World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் Small audiences mark Remembrance Day in Australia ஆஸ்திரேலியாவில் குறைந்த அளவிலான மக்கள் நினைவு தினத்தை அனுசரிக்கின்றனர்.By
James Cogan ஆஸ்திரேலியா முழுவதும் நவம்பர் 11 அன்று முற்பகல் 11 மணியளவில், உத்தியோகபூர்வமாக முதலாம் உலகப்போர் முடிவுக்கு வந்த தினம் மற்றும் நேரமான 1918 ம் வருடத்தின் நினைவு தின அனுசரிப்புகள் நடைபெற்றது. முதலாம் உலகப்போரின் நூற்றாண்டு தின கொண்டாட்டங்களுக்காக ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் ஊடக அமைப்புக்கள் பெருமளவிலானா வளங்களை அர்ப்பணித்து வரும் நிலையில், பங்களிப்பினை ஊக்கப்படுத்த எவ்வளவு குறைவான முயற்சிகளே எடுக்கப்பட்டன என்பது அதிர்ச்சிகரமாக இருக்கிறது. தலைநகர் கான்பெர்ராவில் கூட, அரசாங்கமும் இராணுவ அதிகாரத்துவவாதிகளும் எண்ணிக்கைகளை உயர்த்தியது. ஆஸ்திரேலிய போர் நினைவகத்தில் 4,000 க்கும் குறைவான மக்களே கூடினர். நாட்டின் பிரதான நகரங்களில், சில ஆயிரக்கணக்கானோர் மட்டுமே கலந்து கொண்டனர். வட்டார மையங்கள் மற்றும் நகரங்களில் 50 பேர்களே கூடினர். ஆஸ்திரேலிய ஆளும் உயரடுக்கு நினைவுநாள் தினத்தை இரண்டாம் பட்சமாகக்கருதும் யதார்த்தத்தை இந்த சிறிய அளவிலான கூட்டம் அடிக்கோடிட்டு காட்டியது. இந்த ”பதினொன்று பதினொன்று” தின அனுசரிப்பானது, ஒவ்வொரு வருடமும் நினைவிடங்களில் குறைந்த அளவிலான ஆரவாரம் மற்றும் சுருக்கமான கொண்டாட்டங்களுடன் அனுமதிக்கப்படுகிறது. 1915ல் கலிப்பொலி குடாவில் முதல் உலகப் போரில் ஆஸ்திரேலிய படைகள், தங்களது முதலாம் போரில் தாக்க ஆரம்பித்தபோது, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட அன்ஸாக் தினமான ஏப்ரல் 25 தான், உத்தியோகபூர்வ ரீதியில் முக்கிய போர் நினைவாகும். அன்ஸாக் தினத்தன்று தேசிய பொதுவிடுமுறை என்பதுடன் விமர்சனத்திற்கு இடமின்றி போர் வீரர்கள் மற்றும் படைகளின் அதிகாலைப் பேரணி மற்றும் அணிவரிசைகளில் கலந்து கொள்ள வேண்டுமென்று எப்போதுமில்லாத வகையில் பெருமளவிலான சமூக அழுத்தம் மக்கள் மீது சுமத்தப்படுகிறது. போரை பெருமைப்படுத்தல், தேசியவாதத்தை மேம்படுத்துதல் மற்றும் பொதுவாக பெரும்பான்மை மக்களின் இராணுவத்திற்கு-எதிரான நிலையை தாக்குவது ஆகியவற்றுக்காக நிர்வாகம் இதனை பயன்படுத்திக்கொள்கிறது. கான்பெர்ராவிற்கு அருகிலுள்ள யாஸில் Returned Services League –ன் தலைவரான நீல் டர்னர் உள்ளூர் செய்தியாளர்களிடம், ”போர் முடிவு ஆண்டு நிறைவு விழா அனுசரிப்பு பொதுமக்கள் மத்தியில் அதன் முக்கியத்துவத்தை இழந்திருப்பது போல் தெரிகிறது... இது ஒரு வெட்கப்பட வேண்டிய விஷயம்தான், ஆனால், குறிப்பாக ஆஸ்திரேலியாவில் உண்மையில் அன்ஸாக் தினம் ஏதோ ஒரு வகையில் அனைத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டது” என்றார். மேலும் அநேகமாக போர் வீரர்கள் மற்றும் இறந்தவர்களை நினைவு கூர்வதற்காக நடத்தப்படுகின்ற -நினைவு தினத்திற்கான அக்கறையின்மை– முர்ரே மற்றும் எரிக் மாக்ஸ்டனின் அணுகுமுறையில் வெளிப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் 94 மற்றும் 90 வயதுடைய இவ்விரு சகோதரர்களின் சேவைக்காக, சமீபத்தில் பிரெஞ்சின் மரியாதைக்குரிய விருது வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பிற ஆஸ்திரேலியர்களுடன், இவர்கள் பிரிட்டிஷ் விமான படைக்கு பணியாற்றுவதற்காக அனுப்பப்பட்டு, 1944 முழுவதிலும் ஜேர்மனியின் குண்டுவீச்சுக்களில் ஈடுபட்டனார். பிரெஞ்சு அரசாங்கமளித்த மரியாதையை அறிந்த பின்னர், ஆஸ்திரேலிய அரசாங்கம், கான்பெர்ராவில் பிரதமர் டோனி அப்போட் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனுடன் வெள்ளியன்று ஒரு விருந்திற்கு இவ்விரு சகோதரர்களையும் அவசர அவசரமாக அழைத்தது. ஆயினும், மேற்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இவர்களிடம், தங்களின் விமான கட்டணங்கள் மற்றும் பாதுகாப்பிற்காக உடன் வருபவர்களுக்கு ஆகும் செலவுகளை இவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ”போருக்கான நமது கட்டணங்களை இவர்கள் அங்கே செலுத்தினார்கள், போரில் நாங்கள் எங்கு சென்றபோதிலும், அவர்கள் எங்களது கட்டணங்களை செலுத்தினர், ஆனால் இப்போது நாங்கள் போரில் வென்றிருக்கிறோம், அவர்கள் உண்மையில் எங்களைப்பற்றி மறக்கவே விரும்புகின்றனர்” என்று பரவலான அறிக்கைகளில் முர்ரே மாக்ஸ்டன் விருப்பமின்றி தெரிவித்தார். இவர்கள் நடத்தப்பட்டது குறித்த செய்தி, விரைவாக சேதங்களை கடுப்படுத்தும் வகையில் விமான நிறுவனங்கள் இலவச கட்டணங்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு இட்டுச் சென்றது. இவர்களது பயணத்திற்கு நிதியுதவியளிப்பதற்காக ஆயிரக்கணக்கான டாலர்கள் தனியார் நன்கொடைகள் குவிந்தது. அன்ஸாக் நாள் கொண்டாட்டங்களில் காணப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட தேசப்பற்றினை மறுத்து, ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனத்திற்காக (ABC) பத்திரிகையாளர்கள் நினைவுதின நிகழ்வுகளை எழுதுவது பிற இடங்களில் “செய்தியாக” அறியப்பட்டது. செய்திகளில் வெளியானது என்னவென்றால், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிற்கு சண்டையிட அனுப்பப்பட்ட இளம் போர்வீரர்களின் பயங்கர இக்கட்டான சூழ்நிலை குறித்த உள்ளெண்ணங்களும், நிகழ்ச்சிகளுக்காக திரண்டிருந்த மக்கள் வெளிப்படுத்திய போருக்கெதிரான கருத்தாக்கங்களும்தான். டார்வினில், அதிர்ச்சிக்கு பிந்தைய மன அழுத்த கோளாறினால் (PTSD) பாதிக்கப்பட்டிருக்கும் ஆஃப்கான் போர் வீரரான ரைஸ் கெல்லியை ABC பேட்டி கண்டது. “என்னால் வீட்டை விட்டு வெளியில் வர முடியவில்லை. எனக்கு கோபப் பிரச்சனைகள் உண்டு. நான் ஒரு உச்சகட்ட எச்சரிக்கையாளராக இருந்தேன்... தங்களைத் தாங்களே கொன்று கொண்ட பலபேர் இருக்கிறார்கள் – மூன்று முறை நாங்கள் வெளிநாட்டு வாய்ப்புகளை இழந்திருக்கிறோம்.” என்கிறார் அவர். ஈராக்கில், சாலையோர குண்டு வெடிப்பால் காயமடைந்த போர் வீரரான லியாம் ஹேவன் ABC யிடம், ”எனக்கு bipolar II disorder நோய் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது, அதிர்ச்சியினால் உருவாகும் ஒரு விதமான மனநிலை கோளாறுதான் இது. நான் ஆஸ்திரேலியாவிற்கு திரும்பி வரும் வேளையில் எனக்கு உளவியல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை. என்னை ஒரு கதாநாயகன் என்று மக்கள் கூறினார்கள். நான் அப்படி எதையும் செய்யவில்லை… பிரச்சனைகளில் விழுந்து, துரதிர்ஷ்டவசமாக தங்களது வாழ்க்கையையே முடித்துக் கொள்ளும் பல ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள்” என்றார். சிட்னியில் இச்செயல்பாடுகளில் கலந்து கொண்ட பெண்மனி ஒருவர், தனது மாமனாரை மரியாதை செய்வதற்காக, இரண்டாம் உலகப் போரில் சண்டையிட்டதாக ABD யிடம் கூறுகிறார்: ”எங்களுக்கு இது மீண்டும் கிடைக்காது என்று நான் நம்புகிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது அருமையாக இருக்கிறது ஆனால், வெளிநாட்டில் கொலை செய்யப்படுவதற்காக நாம் நமது படைகளை மறுபடியும் அனுப்ப வேண்டாம்.” 1914 மற்றும் 1918 -க்கு இடையில், கிட்டத்தட்ட 5 மில்லியன் மக்கள் தொகையில் 4,17,000 இளம் ஆஸ்திரேலியர்கள் இராணுவத்தில் சேர்ந்தனர், அதில் 3,32,000 பேர் முதல் உலகப்போரின் கொலை களத்திற்கு அனுப்பப்பட்டனர். சில 61,000 பேர், தங்களின் வாழ்க்கையை இழந்தனர், மற்றும் 1,52,000 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 60,000 பேர், அவர்களது காயங்களால் இரண்டு மாதங்களுக்குள்ளாகவே இறந்து விட்டனர் என்று மதிப்பிடப்பட்டது. முதல் உலகப்போரில் மொத்த தலைமுறையின் வாழ்க்கையும் வீணடிக்கப்பட்டது என்ற பொதுவான மனநிலை ஆளும் வர்க்கம் மற்றும் அரசியல் நிர்வாகங்களில் தீர்மானமாக எதிர்க்கப்படுகிறது. அடுத்த ஏப்ரல் மாதம் கலிப்பொலி நிகழ்வின் நூற்றாண்டு நிறைவு விழாவுடன், வெறுத்து ஒத்துக்கத்தக்க அளவிற்கு போய்விடும் நிலையிலுள்ள, இப்போது நடைபெற்றுவரும் முதல் உலகப்போரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் அடிப்படை நோக்கம்- ஆஸ்திரேலியாவை தேவையான ஒன்றாக சம்மந்தப்படுத்துவது மற்றும் இராணுவத்துவத்திற்கான சமூக அடித்தளத்தை உருவாக்குவதாகும். சட்டவிரோதமான போர்கள் மற்றும் ஆஃப்கானிஸ்தான், ஈராக்கின் நடவடிக்கைகளில் ஆஸ்திரேலியாவை ஈடுபடுத்திய முன்னாள் பிரதமர் ஜோன் ஹோவார்டின், நினைவு தின உரையை ஈராக்கிற்கு மீண்டும் படைகளை அனுப்புவதற்கு பயன்படுத்திக்கொண்டது. எதிர்பாராவிதமாக மத்திய கிழக்கில் பயன்படுத்தல் தவிர்க்க முடியாதவகையில் உயரும் என்ற உண்மையை குறிப்பிடும்போது, ”நமது கொள்கைகள் ஈராக் மற்றும் இறுதியாக எங்கு வேண்டுமானாலும் இட்டுச்செல்லக்கூடும்” என்று ஹோவர்ட் புகழ்ந்து பேசினார். ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தால் மேற்கொள்ளப்படும் தற்போதைய போர்கள் மற்றும் மக்களின் முதுகிற்கு பின்னால் திட்டமிடப்பட்டு வருகின்ற எதிர்கால விஷயங்கள் போன்றவற்றை நியாயப்படுத்துவதற்காக - தொழிலாள வர்க்கம் மற்றும் மக்களிடம் மிகச்சாதாரணமாக காணப்படும், போருக்கு-எதிரான பொதுவான கருத்து- இத்தகைய முயற்சிகளை உடைக்கிறது. ஆகவே, இந்த உணர்வுகளை நீக்குவதிலும் மற்றும் குறைமதிப்பிடுவதிலும் ஆளும் உயரடுக்கின் முயற்சிகள் முக்கியமான ஒன்றாக உள்ளது. முதல் உலகப் போரை முடிவுக்கு கொண்டுவந்த மைய நிகழ்வு என்பது ரஷ்யப் புரட்சி என்பதை உழைக்கும் வர்க்கம் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். சர்வதேச அளவிலான வர்க்கப் போராட்டங்களில் இது ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது, மேலும் புரட்சி மற்ற எல்லா இடங்களிலும் பரவிவிடும் என்ற பயத்திலிருந்து பேச்சுவார்த்தை கட்டங்களை நோக்கி ஆளும் வர்க்கங்களை உந்தித்தள்ளியது. |
|