சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US Federal Reserve ends “quantitative easing” program after funneling trillions to financial markets

நிதியியல் சந்தைகளுக்குள் ட்ரில்லியன்களைப் பாய்ச்சிய பின்னர், அமெரிக்க பெடரல் ரிசர்வ் "பணத்தைப் புழக்கத்தில்விடும்" திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறது

By Joseph Kishore
30 October 2014

Use this version to printSend feedback

அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதன் "பணத்தைப் புழக்கத்தில்விடும் திட்டம்" (quantitative easing) என்று அறியப்படும் பங்குபத்திரங்கள்-வாங்கும் திட்டத்தை முடித்துக் கொள்வதாக புதனன்று எதிர்பார்த்தபடியே அறிவித்தது. அத்திட்டம் கடந்த ஆறு ஆண்டுகளில் சந்தைகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சி இருப்பதுடன், ஒரு பாரிய பங்குச்சந்தை குமிழியையும் ஊக்குவித்தது.  

சந்தைகளின் எதிர்மறையான எதிர்நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக, QE3 என்று அறியப்படும் அத்திட்டம் உத்தியோகப்பூர்வமாக முடித்துக் கொள்ளப்படுவதற்கு முன்னரே பல மாதங்களாக, பெடரலினால் மிகக் கவனமாக முன்னறிவிப்பு செய்யப்பட்டு வந்தது. அதன் உச்சபட்ச அளவாக, ஒவ்வொரு மாதமும் 85 பில்லியன் டாலர் சொத்துக்கள் (அடமான பத்திரங்கள் மற்றும் அமெரிக்க கருவூலப் பங்குப்பத்திரங்களை) வாங்குவதை QE3 உள்ளடக்கி இருந்தது, ஆனால் இந்த கொள்முதல்கள் டிசம்பரிலிருந்து படிப்படியாக "குறைக்கப்பட்டு" வந்தன.  

வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து தோற்றப்பாட்டளவில் குறைந்தவட்டியுடனான பணம் கிடைக்குமென்பதை உறுதிப்படுத்த, ஒரு "குறிப்பிட்ட காலத்திற்கு"—அனேகமாக 2015இன் இறுதி வரையில் என்று எதிர்பார்க்கப்படுகிறதுதற்போதைய பூஜ்ஜிய-அளவிலான வட்டிவிகிதங்களே இருக்குமென்று ஒரு உறுதிமொழியும் புதன்கிழமை அறிக்கையில் உள்ளடங்கி இருந்தது. அதேநேரத்தில், புதிய சொத்துக்களை அது இனி வாங்கப் போவதில்லை என்றபோதினும், அது வட்டிவிகிதங்களை உயர்த்தத் தொடங்கும் வரையில் அதன் கையிருப்புகளின் அளவை உண்மையில் குறைக்கப்போவதில்லை என்பதை பெடரல் தெளிவுபடுத்தி உள்ளது

நவம்பர் 2008இல் 600 பில்லியன் டாலர் மதிப்பிலான அடமான பத்திரங்களை அது வாங்கவிருப்பதை பெடரல் ரிசர்வ் அறிவித்த போது தொடங்கிய இந்த சொத்து-வாங்கும் தொடர் திட்டங்களில் ஒன்று தான், செப்டம்பர் 2012இல் தொடங்கப்பட்ட இந்த QE3 திட்டமும்.  

2008 நிதியியல் நெருக்கடியைத் துரிதப்படுத்திய குறைந்தபிணை அடமானக்கடன் நிலைகுலைந்த போது ஏற்பட்ட அடமான பத்திரங்களின் மதிப்பு பொறிவும், மற்றும் பணத்தைப் புழக்கத்தில்விடும் கொள்கையும், பிரதான நிதியியல் அமைப்புகளை அவற்றின் ஏறத்தாழ மதிப்பில்லாத சொத்துக்களை மத்திய வங்கிகளுக்குள் தள்ளிவிட அனுமதித்தன. QE1, பணத்தைப் புழக்கத்தில்விடும் முதல் திட்டத்தைத் தொடர்ந்து, நவம்பர் 2010இல் மற்றொரு 600 பில்லியன் டாலர் திட்டம் அறிவிக்கப்பட்டது.    

மொத்தத்தில், அமெரிக்க மத்திய வங்கி சுமார் 3.5 ட்ரில்லியன் அளவில், அல்லது ஓராண்டின் அமெரிக்க உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு அளவிலான இத்தகைய கொள்முதல் மூலமாக, அதன் இருப்புநிலை கணக்கின் அளவை அதிகரித்துவிட்டது. இதுபோன்ற பாரியளவில் பணத்தை-அச்சடிக்கும் திட்டத்தில் ஒருபோதும் இதற்குமுன்னர் மத்திய வங்கி ஈடுபட்டதில்லை. தோற்றப்பாட்டளவில் கட்டுபாடில்லாத இந்த பண ஒதுக்கீடு, அடிப்படை சமூக திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புக்கு நிதிஒதுக்க அங்கே பணமில்லை என்ற முடிவில்லா வாதங்களோடு சேர்ந்து வந்திருந்தன.  

பணத்தைப் புழக்கத்தில்விடும் கொள்கை மூலமாக கொண்டு வரப்பட்ட பெரும்பாலான பணம், “நிஜமான" பொருளாதார நிலையுடன் தொடர்பில்லாத பங்குமதிப்புகளின் உயர்வுக்கு இட்டுச் செல்ல, ஏதோவொரு வடிவத்தில், அதன் வழியைக் கண்டது.

எஸ்&பி 500 மற்றும் பெடரல் ரிசர்வ் சொத்துக்கள்

இரண்டாண்டுகளுக்கு முன்னர் QE3 திட்டம் தொடங்கிய போதிருந்து, எஸ்&பி 500 பங்குக் குறியீடு மதிப்பு 42 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, அதன் போக்கைப் பின்தொடர்ந்து பார்த்தால், பொறிவுக்கு-முந்தைய அதன் உச்சங்களுக்கு அதை திரும்ப கொண்டு சென்றிருக்கிறது. (அட்டவணையைப் பார்க்கவும்)

பங்குகள் பெருமளவிற்கு மிகப்பெரிய-பணக்காரர்களின் உடைமையாக குவிந்திருப்பதால், பெருநிறுவன மற்றும் நிதியியல் மேற்தட்டின் செல்வவளமும் பங்கு விலை ஏற்றத்துடன் சேர்ந்து அதிகரித்துள்ளது. 2009இல் இருந்து, போர்ப்ஸ் 400 நபர்களின் மொத்த செல்வவளம் (அதாவது அமெரிக்காவில் உள்ள 400 செல்வந்தர்களின் செல்வவளம்) சுமார் இருமடங்கிற்கு, 2.9 ட்ரில்லியன் டாலருக்கு உயர்ந்துள்ளது

பெரிதும் பெடரல் ரிசர்வ் கொள்கைகளின் காரணமாக, அத்துடன் ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய முன்னணி மத்திய வங்கிகளால் எடுக்கப்பட்ட அதேபோன்ற முறைமைகளோடு சேர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட Credit Suisse அறிக்கையின்படி, உலக மக்கள்தொகையில் மேலே உள்ள ஒரு சதவீதத்தினர் மொத்த செல்வவளத்தில் சுமார் பாதியை இப்போது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். ஒரு மதிப்பீட்டின்படி, உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் நிதியியல் சந்தைகளுக்குள் 7 ட்ரில்லியனில் இருந்து 10 ட்ரில்லியன் டாலரை பாய்ச்சி இருப்பதாக நமக்கு கூறப்பட்டது.

வேலை சந்தைகளின் "மீட்சி" என்று கூறப்படுவதை (பெடரலின் வார்த்தைகளில், “தொழிலாளர் சந்தையின் இருப்புகளின் குறைந்தபயன்பாடு படிப்படியாக மறைந்து வருவதாக) குறிப்பிட்டுக் காட்டி பெடரல் அதன் தீர்மானத்தை புதனன்று விவரித்திருந்த போதினும், QEஇன் பிரதான நோக்கம் வேலைவாய்ப்பின்மையைக் குறைப்பதற்காக இருக்கவில்லை, மேலும் அது அவ்வாறு செய்திருக்கவும் இல்லை என்பதே உண்மையாகும்.

சொத்து விலைகள் உயர்ந்துள்ள நிலையில், தொழிலாளர்களின் கூலிகளோ வீழ்ச்சி அடைந்துள்ளன, அமெரிக்கா பாரிய வேலையின்மையால் தொடர்ந்து பீடிக்கப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வ வேலைவாய்ப்பின்மை விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது, ஆனால் இது பெரிதும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தொழிலாளர் பிரிவிலிருந்து வெளியேறியதால் உண்டானதாகும். பெடரலால் செலுத்தப்பட்ட பணத்தை வங்கிகள் உற்பத்தி நிறுவனங்களில் முதலீடு செய்யவில்லை அல்லது வாடிக்கையாளர்களுக்கு கடனளிக்கவில்லை, மாறாக பதுக்கவும், ஊகவணிகத்தில் ஈடுபடுத்தவும் மற்றும் சூதாடுவதிலும் பயன்படுத்தி உள்ளன

பாரிய பணத்தை தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து பணக்காரர்களுக்கு கைமாற்றுவதன் ஒரு முக்கிய பாகமாக QE திட்டங்கள் இருந்துள்ளன, இந்த நிகழ்வுபோக்கு ஏதோவொருவித மாற்று வடிவத்தில் தொடரக்கூடும். இரண்டு பெரு வியாபார கட்சிகளுமே, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி, இந்த "பணத்தைப் புழக்கத்தில்விடும் கொள்கைக்கு" (Quantitative easing) முழு ஆதரவை அளித்துள்ளதோடு, அத்திட்டம் புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்கள் இரண்டினது கீழும் தொடரப்பட்டுள்ளது.

சொத்து மதிப்புகளின் பணவீக்கம் இன்னும் அதிக ஊகத்தன்மை கொண்ட மற்றொரு பொறிவுக்கு தான் வெறுமனே நிலைமைகளை உருவாக்கி உள்ளதாக ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளிடமிருந்தே கவலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், பெடரலின் இந்த முடிவு வருகிறது. ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்காவில் அங்கே பொருளாதார மந்தநிலைமைக்கான பல அறிகுறிகள் உள்ளன. கொள்கைகள் மீது பிரதான சக்திகளுக்கு இடையே அங்கே கசப்பான பிளவுகளும் உள்ளன, பெடரல் அதன் சொந்த திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருகின்ற போதினும், ஐரோப்பிய மத்திய வங்கிகள் அவற்றின் சொத்து வாங்கும் திட்டங்களை விரிவாக்க நகர்வதிலிருந்து அந்த பிளவுகள் பிரதிபலித்தன.  

இறுதியாக, “பணத்தைப் புழக்கத்தில்விடும் கொள்கை" (QE) உலக முதலாளித்துவ அமைப்புமுறையை உடைத்துதுண்டாக்கி முரண்பாடுகளை தீவிரப்படுத்த மட்டுமே செய்துள்ளது என்பதோடு, அதன்மீது தங்கியிருக்கும் ஆளும் வர்க்கத்தின் திவால்நிலைமையை மேற்கொண்டும் அம்பலப்படுத்தி உள்ளது.