World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German army prepares for civil war

ஜேர்மன் உள்நாட்டுப் போருக்கு தயாராகிறது

By Denis Krassnin
13 November 2014

Back to screen version

இரண்டாவது "சர்வதேச நகர்ப்புற நடவடிக்கைகள் மாநாடு" அக்டோபர் 20 மற்றும் 22-க்கு இடையே மத்திய பேர்லினில் நடந்தது. கிளர்ச்சிகளை ஒடுக்குதல் மற்றும் நகர்புற பகுதிகளில் சமூக அமைதியின்மையின் மற்ற வடிவங்கள் குறித்து விவாதிக்க, பல சந்தேகத்திற்குரிய ஜனநாயக மரபுகளை கொண்ட நாடுகள் உட்பட, நாற்பது நாடுகளிலிருந்து நானூறு பிரதிநிதிகள் மூன்று நாட்கள் சந்தித்து பேசினார்கள்.

இன்றைய உலகில், நகர் பகுதிகள் முக்கியமானவையாக இருக்கின்றன" என்று மாநாட்டு நிகழ்ச்சி அறிவித்தது. பராமரிப்பது மற்றும் நகர் பகுதிகளில் ஸ்திரதன்மையை உருவாக்குவது இன்றைய பாதுகாப்பு படைகளுக்கு ஒரு சவாலான வேலையாக இருக்கிறது வழக்கமான உதவியிலிருந்து அல்லது முழு அளவு தெரு சண்டைக்கு கட்டாயப்படுத்தும் அணுகுமுறையின் நிகழ்ச்சியிலிருந்து காட்சிகள் தொடங்கி விரைவாக மாற்ற முடியும். சில நேரங்களில் ஒரு கண நேர பார்வை... உள்நாட்டு புலனாய்வு, உளவு பார்த்தல், சொத்துக்கள் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலமாக மட்டுமே ஊடுருவல்களின் புது அச்சுறுத்தல்கள், பயங்கரவாதம் மற்றும் கொரில்லா போர்முறைகளை எதிர் கொள்ள முடியும்.

மேலே குறிப்பிடப்பட்ட சவால்களுக்கு தீர்வுகளை வழங்குவது தான் மாநாட்டின் குறிக்கோள் என்று நிகழ்ச்சி நிரல் குறிப்பிட்டது. தற்போதைய நோக்கங்களிலிருந்து அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்கு அது ஒரு தளத்தை அளிக்கும் அத்துடன் ஜேர்மன் இராணுவம் அக்கறை காட்டும் நகர்புற நடவடிக்கைகள் குறித்த அதன் புதிய இராணுவ கோட்பாட்டின் ஒரு கண்ணோட்டத்தை அது வழங்கும்.

"தொழிற்துறை பிரதிநிதிகள், உயர் பதவிகளில் இருக்கும் NATO மற்றும் ஏனைய இராணுவ பிரதிநிதிகள் அவர்களுடைய யோசனைகளை, கோட்பாடுகளை மற்றும் தீர்வுகளை தெரிவிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள் என்று அது தொடர்கிறது.

ஜேர்மன் இராணுவ மேம்பாட்டு அமைப்புக்கான தலைவர், மேஜர் ஜெனரல் எர்ஹார்ட் ட்ரூஸ் தலைமையில் மாநாடு நடைபெற்றது. ஜேர்மன் பாதுகாப்பு தொழில்நுட்ப சங்கம் (DWT) மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்முயற்சியில் 1957-ல் ஏற்படுத்தப்பட்ட ஒரு தொண்டு நிறுவனத்தால் கூட்டாக நடத்தப்படுகிறது. அது ஆயுத தயாரிப்பு தொழிற்துறைக்கு ஒரு முகப்பு கூடமாக வேலை செய்கிறது.   

மாநாட்டுக்கு ஆயுத தளவாட தொழிற்சாலையால் நிதி அளிக்கப்பட்டது. கையடக்க துப்பாக்கிகள் தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் ஹெக்லர்&கோச், Dynamit Nobel Defence மற்றும் Kärcher Futurtech ஆகிய போர்க்கருவிகள் தயாரிப்பாளர்களுடன் இஸ்ரேலிய ஆயுத நிறுவனம் ரபேல் ஆகியவையும் அடங்கி இருந்தன. பல ஏனைய ஆயுத தயாரிப்பாளர்களும் தங்கள் தயாரிப்புகளை கண்காட்சி அரங்கத்தில் வைத்திருந்தார்கள்.

ஹோட்டல் Maritim கூடத்தில் ஒரு ஆரவாரமான வரவேற்புக்கு பின் இரண்டு நாட்கள் டஜனுக்கும் மேற்பட்ட நகர்ப்புற போர்முறை குறித்த விரிவுரைகளை பங்கேற்பாளர்கள் செவிமடுத்தார்கள்

"நகர்ப்புற போர்முறைகளில் ஜேர்மன் இராணுவத்தின் கண்ணோட்டம்" குறித்து மேஜர் ஜெனரல் Drews பேசினார்,நகர்ப்புற சூழலில் தரைப்படைகள்" என்ற தலைப்பில் பிரிட்டனின் பிரிகேடியர் பாப் ப்ரூசும், இஸ்ரேலிய ரிசர்வ் ஜெனரல் மற்றும் ரபேல் நிறுவனத்தின் பிரதிநிதி Rami Ben Efraimரபேல் மற்றும் நகர்ப்புற சவால்" என்ற தலைப்பிலும், நகர்ப்புற போர்முறைகளின் அரசியல் மற்றும் மூலோபாய சவால்கள்" என்ற தலைப்பில் ஜேர்மன் நாடாளுமன்ற துணை தலைவர் மற்றும் reservists’ சங்க தலைவர் Roderich Kiesewetter (கிறிஸ்துவ ஜனநாயக கட்சி) மற்றும் "நகர்ப்புற போர் - பட்டாலியன் கமாண்டரின் ஒரு அறிக்கை பிரிட்டிஷ் கேர்னல் மார்க் கென்யோன் ஆகியோர் பேசினார்கள்.

12 கருத்தரங்குகளில், இராணுவ பிரதிநிதி, ஆயுத விற்பனை தரகர்கள், விஞ்ஞானிகளிடமிருந்து சுமார் மேலும் 60 உரைகள் வந்திருந்தன. Heckler&Koch நிறுவனத்தின் ஒரு பிரதிநிதி "நவீன நகர்ப்புற போர் நடவடிக்கைகளில் தரைப்படைக்காக கையடக்க துப்பாக்கிகளின் குடும்பம்" குறித்து பேசினார், Securiton நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி "நடமாடும் கண்காணிப்பு: உளவுப்பார்த்தல் மற்றும் கட்டுப்பாடு" என்பது பற்றி பேசினார்

நகர்ப்புற போர் நடவடிக்கைகள் பற்றிய மாநாடு ஊடகங்களின் விமர்சனமின்றி வெளிப்படையாக இடம் பெற்றது, ஜேர்மன் இராணுவத்தை சீர்திருத்துவதின் ஒரு பகுதியாக சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் மாற்றங்களின் ஒரு தெளிவற்ற காட்சியை அளித்தது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் இராணுவத்தின் தடைக்கான காலகட்டம் முடிந்து விட்டது என்ற அரசாங்க பிரதிநிதிகளின் அறிவிப்பிற்கு பின், வெளியிலிருக்கும் எதிரிகளுக்கு எதிராக மட்டுமல்ல ஆனால் உள்நாட்டு போர் நடவடிக்கைகளுக்காகவும் அவர்கள் தயாராகி கொண்டிருக்கிறார்கள்.

2012-ன் ஆரம்பத்தில் பேர்லினில் நடைபெற்ற முதல் மாநாடு பற்றிய ஒரு அதிகாரபூர்வ அறிக்கை இதை உறுதிப்படுத்துகிறது.தலையீடுகள் மற்றும் மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிகள் மற்றும் ஓரளவுக்கு மக்கள் நெருக்கம் இருக்கும் நகரங்களில் கூட சண்டையிடுவதால் இன்றைய நெருக்கடி கால நடவடிக்கைகள் அதிகமாக குறிப்பிடப்படுகின்றன. நகர் பகுதிகளில் நெருக்கடி நடவடிக்கைகளுக்காக சிறந்த போர் களங்களுக்கு அப்பால் புது அணுகுமுறை அவர்களின் சொந்த இராணுவ படைகளின் ஒரு அடிப்படை மறுநிர்மாணத்திற்கான ஆதாரமாக இருக்கிறது" என்று அந்த அறிக்கை கூறுகிறது.

நகர் பகுதிகள் என்பது கிழக்கு உக்ரேன் அல்லது மத்திய கிழக்கில் இருக்கும் நெருக்கடியான பகுதிகளை மட்டும் குறிப்பவை அல்ல. பெருகி வரும் சமூக பதட்டங்களை கண்டு உள்நாட்டில் ஏற்படும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறது. அவசரகால அதிகாரங்களுடன் 1968-ல் நிறைவேற்றப்பட்டு ஏற்கனவே நடைமுறையில் உள்ளவை இதற்கு சட்டபூர்வ அடிப்படையை கொடுக்கிறது.

தளபதிகள், கொசோவோ, ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் இஸ்ரேலில் போரிட்ட அனுபவங்களை பேர்லின் மாநாட்டில் பேசியது என்பது ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும். தலிபான், இஸ்லாமிய அரசு மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன அத்துடன் சமூக எதிர்ப்பு உள்நாட்டிலும் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதற்கு முன் மாதிரியாக அமையும்.