World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை இலங்கையில் 18வது அரசியலைம்புத் திருத்தமும் போலி விவாதங்களும்
By Panini Wijesiriwardane, இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அடுத்த ஜனவரியில் அவசர ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப் போவதாகவும் மற்றும் அதில் அவர் போட்டியிடப் போவதாகவும் பகிரங்கமானவுடன், 18வது அரசியலைமைப்புத் திருத்தம், முதலாளித்துவ அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்ளில் பிரதான தலைப்பாக ஆகியிருக்கின்றது. எதேச்சாதிகார ஆடசிக்கான பாதையின் திருப்பு முனையாக 2010ல் நிறைவேற்றிக் கொண்ட இந்த திருத்தத்தின் கீழ், தொழிலாள வர்க்கத்துக்கும் மற்றும் தனது அரசியல் எதிரிகளுக்கும் எதிராக கொடூரமான தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு அவசியமான அதிகாரங்களை இராஜபக்ஷ குவித்துக் கொண்டுள்ளார். தனது எதேச்சாதிகார ஆட்சியை மேலும் உறுதிப்படுத்திக்கொண்டு அவர் கணக்கிடும் 2022 வரையான நீண்ட காலத்துக்கு, சர்வதச நிதி மூலதனத்தின் கட்டளைகளை அமுல்படுத்தி, தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக சமூக எதிர்ப் புரட்சி ஒன்றை முன்னெடுப்பதற்கே இராஜபக்ஷவால் அவசர ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தெரியாமல் ஜனநாய விரோதமான முறையில் பாராளுமன்றத்தின் ஊடாக அவசரமாக நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட 18 வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலமாக இராஜபக்ஷவுக்கு, ஜனாதிபதி பதவியில் இருக்கக்கூடிய காலம் வரையறை அற்றதாக ஆக்கப்பட்டுள்ளது. 1978ல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட அரசியல் யாப்பின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் கீழ் கொடுக்கப்ட்ட மிகப் பிரமாண்டமான அதிகராங்களுக்கும் மேலாக, நீதிமன்றம், பொலிஸ், தேர்தல் ஆணைக் குழு மற்றும் மத்திய வங்கி மீதும் கணிசமான அதிகாரமும் புதிய திருத்தத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறிய தட்டினர் மத்தியில், மேலும் மேலும் அதிகாரத்தையும் நிதியையும் குவித்துக் கொள்வதற்கும், தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தொடுக்கப்படும் தாக்குதல்களை தீவிரமாக்குவதற்கும் இந்த புதிய அதிகாரங்கள் இராஜபக்ஷவால் நன்கு பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. திருத்தத்தின் பிற்போக்கு குறிக்கோளானது, தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. அதன் கபடத்தனம் மற்றும் நன்மை பற்றி முதலாளித்துவ ஆட்சித் தட்டினரில் உள்ள பல குழுக்கள் மத்தியில், நான்கு ஆண்டுகளின் பின்னர் நடத்தப்படும் விவாதங்களின் உண்மையான குறிக்கோள், இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளின் காரணமாக அரசாங்கத்துக்கும் மற்றும் முழு முதலாளித்துவ ஸ்தாபகத்துக்கும் எதிராக மக்கள் மத்தியில் வளர்ச்சியடைந்து வரும் பலமான எதிர்ப்பை திசை திருப்புவதே ஆகும். மேல் குறிப்பிடப்பட்ட பிரதான உந்துதுதலை வெளிப்படுத்தும் ஒரு ஆசிரியர் தலைப்பு கடந்த அக்டபர் 26ல் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியானது. “18ம் அரசியலைமைப்பு திருத்தத்தின் மீது மேற்கொள்ளப்படும் விவாதம், நான்கு ஆண்டுகள் தாமதித்திருப்பது அதிகமாகும்" என்ற தொனிப்பொருளின் கீழ் வெளியான அந்த ஆசிரியர் தலையங்கம், திருத்தம் சம்பந்தமாக சண்டே டைம்ஸ் ஆரம்பத்தில் முன்வைத்த எச்சரிக்கையை பின்வருமாறு முன்வைத்திருந்தது: “சமநிலை மற்றும் அதிகாரத்தை பிரிக்கும் அடிப்படை முறைகளை இது தூக்கி வீசுவதாகவும் மற்றும் புதிய அரசியல் கலாச்சாரத்தை நிறுவுவதாகவும் நாம் எச்சரிக்கை விடுக்கின்றோம். நாம் இவ்வாறு எழுதுகிறோம்... 'இலக்கு நன்மையானதாக இருக்கலாம். ஆயினும், நன்மையான குறிக்கோள்களுடன் இணைந்து நரகத்துக்குப் போகும் பாதையும் திறக்கப்படும் என பழைய பழமொழி உள்ளது.’ இதன் அர்த்தம் மிகவும் தெளிவானது.” “நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், குறிக்கோள் என்ன என்பது தெளிவு" என ஆசிரயர் தலையங்கம் மேலும் குறிப்பிடுகின்றது. திருத்தத்தின் உண்மையான குறிக்கோள்களை மூடி மறைத்து அவற்றை நன்மையானவையாக இருக்கக் கூடும் என நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதிய சடன்டே டைம்ஸ், இப்போது குறிக்கோள் தெளிவானது எனக் குறிப்பிட்டாலும் அதைத் தெளிவுபடுத்தாமல் இருக்கின்றது. அல்லது திருத்தத்துக்கு பின்னால் இருக்கும், இப்போது மிகவும் மாறித் தெரிகின்ற பிற்போக்கு இலக்கை மூடி மறைக்கின்றது. 18வது அரசியலமைப்பு திருத்த்தின் உண்மையான குறிக்கோள் என்ன என்பது பற்றி 2010ல் தெளிவுபடுத்தியது உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச் சமத்துவக் கட்சியும் (சோசக) மட்டுமே ஆகும். “இலங்கையில் அரசியலமைப்பு மாற்றம் எதேச்சதிகார ஆட்சியை உறுதிப்படுத்துகின்றது" என்ற தலைப்பின் கீழ், சோசக பொதுச் செயாலளர் விஜே டயஸ் எழுதி 2010 செப்டெம்பர் 21 உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான முன்னோக்கு கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: “இந்த மாத ஆரம்பத்தில் இலங்கை பாராளுமன்றத்தின் ஊடாக முன் தள்ளப்பட்ட அரசியலமைப்பு மாற்றமானது பூகோள நிதி மூலதனத்தால் கோரப்பட்ட சிக்கன திட்டங்களை சுமத்தும்போது நடைமுறைப்படுத்தப்படும் வழிமுறைகள் பற்றி உள்நாட்டிலும் மற்றும உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை ஆகும். செப்டெம்பர் 8 நிறைவேற்றப்பட்ட 18வது திருத்தம். ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ தலைமையிலான முழுமையான பொலிஸ் அரசை நோக்கிய பயணத்தின் இன்னொரு அடியெடுப்பாகும். சமூக பதட்டங்கள் வளர்ச்சியடையும்போது, பாராளுமன்ற விதிமுறைள் மூலமாக ஆழமாக மக்களை அதிருப்திக்குள்ளாக்கும் கொள்கைகளை நடமுறைப்படுத்துவது ஆளும் வர்க்கத்துக்கு மேலும் மேலும் சிக்கலாக இருக்கும் அதேவேளை, அத்தகைய நிலையில் எதேச்சாதிகார மற்றும் பாராளுமன்றத்துக்கு புறம்பான ஆட்சி முறைக்கு அவை திரும்பும் என அந்த கட்டுரையில் மேலும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. போர்க் கடனில் நசுக்கப்ட்டுள்ள மற்றும் பூகோள நிதி நெருக்கடியின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள இலங்கை நிர்வாகம், உலகம் பூராவும் உள்ள ஏனைய அரசாங்கங்களைப் போலவே உக்கிரமான சிக்கன நடவடிக்கைகளை சுமத்த வேண்டிய கட்டாயத்துக்கு முகங்கொடுப்பதற்காக, வாழ்க்கை நிலைமைகள் சீரழிவதற்கு எதிராக உழைக்கும் மக்கள் மத்தியில் நிச்சயமாக வெடிக்க கூடிய எதிர்ப்புக்குத் தயாராகுவதற்காக, இராஜபக்ஷ தனது ஆதிகாரத்தை பலப்படுத்திக்கொண்டு வருகின்றமையும் அதில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. “உறுதியான" மற்றும் "பலமான" அரசாங்கத்துக்கான கோரிக்கை, இலங்கைக்கு மட்டும் மட்டுப்படுத்ப்பட்டதல்ல என்பதும் அரசாங்கங்களின் கொள்கைகள் மூலமாக உருவாக்கப்பட்டுள்ள சமூக நெருக்கடிகளுக்கு எதிராக வளர்ச்சியடையும் வெகுஜன அதிருப்தி மற்றும் எதிர்ப்புகளுக்கு அரசாங்கம் முகங்கொடுக்கும் நிலையில், அரசியல் ஸ்திரமின்மை சட்டமாக ஆகி உள்ளது என்பதையும் கட்டுரை தெளிவுபடுத்தி இருந்தது. சோசக விடுத்த இந்த எச்சரிக்கை, நான்கு ஆண்டுகளின் பின்னர் மிகவும் பலம்வாய்ந்த முறையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீது இடைவிடாமல் தொடுக்கப்படும் தாக்குல்களுக்கு எதிரான போராட்டத்துக்கு வரும் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களை கொடூரமாக நசுக்குவதற்காக "18”வது திருத்தத்தில் உறுதிப்படுத்தப்பட்ட அதிகாரங்களை இராஜபக்ஷ நன்கு பயன்படுத்தி வருகின்றார். போலி இடதுகள், மத்திய தர வர்க்க புத்திஜீவிகள் உட்பட பல்வேறு கும்பல்கள், 18வது திருத்தம் உட்பட இராஜபக்ஷ அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் தடுத்து நிறுத்த முடியும் என்ற மாயையை தொழிலாளர்களுக்குள் பரப்புகின்றனர். இந்த நடவடிக்கைகள் இராபக்ஷவின் தனிப்பட்ட கெட்ட குணத்தில் இருந்து தோன்றுவதல்ல என்றும் அவை சமூக வெடிப்புக்கு முகங்கொடுத்துள்ள முதலாளித்துவ அமைப்பு முறையின் நெருக்கடியின் வெளிப்பாடு என்றும் சோசக மட்டுமே தெளிவுபடுத்தியது. இந்த எதேச்சாதிகார திட்டங்களுக்கு எதிரான போராட்டம் முதலாளித்துவத்தை தூக்கிவீசும் அனைத்துலக சோசலிச வேலைத் திட்டத்துடன் பிரிக்க முடியாமல் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை சோசக தொடர்ந்தும் தெளிவுபடுத்தி வந்துள்ளது. முதலாளித்துவ ஸ்தாபகத்துக்கான ஒரு கட்சியாக மாறியுள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபீ), இராஜபக்ஷ மூன்றாம் முறை போட்டியிடுவது "சட்ட விரோதமானது" என கூறிக்கொண்டு ஒரு போலி பிரச்சாரமொன்றை நடத்துவது, தொழிலாள வர்க்கத்தை இந்த வேலைத் திட்டத்தில் இருந்து தூர விலக்குவதற்கே ஆகும். இராஜபக்ஷவின் போட்டியிடலுக்கு எதிராக ஜேவிபீயால் நீதிமன்றத்தின் முன் தாக்கதல் செய்யப்பட்ட வழக்கின் நீதிபதி ஆசனத்தில் அமர்ந்திருப்பவர், பிரதம நீதீயரசர் மொஹான் பீரீஸ் ஆவார். இராஜபக்ஷ அரசாங்கத்தின் அவசியங்களுக்கு தடையாக இருப்பதாக கணிக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை பதவியில் இருந்து இறக்கிய பின்னர், அந்த இடத்தில் அமர்த்தப்பட்ட இராஜபக்ஷவுக்கு நெருக்கமானவரான பீரிசின் தீர்ப்பு என்னவென்பது தெளிவானது. 2005ல் இராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கும், எதேச்சாதிகார அதிகாரங்களை உறுதிப்படுத்திக்கொள்தவற்காவும் பிரதான ஊடகமாக்கிக் கொள்ளப்பட்ட இனவாத போருக்கும் முழு ஆதரவு கொடுத்த ஜேவிபீ, 2010ல் இந்த திருத்தத்தை கொண்டுவந்த போது அதன் உண்மையான ஆபத்துக்களை தொழிலாள வர்க்கத்துக்கு மூடி மறைத்ததோடு அவர்களின் எதிர்ப்பை பலவீனமான வீதி எதிர்ப்புகளாக தரம் குறைத்தது. இந்த நிலையில் போலி இடது கட்சிகளான ஐக்கிய சோசலிச கட்சி மற்றும் முன்னிலை சோசலிச கட்சி உட்பட இன்னும் பல அமைப்புகளும் "18”ல் அடங்கியுள்ள அதிகாரங்கள் கொண்ட முழு ஜனாதிபதி முறைமையையும் தூக்கி வீச நடவடிக்கை எடுக்கும் "பொது இடது" வேட்பாளருக்கு தாம் ஆதரவு கொடுப்பதாக பிரச்சாரத்த்தில் ஈடுபடுகின்றன. போலி இடது நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறும் அதேவேளை, அதே கட்சியின் இன்னொரு பகுதியினர் "பொது இடது வேட்பாளருக்கு" தாம் ஆதரவளிப்பதாக கூறுகின்றனர். இவை எதுவும் வளர்ச்சியடையும் எதேச்சதிகாரத்திற்கு சவால் செய்யாததோடு, அவற்றின் இலக்கு இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கம் ஒன்று வளர்ச்சியடைவதை தடுத்து, தொழிலாள வர்க்கத்தையும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களையும் முதலாளித்துவ முறைமைக்குள் கட்டிப்போடுவதே ஆகும். இந்த சகல கட்சிகள் மற்றும் அமைப்புகளின் மற்றும் அவற்றின் வேலைத் திட்டங்களில் இருந்து தொழிலாள வர்க்கம் பிரிந்து அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்தின் அடிபடையிலான ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டி எழுப்ப வேண்டும். ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களை ஐக்கியப்படுத்திக்கொள்வதன் மூலம், தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்கு கொண்டு வருதவற்காக போராடும், அத்தகைய தொழிலாள வர்க்க இயக்கம் மூலமாக ஜனநாயக முறையில் தேர்வு செய்துகொள்ளப்படும் அரசயலமைப்பு சபையின் ஊடாக மட்டுமே உண்மையான ஜனநாயக அரசியலமைப்பை உருவாக்கிக்கொள்ள முடியும். |
|