சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

NATO intensifies threats against Russia over Ukraine

உக்ரேன் மீது ரஷ்யாவுக்கு எதிரான அச்சுறுத்தல்களை நேட்டோ தீவிரப்படுத்துகிறது

By Christoph Dreier
15 November 2014

Use this version to printSend feedback

ஆஸ்திரேலியாவில் நடக்கும் G20 உச்சிமாநாட்டிற்கு முந்தைய நாளில், நேட்டோ நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான அவற்றின் அச்சுறுத்தல்களை அதிகரித்துள்ளன. உக்ரேனிய இறையாண்மையை மீறுவதாக அவை அந்நாட்டை குற்றஞ்சாட்டுகின்ற அதேவேளையில், அவை தாமே இராணுவ வன்முறையைப் பாரியளவில் தீவிரப்படுத்த தயாரிப்பு செய்து வருகின்றன.

வெள்ளியன்று Bild செய்தியிதழுக்கு அளித்த ஒரு பேட்டியில், நேட்டோவின் புதிய பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் "மதிப்பார்ந்த ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பை" ரஷ்யா பலவீனப்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் “எல்லா விதத்திலும், [கிழக்கு உக்ரேனில்] மோதலை எரியூட்டி ஊக்குவித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, உக்ரேனின் கிழக்கில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு, கிரெம்ளின், ஆயுதங்கள் மற்றும் சிப்பாய்களை அனுப்பி வருவதாக ஸ்டொல்டென்பேர்க் குற்றஞ்சாட்டினார். “ரஷ்யா மீண்டும் உக்ரேன் எல்லைக்குள் ஆயுதங்கள், உபகரணங்கள், தளவாடங்கள், டாங்கிகள் மற்றும் ராக்கெட்களைக் கொண்டு வந்துள்ளதை" நேட்டோ கண்டறிந்துள்ளதாக அவர் வாதிட்டார். உக்ரேனில் ரஷ்யா தலையீடு செய்து வருகிறது என்பதில் அங்கே இனி எந்த சந்தேகமும் இல்லையென, புதனன்று, நேட்டோ தலைமை தளபதி பிலிப் ப்ரீட்லோவ்வும் அறிவித்தார்.

அதே நாளில், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜென் சாக்கி கூறுகையில், “ரஷ்யா மற்றும் அதன் பிரதிநிதிகளால் தொடர்ந்து, தொடர்ச்சியாக, அப்பட்டமாக மின்ஸ்க் உடன்பாடு மீறப்பட்டு வருகிறது," என்றார். அமெரிக்கா ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருவதாக அவர் அறிவித்தார். மின்ஸ்கில் செப்டம்பர் மாத தொடக்கத்தில், உக்ரேனிய அரசாங்கமும், பிரிவினைவாதிகளும் போர்நிறுத்தத்திற்கும் மற்றும் அந்நாட்டின் கிழக்கிற்கு தொலைநோக்கான சுயாட்சி வழங்குவதற்கும் உடன்பட்டிருந்தனர். ஆனால் இரண்டுமே இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மேற்கு-பின்புலத்திலான ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் விளைவாக இந்த ஆண்டு பெப்ரவரியில் அதிகாரத்திற்கு வந்த உக்ரேனிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் இதில் ஒத்துப்பாட சேர்ந்து கொண்டனர். ஐநாவிற்கான உக்ரேனிய தூதர் யூரி செர்ஜியெவ் ட்விட்டரில் இவ்வாறு எழுதினார், “ரஷ்யா உக்ரேனில் ஒரு முழு அளவிலான தாக்குதலுக்குத் திட்டமிட்டு வருகிறது என்ற உண்மையை முடிந்தவரை விரைவாக ஐநாவுக்கு அறிவித்துவிட வேண்டுமென நான் கருதுகிறேன்."

OSCEக்கான உக்ரேனிய தூதர் ஐஹோர் ப்ரொகோப்சிக், ரஷ்ய நடவடிக்கைகளின் விளைவாக "ஐரோப்பிய பாதுகாப்புக்கு கணிக்கவியலாத அச்சுறுத்தல்கள்" இருப்பதாக எச்சரித்தார். தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரி லிஸ்யென்கோவுமே கூட, ரஷ்யா கருங்கடலில் இருந்து உக்ரேனைத் தாக்க தயாரிப்பு செய்து வருவதாக தெரிவித்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்க பிரதிநிதிகளும் சரி அல்லது நேட்டோ பொதுச் செயலாளரும் சரி உறுதியான ஆதாரங்கள் எதையும் வழங்கவில்லை. புதனன்று, ரஷ்யா இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துரைத்தது. இவை "வெற்றுப்பேச்சுகள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை," இது மேஜர் ஜெனரல் இகோர் கொனாஷெக்கா கூறியது. “இவற்றின் அடித்தளத்தில் எந்த உண்மையும் இல்லை." ரஷ்யா இராணுவ ஆதரவளிக்கிறது என்ற செய்திகளோடு பிரிவினைவாதிகளும் முரண்பட்டனர்.

அம்மண்ணில் ஒரு கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான அமைப்பு (OSCE), இந்த வாரத்தின் தொடக்கத்தில், மேற்கை நோக்கி பிரிவினைவாத பிரந்தியத்திற்குள் நகர்ந்து வரும் இராணுவ வாகனங்களைக் குறித்து மட்டும் குறிப்பிட்டது. அனைத்திற்கும் மேலாக, ரஷ்யாவிற்கு அருகிலுள்ள எல்லையில் இரண்டு தரப்பிலிருந்தும் சீருடையணிந்த நபர்கள் அதிகளவில் எல்லையைக் கடந்து வருவதாகவும், ஆனால் அவர்கள் ஆயுதமேந்தி இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டது.

மோதலில் இருக்கும் இரண்டு தரப்பிலிருந்து வரும் செய்தியின்படி, அப்பிராந்தியத்தின் சண்டை விடாது தொடர்ந்து கொண்டுள்ளது. அங்கே மீண்டும் மீண்டும் டொனெட்ஸ்க் மீது கனரக ஆயுத தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. எல்லைக்கோட்டுக்கு அப்பாலும் இராணுவ நடவடிக்கைகளை நடத்தி வருவதாக முதல்முறையாக, வியாழனன்று, கியேவ் ஆட்சி ஒப்புக் கொண்டது.

மின்ஸ்க் உடன்பாட்டின்படி உண்மையில் பிரிவினைவாதிகளுக்கு விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்ளப்பட்ட டொனெட்ஸ்க் விமானநிலையத்தைச் சுற்றி கடுமையான சண்டை தொடர்ந்துள்ளது. எவ்வாறிருந்த போதினும், உக்ரேனிய படைப்பிரிவுகள் பின்வாங்க மறுத்துள்ளதுடன், இதுவரையில் போராளிகள் படைகளுடன் மூர்க்கமான சண்டையில் ஈடுபட்டுள்ளன.

அரசாங்க புள்ளிவிபரங்களின்படி, வியாழனன்று நடந்த சண்டையில், குறைந்தபட்சம் நான்கு உக்ரேனிய சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். டொனெட்ஸ்க் மீதான தாக்குதலில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பிரிவினைவாதிகள் தெரிவித்தனர். எல்லைக்கருகில் சில வெற்றிகளைப் பிரிவினைவாதிகள் பெற்றிருந்ததாக OSCE அறிவித்தது.

மோதலை ரஷ்யா தான் தூண்டிவிட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டுக்கள், தெளிவாக நேட்டோ அதன் சொந்த ஆக்ரோஷ திட்டங்களை மூடிமறைக்கும் அதன் முயற்சிகளுக்கு சேவை செய்கின்றன. பெப்ரவரியில் பாசிச-பின்புலத்திலான ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னரில் இருந்து, நேட்டோ அரசுகள் ரஷ்ய செல்வாக்கைக் கீழறுக்கவும் மற்றும் உக்ரேனை அவற்றின் சொந்த நலன்களின் செல்வாக்கு எல்லைக்குள் உள்ளடக்கவும் திட்டமிட்டு வேலை செய்துள்ளன.

தற்போது அவர்கள் மேற்கொண்டும் தீவிரமூட்ட தயாரிப்பு செய்து வருகின்றன. “இராணுவ நடவடிக்கைக்குத் தயாரிப்பு செய்வதே எனது பிரதான பணியாக நான் பார்க்கிறேன்," உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஸ்டீபன் பொல்டோரக் ஒரு மந்திரிசபை கூட்டத்தில் தெரிவித்தார். உக்ரேன் "சண்டைக்கு" தயாராக வேண்டியுள்ளது; கியேவ் "கணிக்கவியலாத நடவடிக்கைகளை" எடுக்க தயாராக இருக்க வேண்டும், என்றார்.

வியாழனன்று, உக்ரேனிய உள்துறை மந்திரி சோர்ஜன் ஸ்கர்ஜாக் கூறுகையில், உக்ரேனிய இராணுவம் கடந்த வாரத்தில் மட்டும் கனரக இராணுவ தொழில்நுட்பங்களுக்காக 65 மில்லியன் டாலர்கள் செலவிட்டிருப்பதாக தெரிவித்த அவர், அவை அடுத்து வரவிருக்கும் காலத்தில் "எல்லைக்கோட்டுக்கு" நகர்த்தப்படும் என்பதோடு, டோன்பாஸ் பிரிவினைவாதிகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும் என்றார்.

அதற்கு ஒருநாள் கழித்து Rheinische Post உடனான ஒரு நேர்காணலில், உக்ரேனிய வெளியுறவுத்துறை மந்திரி பாவ்லோ க்ளெம்கின் உக்ரேனின் பரந்த இராணுவ மேம்படுத்தலைப் பாராட்டினார். “நாம் இப்போது சண்டையிடும் ஆயிரக் கணக்கான சிப்பாய்களைக் கொண்டிருக்கிறோம் என்பதோடு, அது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டும் உள்ளது", என க்ளெம்கின் தெரிவித்தார். “மிகவும் அவசியமேற்படும் போது, ரஷ்யாவால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இந்த பிரிவுகள் முழுத் திறமையோடு செயல்படும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்," என்றார்.

ஓர் உக்ரேனிய தொலைக்காட்சி செய்தியின்படி, அந்த ஆட்சி பழைய ஹோவிட்சர்களை [சிறு பீரங்கிகள்] போருக்கு-தயாராக உருவாக்க வேலை செய்து வருகிறது. அந்த துப்பாக்கி 203 மில்லிமீட்டர் குழல்விட்டம் கொண்டவை என்பதோடு, அவை 50 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கவல்லவையாகும். அவற்றின் உதவியோடு, உக்ரேனிய இராணுவம் உத்தியோகபூர்வ இராணுமயப்படாத பகுதிக்கு வெளியிலிருந்தே போராளிகள்-வசமிருக்கும் பகுதியைத் தாக்க முடியும்.

ரஷ்யாவை நோக்கிய மிகவும் ஆக்ரோஷமான ஓர் அணுகுமுறையை நேட்டோவும் அறிவித்துள்ளது. Bild நேர்காணலில் பேசிய ஸ்டொல்டென்பேர்க் கூற்றின்படி, கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் அங்கே மேலதிக ரோந்து விமானங்களும் மற்றும் மேலதிக துருப்பு சுழற்சிமுறைகளும் இருக்கும். துருப்புகளின் ஆயத்தநிலையை விஸ்தரிக்க, மேலதிகமான இராணுவ பயிற்சிகள் நடத்தப்பட்டிருந்தன. “இரண்டு நாளுக்கொருமுறை, ஒரு புதிய நேட்டோ இராணுவ ஒத்திகை தொடங்குவதாக," அந்த கூட்டணியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார். பாதுகாப்பை இலவசமாக செய்ய முடியாது என்பதால், நேட்டோ நாடுகள் "கூடுதலாக அவற்றின் பாதுகாப்பு செலவுகளை" ஏற்க வேண்டியதிருக்கும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

Süddeutsche Zeitung உடனான ஒரு நேர்காணலில், நேட்டோ உறுப்புநாடான எஸ்தோனியாவின் பாதுகாப்பு மந்திரி ஸ்வென் மிக்செர், அவரது நாட்டில் ஒரு மிகப்பெரிய நேட்டோ பிரசன்னத்தைக் கோரினார். பனிப்போரில் செய்யப்பட்டதைப் போலவே, ரஷ்யா இராணுவரீதியில் பின்வாங்கச் செய்ய வேண்டும் என்றுரைத்த அவர், “புட்டினினது போன்றவொரு ஆட்சியை நீங்கள் கையாளும் போது, பலத்தை விட பலவீனம் என்பதே மிகவும் ஆத்திரமூட்டுவதாக இருக்கிறது," என்றார்.

இந்த போர்-ஆக்ரோஷம் ரஷ்யாவுக்கு எதிரான புதிய பொருளாதார தடை அச்சுறுத்தல்களோடு சேர்ந்து வருகிறது. “உக்ரேனில் ரஷ்யாவினது நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளவியலாதவை," இது ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெர்ராவில் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூன் வெள்ளியன்று தெரிவித்தது. அவர் தொடர்ந்து கூறினார், “ரஷ்யா தொடர்ந்து நிலைமையை மோசமாக்கினால், நாங்கள் தடைகளைத் தீவிரப்படுத்துவோம்," என்றார். அமெரிக்கா மேற்கொண்டும் பல ரஷ்யா அரசியல்வாதிகளை தடைப்பட்டியலில் சேர்க்க அச்சுறுத்தியது.

G20 கூட்டத்தை ஒட்டி புட்டினை சந்திக்க உள்ள ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், உக்ரேனிய நெருக்கடியைப் பொறுத்தமட்டில் ஏற்கனவே அதுபோன்ற கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். அவர் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் புட்டினைத் தாக்கினார். ரஷ்யா மின்க்ஸ்க் உடன்பாட்டை மதிக்கவில்லை என்பதோடு, “உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டையும்" மீறிவருகிறது என்றார். “அது என்னை மிகவும் கவலைக்கு உள்ளாக்குகிறது," சான்சிலர் தெரிவித்தார். திங்களன்று, 28 நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை மந்திரிகள் ரஷ்யாவுக்கு எதிராக மேற்கொண்டு தடைகளை விதிப்பது குறித்து விவாதிப்பதற்காக ஒன்றுகூட உள்ளனர்.

இதற்கிடையே, மின்ஸ்க் உடன்பாட்டின் மீது பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க பிரிவினைவாதிகள் கியேவ் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர், அதில் OSCE மற்றும் ரஷ்யா இரண்டு தரப்பிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு என்று சுய-பிரகடனம் செய்து கொண்டதன் செய்திதொடர்பாளர் டெனிஸ் புஸ்சிலின் கூறுகையில், “நாங்கள் அடுத்த சில நாட்களில் பயணிக்க உள்ளோம், பின்பு திரும்பிவந்து வேலையைத் தொடருவோம்," என்றார். “உக்ரேன் தரப்பு விடையிறுக்க நீண்டகாலம் எடுத்துக் கொள்வதே பிரச்சினையாக உள்ளது," என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.