தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ் Students occupy hundreds of schools throughout Greece கிரீஸ் பூராவும் நூற்றுக்கணக்கான பள்ளிகளை மாணவர்கள் முற்றுகையிட்டனர்
By John Vassilopulos Use this version to print| Send feedback கிரீஸின் நாடாளுமன்றத்தால் கடந்த ஆண்டு வாக்களிக்கப்பட்ட நியூ லைசியம் (New Lyceum) சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கடந்த திங்களன்று கிரீஸ் எங்கிலுமான சுமார் ஆறு நூறு உயர்நிலைப் பள்ளிகளை மாணவர்கள் முற்றுகையிட்டனர், அச்சட்டம் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக நுழைவு தேர்வுகளின் நடைமுறையில் தீவிரமான திருத்தங்கள் செய்துள்ளது. நீடித்த நிதிப்பற்றாக்குறையும், அத்துடன் பல பள்ளிகளில் கற்பிக்கும் பணியாளர்கள் இல்லாத நிலைமையும் ஆக்கிரமிப்புகளைத் தூண்டுவதில் ஒரு காரணியாக இருந்தது. 1970களில் இராணுவ சர்வாதிகாரம் முடிவுக்கு வந்ததிலிருந்து, மாணவர்கள் அவர்களது போராட்டத்தின் போது கல்வி பயிலகங்களை அடிக்கடி முற்றுகை இட்டுள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகள், “பான்ஹெல்லினிக் (Panhellenic) ஆக்கிரமிப்பு, புதிய முறை வேண்டாமென மறுப்போம்," என்று தலைப்பிட்ட ஒரு பேஸ்புக் பக்கத்தால் தூண்டிவிடப்பட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன, அந்த பக்கம் யென்னிஸ் ஜோர்ஜியோ என்ற பெயரைக் கொண்ட ஒரு பயனரால் உருவாக்கப்பட்டிருந்தது. நியூ லைசியம் சட்டம் ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி அடைவதற்குக் தேவையான தரநிலையைக் கடுமையாக்கி இருப்பதுடன் சேர்ந்து, அது ஒவ்வொரு பாடங்களுக்கும் மத்தியில் தொகுக்கப்பட்ட டாபிக்ஸ் பேங்கை (Topics Bank) அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய விதிமுறைகளின்படி, மொத்த தேர்வு கேள்விகளில் பாதி டாபிக்ஸ் பேங்கிலிருந்து எடுக்கப்பட வேண்டும், மிஞ்சியவை தனிப்பட்ட ஆசிரியர்களால் உருவாக்கப்படும். மே மாதம் I Efimerida Ton Syntakton (Ef.Syn.)இல் வெளியான ஒரு கட்டுரையின்படி, இந்த நடவடிக்கை ஆசிரியர்கள் அவர்களின் கற்பிக்கும் முறையை டாபிக்ஸ் பேங்கால் சித்தரிக்கப்பட்ட கேள்வி முறைகளுக்குப் பொருந்திய விதத்தில் மாற்றிக் கொள்ள நிர்பந்திக்கும் என்பதுடன், அது பாடங்களை மனப்பாடம் செய்வதைக் கற்பிக்கும் நுட்பங்களுக்கு அவர்களது பாத்திரத்தை கீழறுக்கும். "மாணவர்களின் செயல்திறனுக்கேற்ப ஆசிரியர்களையும், பள்ளிகளையும் மதிப்பீடு செய்வதற்கான" அரசாங்கத்தினது படிப்படியான முயற்சிகளை நோக்கிய ஒரு படிக்கல்லாகவும் டாபிக்ஸ் பேங்க் உள்ளது. கிரீஸில் கல்விக்கான பொதுச்செலவுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக உள்ளது, இது ஐரோப்பிய ஒன்றிய சராசரியான 5 சதவீதத்திற்கும் மிக குறைவாகும். இது, ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம்—ஒட்டுமொத்தமாக டிரோய்கா என்றறியப்படுவதன் கட்டளையின்படி, 2010இல் இருந்து அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகளின் ஒரு விளைவாகும். 2009 மற்றும் 2014க்கு இடையே கல்விக்கான செலவுகள் 35.5 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன, 2018வாக்கில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்திற்கும் குறைவாக அது வீழ்ச்சி அடையுமென அனுமானிக்கப்படுகிறது. இந்த உள்ளடக்கத்தில், நியூ லைசியம் சட்டம் மற்றும் டாபிக்ஸ் பேங்க் நடவடிக்கைகள், மாணவர்கள் மற்றும் பள்ளிகளை கிடைப்பதற்கு அரிய ஆதாரவளங்களின் மீது இன்னும் மேலதிகமாக போட்டியிடச் செய்யும் வகையில், ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்தும் ஒரு வழிவகையாக உள்ளன. இது ஃப்ரோன்டிஸ்டிரியா (frontistiria) என்றறியப்படும் மிதமிஞ்சிய பாடங்களைத் திணிக்கும் பள்ளிகளுக்குப் பெயர்பெற்ற, தனியார் கல்வித்துறையை ஊக்குவிக்கும். கிரேக்க கல்விமுறையின் நீடித்த நிதிப்பற்றாக்குறையால் ஏற்பட்ட இடத்தை வரலாற்றுரீதியில் இந்த ஃப்ரோன்டிஸ்டிரியா நிரப்பியுள்ளன, குடும்பங்கள் ஏற்கனவே ஃப்ரோன்டிஸ்டிரியா அல்லது மேலதிக தனியார் வகுப்புகளில் (Tuition) ஆண்டுக்கு மொத்தமாக 1 பில்லியன் யூரோ செலவிட்டு வருகின்றன. குடும்பங்கள் இறுதி தேவையைப் பூர்த்திச் செய்ய போராடி வருகின்ற நிலையில், கல்விக்காக கையிலிருந்து மேலும் கூடுதலாக செலவிட வேண்டுமென்பது, பொருளாதாரரீதியில் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களின் சாத்தியக்கூறுகளைப் பாதிக்கும் என்பதையே அர்த்தப்படுத்துகிறது. ஜனாதிபதியின் ஒரு சட்டஆணையை காட்டி ஆக்கிரமிப்பில் பங்குபெறுபவர்களைத் தண்டிக்கும் ஓர் அச்சுறுத்தலே, கல்வித்துறை மந்திரி ஆண்ட்ரியாஸ் லோவெர்டோஸ் விடையிறுப்பாக இருந்தது. அந்த சட்டஆணை எந்தவொரு பள்ளிக்கூட ஆக்கிரமிப்பும் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால், இழந்த மணித்தியாலங்களை வாரயிறுதி நாட்கள், பொது விடுமுறைகள், கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டர் போது விடப்படும் விடுப்புகள் ஆகியவற்றைக் கொண்டும் மற்றும் பள்ளி சுற்றுலாக்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டும் ஈடுசெய்ய வேண்டுமென குறிப்பிடுகிறது. அந்த சட்டஆணை 2013 அக்டோபரில் பள்ளிக்கூட ஆக்கிரமிப்புகளின் ஓர் அலைக்கு விடையிறுப்பாக, அதே ஆண்டின் டிசம்பரில் காரோலோஸ் பாப்போலியஸ் குடியரசின் ஜனாதிபதியால் கையெழுத்திடப்பட்டதாகும். பேஸ்புக்கில் அந்த பக்கத்தை உருவாக்கிய நபரைக் கண்டறிய, லோவெர்டோஸ், கிரேக்க பொலிஸின் மின்னணு குற்றவியல் பிரிவின் தலைவர் Manolis Sfakianakis உடன் இணைந்தும் மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் Efterpi Koutzamani உடன் இணைந்தும் வேலை செய்தார். லோவெர்டோஸ் கூறுகையில், “அந்த பக்கம் ஒரு மாணவரால் உருவாக்கப்பட்டிருந்தால் பரவாயில்லை. ஆனால், பள்ளிக்கூடங்கள் செயல்படும் விதத்தைத் தீர்மானிக்க விரும்பும் வேறு வயதைச் சேர்ந்த நபராக இருந்தால், அதுவொரு பிரச்சினையாகும்," என்றார். புதனன்று அந்த பேஸ்புக் பக்கம் சமூக வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டது, ஆனால் அதற்கடுத்த நாள் மீண்டும் அனுமதிக்கப்பட்டது. கிரீஸில் உள்ள அனைத்து உள்ளூர் வழக்கறிஞர்களும் பள்ளிக்கூடங்கள் ஒழுங்குமுறைக்குத் திரும்ப உதவுமாறு, செவ்வாயன்று கௌட்சமானி அவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அப்பெண்மணி அவருக்கு முன்னர் அப்பதவியில் இருந்த Ioannis Tentesஆல் 2009இல் அனுப்பப்பட்டிருந்த ஒரு சுற்றறிக்கையை மேற்கோளிட்டு காட்டினார், அதில் அவர் ஆக்கிரமிப்புகளின் போது "அதீத குற்ற" நடவடிக்கை சம்பவங்கள் இருந்தால், பொறுப்பின்றி வளர்த்ததன் அடிப்படையில் வழக்கு தொடுக்கும் அடித்தளங்களை ஸ்தாபிக்க அந்த குற்றவாளிகளின் பெற்றோர்களை விசாரிக்குமாறு வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளை அளித்திருந்தார். ஆக்கிரமிப்புகளுக்கு அரசின் விடையிறுப்பானது, துரோய்காவின் (முக்கூட்டு) கட்டளைக்கிணங்க அடுத்தடுத்துவந்த அரசாங்கங்கள் நிறைவேற்றி உள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்பை நசுக்க அவை எடுத்த சர்வாதிகார முறைமைகளின் ஒரு சாயலில் உள்ளது. கடந்த அக்டோபரில் நடந்த பள்ளிக்கூட ஆக்கிரமிப்பு சம்பந்தமாக விசாரணையிட பொலிஸ் மாணவர்களைக் கூட்டிச் சென்றதுடன் சேர்ந்து, இந்த ஆண்டின் பெப்ரவரியில் அது ஏதென்ஸ் மற்றும் பெரீயஸின் பல பள்ளிக்கூடங்களில் சோதனையிட்டது. ஆக்கிரமிப்புகளுக்கு போலி-இடது சிரிசா கட்சியின் (தீவிர இடதின் கூட்டணி) விடையிறுப்பு, அதன் இளைஞரணியான சிரிசா இளைஞர் அமைப்பிடமிருந்து வந்தது. ஆக்கிரமிப்பு ஆரம்பித்து இரண்டு நாட்களுக்குப் பின்னர், “பள்ளிக்கூடங்களுக்கு எதிராக போராடி வரும் மாணவர்கள் அவர்களுக்காக தயாரிப்பு செய்து வருகிறார்கள், அவர்கள் ஒரு வேறுவிதமான பள்ளிக்காக போராடி வருகிறார்கள்," என்று வெற்றுத்தனமாக குறிப்பிட்டு, புதனன்று ஓர் அறிக்கை வெளியிட்டது. இது ஆக்கிரமிப்புகளுக்கு பின்னால் சிரிசா இருப்பதாக குற்றஞ்சாட்ட லோவெர்டோஸிற்கு உதவியது. இணையவழி நிதியியல் இதழ் capital.grஇன் செய்தியின்படி, “இந்த பிரச்சினையைப் புரிந்து கொள்வதற்கு அவர்களின் தனிப்பட்ட மற்றும் குறைந்த முக்கிய விடையிறுப்பு இருப்பதாக அவர்கள் கருதி வருகின்ற நிலையில்" லோவெர்டோஸின் குற்றச்சாட்டுக்கள் குறித்து சிரிசாவின் தலைமை "சீற்றத்துடன்" இருந்தது. உயர்நிலை பள்ளிகூட ஆசிரியர் சங்கத் (OLME) தலைவர் Themis Kotsifakis அதே போக்கில், விமா (Vima) வானொலிக்கு பேட்டியளிக்கையில் போராடி வருகின்ற மாணவர்களிடமிருந்து அவர் தன்னைத்தானே விலகிக்கொண்டு செயல்பட்டார். இந்த ஆண்டின் ஐரோப்பிய தேர்தல்களில் சிரிசாவின் ஒரு வேட்பாளராக இடம் பெற்றிருந்த Kotsifakis குறிப்பிடுகையில், “நான் 'குழந்தைகளே பள்ளிக்கூடங்களை ஆக்கிரமிக்காதீர்கள்' என்றோ, இல்லை 'குழந்தைகளே பள்ளிக்கூடங்களை ஆக்கிரமியுங்கள்' என்றோ கூறி அந்த நடைமுறைக்குள் இறங்க விரும்பவில்லை," என்றார். போலி-இடதும் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவமும், மட்டுப்படுத்தப்பட்ட 24-மணிநேர வேலைநிறுத்தங்கள் மூலமாக, 2010இல் இருந்து திணிக்கப்பட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகளின் ஒரு அலை மாற்றி ஒரு அலைக்கு எழுந்த எதிர்ப்பை முடிவுக்குக் கொண்டு வருவதில் கருவியாக இருந்துள்ளன. அரசாங்க கொள்கையை நேரடியாக அச்சுறுத்தும் போர்குணமிக்க வேலைநிறுத்தங்களை உடைக்க, அரசாங்கம் மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்கும் ஆணைகளைப் பயன்படுத்தி, அவற்றை அவை தனிமைப்படுத்தி, தோற்கடித்திருந்தன. தொழிலாளர்களை இராணுவ சட்டத்தின்கீழ் நிறுத்திவது மற்றும் அவர்களை வேலைத் திரும்புமாறு உத்தரவிடுவது போன்ற நடவடிக்கைகளோடு சேர்ந்து, மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்கும் ஆணைகளையும் 2009இல் இருந்து அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பயன்படுத்தி உள்ளன. 2013 மே மாதம் வேலைநிறுத்தம் செய்துவந்த உயர்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றுகூடுவதைத் தடுக்கும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன, பின்னர் அவர்களின் நடவடிக்கை OLMEஆல் காட்டிக்கொடுக்கப்பட்டது. அவை மிக சமீபத்தில் ஜூலையில் பொதுத்துறை மின்சார நிறுவன (PPC) தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை உடைக்க பயன்படுத்தப்பட்டது. |
|
|