World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் Franco-German reform plan calls for deep social cuts, wage freeze in France பிரான்கோ-ஜேர்மன் சீர்திருத்த திட்டம் , பிரான்சில் ஆழ்ந்த சமூக வெட்டுக்களுக்கும் ஊதிய உயர்வின்மைக்கும் அழைப்புவிடுக்கிறது
By
Kumaran Ira ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள் இணைந்து வியாழனன்று பாரீஸில் "ரோட் மேப்" (road map) என்று கூறப்படும் பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு கூட்டுத்திட்டத்தை முன்வைக்க தயாரிப்பு செய்து வருகின்றன. ஞாயிறன்று ஜேர்மன் வாரயிதழ் Der Spiegel, யூரோ மண்டலத்தின் இரண்டு மிகப்பெரிய பொருளாதாரங்களான அவ்விரு நாடுகளால் கொண்டு வரப்படும், அத்திட்டத்தின் முக்கிய நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு எழுதியிருந்தது. Der Spiegel செய்தியின்படி, பிரான்ஸ் பல்வேறு துறைகளில் மிகவும் வளைந்துகொடுக்கும் தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்களைச் செய்யும், அதில் வணிகங்களை மேலதிகமாக போட்டித்தன்மைக்கு உகந்ததாக செய்வதற்காக, வாரத்திற்கு 35-மணிநேர வேலைச் சட்டத்தை மேலும் சீர்திருத்துவது, மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வின்மை ஆகியவையும் உள்ளடங்கும். அதன் பங்கிற்கு ஜேர்மனி 2018க்குள் அதன் உள்கட்டமைப்பு செலவுகளை 20 பில்லியன் யூரோவாக உயர்த்தும், அதன் புலம்பெயர்வு சட்டங்களை மாற்றும், மற்றும் தொழிலாளர் சக்தியில் பெண்களையும் இணைக்க ஊக்குவிக்கும். மரணப்படுக்கையில் கிடக்கும் ஐரோப்பிய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் ஒரு வழியாக அத்திட்டம் முன்வைக்கப்படுகின்ற போதினும், பாரிஸூம் பேர்லினும் தொழிலாளர்களின் சமூக உரிமைகள் மீது ஆழமான தாக்குதல்களுக்குத் தயாரிப்பு செய்து வருகின்றன, அது பின்னடைவையும் மற்றும் யூரோ மண்டலத்தில் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மையையும் தீவிரப்படுத்தவே செய்யும். Der Spiegel அத்திட்டத்தை விரிவாக விளக்கவில்லை என்றபோதினும், பிரான்ஸின் முதலாளித்துவ "இடது" சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான கொள்கைகளது தீவிரப்படுத்தலுக்கு அது முன்னறிகுறியாக உள்ளது. சோசலிஸ்ட் கட்சி, இரண்டாம் உலக போர் முடிந்ததற்கு பின்னர் தொழிலாள வர்க்கத்திற்கு அளிக்கப்பட்டிருந்த சமூக சலுகைகள் அனைத்தையும் அழிக்க முனைந்து வருகிறது. பிரான்ஸின் 5 மில்லியன் பொதுப்பணித்துறை தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வைத் தடுக்கும் சட்டஆணையைப் பிறப்பித்துள்ளதுடன், சோசலிஸ்ட் கட்சி, பொதுமக்களின் கருத்தை முற்றிலும் உதாசீனப்படுத்தி, முன்பில்லாத அளவில் ஆத்திரமூட்டல்களும் மற்றும் மிருகத்தனமும் கொண்ட அதன் நடவடிக்கைகளைக் கொண்டு அழுத்தம் அளித்து வருகிறது. அந்த பொருளாதார அறிக்கை பேர்லினின் ஜாக் டுலோர் பயிலகத்தின் தலைவர் ஹென்றிக் என்டர்லைனால் மற்றும் பிரான்ஸ் மூலோபாய அரசு பயிலகத்தின் தலைவரும் மற்றும் பிரெஞ்சு பிரதம மந்திரி மானுவேல் வால்ஸின் பொருளாதார மூலோபாயவாதியுமான ஜோன் பீசெனி ஃபெர்ரியினால் வரையப்பட்டதாகும். அவர்கள் அவ்வறிக்கையை வியாழனன்று அரசாங்கத்திற்கு சமர்பிப்பார்கள். அடுத்த மாத தொடக்கத்தில், பிரெஞ்சு பொருளாதார மந்திரி இமானுவேல் மக்குரோனும், அவரது ஜேர்மன் சமதரப்பினரான சிக்மார் காப்ரியேலும் அத்திட்டத்தின் உறுதியான நடவடிக்கைகளை வெளியிடுவார்கள். சமூக செலவு வெட்டுக்களைத் தீவிரப்படுத்தி, வணிகம்-சார்ந்த "கட்டமைப்பு சீர்திருத்தங்களை" பாரிஸ் நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைக்கு பிரதி உபகாரமாக, 21 பில்லியன் யூரோ பொதுச்செலவின வெட்டுக்களை உள்ளடக்கிய பிரான்ஸின் 2015 வரவு-செலவு திட்டக்கணக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்கிய நிலையில், இந்த நடவடிக்கைகள் வந்துள்ளன. செப்டம்பரில், 2015 வரவு-செலவு திட்டக்கணக்கை முன்வைப்பதற்கு முன்னதாக, பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் அவரது அரசாங்கம், வெறுக்கப்படும் அதன் சிக்கன நடவடிக்கைகளை தொடருமென நிதியியல் சந்தைகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் உத்தரவாதம் அளித்திருந்தார். “சேமிப்பு நடவடிக்கைகள் தவிர்க்கமுடியாமல் துயரமானவையே. நாம் சேமித்தே ஆக வேண்டி உள்ளது. 2015இல் நாம் என்ன செய்வோமோ அது முக்கியமான விளைவுகளைக் கொண்டிருக்கும்," இவை ஹோலாண்ட் தெரிவித்தவை. "அனைவருக்குமான" குடும்ப மற்றும் மருத்துவ உதவிகளை நீக்கியமை மற்றும் உள்ளாட்சி அரசாங்க செலவுகளுக்கான மானியங்களில் பாரிய வெட்டுக்கள் உட்பட, அரசாங்கம் கடந்த மாதம் முன்னுதாரணமற்ற நடவடிக்கைகளுடன் திட்டங்களை அறிவித்தது. வால்ஸ் பிரான்சின் நிலையான நீண்டகால வேலை ஒப்பந்தங்களை (CDI) நீக்கவும் பரிந்துரைத்தார், அது "தொழிலாளர்களை மிக அதிகமாக பாதுகாப்பதாக" அவர் வாதிடுகிறார். பெருவணிகங்கள் சமூக செலவுகளில் ஆழ்ந்த வெட்டுக்களை, வளைந்துகொடுக்கும் தொழிலாளர் ஒப்பந்தங்கள் போன்ற கடுமையான தொழிலாளர் சீர்திருத்தங்களை மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை நீக்க அழைப்புவிடுக்கின்ற வேளையில் தான், இந்த பிரான்கோ-ஜேர்மன் "ரோட் மேப்" திட்டம் வருகிறது. மெடெஃப் தொழில்வழங்குனர்கள் அமைப்பின் தலைவர் பியர் கட்டாஸ், செப்டம்பரில், எரிச்சலூட்டும் விதத்தில் வணிகம்-சார்ந்த "அதிர்ச்சி வைத்தியத்தை" கோரியதன் மூலமாக ஐந்தாண்டுகளில் ஒரு மில்லியன் வேலைகளை உருவாக்க பரிந்துரைத்தார். அவர் 35 மணிநேர வாராந்தர வேலைமுறையை நீக்குமாறும், 11 பொது விடுமுறைகளில் இரண்டை நீக்குமாறும், சட்டபூர்வ ஓய்வு வயதை உயர்த்தவும், மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை வெட்டுமாறும் காட்டஸ் அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். தொழிலாளர் விதிமுறைகளை தளர்த்தவும் மற்றும் வேலையின்மை சலுமை முறைகளைச் செப்பனிடவும் அவர் அழைப்புவிடுத்தார். கட்டாஸ் தெரிவித்தார், “நமது நாட்டின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளின் அடிப்படையில், தேசிய நெருக்கடி காலக்கட்டத்தில் மற்றும் நாம் முகங்கொடுத்துவரும் அபாயங்களுக்கு இடையே, தயக்கம், அலட்சியப்போக்கு மற்றும் அரைகுறை-நடவடிக்கைகளுக்கான காலகட்டம் முடிந்து போய்விட்டது." நாஜி ஆக்கிரமிப்பு மற்றும் பாசிச விச்சி அரசாங்கத்திடமிருந்து விடுதலை அடைந்ததிலிருந்து பிரெஞ்சு பொருளாதாரத்தின் அபிவிருத்தி ஒட்டுமொத்தமாக ஒரு முட்டுச்சந்தை எட்டி இருப்பதாக அவர் அப்பட்டமாக சேர்த்துக் கொண்டார்: “சுதந்திரம் மற்றும் முப்பதாண்டுகால ஒளிமயமான காலத்திலிருந்து [1945-1975 பொருளாதார செழுமை காலம்] பாரம்பரியத்தை பெற்ற நமது சமூக மற்றும் பொருளாதார முன்மாதிரி, மரணித்துவிட்டது." போட்டித்தன்மை மற்றும் வேலைவாய்ப்புக்காக PSஇன் வரிவிலக்கு என்றழைக்கப்பட்டதன் கீழ் மற்றும் அதன் பொறுப்புறுதி ஒப்பந்தத்தின் கீழ், அந்த அரசாங்கம் 41 பில்லியன் யூரோவை வணிகங்களுக்கு கையளித்தது. இருந்தபோதினும், வணிகங்கள் போட்டித்தன்மையை அதிகரிக்க ஊதிய உயர்வின்மைக்கு அழைப்புவிடுத்து வருகின்றன, அதை PS அரசாங்கமும் அங்கீகரிக்க நகர்ந்து வருகிறது. “சேவைத்துறையில் ஊதிய விகிதங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது அவசியமாகும்," இதை அரசு தலைமையிலான பிரான்ஸ் மூலோபாய பயிலகத்தின் ஒரு அறிக்கை வலியுறுத்தியது. "ஊதிய உயர்வின்மையைப் பொறுத்த வரையில், அந்த பரிந்துரையை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடுமையானதாகும், ஏனெனில் தனியார் நிறுவனங்களில் அதுபோன்றவொரு ஊதிய உயர்வின்மைக்கு சட்டஆணையை பிறப்பிப்பதென்பது கடுமையானது, அந்த பரிந்துரை ஊதிய விகிதத்தை மட்டுப்படுத்தி வைத்திருப்பதையும் மற்றும் நமது போட்டித்தன்மையை அதிகரிக்க தொழிலாளர் செலவுகளை வெட்டும் பிரச்சினையையும் உயர்த்துகிறது," என்று எழுதி, Le Monde அந்த பிரான்கோ-ஜேர்மன் "ரோட் மேப்" எவ்வித சட்ட அடித்தளமும் கொண்டிருக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டது. எவ்வாறிருந்தபோதினும், Der Spiegelஇன் அறிக்கையை பிரெஞ்சு அதிகாரிகள் குறைத்துக்காட்டிய நிலையில், அங்கே ஆளும் வர்க்கத்திற்குள்ளும் மற்றும் அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளும் அவைக்கான பரந்த ஆதரவு உள்ளது. ஒரு பொருளாதார அமைச்சக செய்தி தொடர்பாளரது கருத்துப்படி, “நாங்கள் பரிந்துரைகளைக் கையாளவில்லை ... மாறாக இறுதிசெய்யப்பட்டாத இரண்டு பொருளியல்வாதிகளின் ஓர் அறிக்கையைக் கையாள்கிறோம், ஆகவே இந்நிலையில் அதன் மீது எந்த கருத்தும் வழங்க முடியாது," என்றார். ஆனால் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அவ்வறிக்கை "கட்டமைப்பு சீர்திருத்தம் மற்றும் முதலீடு மீது மேலதிகமாக வேலை செய்வதற்கு அடித்தளத்தை" வழங்குவதாக தெரிவித்தார். ஜோன் பீசெனி-ஃபெர்ரி கூறுகையில், “Der Spiegelக்கு அந்த அறிக்கையை அணுகுவதற்கான அனுமதியே கிடையாது" மற்றும் "அது பிரசுரித்திருக்கும் அம்சங்கள் அதன் உள்ளடக்கத்தை பிரதிபலிக்கவில்லை," என்றார். இத்தகைய தாக்குதல்களை தயாரிப்பதற்கும் மற்றும் சுமத்துவதற்குமான மைய கடமைப்பாடு, PSஇன் போலி-இடது கூட்டாளிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தைச் சார்ந்துள்ளது. பீசெனி-ஃபெர்ரி தலைமையில் பிரான்ஸ் மூலோபாய பயிலகத்தின் வணிக குழுக்களோடு சேர்ந்து பங்களித்துள்ள பிரெஞ்சு தொழிற்சங்கங்கள், அவ்வறிக்கையைக் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, அதற்கு அவர்களது ஆதரவையே இது அடிக்கோடிடுகிறது. சோசலிஸ்ட் கட்சியின் முந்தைய பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை ஆதரித்து வந்த அவை, தொழிலாளர்கள் மீதான மேலதிக தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்வதில் வணிக குழுக்களுடன் மற்றும் PS அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருகின்றன. நிதியியல் பிரபுத்துவத்திற்கு சாதகமாக கொண்டு வரப்பட்ட இத்தகைய வரலாற்று தாக்குதல்கள், சோசலிஸ்ட் கட்சியின் மற்றும் ஹோலாண்ட் தேர்ந்தெடுக்கப்படுவதை ஆதரித்த புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற அதன் போலி-இடது கூட்டாளிகள், மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) ஆகியவற்றின் முற்றிலும் பிற்போக்குத்தனமான குணாம்சத்தை அடிக்கோடிடுகின்றன. சோசலிஸ்ட் கட்சியின் மதிப்பிழந்த கொள்கைகளின் மீது மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் வெற்று தந்திரோபாய விமர்சனங்களை செய்து கொண்டே, அவை அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பைத் தடுக்க முனைகின்றன. சோசலிஸ்ட் கட்சிக்கு அவை வழங்கிய நீண்டகால ஆதரவின் விளைவாக, தற்போது நவ-பாசிச தேசிய முன்னணியே ஹோலாண்டின் செல்வாக்கு சரிந்ததிலிருந்து ஆதாயமடைந்த அரசியல் பயனாளிகளில் பிரதானமாக உள்ளது, அது சோசலிஸ்ட் கட்சியின் சிக்கன நடவடிக்கைகளை விமர்சித்துக் கொண்டு பிரதான அரசியல் சக்தியாக எழுச்சி பெற்றுள்ளது. அந்த அறிக்கையை PCF பாசாங்குத்தனமாக, "வலதுசாரி மற்றும் FNஆல் கொண்டு வரப்பட்ட ஒரு படுபயங்கர பொருளாதார பிழை, வெறுப்பூட்ட மற்றும் அவநம்பிக்கையூட்ட அச்சுறுத்துகின்ற ஒரு சமூக ஆத்திரமூட்டல்" என்றழைத்தது. அனைத்திற்கும் மேலாக, பிரான்ஸ் மூலோபாய பயிலகத்தில் அதை வரைவதற்கு உதவிய தொழிற்சங்க அதிகாரிகளுடனான அதன் தொடர்புகள் மூலமாக, அவ்வறிக்கையின் விபரங்கள் PCFக்கு மிகவும் நேர்த்தியாக தெரிவிக்கப்பட்டுள்ளன என்பதில் அங்கே எந்த ஐயமும் இருக்காது. சோசலிஸ்ட் கட்சியின் நீண்டகால தாக்கங்களை கொண்ட சமூக தாக்குதல்கள், கிரீஸில் ஜோர்ஜ் பாப்பன்டிரேயோவின் சமூக ஜனநாயக அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட கடுமையான செலவுகுறைப்பு நடவடிக்கைகளைப் போலவே பேரழிவுகரமான சமூக தாக்கங்களைக் கொண்டிருக்கும். கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் பெரும் பிரிவுகள் வறுமைக்குள் மூழ்கியுள்ளன. நவம்பர் 24இல், சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஓர் அறிக்கையை வெளியிட்டு, அவசரகால நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையானால் கிரீஸ் ஒரு நீண்டகால சமூக நெருக்கடி அபாயத்தைக் காணுமென எச்சரித்தது. அந்நாட்டில் வேலைவாய்ப்பற்ற ஏறத்தாழ 1.3 மில்லியன் மக்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஓராண்டுக்கும் அதிகமாக வேலையின்றி இருந்துள்ளனர்; 2008இல் அந்நாட்டில் பொருளாதார நெருக்கடி தொடங்கியதில் இருந்து நான்கில் ஒருவர் வேலைகளை இழந்துள்ளனர் என்பதை அவ்வமைப்பு கண்டறிந்திருந்தது. இதற்கிடையே, வறுமையின் அபாயத்தில் இருக்கும் கிரேக்கர்களின் எண்ணிக்கை ஐந்தாண்டுகளில் இரண்டு மடங்கை விடவும் அதிகமாகி இருப்பதாகவும், 2008இல் 20 சதவீதத்திற்கு சற்று அதிகமாக இருந்ததில் இருந்து 2013இல் 44 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கண்டறிந்தது. |
|