார். ஒரு இஸ்ரேலிய எல்லை ரோந்து வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து மோதல்கள் தொடங்கியதாக சிரியா மீது இஸ்ரேல் குற்றம் சாட்டி பதிலளித்த போதும், குறிப்பாக ஆரம்ப தாக்குதல்களின் பின்னர் மோதல்கள் இஸ்ரேலில் அன்றி சிரியாவிற்குள்ளேயே நடந்ததால், அதிகளவிலான ஆதாரங்கள் டெல் அவிவ்வை சுட்டிக் காட்டின. பாதுகாப்பு சபை நவம்பர் 16 இருதரப்பையும் விசாரித்ததோடு ஐ.நா. போர்நிறுத்தம் மேற்பார்வை அமைப்புக்கான ஆராய்வுகளை மேற்கொள்ளுமாறு நோர்வேயின் லெப்டினென்ட் ஜெனரல் ஒட் புல்லை நியமித்தது. இறுதியில் மோதலுக்கான பழியை இருதரப்பு மீதும் சுமத்திய பாதுகாப்பு சபை தீர்மானமானது, சிரிய வான்பகுதிக்குள் இஸ்ரேலிய போர் விமானங்கள் நுழைவதை கவனிக்கத் தவறிவிட்டது. சிரியாவை ஆதரித்த சோவியத் ஒன்றியம் தீர்மானத்தை தடுத்துவிட்டது. 1948 அரபு-இஸ்ரேல் போரானது இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையே உருவாக்கப்பட்ட ஐ.நா. மேற்பார்வையிலான படைகளகற்றப்பட்ட வலயத்தை ஸ்தாபித்ததுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எனினும், இஸ்ரேலானது அரபு விவசாயிகளை வெளியேற்றி அதன் சொந்த குடியிருப்புக்களை கட்டியெழுப்புவதன் மூலம், இந்தப் பிராந்தியத்தை விழுங்குவதை ஒரு முறைசாரா கொள்கையாக ஆக்கிகொண்டது. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மோஷே தயான் வார்த்தைகளில், “எதிரி விரக்தியடைந்து அதை எங்களுக்கு கொடுக்கும் வரை, சில பிரதேசங்களை கைப்பற்றி வைத்துக்கொண்டிருப்பதன்” மூலம் “ஒரு போரை விட குறைந்த இராணுவ நடவடிக்கைகளுடன் யுத்த நிறுத்த உடன்பாட்டு விதிகளை” திருத்தி அமைப்பதாகும். 75 ஆண்டுகளுக்கு முன்னர்: சோவியத் இராணுவம் பால்டிக் குடியரசுக்குள் நகர்ந்தது
1939 நவம்பர் 14, ஸ்ராலின் மற்றும் அவருடைய வெளியுறவு மந்திரி மொலோடோவ்வினாலும் அந்த சிறிய நாட்டின் மீது சுமத்தப்பட்டுள்ள ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பால்டிக் அரசான லித்துவேனியாவுக்குள் செம்படை பிரிவுகள் நகர்த்தப்பட்டது. இறுதியில் லித்துவேனியாவில் நிலைகொண்டுள்ள செம்படை துருப்புக்கள் 20,000 வரை பெருகவிருந்தது. பேச்சுவார்த்தைகளின் போது, சோவியத் இராணுவத்தின் கைகளில் அவைகள் இராணுவ ரீதியில் அழிக்கப்படுவதற்கு மாற்றீட்டைக் கொடுத்ததன் மூலம், சோவியத் ஒன்றியத்துடனான ஒரு இராணுவ உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளுமளவுக்கு பால்டிக் அரசுகளை மொலோடோவ் நிர்ப்பந்தப்படுத்தியிருந்தார். லித்துவேனியா, எஸ்தோனியா, லாட்வியா ஆகிய அனைத்து மூன்று பால்டிக் அரசுகளும், பால்டிக் கடல் பகுதிக்குள் உள்ள தங்கள் பிராந்தியங்கள் மற்றும் தீவுகளில் இராணுவக் கட்டளைகளையகங்கள் மற்றும் இராணுவத் தளங்களை அமைக்க சோவியத் ஒன்றியத்துக்கு அனுமதியளிக்கும் 10 ஆண்டு கால "பரஸ்பர உதவி ஒப்பந்தம்" ஒன்றை ஏற்றுக்கொண்டன. லித்துவேனியாவில் இருந்த 20,000 துருப்புக்களுக்கும் மேலதிகமாக, மேலும் 30,000 சோவியத் படைகள் பின்னர் லாட்வியாவிலும் 25,000 துருப்புக்கள் எஸ்தோனியாவிலும் நிலைகொண்டன. சோவியத் ஒன்றியம் மற்றும் நாஜி ஜேர்மனிக்கு இடையே 1939 ஆகஸ்ட்டில் கையெழுத்திடப்பட்ட பேர்போன ஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தத்தின் விதிகளின் கீழ், இந்த மூன்று நாடுகளும் இரகசியமாக மாஸ்கோ செல்வாக்கு மண்டலங்களாக ஒதுக்கப்பட்டன. லியோன் ட்ரொட்ஸ்கி, பால்டிக் அரசுகளுக்குள்ளான நகர்வை சர்வதேச சோசலிச நிலைப்பாட்டில் இருந்து விமர்சித்தார். "பால்டிக் கடற்கரையில் இராணுவத் தளங்கள் மீதான கட்டுப்பாடு என்பது தந்திரோபாய சாதகங்களை பிரதிநிதித்துவம் செய்கின்றது என்பதில் சந்தேகம் கிடையாது," என லியோன் ட்ரொட்ஸ்கி மெக்ஸிகோவில் தஞ்சமடைந்திருக்கும் போது எழுதினார். "ஆனால் அயல் நாடுகளின் மீது படையெடுக்கும் பிரச்சினையை இது மட்டும் தீர்மானிக்க முடியாது." "ஒரு தனிமைப்பட்ட தொழிலாளர் அரசின் பாதுகாப்பானது உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களின் ஆதரவிலேயே மென்மேலும் தங்கியிருக்கின்றது," என்று அவர் விளக்கினார். "செம்படையின் படையெடுப்பானது விடுதலைக்கான நடவடிக்கையாக அன்றி வன்முறை செயலாகவே மக்களால் பார்க்கப்படுகின்றது, அதன் மூலம் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக உலக பொதுஜன அபிப்பிராயத்தைத் திரட்டும் வசதியை அது ஏகாதிபத்திய சக்திகளுக்கு கொடுக்கின்றது. அதனால் அது சோவியத் யூனியனுக்கு நன்மைகளை விட கடைசி எடுத்துக்காட்டாக மேலும் தீங்கையே கொண்டுவரும்." 100 ஆண்டுகளுக்கு முன்னர்: ஜேர்மனி மற்றும் ரஷ்யா லோட்ஸ் போரில் மோதின
11 நவம்பர் 1914, ஜேர்மன் மற்றும் ரஷ்யன் இராணுவங்கள், இப்போது தெற்கு-மத்திய போலந்தாக உள்ள லோட்ஸ் அருகே ஒன்றையொன்று எதிர்கொண்டன. ஆகஸ்ட் 1 முதலாம் உலகப் போர் ஆரம்பித்ததை அடுத்து, ரஷியன் போலந்துக்குள் ஒரு ஜேர்மன் முன்னேறியதன் பாகமாக இந்த மோதல் நடந்தது. இந்த மோதல் மூன்று வாரங்கள் மட்டுமே நீடித்த அதே வேளை, பெரும் இழப்புக்கள் ஏற்பட்டிருந்தன. ஒரு மதிப்பீட்டின்படி மொத்தமாக 200,000 பேர்வரை பலியாகினர். ஜெனரல் ஆகஸ்ட் வான் மெக்கென்சன்னின் கட்டளையின் கீழ், ஜேர்மனி ஒன்பதாவது இராணுவம், கிழக்கு முன்னரங்கின் தெற்கு களத்தில் தோல்விகளை சந்தித்த ஆஸ்திரிய-ஹங்கேரிய இராணுவத்தை விடுவிக்கும் பொருட்டு ரஷ்யர்களுக்கு எதிராக அனுப்பி வைக்கப்பட்டது. ரஷ்யாவின் பதிலடியால் பின்வாங்கியதற்கு முன்னர், மெக்கென்சன், முதல் மற்றும் இரண்டாம் ரஷ்யன் சேனைகளுக்கு இடையே படைகளை நகர்த்தி, முதலாவதை சிதறடித்ததோடு மற்றும் இரண்டாவது சேனையை கிட்டத்தட்ட துண்டித்து சுற்றி வளைத்தார். மெக்கென்சென்னின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டதால், இந்த போர் ரஷ்யர்களின் தந்திரோபாய வெற்றியாக கணிக்கப்பட்டாலும், அது ஒரு மூலோபாய தோல்வியாக இருந்தது. ரஷ்யா மீண்டும் ஜேர்மன் பிராந்தியத்தை அச்சுறுத்தவே இல்லை, மற்றும் ஆஸ்திரிய முன்னரங்கு பாதுகாக்கப்பட்டு வந்தது. ரஷ்ய இராணுவம் மேற்கு போலந்து மாபெரும் நிலத்தொடருடன் சேர்த்து டிசம்பர் 6 அன்று லோட்ஸில் இருந்து வெளியேற்றப்பட்டது. பின்னர் போர் காலம் முழுவதும் நகரம் ஜேர்மன் கைகளில் இருந்தது.
கிழக்கு
முன்னரங்கில்
ஜேர்மனிய
தளபதிகளான
போல்
வோன்
ஹின்டென்பேர்க்
மற்றும்
எரிக்
லுடென்டொர்ஃப்,
புத்திசாலித்தனமான
இராணுவ
வீரர்களாக
சித்தரிக்கப்பட்டாலும்,
அவர்கள்
கூறிக்கொண்ட
மேதைமையானது
முதன்மையாக
அவர்களது
எதிரியின்
பலவீனத்தை
அடிப்படையாகக்
கொண்டிருந்தது.
போரின்
முதல்
மாதங்களில்
ஏற்கனவே
ஸாரிச
ரஷ்யா
போர்
தேவைகளுக்கு
கவலைக்கிடமான
முறையில்
தயாரில்லாமல்
இருந்தது.
மேற்கு
முன்னரங்கில்
பிரான்ஸ்
மற்றும்
பிரிட்டன்
உடனான
போரான,
தனது
முதன்மை
இலக்குக்கு
ரஷ்யாவை
ஒரு
இரண்டாம்
அச்சுறுத்தலாக
கருதிய
ஜேர்மனி,
விரைவில்
அதன்
படைகள்
நகர்த்த
தனது
உட்கட்டமைப்பு
நிலைகளையும்
ரயில்
பாதைகளையும்
பயன்படுத்திக்கொண்டது.
ரஷ்யா
விவசாயிகள்
படை
மோசமாக
உபரகணமற்று
இருந்ததோடு
பலவீனமாக
வழிநடத்தப்பட்டது.
இது
ஆகஸ்ட்
மாத
இறுதியில்
டென்னென்பேர்க்
போரில்
பேரழிவிற்கு
வழிவகுத்தது. |
|
|