சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama’s speech in Australia: A threat of war against China

ஆஸ்திரேலியாவில் ஒபாமாவின் உரை: சீனாவுக்கு எதிரான ஒரு யுத்த அச்சுறுத்தல்

James Cogan
17 November 2014

Use this version to printSend feedback

ஆஸ்திரேலியாவில் G20 தலைவர்களின் உச்சிமாநாட்டிற்கு சென்றிருக்கையில், சனியன்று குவின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய பராக் ஒபாமாவின் கருத்துக்கள், ஆசிய-பசிபிக் மீது அமெரிக்காவின் மேலாளுமைக்காக சீனாவின் எந்தவொரு சவாலையும் தடுக்க, யுத்தம் உட்பட, ஒவ்வொரு வழிவகையையும் அமெரிக்கா பிரயோகிக்கும் என்ற யுத்தவெறியூட்டும் மறுஅறிவிப்பாக இருந்தது.

அந்த உரையின் பெரும்பகுதி, சீனாவுக்கு எதிரான இராணுவ நிலைநிறுத்தல்கள் மற்றும் தூதரகரீதியிலான ஆத்திரமூட்டல்களை மீளாய்வு செய்வதிலேயே அர்பணிக்கப்பட்டிருந்தது, 2011இல் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் ஒபாமா "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை" அறிவித்ததிலிருந்து வாஷிங்டன் இதைத் தான் நடத்தி வந்துள்ளது. ஜப்பான், தென்கொரியா மற்றும் பிலிப்பைன்ஸூடன் அமெரிக்கா எவ்வாறு அதன் உறவுகளைப் பலப்படுத்தி உள்ளது என்பதைக் குறித்தும், ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் புதிய தளங்களைத் திறந்துள்ளதைக் குறித்தும், இன்னும் பெரியளவில் பிராந்திய இராணுவ பாத்திரம் வகிக்க இந்தியாவை ஊக்குவித்துள்ளமை மற்றும் வியட்நாம், மலேசியா மற்றும் பர்மாவுடன் அதன் நெருங்கிய உறவுகளைப் பின்தொடர்ந்துள்ளதைக் குறித்தும் அவர் பெருமை பீற்றினார்.

அதற்கு முரணாக, அப்பிராந்தியத்தில் சீனா "என்ன மாதிரியான பாத்திரம் வகிக்குமென்ற" அமெரிக்கா சந்தேகங்களின் நிலைப்புள்ளியிலிருந்து, சீனா விவாதிக்கப்பட்டது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியை அமெரிக்கா வரவேற்கிறது என்ற ஒபாமாவின் வெற்றுரைகளைப் பின்தொடர்ந்து, மோதலைத் தவிர்க்க வேண்டுமானால் பெய்ஜிங் "ஏனைய நாடுகளுக்குரிய அதே விதிகளைக் கடைபிடிக்க வேண்டும்"—அதாவது வாஷிங்டனால் கட்டளையிடப்படும் விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்—என்ற வலியுறுத்தல்கள் வந்தன.

ஆசிய முன்னெடுப்பு என்பது மத்திய கிழக்கில் அமெரிக்க யுத்தம், ரஷ்யாவுக்கு எதிராக அதன் உக்ரேனிய தலையீடுகள் மற்றும் எபோலா நுண்ணுயிரையைத் தடுப்பதற்காக என்ற பதாகையின் கீழ் ஆபிரிக்காவில் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதலில் இருந்து பிரிக்கவியலாதது என்பதை ஒபாமா வலியுறுத்தினார். ஜனாதிபதி அறிவித்தார், “இத்தகைய ஒவ்வொரு சர்வதேச முயற்சிகளிலும், நமது உறுதியான பங்குதாரர்களில் சிலராக, ஆஸ்திரேலியா உட்பட இப்பிராந்தியத்தின் நமது கூட்டாளிகளும் மற்றும் நண்பர்களும் இருக்கிறார்கள்." “நமது மறுசமன்படுத்தல் (rebalance) என்பது அமெரிக்கா ஆசியாவில் இன்னும் மேலதிகமாக செயல்படுவதைக் குறிப்பது மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் நம்முடன் சேர்ந்து செயல்படுவதில் ஆசிய பசிபிக்கையும் சம்பந்தப்படுத்துவதாகும்," என்றார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சீனாவுடன் ஒரு சாத்தியமான அணுஆயுத போரில் மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த யுரேஷிய நிலப்பகுதி மற்றும் ஒட்டுமொத்த பூமியின் மீதும் அதன் மேலாதிக்கத்தைப் பெறுவதற்கான தீவிரப்பட்ட நடவடிக்கைகளில் அமெரிக்கா ஆசியாவில் உள்ள அதன் கூட்டாளிகளை —குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானை— அதன் பங்குதாரர்களாக வளர்த்து வருகிறது. ஜேர்மனி மற்றும் பிரான்ஸைப் போல பிரதான ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே பதட்டங்கள் பகிரங்கமாக மேற்புறத்திற்கு கொதித்தெழும் அந்நாளுக்காக வாஷிங்டன் தயாரிப்புகளைச் செய்து வருகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் நிகழ்ச்சிநிரலைக் குறித்து ஒபாமா பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு பொய்யாகும். அவருக்கே உரிய முத்திரையான பாசாங்குத்தனத்துடன், அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எதைக் கொண்டு அதன் உலகளாவிய பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் மேலாளுமையை நியாயப்படுத்தி வந்துள்ளதோ அந்த மதிப்பிழந்த சித்தாந்த சாக்குபோக்குகளையே அவர் திரும்ப உச்சரித்தார்.

"ஆசியாவிற்கான ஒரு சிறப்பான பாதுகாப்பு ஒழுங்குமுறையானது, செல்வாக்கு எல்லைகளின் மீதோ, அல்லது அச்சுறுத்தலின் மீதோ, அல்லது மிரட்டலின் மீதோ அல்ல அவ்வாறானதில் பெரிய நாடுகள் சிறிய நாடுகளை மிரட்டும்—மாறாக பரஸ்பர பாதுகாப்பு கூட்டணிகளின் மீது, சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச விதிமுறைகளின் மீது அமைந்திருக்க வேண்டுமென" ஒபாமா வலியுறுத்தினார்.

உலக அரங்கில் முற்றிலும் சட்டமீறல்களை அதுவே நடத்திக் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கத்தின் பிரதிநிதியிடமிருந்து இது வருகிறது. அமெரிக்க ஆளும் வர்க்கமோ நீண்டகாலத்திற்கு முன்னரே தேசிய இறையாண்மை மீதான சர்வதேச சட்டங்களுக்கு எந்தவொரு ஆதரவையும் துறந்துவிட்டதுடன், அதன் "தேசிய நலன்கள்" அச்சுறுத்தப்படுவதாக கருதும் எந்தவொரு இடத்திலும் தலையீடு செய்வதிலிருந்து அது தனக்குத்தானே விலக்களித்துள்ளது. அதன் ஒட்டுமொத்த வெளியுறவுக் கொள்கையும் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டலை அடிப்படையாக கொண்டுள்ளது.

ஒபாமா தொடர்ந்து கூறுகையில், அமெரிக்கா "நியாயமான மற்றும் சுதந்திரமான, தடையற்ற சந்தைகள் மற்றும் வர்த்தகத்திற்காக" நிற்கிறது என்றார்.

2008 நிதிய உருகுதலுக்குப் பின்னரில் இருந்து, செலாவணி மதிப்புகள் மற்றும் வட்டிவிகிதங்களில் மோசடி செய்ய அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதன் பணத்தைப் புழக்கத்தில் விடும் கொள்கையைப் பயன்படுத்தி உள்ளது, அதேவேளையில் அரசாங்கம் மற்றும் நீதிமன்றங்களோ நூறு மில்லியன் கணக்கான மக்களுக்குப் பாதிப்பை உண்டாக்கிய வங்கிகள் மற்றும் ஊகவணிகர்களின் குற்றகர நடவடிக்கைகளால் உண்டான சமூக நெருக்கடிக்கு எந்தவிதத்திலும் பொறுப்பாவதிலிருந்து அவர்களைக் காப்பாற்றி உள்ளன. சீனாவைத் விலக்கி வைக்கும், பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை (TPP) போன்ற பாரபட்சமான வர்த்தக அணிகளை உருவாக்கவும் மற்றும், அமெரிக்க பெருவணிகங்களால் ஏற்படுத்தப்பட்ட மற்றும் அவற்றிற்கு ஆதரவான விதிமுறைகளை உறுப்பினர்கள் ஏற்குமாறு செய்யவும் வாஷிங்டன் முயன்று வருகிறது.

மிகவும் பொருத்தமின்றி ஒபாமா அறிவித்தார், “நாங்கள் ஜனநாயகத்தை நம்புகிறோம்—சட்டபூர்வதன்மைக்கு ஆதாரமாக இருக்கும் ஜனநாயகத்திற்கு மட்டுமே மக்கள் சம்மதிக்கிறார்கள், ஒவ்வொரு தனிமனிதர்களும் சமமான அடிப்படை உரிமைகளோடும், பிறப்புரிமைகளோடும் பிறந்திருக்கிறார்கள், அத்தகைய உரிமைகளைக் காப்பாற்றுவதே அரசாங்கங்களின் பொறுப்பாகும்," என்றார்.

அமெரிக்க அரசியல் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் கட்டுப்படுத்துகின்ற, மிக-செல்வந்த நிதியியல் தன்னலக்குழுக்களுக்குச் சேவை செய்கின்ற, ஒட்டுமொத்த உலகையும் வேவு பார்க்கும் ஒரு பாரிய உளவுத்துறை எந்திரத்தைக் கட்டமைப்பதை மேற்பார்வையிட்டுள்ள, மற்றும் எவ்வித விசாரணையுமின்றி அமெரிக்க குடிமக்களை கொல்ல அவருக்கு உரிமை இருப்பதாக வலியுறுத்துகின்ற ஒரு ஜனாதிபதியிடமிருந்து இது வருகிறது. அமெரிக்கா இயல்புக்குமீறிய சமூக சமத்துவமின்மையின் அளவுகளால், அநீதி மற்றும் அரசு வன்முறையின் திகைப்பூட்டும் மட்டங்களால் சிதைந்து கொண்டிருக்கிறது. அது முன்பில்லாதளவிற்கு அதிகமாக ஒரு பொலிஸ் அரசின் குணாம்சத்தை கொண்டுள்ளது.

அவரது பொய்களை நீட்டித்து, ஒபாமா அறிவித்தார்: “ஒரு பசிபிக் பிரதேச சக்தியாக, அமெரிக்கா இந்த தொலைநோக்குப் பார்வையை முன்னெடுக்க எங்களின் இரத்தத்தையும், செல்வத்தையும் முதலீடு செய்துள்ளோம்.... ஆசிய-பசிபிக் பிராந்திய மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகவே அமெரிக்கர்களின் தலைமுறைகள் சேவை செய்துள்ளனர் மற்றும் அப்பிராந்தியத்தில் உயிர் நீத்துள்ளனர். ஆகவே எங்களின் கூட்டாளிகளுக்கான எங்களின் உறுதியையோ அல்லது பொறுப்புணர்வையோ எவரொருவரும் ஒருபோதும் கேள்வி கேட்க முடியாது."

சுதந்திரம் மீதான வெறுப்பு, பாரிய படுகொலை மற்றும் வரலாற்று போர் குற்றங்கள் இவையே ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிஜமான வரலாறாகும். இரண்டாம் உலக போரின் போது, அது ஒரு ஏகாதிபத்திய போட்டியாளனான ஜப்பானை அழித்து, சீனாவின் மீது மேலாளுமையைப் பெற முனைந்தது. ஜப்பானை மண்டியிட நிர்பந்திக்க—மற்றும் அதன் உலகளாவிய மேலாதிக்க நிலைப்பாட்டை மறுஉறுதிப்படுத்த உச்சக்கட்ட வன்முறையைப் பிரயோகிப்பதற்கான அதன் விருப்பத்தை எடுத்துக்காட்டுவதற்காக—ஒட்டுமொத்த நகரங்களையும் குண்டுவீசி சாம்பலாக்கியதோடு, ஹிரோஷிமா மற்றும் நாகசாகியை அணுகுண்டுகளை வீசி நிர்மூலமாக்கியது.

அப்பிராந்தியம் எங்கிலும் வெடித்த, மிக குறிப்பிடத்தக்க வகையில் 1949 இல் வெடித்த சீனப் புரட்சி போன்ற காலனித்துவ-எதிர்ப்பு இயக்கங்களை நசுக்கும் முயற்சியில், ஆயிரக் கணக்கான அமெரிக்க இளைஞர்களின் வாழ்க்கை உட்பட, பாரிய ஆதாரவளங்களை அமெரிக்கா செலவிட்டது. 1951-53 கொரிய போரில் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள், வியட்நாம் யுத்தத்தின் போது இந்தோ-சீனாவில் இன்னும் கூடுதல் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். சுமார் அரை மில்லியன் மக்கள் 1965 அமெரிக்க-பின்புல இந்தோனேஷிய ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் படுகொலை செய்யப்பட்டார்கள். தென்கொரியா, தாய்வான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் அமெரிக்க-ஆதரவிலான பொலிஸ்-அரசுகள் ஜனநாயக மற்றும் தொழிலாளர் நடவடிக்கையாளர்களை கண்மூடித்தனமாக ஒடுக்கியது.

ஆசிய பகுதிகள் அமெரிக்க மற்றும் ஏனைய நாடுகடந்த பெருநிறுவனங்களின் முதலீட்டுக்குரிய குவிமையமாக ஒரேயொரு காரணத்திற்காக மட்டுமே மாறியிருந்தன எதற்காகவென்றால், அரசியல் திவால்நிலைமை மற்றும் காலனித்துவ-எதிர்ப்பு போராட்டங்களது தலைமையின் காட்டிக்கொடுப்புக்களோடு சேர்ந்து, அமெரிக்க இரகசிய சதிகள், ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலை அந்நாடுகளின் மக்கள் அனுபவிப்பதை உறுதிப்படுத்துவதற்காகவே ஆகும். ஸ்ராலினிச சீன கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ உறவுகளை மீட்டமைத்து, அது தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்க அதன் இராணுவம் மற்றும் பொலிஸ் எந்திரத்தைப் பிரயோகிக்கும் என்பதை தியானன்மென் சதுக்க படுகொலையில் எடுத்துக்காட்டிய பின்னர் தான், பெருநிறுவனங்கள் சீனாவை அவற்றின் நடவடிக்கைகளுக்கான பிரதான அடித்தளமாக மாற்றின.

தியானன்மென் படுகொலையின் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், ஜனநாயகத்திற்கான அமெரிக்க ஆதரவு குறித்த ஒபாமாவின் எரிச்சலூட்டும் மற்றும் மோசடியான வலியுறுத்தல் சீனாவின் செல்வந்த மற்றும் தனிச்சலுகைபடைத்த மத்தியதர வர்க்க அடுக்குகளுக்கு ஒரு மறைமுகமான முறையீடாகும், அவை அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் வாழ்க்கைமுறைகளின் மீது திணிக்கப்பட்டிருக்கும் மட்டுப்படுத்தல்களுக்காக கோபமடைந்துள்ளன. ஆசியாவில் உள்ள ஏனைய நாடுகளைப் போலவே, “ஹாங்காங்கில் உள்ள மக்களும் அவர்களின் அனைவருக்குமான உரிமைகளைப் பேசி வருகின்றனர்" என்று குறிப்பிடத்தக்க வகையில் ஒபாமா அறிவித்தார். இராணுவத் தயாரிப்புகளோடு இணைந்து, வாஷிங்டன் சீனாவுக்குள் ஒரு சமூக அடித்தளத்தை வளர்த்தெடுக்க முனைந்து வருகிறது, பின்னர் அது பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட ஏகாதிபத்திய-சார்பு "நிறப் புரட்சிகளின்" மாதிரியில், தற்போதிருக்கும் ஆட்சியை நிலைகுலைக்கும் நோக்கில் இயக்கங்களை அபிவிருத்தி செய்ய பயன்படுத்திக் கொள்ளப்படும்.

ஏகாதிபத்திய பிரச்சாரத்திற்கு எந்தவொரு நம்பகமான விடையிறுப்பைக் காட்டவோ அல்லது யுத்த தயாரிப்புகளை எதிர்க்க சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்புவிடுக்கவோ சீன ஸ்ராலினிச ஆட்சி இலாயகற்று உள்ளது. அது, ஊழல்மிகுந்த மற்றும் வேண்டியவர்களுக்கு மட்டும் சலுகை அளிக்கும் முதலாளித்து மேற்தட்டைப் பிரதிநிதித்துவம் செய்கிறது, அவர்கள் ஏகாதிபத்தியத்துடன் உடனுழைத்ததன் மூலமாகவும், சீனத் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளை இரக்கமின்றி ஒடுக்கியதன் மூலமாகவும் பாரிய செல்வவளத்தை குவித்துக் கொண்டுள்ளனர். ஏதோவிதத்தில் சமரசத்திற்கு கொண்டு வர முடியுமென்ற நம்பிக்கையில், வாஷிங்டனுடன் அதன் பயனற்ற ஆயுத பந்தயத்தை விஸ்தரிப்பது தான், ஒபாமாவின் யுத்தவெறியூட்டலுக்கு பெய்ஜிங்கின் ஒரே விடையாக இருக்கும், ஆனால் அது யதார்த்தத்தில் யுத்த அபாயத்தை அதிகரிக்க மட்டுமே சேவை செய்கிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் தலைமையிலான சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே, முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வர மற்றும் முதலாளித்துவம் தயாரிப்பு செய்து வருகின்ற பேரழிவைத் தடுக்க அவசியமான சோசலிசத்திற்கான ஒருங்கிணைந்த உலகந்தழுவிய புரட்சிகர போராட்டத்திற்கு தகைமை கொண்ட ஒரே சக்தியாக உள்ளது.