World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : தென்கிழக்கு ஆசிய மாநாடு (ASEAN)மியான்மரில் ஆரம்பிக்கிறது.
By Joseph Santolan மியான்மர் (பர்மா) நேய்பிய்டோவில், இரண்டு நாட்கள் நடைபெறும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ASEAN) மாநாட்டின் முதல் நாளுக்காக நவம்பர் 12 அன்று உலக தலைவர்கள் கூடினார்கள். பெய்ஜிங்கில் ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டுறவு (APEC) மாநாட்டு நடைபெற்று முடிந்ததை அடுத்து, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் பிற நாட்டு தலைவர்களுடன்10 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் இக்கூட்டம் நடை பெற்றது. புதன் அன்றைய கூட்டத்தில் முக்கியமாக ஆசியான் பொருளாதார சமூகத்தை (AEC) நிர்மானிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. பொருளாதார வர்த்தகத்தை நெருக்கமாக ஒருங்கிணைப்பது, நிதி செயல்பாடுகள் மற்றும் ஆசியான் பகுதி முழுவதும் திறனுள்ள பணியாளர்கள் புலம்பெயர்வு போன்றவை ஆரம்பத்தில் 2003 ல் உத்தேசிக்கப்பட்ட AEC –ன் நோக்கம், 2015 பிற்பகுதியில் AECயினை நிறைவு செய்ய வேண்டுமென்பது இதற்கான காலக்கெடு. ASEAN உறுப்பு நாடுகள் 2013- ல் கூட்டாக 2.4 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தின. AEC மீதான பேச்சுவார்த்தைகள் பெருமளவில் சுங்கத்தீர்வை குறைப்பு சம்மந்தப்பட்டதாகவே இருந்தது. தென் சீனக்கடல் பகுதி மீது கூர்மையான பதட்டங்கள் மற்றும் நடத்தை விதிமுறைகள் அடங்கிய குறியீடுகள் (COC) உருவாக்கம் பற்றிய முந்தைய பேச்சுவார்த்தைகள் குறிப்பிடும்படியாக தவிர்க்கப்பட்டன. கடந்த வருடத்தில், வாஷிங்டன் இப்பகுதியில் அதன் “முக்கியத்துவத்தை” அதிகப்படுத்தியது போல, சீனா மீதான தடையை தொடர்ந்து இறுக்கி பிடித்து வந்தது. மார்ச் மாதம், ஹேக் இல் கடல் சட்டம் மீதான சர்வதேச நீதிமன்றத்தின் (ITLOS) முன் மனிலா ஒரு வழக்கினை கொண்டுவந்தது. தென் சீனக்கடலுக்கான பெய்ஜிங்கின் கூற்றை எதிர்க்கும் இவ்வழக்கு, வாஷிங்டனால் பதிவு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு வந்தது. பிலிப்பைன்ஸில் அக்வினோ அரசுடனான உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்ட, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (EDCA) ஏப்ரல் மாதம் ஒபாமா அரசு முடித்தது. நாட்டின் எந்த இடத்திலும் எண்ணற்ற அளவு படைகளை நிறுத்த EDCA அமெரிகாவிற்கு அனுமதியளித்தது. அக்டோபர் மாதம், பயங்கர கடற்படை ஆயுதங்களை வியட்னாமிற்கு விற்பதற்கான தடையை வாஷிங்டன் உயர்த்தியது. 2014 முழுவதும், அமெரிக்கா அதிக அளவிலான இராணுவ செயல்பாடுகளை நடத்தியிருப்பதுடன் தெற்காசிய பகுதிகளில் முந்தைய எந்த வருடத்தை விடவும் அதிகமான கடற்கரை பகுதிகளுக்கான அழைப்புகளை விடுத்தது. அப்பகுதியில் அமெரிக்காவின் தீவிர இராணுவ செயல்பாடுகள் இருந்தபோதிலும், தன் முக்கிய செயல்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்வதில் வெள்ளை மாளிகையின் திறன் குறித்த கேள்விகள் அதிகரித்து வருகின்றன. அரசாங்க மூடல்களின் காரணமாக, கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஒபாமாவால் கடைசி நிமிடத்தில் ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. இவ்வருடம், அமெரிக்க இடைக்கால தேர்தல்கள் மற்றும் அது இவரது ஜனநாயகக் கட்சிக்கு ஏற்படுத்திய பாதிப்புகளை அடுத்து இவர் மியான்மாருக்கு வருகிறார். மேலும், வாஷிங்டன் கவனம் உக்ரேன் மற்றும் ஈராக் மற்றும் சிரியாவில் நடக்கும் போர் மீது குவிந்திருப்பதாக தெரிகிறது, அங்கு ஒபாமா மேலும் 1,500 பேர் கொண்ட படைகளை ஈடுபடுத்தியிருக்கிறார். தென்கிழக்கு ஆசிய பகுதி பத்திரிகைகளின் தலையங்கங்கள் முழுவதிலும், ”செயல்படா ஜனாதிபதியால்” தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்க ஆணைகளை செயல்படுத்த முடியாது என்ற ஊகம் நிரம்பி வழிகிறது. இதற்கிடையில், தென்கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா முழுவதும் முதலீட்டு வர்த்தகத்துக்கான ஒரு தடமான ”21ம் நூற்றாண்டு கடல் சில்க் சாலைகளை” உருவாக்க நினைப்பதாக பெய்ஜிங் அறிவித்திருக்கிறது. உள்கட்டமைப்பு முதலீடு மற்றும் அப்பகுதி வர்த்தகத்திற்காக இந்த சில்க் சாலைகளுக்கு சீனா அளித்திருக்கும் தொகை 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள். கம்போடியாவுக்கு ஒரு வருடத்திற்கு கடன்களில் 500 மில்லியன் டாலர்களும் மற்றும் சீனாவிடமிருந்து அன்பளிப்புகளும் அடுத்த பல வருடங்களுக்கு கிடைக்கும் என கம்போடிய பிரதமர் ஹன் ஸென் இவ்வாரம் அறிவித்தார். குறிப்பிடும்படியாக இந்த சில்க் சாலை திட்டங்களில் பிலிப்பைன்ஸ் இல்லை. ஜானாதிபதி அக்வினோவின் கீழ், இது அப்பகுதியில் அமெரிக்காவின் தீவிர பினாமியாக இருந்து வந்திருக்கிறது. பிலிப்பைன்ஸின் இரு பிரதான பத்திரிகைகள் இவ்வாரம் நாட்டு நடப்பு குறித்த அதன் அக்கறைகளை வெளிப்படுத்தின. ”பலவீனமான ஒபாமா” பற்றி Business World பேசியது, அதே நேரம், ””சீனாவுடனான நெருக்கமான உறவினை ஏற்படுத்திக்கொள்வதில் நாம் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனை... அமெரிக்காவின் மனம் கஷ்டப்படுமோ என்ற பயம்தான், சீனாவுடனான ஆழமான உறவினை மேம்படுத்துவதற்கான தேவை” குறித்து Business Mirror எழுதியது. மேலும், ”நாம் இல்லாமல், சீனாவல் சௌகரியமாக இருக்க முடியும் என்ற உண்மையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். பொருளாதார ரீதியாக மற்றும் சமுக ரீதியாகவும் கூட நமக்கு சீனா தேவை” என்றும் எழுதியது. APEC மாநாட்டில் பத்திரிகையுடன் பேசுகையில், பிலிப்பைன்ஸின் வெளிநாட்டு உறவுகளுக்கான செயலதிகாரி லாரா டெல் ரொசாரியோ, ”கடல்பகுதி சில்க் சாலைகள்” திட்டத்தில் அந்நாடு இல்லாததைக் குறிப்பிட்டார். ”நாங்கள் தனியாக இருப்பதை போல உணர்கிறோம்” என்றார். ASEAN மாநாட்டில் நாங்கள் தென்சீனக்கடல் குறித்த பிரச்சனையை எழுப்புவோம் என்று பல மாதங்களாக சொல்லி வந்த ஜனாதிபதி அக்வினோ, அப்படி சொல்ல வேண்டாமென முடிவெடுத்தார். மாநாட்டின் முதல் பகுதியை அடுத்து இவர் தனது மௌனம் குறித்து பின்வருமாறு விளக்கினார்: “நாங்கள் அதனை விளம்பரப்படுத்தியிருக்கிறோம், செத்த குதிரையை அடிக்க அவசியம் இருக்கிறதா?” அநேகமாக சீனாவிடம் ஓர் “ஆக்கபூர்வமான தீர்வு” இருந்தது. மேலும் ”அது சொல்லப்பட்ட பின்னர், அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் இந்த பிரச்சனையை தீர்க்கவும் நாம் ஏன் முயற்சிக்கக் கூடாது?” இன்று, தென்கிழக்கு ஆசிய மாநாடு (ASEAN) மற்றும் அமெரிக்கா-தென்கிழக்கு ஆசிய மாநாடு சமயத்தில் இந்த அரசியல் விவாதத்தில் ஒபாமா இணைந்து கொள்வார். விளக்கப்பட்ட வர்த்தக பிரச்சனைகள் குறித்த APEC மாநாட்டில் சீனாவிற்கான தனது தீவிர அணுகுமுறையில், ”ஆசியாவிற்கான முன்னெடுப்புகள்” அல்லது வேறு பிற பிரச்சனைகள் குறித்து தான் ஒரு ”செயல்படாத” ஜனாதிபதியாக இருப்பதில், ஒபாமாவிற்கு எந்த உள்ளெண்ணமும் இல்லை. ASEAN மாநாடு மியான்மரில் நடத்தப்பட்டு வருகிறது, அமைப்பின் தலைமையாக மியான்மருக்கு இது அதன் இறுதி ஆண்டு, தற்போது அந்த பதவியை மலேசியாவிற்கு விட்டுத்தர இருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாக இராணுவ ஆட்சி, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு திறக்கிறது என்ற சாக்கில், மியான்மர் மீதான பொருளாதாரத் தடைகளை வாஷிங்டன் விலக்கியிருக்கிறது. நேய்பிய்டோவின் இராணுவ ஆட்சியுடனான பொருளாதார மற்றும் அரசியல் விஷயங்களின் மீட்பில் காணப்படும் உண்மையான பிரச்சனை என்னவென்றால், பெய்ஜிங்கில் இருந்து வாஷிங்டனை நோக்கி அதனை மறுநோக்குநிலைப்படுத்தலே. இந்த மாற்றம், 2011ல் ஜனாதிபதி தீன் சீனின் சீன-ஆதரவு மைட்ஸோன் அணை திட்டத்தினை நீக்குவதில்தான் அதிகம் சம்மந்தப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. தற்போது மியான்மார் 2015 தேர்தல்களுக்கான தயாரிப்புகளின் நடுபாதியில் இருக்கிறது. அரசியல் அதிகாரத்திற்கான பிரதான வேட்பாளர்கள், தீன் சென்னின் சங்க ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக் கட்சி (USDP) சார்பான இராணுவ ஆட்சி மற்றும் எதிர்கட்சியான ஆங் சேன் சூ க்யீன் ஜனநாயகத்திற்கான தேசிய கழகம் (NLD) ஆகியவைதான். கடந்த மூன்றாண்டுகளாக எதிர்கட்சி தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான, பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சூ க்யி, ஆளும் மேல்தட்டின் நலன்களை இரக்கமின்றி பாதுகாக்கும் இராணுவம் போல தானும் ஒவ்வொரு அம்சத்திலும் திறமைசாலிதான் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். கச்சின் மக்கள் மீதான தாக்குதல் மற்றும் ரோஹிங்யா இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட அனைத்து பிரதான மனித உரிமை மீறல்கள் குறித்தும் இராணுவ ஆட்சியை இவர் ஆதரித்திருக்கிறார். முன்னணி செம்பு சுரங்கத்துடன் உள்ளூர் விவசாயிகளுக்கு எதிரான ஒரு நில பிரச்சனையையும் இவர் ஆதரித்துள்ளார். ஜனநாயக உரிமைகள் மீதான USDP யின் மீறல்கள் குறித்த சூ க்யி மற்றும் NLD-ன் மீதமுள்ள எதிர்ப்புகள் – திருத்தப்படும் பர்மிய அரசியலமைப்பு இவர் ஜனாதிபதிக்காக போட்டியிடுவதை அனுமதிக்கும் என்று கோரிக்கையை கண்டிப்பாக மட்டுப்படுத்துவதே. இவரது நோயுற்ற கணவன் மற்றும் குழந்தைகளை வெளிநாட்டு குடிமக்கள் என்றுகூறி, தற்போதைய அரசியலமைப்பு சூ க்யியை அப்பதவிக்கு போட்டியிடுவதிலிருந்து தடை செய்கிறது. ஜனாதிபதி ஒபாமா தீன் சீன் மற்றும் ஆங் சேன் சூ க்யீ - இருவரையும் அடுத்த இரு தினங்களில் சந்திப்பார். |
|