சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France, Italy vow more social cuts as EU approves their 2015 budgets

2015 வரவு செலவு திட்டத்திற்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்ததுபோல், பிரான்சும் இத்தாலியும் அதிக அளவிலான சமுக வெட்டுக்களுக்கு வாக்குறுதியளிக்கின்றன.

By Anthony Torres 
3 November 2014

Use this version to printSend feedback

2015ல் தங்களது வரவு செலவுத்திட்ட பற்றாக்குறைகளை குறைப்பதற்கு போதுமான முயற்சிகளை எடுக்கவில்லை என்று பிரான்ஸ் மற்றும் இத்தாலியை எச்சரித்ததோடு, கடந்த வாரம் ஐரோப்பிய ஆணையம் அவர்களது வரவு செலவு திட்டங்களை அங்கீகரிக்கவும் செய்தது. இதற்குப் பதிலாக, 2015ல் அவர்கள் அதிக சிக்கன  நடவடிக்கைகளையும் மற்றும், நீண்ட கால அடிப்படையில், தொழிலாளர்களின் சமுக உரிமைகளுக்கெதிரான தீவிர தாக்குதல்களையும் விதிக்க இருப்பதாக ஆணையத்திடம் இரு நாடுகளும் வாக்குறுதிகளை அளித்திருந்தன.

திங்களன்று, புருஸல்ஸில் இருக்கும் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் பாரிஸ் பற்றாக்குறையை மேலும் 3.6 பில்லியன் யூரோக்களாக குறைப்பதற்கு வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது, செலவினத்தில் 1.5 பில்லியன் யூரோக்களும், புதிய வருவாய்களில் 2 பில்லியன் யூரோக்களுக்கு அதிகமான தொகையும் வெட்டுக்களில் உள்ளடங்கும். அதன்அமைப்பு ரீதியான பற்றாக்குறையினை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஐரோப்பிய யூனியன் (EU) ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அளவான, 0.5 சதவீதத்திற்கு குறைக்கும் நிலைமையில் அந்நாடு இருப்பதாக பாரிஸ் தெரிவித்துள்ளது.

பொது நிதிகளின் மீதான பொருளாதார நெருக்கடிகளின் தாக்கத்திற்காக சரிகட்டப்பட்ட, அதன் அமைப்பு ரீதியான வரவு செலவு திட்டத்தினை மேம்படுத்துவதாக இத்தாலியும் உறுதியளித்திருக்கிறது. ஆரம்பகட்ட வரவு செலவுத் திட்ட வரைவில் 0.1 சதவீதமாக இருக்கையில், 2014 உடன் ஒப்பிடுகையில், இந்த குறைப்பு 0,3 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்பதாக இத்தாலிய அரசாங்க ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆயினும், இந்த குறைப்பானது ஆணையம் கோரியிருந்த வெட்டிற்கு 0.5 சதவீதம் குறைவாகவே இருக்கிறது. ரோமின் புதிய வெட்டுக்கள் 4.5 பில்லியன் யூரோக்களாக உள்ளது.

இந்த அளவீடுகள் மொத்தமாக பிரெஞ்சு அல்லது இத்தாலியின் பொது வரவு செலவுத் திட்ட பற்றாக்குறைகளை 3 சதவீத்ததிற்கு குறைக்காது என்றாலும், ஐரோப்பிய மண்டலத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய பொருளாதாரங்களின் வரவு செலவு திட்டங்களை நிராகரிப்பது நாசகரமான பின்விளைவுகளை உண்டாக்க முடியும் என்று தெளிவாக கணக்கிட்டு, ஐரோப்பிய ஆணையம் அவற்றிற்கு ஒப்புதலளித்துள்ளது.

தற்போது அளிக்கப்பட்டுள்ள வெட்டுக்கள் 100 சதவீதம் ஒப்புக்கொள்ளும்படியாக இல்லை என்றாலும்கூட, சிக்கலான பொருளாதார சூழ்நிலையில் பாரிஸை ஒரு முடக்கத்திற்குள் தள்ளுவது ஆக்கபூர்வமானதாக இருக்காது என்று புருசல்ஸில் உள்ள ஐரோப்பிய ஆணையத்திற்கு தெரியும்.என்று பிரான்சின் வர்த்தக நாளேடான Les Echos  குறிப்பிட்டது.

ஒரு சில வரவு செலவுத்திட்ட குறிகாட்டிகளை வைத்துக் கொண்டு, மொத்தக் கேள்விக்கும் பதில் அளிக்க முடியாது. ஆயினும், அவை இந்நாடுகளில் வெளிப்புற அழுத்தங்களை உருவாக்கி, இந்நாடுகளுக்கு உள்ளேயும் இடையேயும் அரசியல் விவாதத்திற்கான வெளியினை திறந்துவிடுவதால், இவ்விதிகள் பயனற்றவை அல்ல. ஒரு பொதுவான ஐரோப்பிய வரவு செலவுத்திட்டம் இல்லை எனும்பட்சத்தில், ஐரோப்பிய மண்டலங்களுக்கு இந்த ஒருங்கிணைப்பு அவசியமாக இருக்கிறதுஎன்று Brueghel நிறுவனத்தின் Guntram Wolff இன் கூற்றை மேற்கோள் காட்டியது.

ஆகஸ்ட் இறுதியில், பிரெஞ்சு அரசாங்கத்தின் சீர்குலைவு காலகட்டத்தில் ஜேர்மனியின் கொள்கை குறித்து பாரிஸின் முக்கிய அதிகாரிகள் கூர்மையாக விமர்சித்து இரண்டு மாதங்களே ஆன நிலையில், பிரெஞ்சு அல்லது இத்தாலிய வரவு செலவு திட்டங்களை மறுப்பது என்பது ஒருபக்கம் முன்னணி ஐரோப்பிய மண்டல அதிகாரமான ஜேர்மனிக்கும், மறுபுறம் பிரான்ஸ் அல்லது இத்தாலிக்கும் இடையே அழுத்தங்கள் வெடிப்பதைத் தூண்டும் என்று குறிப்பிடுமளவுக்கு ஆணையம் அஞ்சியது

ஆயினும், ஐரோப்பிய மேல்தட்டின் நிலைப்பாட்டினை ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால், ஐரோப்பிய ஆணையத்துடனான இப்பேச்சுவார்த்தைகள் பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் புதிய சிக்கன நடவடிக்கைகளை நியாயப்படுத்த உதவியுள்ளன, அங்கு ஆளும் வர்க்கம் போருக்கு பிந்தைய சமுகநல அரசுகளின் அனைத்து பிரிவுகளையும் அழித்துக் கொண்டிருக்கிறது.

நிதிய சந்தைகள் இத்தாலி பிரதமர் மேட்டியோ ரென்ஸிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இவரது திட்டமிடப்பட்ட தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்கள், வளர்ச்சி நிலையிலிருந்து செயல்படுத்தும் நிலைக்குதீவிரமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச பொருளாதார நிதியகம் கேட்டுக்கொண்டிருக்கிறது. இத்தாலிய பொருளாதாரம் குறித்து செப்டம்பர் மாதம் நடத்திய தங்களது வருடாந்தர ஆய்வில் IMF நிர்வாகிகள், இவ்வருடம் பொருளாதாரத்தின் சில சுருக்கங்களை கணிப்பதுடன், எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்காக தங்களது கணிப்புகளை குறைக்கவும் செய்தனர்.

தற்போது வேலை பார்க்கும் பணியாளர்களுக்காக வெளியேற்றங்களிலிருந்து பாதுகாப்பினை நீக்குவதும், தற்போது நடைமுறையில் இருக்கும் அனைத்து ஒப்பந்தங்களையும் மூன்றாண்டுகள் பயிற்சி காலத்தை உள்ளடக்கும் ஒரே ஒரு, பொதுவான ஒப்பந்த அமைப்பாக மாற்றுவதுமே, ரென்ஸியின் தொழிலாளர் சந்தை சீர்திருத்தத்தின் உட்கருத்து. இத்திட்டம் வேலைவாய்ப்பற்றோர்களுக்காக புதிய நிறுவனம் ஒன்றையும் அமைக்கிறது. ஜேர்மனியில், Hartz IV சட்டத்துடன் ஒத்துபோகும் வகையில், வேலையில்லா தொழிலாளர்கள் குறைந்த-ஊதிய வேலைகளை ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள்.

இப்புதிய சட்டம் மிக முக்கியமாக பொதுத்துறை வேலைகளை நீக்குவதையும் மிகச்சுலபமாக அனுமதிக்கிறது. பொதுத்துறையின் ஊதிய முடக்கம் 2015 லும்  தொடர வேண்டுமென்றும், நாட்டின் செலவினத்தை குறைக்க வேண்டுமென்றும் ரென்ஸி நினைக்கிறார். பொதுத்துறைகளில் தற்காலிக வேலைகளை மேலும் நீட்டிப்பதற்கான திட்டங்களும் இப்புதிய தொழிலாளர் சட்டங்களில் உள்ளடங்கும்.

பிரான்ஸில் பிரதம மந்திரி மானுவேல் வால்ஸின் அரசாங்கம், இரண்டாம் உலப் போரில் இருந்தான குடும்பநல உதவிமுறைகளுக்கு சோதனை முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், அதாவதுஅனைவருக்குமானபிரதான சமுகநல அடிப்படை கொள்கையை உடைக்க திட்டமிடுகிறது.

இந்த அளவீடு, குடும்ப நலன்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் அதிக வசதியான அடுக்கின் பிற வகையிலான சமுக செலவினங்களுகான ஆதரவினை பலவீனப்படுத்துவதை குறிவைக்கிறது. மேலும் இது, இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலகட்டத்தில் தொழிலாளர்கள் வென்றெடுத்த சமுக செலவினம் மற்றும் சமுக உரிமைகளின் ஒட்டுமொத்த அழிவிற்கான ஒரு முன்னோடியாக இருக்கிறது.

தொழிலாளர் சந்தையின் வணிகம்-சார்ந்தசீர்திருத்தங்கள் தொடர்ச்சியாக இருந்த போதிலும், பிரான்ஸில் வேலைகளுக்கான பாதுகாப்பு மிகவும் அதிகமாக இருப்பதாக முதலாளித்துவ வர்க்கம் கருதுகின்றது. அது, பிரான்ஸின் ஆளும் சோசலிஸ்ட் கட்சியை தொழிலாளர்களின் சமுக உரிமைகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துமாறு கோருகிறது.

பிரான்ஸின் காலவரையற்ற ஒப்பந்தமான (CDI) நீண்ட கால வேலை ஒப்பந்தத்தின் பிரதான வடிவத்தினை தான் முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக வால்ஸ் அறிவிப்பும் கொடுத்திருப்பதுடன் அது தொழிலாளர்களை அளவுக்கு அதிகமாக பாதுகாக்கிறதுஎன்று அறிவித்தார். இது நிறுவனங்களின் விருப்பத்தின்பேரில் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்க அனுமதிக்கும், அதனால் தொழிலாளர்களுக்கு அனைத்து வகையிலான ஊதியம் மற்றும் நல வெட்டுக்களையும் ஒப்புக்கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்படும், மேலும் பிரெஞ்சு வர்த்தகத்தை சர்வதேச அளவில் இன்னும் போட்டி நிறைந்ததாக்கும் என கருதுகின்றனர்.

தொழிலாள வர்க்கம் மீதான இந்த வரலாற்று ரீதியிலான தாக்குதல்கள், தொழிலாளர்களுக்கு கெளரவமான வாழ்க்கை நிலைமைகளுக்கு உத்தரவாதமளிக்க முடியாத ஐரோப்பிய முதலாளித்துவத்தின் திவால் தன்மையை விளக்குவதோடு பிரதான சக்திகளுக்கு இடையிலான அழுத்தங்களில் பரவலாக பேசப்படுகிறது

இத்தகைய சமுக தாக்குதல்கள், சமுக-ஜனநாயக கட்சிகளால் நடத்தப்படுகின்றன எனும் உண்மை, பிரான்சின் PS மற்றும் இத்தாலியில் ரென்ஸியின் ஜனாயகக் கட்சி, ஆகியஇடது மேல்தட்டின் முற்றிலும் பிற்போக்குத்தனமான குணாதிசயத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது. மேலும், ஐரோப்பிய சமுக-ஜனநாயக கட்சிகள் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புகளை ஒடுக்கும் முயற்சியிலும் ஸ்ராலினிச மற்றும் போலி-இடது சக்திகளின் ஆதரவினையே சார்ந்துள்ளன.

தொழிலாளர் சட்ட சீர்திருத்த வரைவில் கலந்து கொண்ட இத்தாலிய தொழிலாளர் துறை அமைச்சரான கிலியானோ பொலெட்டி, ஒரு நீண்ட கால தொழிற் சங்க அதிகாரியும், இப்பொழுது செயல்படாத இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பிணைப்பும் கொண்டவராவர். இத்தாலியை சேர்ந்த பப்லோவாத Sinistra Critica குழுவினர், உழைக்கும் வர்க்கம் மீதான தீவிர தாக்குதல்களை ஆதரித்த, ரோமனோ ப்ரோடியின் முதலாளித்துவ இடது  அரசாங்கத்தில் பங்கேற்றனர்.

2012 மே மாதம் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரான பிரான்சுவா ஹோலண்டை பிரான்சின் NPA, இடது முன்னணி, மற்றும் Lutte Ouvrière (LO) குழு உட்பட அனைத்தும் ஆதரித்தது. இத்தாலியில் இருப்பது போல், இந்த அனைத்து கட்சிகன் அனைத்தும் தொழிலாள வர்க்கத்திற்கு அதிகம் விரோதமான சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, இவர்கள் பெருமளவிலான பணி நீக்கம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் எந்த ஒரு அரசியல் போராட்டத்தையும் தடுக்க விரும்புகிறார்கள்.