சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : வரலாறு

This week in history: October 20-26

வரலாற்றில் இந்த வரம்: அக்டோபர் 20-26

20 October 2014

Use this version to printSend feedback

25 ஆண்டுகளுக்கு முன்னர்; ஹங்கேரி மக்கள் குடியரசு உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்தது

http://www.wsws.org/asset/01a11254-bf01-4e22-b10e-9a8f9108ce0J/twih-25yr.jpg?rendition=image240
மத்தியாஸ் சுவேரோஸ்

1989 அக்டோபர் 23, தற்காலிக ஜனாதிபதி மத்தியாஸ் சுவேரோஸ், ஹங்கேரி இனிமேலும் சோவியத்-கூட்டில் உள்ள நாடு அல்ல என அறிவித்தார். இனிமேலும் அந்த நாட்டைஹங்கேரி மக்கள் குடியரசு என அழைக்க முடியாது என அவர் பிரகடனம் செய்தார்.

இன்று முதல், எமது தேசத்தின் பெயர் ஹங்கேரி குடியரசு என அவர் அறிவித்தார். அதற்கு முந்திய வாரம், 1948ல் இருந்து பயன்பாட்டில் இருந்த பெயரை மாற்றுவதற்கு பாராளுமன்றம் வாக்களித்தது. தொலைக்காட்சியில் உரையாற்றிய மத்தியாஸ் மேலும் கூறியதாவது: “நாம் சோவியத் ஒன்றியத்துடனான எமது உறவுகள் இடையறாது வளர்ச்சியடைவதை எமது தேசத்தின் நலனின் பேரிலானதாக காண்கின்றோம். அதே சமயம், நாம் ஐக்கிய அமெரிக்கா போன்ற பெரும் வல்லரசுகளுடனான தொடர்புகளை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கின்றோம்.”

1956 ஹங்கேரிய புரட்சி என அறியப்பட்ட, சோவியத் படைகளால் கொடூரமாக நசுக்கப்பட்ட, ஸ்ராலின்-விரோத எழுச்சியின் 33 வது ஆண்டு நிறைவிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது. ஜேர்மனி, போலாந்து, செக்கோஸ்லாவாக்கியா, ரோமானியா மற்றும் பல்கேரியாவுடன் சேர்த்து, கிழக்கு கூட்டில் இருந்த ஆறு நாடுகளில் ஹங்கேரியும் ஒன்றாகும்.

அந்த ஆண்டின் மே மாதம், கிழக்கு ஜேர்னியுடன் இருந்த 150 மைல் எல்லைத் தடையை தகர்த்த ஹங்கேரி, போருக்குப் பிந்திய ஐரோப்பாவின் மறுபங்கீட்டின் பின்னர் முதல் தடவையாக கிழக்கு ஜேர்மனி பிரஜைகள் ஹங்கேரி ஊடாக மேற்கு ஜேர்மனிக்கு செல்வதற்கு அனுமதித்தது.

சுவேரோஸ்சின் அறிவித்தலானது சோவியத் ஒன்றிய செல்வாக்கு பொறிந்ததில் இன்னொரு மைல் கல்லாகும். ஒரு மாதத்துக்கு முன்னதாக, சோவியத் ஒன்றியத்துடன் அணிசேராத ஒரு அரசாங்கத்தை அமைத்த முதலாவது கிழக்கு கூட்டு நாடுகளில் ஒன்று போலாந்து ஆகும்.

50 ஆண்டுகளுக்கு முன்னர்: ஆபிரிக்க தலைவர்கள் கொங்கோ மீதான அமெரிக்கத் தலையீட்டை எதிர்த்தார்கள்

http://www.wsws.org/asset/4217f1d5-8447-4525-9842-26ff8e6a394B/twih-50yr.jpg?rendition=image240
தற்போதைய வரைபடம், கொங்கோ ஜனநாயக குடியரசு

ஒன்பது காலனித்துவ நாடுகளை பிரதிந்தித்துவம் செய்த ஆபிரிக்க இணக்கப்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர்கள், ஏகாதிபத்திய பின்னணியைக் கொண்ட மொய்சே சொம்பே கூலிப் படைகளுக்கும் முதலாளித்துவ-தேசியவாத கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் போர் உக்கிரமடைந்து வந்த கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இருந்து அமெரிக்கா அதன் இராணுவத் தளபாடங்கள் மற்றும் ஆலோசகர்களையும் அகற்றிக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்கள்.

கென்யா, கானா, குய்னியா, நைஜீரியா, ஐக்கிய அரபு குடியரசு (எகிப்து) ஆகிய ஐந்து தேசங்கள், அமெரிக்க ஆயுதங்களும் அதிகாரிகளும் அகற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி ஜோன்சனுக்கு நேரடி வேண்டுகோள் விடுக்க பிரதிநிதிகள் வாஷிங்டனுக்கு பயணிப்பார்கள் என அறிவித்தன.

அமெரிக்க வழங்கிய விமானத்தினதும் தென்னாபிரிக்கா மற்றும் ரொடேசியாவில் இருந்து சேர்க்கப்பட்ட வெள்ளை கூலிப்படைகளைதும் ஆதரவுடன், சொம்பே படைகள் முன்னைய பின்னடைவுகளை மாற்றியமைத்துக்கொண்டிருந்தன. முன்னர் தேசியவாதிகள் பிரதான மாநகரான ஸ்ரான்லிவில் உட்பட நாட்டின் ஆறில் ஒரு பகுதியை கைப்பற்றியிருந்தனர்.

கிளர்ச்சியாளர்களில் கிரிஸ்தோபே பென்யே தலைமையிலான ஒரு கன்னை, ஸ்ரான்லிவில் இல் அண்மையில் ஒருகொங்கோ மக்கள் குடியரசைபிரகடனம் செய்திருந்தது. 1960ல் பெல்ஜியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்றிருந்த கொங்கோவின் முதலாவது ஜனாதிபதியான பாட்ரிஸ் லுமும்பாவின் அமைச்சரவையில் பென்யே உள்துறை அமைச்சராக இருந்தார். ஒரு முதலாளித்துவ தேசியவாதியான லுமும்பா, சீஐஏ ஒழுங்கமைத்த சதியில், 1961 ஜனவரியில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். (பார்க்க: பாட்ரிஸ் லுமும்பா கொலையின் ஐம்பது ஆண்டுகளுக்கு பின்)

அந்த வாரம் ஒரு வானொலி ஒலிபரப்பில், “கொங்கோலிய மக்களை படுகொலை செய்யஅமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் சதி செய்வதாக பென்யே குற்றஞ்சாட்டினார். கொங்கோவுக்கு உணவு மற்றும் மருந்து கொண்டு செல்வதாக கூறி ஐக்கிய நாடுகள் சபைகொலைகார உபகரணங்களைகடத்துவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

யுத்த நிறுத்தத்துக்கான ஆணைக்குழுவின் பிரேரணையில் அக்கறையெடுக்கும் அறிகுறியைத் தன்னும் காட்டாத ஜோன்சன் நிர்வாகம், கிளர்ச்சியாளர்கள் சொம்பே மூலம் நசுக்கப்பட வேண்டும் என எண்ணியது. பேச்சுவார்த்தைகளுக்கான ஆணைக்குழுவின் வேண்டுகோள்களை ஏற்கனவே நிராகரித்திருந்த சொம்பே, கிளர்ச்சியாளர்களுக்குசீனக் கம்யூனிஸ்டுகள் ஆதரவளிப்பதாககூறிக்கொண்டார்.

75 ஆண்டுகளுக்கு முன்னர்: கைப்பற்றப்பட்ட போலாந்தில் ஸ்ராலினிஸ்டுகள் போலி தேர்தலை நடத்தினர்

http://www.wsws.org/asset/dded2685-0cc4-45b7-867e-fe105dbff63H/twih-75yr.jpg?rendition=image480

சோவியத் ஜேர்மன் அதிகாரிகள் போலந்தில் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

கிழக்கு போலாந்து பிராந்தியத்தை செஞ்சேனையும் மற்றும் மேற்கு போலாந்து பிராந்தியத்தை நாஜி ஜேர்மனியும் இணைத்துக்கொண்ட பின்னர், மாஸ்கோவில் இருந்த ஸ்ராலினிச அரசாங்கம், தனது இராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் முயற்சியில், 1939 அக்டோபர் 22, சோவியத் கட்டுப்பாட்டிலான பகுதியில் தேசிய சட்டசபை தேர்தலை நடத்தியது.

இந்த தேர்தலானது இராணுவ சர்வாதிகாரத்துக்கு ஒரு ஜனநாயக முகமூடியை வழங்குவதற்கு ஸ்ராலினிச அதிகாரத்துவம் மேற்கொண்ட ஒரு அரைகுறை முயற்சியாகும். இந்த தேர்தல் 2,411 பிரதிநிதிகளை உள்ளடக்கி இருந்தது. இவர்கள்   என்கேவீடி (ஸ்ராலினிச இரகசிய பொலிஸ்) தேர்ந்தெடுத்தவர்களும்மக்களின் தன்னிச்சையான விருப்பத்தில் பிராந்தியத்திற்கு ஒருவருமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுமாவர். இந்த தேர்வு செய்யப்பட்ட அலுவலர்கள் என அழைக்கப்படுபவர்கள், போலாந்து மக்களுக்கு எதிரான ஸ்ராலினிசத்தின் குற்றங்களை அங்கீகரிப்பதற்கு பயன்படுத்தப்படவிருந்தனர்.

போலாந்து தொழிலாளர்களும் விவசாயிகளும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி அறிந்த சாதாரண உள்ளூர் மக்களுக்கு மாறாக, இந்த பிரதிநிதிகள், ரஷ்யா மற்றும் உக்ரேனில் இருந்து குதித்த ஸ்ராலினிச அடியாட்களாவர். செஞ்சேனைப் படையினர், வீட்டுக்கு வீடு சென்று வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுத்து, பிரதேசத்தில் கிரம்ளினால் நிறுத்தப்பட்டுள்ள ஒரே வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என நெருக்கினர்.

இந்த பிரதிநிதிகள் இரு தேசிய சபைகளுக்குள் ஒழுங்கமைக்கப்பட்டனர்: மாஸ்கோவுக்கு மனுசெய்த வடக்கு சோவியத்-கட்டுப்பாட்டிலான மாவட்டம் வெள்ளை ரஷ்ய சோவியத் குடியரசுடன் கூட்டிணைக்கப்பட்ட அதேவேளை, தென் மாவட்டமானது உக்ரேனியன் சோவியத் குடியரசுடன் இணைக்கப்பட்டது.

போலந்துக்காரர்கள், யூதர்கள், வெள்ளை ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்களும் இரண்டு பிராந்தியங்களிலும் பரந்து வாழ்ந்த போதிலும் இந்த எதேச்சதிகார பூவியியல் பிளவுபடுத்தல்கள் அமுல்படுத்தப்பட்டன. ஸ்ராலினிச அதிகாரத்துவம் பிராந்தியத்தின் தனது மேலாதிக்க பாத்திரத்தை பேணுவதன் பேரில், இந்த இனக் குழுக்களை ஒருவருக்கொருவர் எதிர் எதிராக பயன்படுத்தியது.

போலாந்து மக்கள் மீது பிரதிநிதிகளை திணித்த அதே வேளை, செஞ்சேனையானது ஸ்ராலினிஸ்டுகளுக்கு விரோதமாக எதிர்ப்புகளை ஏற்பாடு செய்யக்கூடிய போலாந்து தொழிற்சங்க வாதிகள், சோசலிஸ்டுகள் மற்றும் புத்திஜீவிகளையும் தொகை தொகையாக சிறைவைத்ததோடு, அவர்களில் மிகவும் செல்வாக்கானவர்களுக்கு அடிக்கடி மரண தண்டனை விதித்தது. “சோவியத்-விரோதகுற்றங்களுக்காக என்கேவீடியின் அழிக்கப்படவேண்டியவர்கள் பட்டியலின் முதலிடத்தில், லியோன் ட்ரொட்ஸ்கியினதும் நான்காம் அகிலத்தினதும் போலாந்து ஆதரவாளர்களே இருந்தனர்.

100 ஆண்டுகளுக்கு முன்னர்: முதலாவது ஈப்ரெஸ் மோதல்

http://www.wsws.org/asset/8df5e035-2134-4898-9e65-9617162a2f1P/twih-100y.jpg?rendition=image240 
ஈப்ரா இல் முதலாவது மோதல்

1914 அக்டோபர் இந்த வாரம், முதலாவது ஈப்ரா மோதல் பெல்ஜியத்தில் தொடங்கியது. இது முதலாம் உலகப் போரின் ஆரம்பக் கட்டத்தில் நடந்த மோதல்களில் ஒன்றாகும். இது, பிராங்கோ-பிரிடிஷ் மற்றும் ஜேர்மன் படைகளும் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் வடக்குப் பகுதிகளில் ஒருவருக்கொருவர் தாண்டிச் செல்ல எடுத்த முயற்சியைக் கண்டது. தமது எதிரிகளை தடுப்பதற்கான முயற்சிகள், போர்முனைகள் கடல் வரை விரிவாக்கப்படுவதற்கு வழியமைத்தன.

முதலாவது ஈப்ரா மோதலின் தொடக்கம்கடலுக்கான போட்டியின்முடிவைக் குறித்தது. புராதானமான பெல்ஜியன்-டச்சு மொழி பேசப்படும் நகரமான ஈப்ரா, வடக்கு கடலுக்கு நுழைவு வசதியளிக்கும் நகராகும். பிரிட்டன் ஆங்கிலக் கால்வாய் துறைமுகங்களையும் அதேபோல் பிரிட்டன் இராணுவத்தின் விநியோக பாதைகளையும் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கும் மூலோபாய முக்கியத்துவம் கொண்ட நகராகும். மிகவும் முக்கியத்துவமான பெல்ஜியன் துறைமுக நகரான ஆண்ட்வேர்ப்பை ஜேர்மன் துருப்புக்கள் ஏற்கனவே ஆக்கிரமித்திருந்தன.

பிரிட்டிஷ் படையெடுப்பு துருப்புக்களின் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் ஜோன் பிரென்ச், தனது படைகளையும் பிரான்ஸ்-பெல்ஜியன் படைகளையும் ஆண்ட்வேர்ப்பில் இருந்து பின்வாங்கி, ஈப்ராவுக்குள் திருப்பினார். ஜேர்மனியர்கள் தமது ஃபிளாண்டர்சுக்கான தாக்குதலை தொடங்கியபோது, அக்போடபர் 19 எதிர் படைகளுக்கு இடையில் உக்கிர மோதல் வெடித்தது. எதிர்த்து நின்ற கூட்டணிகள் சாத்தியமான எல்லா இடங்களிலும் தாக்க முயற்சித்தனர். பனிக்காலம் மோதல்களை கடும் சிரமத்துக்குள்ளாக்கிய நவம்பர் 22 வரை சண்டைகள் தொடர்ந்ததில் இரு தரப்பிலும் பெரும் இழப்புக்கள் ஏற்பட்டன. இந்த மோதலில் 210,000 பேர் மொத்தமாக பலியாகினர்.

ஈப்ராவில் பிரிடிஷ் தரப்பு இருந்த பிராந்தியம், முதல் ஜேர்மன் தரப்பு இருந்த ரௌலர்ஸ் மற்றும் மெனின் வரையான மோதலின் குவிமையமாக இருந்த பகுதி, ஈப்ரா சலியன்ட் என அழைக்கப்பட்டது. இந்தப் பிரதேசம் சில போர்களின் மிகவும் கொடூரமான கசப்பான மோதல்களின் பகுதியாக இருந்தது. ஈப்ரா, போரின் துன்பங்களை விவரித்த முதலாம் உலகப் போர் பற்றிய பல கவிதைகளிலும் இடம்பெற்றுள்ளது.