World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR Russia and China expand economic cooperation ரஷ்யாவும் சீனாவும் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துகின்றன
By Clara
Weiss ஐரோப்பா மற்றும் அமெரிக்காவினால் சுமத்தப்பட்ட தடைகளை எதிர்கொள்ளும் வகையில் ரஷ்யா சமீபத்திய மாதங்களில் சீனாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை கணிசமாக அதிகரித்திருக்கிறது. இது பசிபிக் மற்றும் அட்லாண்டிக் வர்த்தக கூட்டணியான TPP மற்றும் TTIP இல் இருந்து ரஷ்யா மற்றும் சீனாவை விலக்க கடும் முயற்சி மேற்கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு விடையிறுப்பாக ரஷ்யா மற்றும் சீனாவிற்கிடையே ஒரு கூட்டணி உருவாகி கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பெய்ஜிங்கில் நடந்த APEC அமைப்பில் (ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு), ரஷ்யா மற்றும் சீன நிறுவனங்கள் டஜன்கணக்கான ஒப்பந்தங்களை முடிவு செய்தன. சீன அரசு கட்டுப்பாட்டிலிருக்கும் CNPC நிறுவனத்துடன் ரஷ்ய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம் ரோஸ்நெப்டின் ஒத்துழைப்பு சம்பந்தமானதுதான் மிக முக்கியமானதாக இருக்கிறது. CNPC-க்கு சைபீரிய Vankor வயலின் 10 சதவிகித பங்கை ரோஸ்நெப்ட் விற்பனை செய்தது. இந்த ஒப்பந்தம் மூலமாக, பெரும் கடனில் இருக்கும் ரஷ்ய நிறுவனம் வெளிக்கடன்களை செலுத்திவிட விரும்புகிறது. பொருளாதார துறையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க தடைகள் காரணமாக, ரோஸ்நெப்ட் மற்றும் காஸ்ப்ரோம் போன்ற பெரிய நிறுவனங்கள் இப்பொழுது தங்கள் கடன்களை அடைக்க சிரமப்படுகின்றன. திட்டமிட்ட ஊக பேரத்தின் மூலமாக ரூபிளின் மதிப்பிறக்கம், படுமோசமடைந்து விட்டது, அது ரஷ்ய எரிசக்தி நிறுவனங்களை தங்கள் கடன் வழங்குநர்களிடம் மேலும் வலுவிழக்கச் செய்துள்ளது. சீனாவிற்கு ரஷ்ய எரிபொருளை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம், பெரிய அரசியல் முக்கியத்துவத்துடன் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தும் என்று ஒரு சீன ஆய்வாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். கடந்த காலத்தில், வெளிநாட்டு நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்ப சவாலை எதிர்கொள்வது போன்ற விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் ரஷ்ய எரிபொருள் பிரித்தெடுக்கும் வயல்களில் ஒரு பங்கு மட்டும் வாங்க முடியும். 2003-ல் தன்னலக்குழுவை சேர்ந்த மைக்கேல் கோடோர்கோவ்ஸ்கியின் கைது மற்றும் அவருடைய ஒரு நீண்டகால சிறை தண்டனை ஆகியவை, சைபீரியாவில் இருக்கும் எண்ணெய் வயல்களை அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்க முயற்சித்தார் என்பதுதான் காரணங்களில் முக்கியமான ஒன்றாகும். அதற்கு மாறாக, வான்கொர் வயல்களில் பிரித்தெடுப்பது குறிப்பிட்ட எந்தவொரு சவாலையும் எழுப்பவில்லை, அத்துடன் சைபீரியாவில் இருக்கும் வயல்களிலேயே மிகப்பெரியதாகும். உடன்படிக்கையின் அரசியல் முக்கியத்துவம் குறித்து அதிபர் விளாடிமிர் புட்டின் அடிக்கோடிட்டு காட்டுகிறார்.“சாதரணமாக, நாங்கள் வெளிநாட்டு கூட்டாளிகளை அனுமதிப்பதில் மிகவும் தயங்குபவர்கள், ஆனால் எங்கள் சீன நண்பர்களை பொறுத்தவரையில் கண்டிப்பாக தடைகள் ஏதுமில்லை,”என்று குறிப்பிட்டார். ரஷ்ய எரிவாயுவை சீனாவிற்கு விநியோகம் செய்ய இருக்கும் சிலா சிபிரி (Siberian Power) எரிவாயு குழாய் திட்டத்தை நிர்மாணிக்க தேவையான முழு முதலீட்டு பொறுப்பையும் ஏற்க தயாராக இருப்பதாக APEC உச்சி மாநாட்டில் காஸ்ப்ரோம் அறிவித்தது. இது மொத்தமாக 55 பில்லியன் டாலர்கள் ஆகும். ரஷ்ய பொருளாதார நாளிதழான Kommersant அதிக செலவு பிடிக்கும் இந்த எரிவாயு குழாய் திட்டம் SouthStream திட்டத்திற்கான முடிவை உச்சரிக்க கூடும், ஏனென்றால் இரண்டு திட்டங்களுக்கும் ஒரே சமயத்தில் நிதியளிக்க காஸ்ப்ரோமிடம் நிதி வளங்கள் இல்லை. உக்ரேனை தவிர்க்கும் அதேவேளையில் South Stream மூலமாக ஐரோப்பாவிற்கு எரிவாயுவை விநியோகிக்க ரஷ்யா விரும்புகிறது. சமீபத்தில் அந்த திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தால் செயலற்றதாக்கப்பட்டது. விரைவிலேயே ஐரோப்பாவிற்கு விநியோகிக்கும் எரிவாயுவைவிட சீனாவிற்கு அதிகமான எரிவாயுவை ரஷ்யா விநியோகிக்கும் என்று காஸ்ப்ரோம் தலைவர் அலெக்ஸி மில்லர் APEC மாநாட்டில் குறிப்பிட்டார். APEC மாநாட்டில் முடிவு செய்யப்பட்ட உடன்படிக்கைகள் அனைத்தும் ரஷ்யா மற்றும் சீனாவிற்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பிற்கான சமீபத்திய உதாரணங்கள் மட்டுமே. ஏற்கனவே மே 2013-ல், ரஷ்ய அரசாங்கத்தின் ஏகபோக உரிமை வாய்ந்த காஸ்ப்ரோம் நிறுவனம் சீனாவிற்கு 400 பில்லியன் டாலர்கள் பெறுமான எரிவாயுவை விநியோகம் செய்ய சீன தேசிய பெட்ரோலிய கார்ப்பொரேஷனுடன் (CNPC) ஒரு உடன்படிக்கையை செய்து கொண்டது. உக்ரேன் நெருக்கடியின் காரணமாக ஐரோப்பாவிற்கு எரிவாயு ஏற்றுமதியை கைவிட்டதால், பத்து வருட காலமாக நடந்த நீடித்த பேரத்தை தொடர்ந்து ரஷ்யா வேகமாக உடன்படிக்கையை முடிவு செய்தது. "காஸ்ப்ரோம் மற்றும் ரோஸ்நெப்ட் ஆகியவை சீனாவை சார்ந்திருப்பது மென்மேலும் சிறப்பானதாக ஆகிக் கொண்டிருக்கிறது. பெய்ஜிங் இலாபமற்ற நிபந்தனைகளின் மீது இப்பொழுது வற்புறுத்த முடியும்" என்று சீனாவுடன் ஒப்பிடும்போது ரஷ்யாவின் பலவீனமான பொருளாதார நிலை பற்றி ஒரு ரஷ்ய ஆய்வாளர் குறிப்பிட்டார்.” அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் உறவுகள் சீர்குலைந்துள்ளதால், ஆசியாவுடன் குறிப்பாக சீனாவுடன் ஒரு வலுவான சார்புநிலையை அபிவிருத்தி செய்ய கிரெம்ளின் விரும்புகிறது என்று புட்டின் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தினார். கடந்த வருடம், ஜேர்மனிக்கு பதிலாக சீனா, ரஷ்யாவின் மிக முக்கியமான வர்த்தக கூட்டாளியாக ஆனது. அதே நேரத்தில், ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவிற்கு எரிசக்தி இறக்குமதிகள் சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடும்படியான அளவிற்கு வீழ்ச்சியடைந்திருக்கின்றன, மிகக் குறைவான அளவு அல்ல, ஏனென்றால் ஷெல் எரிவாயு போன்ற மாற்று எரிவாயு வளங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது; 2009-ல் அமெரிக்கா உலகத்திலேயே அதிகளவு எரிவாயு உற்பத்தியாளராக ரஷ்யாவை முந்தியிருக்கிறது. உக்ரேன் நெருக்கடிக்கு முன்னதாகவே உலகச் சந்தைகளில் ரஷ்யாவின் நிலை இதைப்போன்று கடுமையான விதத்தில் படுமோசமடைந்திருந்தது. ஆனபோதிலும், ரஷ்ய பொருளாதாரம் அதிகமாக சார்ந்திருந்த எரிசக்தி ஏற்றுமதிகளில் ஒரு கணிசமான சதவிகிதம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு போகிறது. இது இப்பொழுது மாற்றியமைக்கப்பட கூடியதாக இருக்கிறது. ரஷ்ய எரிசக்தி வளங்களை சீனா சார்ந்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட படிம எரிபொருட்கள் இறக்குமதியாளராக இருந்த அமெரிக்காவை, 2013-ல் சீனா முந்தியது. 2020 வாக்கில், சீனாவின் எண்ணெய் இறக்குமதி, 2005-ல் இருந்த அளவை விட நான்கு மடங்கு அதிகமாக ஒரு நாளைக்கு 9.2 பில்லியன் கன மீட்டர்கள் அளவுக்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. மற்ற விஷயங்களுக்கு இடையே எரிசக்தி இறக்குமதிக்கு உபயோகப்படுத்தப்படும் கடல்வழிப் பாதைகளை கட்டுப்படுத்த இலக்கு கொண்டுள்ள அமெரிக்காவால் சுற்றி வளைக்கப்பட்டதன் விளைவாக, ரஷ்யாவிலிருக்கும் எரிசக்தி வளங்களை பெற சீனா முயன்று வருகிறது.. ரஷ்யாவும் சீனாவும் அவற்றின் நிதி ஒத்துழைப்பை விரிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக மேற்கத்திய முதலீட்டு சந்தைகளில் அவற்றின் பங்கேற்பை கட்டுப்படுத்தும் தடைகள் காரணமாக ரஷ்ய வங்கிகள் சீனாவிற்குள் விரிவுபடுத்த முயற்சித்து கொண்டிருக்கின்றன. ரஷ்யாவின் இரண்டாவது பெரிய வங்கி, VTB, லண்டன் பங்குச் சந்தையிலிருந்து சிங்கப்பூருக்கு மாறிவிட்டது. உக்ரேன் நெருக்கடியினால் அந்த வங்கி இந்த ஆண்டு பில்லியன் கணக்கில் இழப்பை சந்திக்கிறது. அத்துடன், அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்வதை நிறுத்துவதற்கான ஒரு திட்டத்தை ரஷ்யாவும் மற்றும் சீனாவும் பல மாதங்களாக கலந்து ஆலோசித்து வருகின்றன. அதற்கு பதிலாக யுவான் மற்றும் ரூபிளை பயன்படுத்தவும் ஆலோசித்து வருகின்றன. ஏற்கனவே பலவீனபடுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க டாலரை மேலும் வலுவிழக்கச் செய்து, இது உலகப் பொருளாதாரத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். சீனா உலகில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கிறது, அதேநேரம் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் ரஷ்யா முதல் 10 இடங்களுக்குள் இருக்கிறது. ரஷ்யா மற்றும் சீனாவிற்கு இடையே எழுச்சி கண்டு கொண்டிருக்கும் உறவு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகரித்த கவலையோடு பார்க்கப்படுகிறது. மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்க்கு இடையே ஒரு சாத்தியமான கூட்டணி,“அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைக்கு" முதன்மையான சவாலாக Financial Times விவரித்திருக்கிறது. உண்மையில், பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த மற்றும் இராணுவ ரீதியாக அவற்றை சுற்றி வளைக்கும் குறிக்கோளுடன் அமெரிக்கா தலைமையிலான ஒரு அணியை அமைப்பதற்கு ரஷ்யாவும் மற்றும் சீனாவும் விடையிறுக்கின்றன. தோராயமாக 40 சதவிகித உலக பொருளாதாரத்தை கொண்டிருக்கும் டிரான்ஸ் பசிபிக் கூட்டணியிலிருந்து (TPP) ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை விலக்கப்பட்டுள்ளன. அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களில் அந்த இரண்டு நாடுகளும் இன்னும் நெருக்கமாக ஒத்துழைக்க திட்டமிட்டுள்ளன. எதிர்காலத்தில், மாஸ்கோ மற்றும் பெய்ஜிங் பிப்ரவரியில் CIA ஆதரவுடன் கியேவில் பதவி கவிழ்ப்பு போன்ற "வண்ணப் புரட்சிகளை" (colour revolutions) கூட்டாக எதிர்கொள்ள கூடும் என்று ரஷ்ய பாதுகாப்பு துணை அமைச்சர் அனடோலி ஆன்டோனோவ் செவ்வாய் கிழமை அன்று தெரிவித்தார். "ஆன்டோனோவ் "இந்த அனைத்தும் குறுகிய காலத்திலேயே நடக்கின்றன, எங்கள் இரண்டு அரசுகளுக்குமே ஒரு பாதுகாப்பு குறித்த அபாயத்தை காட்டுகிறது, இந்த சவாலை எதிர்த்து சண்டையிட ரஷ்யாவும் சீனாவும் ஒத்துழைக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அதேநேரத்தில், ரஷ்ய ஆளும் உயரடுக்கு சீனாவின் பக்கம் ஆழமாக பிரிந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக கோடோர்கோவ்ஸ்கியினால் பிரதிநிதித்துவம் படுத்தப்படும் அமெரிக்க ஆதரவு தன்னலக்குழுவிற்கு உள்ளே இருக்கும் உட்கூறுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஒருங்கிணைக்கவும் வாஷிங்டனுடன் இன்னும் அதிகம் நெருக்கமாக ஒத்துழைக்கவும் உக்ரைன் நெருக்கடி பயன்படுத்தப்பட வேண்டும் என்று மேல்முறையீடு செய்து கொண்டிருக்கிறார்கள். |
|