World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Scholarship instead of war propaganda!

IYSSE statement on the dispute at Humboldt University

போர் பிரச்சாரத்திற்கு பதிலாக கல்விஆய்வு!

ஹம்போல்ட் பல்கலைக்கழகம் பிரச்சனை குறித்து IYSSE அறிக்கை

By the International Youth and Students for Social Equality (Germany)
18 October 2014

Back to screen version

பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்திலான (HU) தற்போதைய முரண்பாடு, அடிப்படை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அக்டோபர் 23 அன்று அழைக்கப்பட்ட ஜேர்மன் உயர்தட்டினர் மீண்டும் ஏன் போரை விரும்புகிறார்கள்? என்று தலைப்பிடப்பட்ட HU சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் (IYSSE) ஒரு கூட்டத்தை ஜேர்மன் பல்கலைக்கழக நிர்வாகம் அரசியல் ரீதியாக தணிக்கை செய்ய விரும்புகிறது. வெளிப்படையாக போர் மற்றும் இராணுவவாதத்தை ஆதரிக்கும் வலதுசாரி பேராசிரியர்கள் மாணவர்களால் விமர்சிக்கப்படுவது அவதூறு பேசுவதற்கு ஒப்பானதாகவும்,  நிந்திப்பதாகவும் இருக்கிறது, அத்துடன் கல்விசார்ந்த விவாதங்களின் நெறிமுறைகளை மீறுவதாகவும் இருக்கிறது என்று நிர்வாகம் கூறுகிறது.

அக்டோபர் 7 தேதியிட்ட கடிதமொன்றில், IYSSE-யின் அக்டோபர் 23 கூட்டத்திற்கு முன்னதாக, கூட்டும் நடக்கும் காலத்தில் மற்றும் கூட்டத்திற்கு பின்னர் பல்கலைக்கழக உறுப்பினர்கள் மீண்டும் ஒருமுறை பழிதூற்றப்படக்கூடாது என்ற நிபந்தனையை விதித்துள்ளது. உதாரணத்திற்கு ஜூலை மத்தியில் ஒரு IYSSE கூட்டத்தின் போது நடைபெற்றதுபோல் துண்டுபிரசுரங்கள், சுவரொட்டிகள், இணையதளம் போன்றவற்றில் அல்லது வேறுவழிகளில் அவர்களை இராணுவவாதிகள் மற்றும் போர்ப்பிரியர்கள் என்று இகழக்கூடாது என்கின்றது.

இது போன்ற வாதங்கள் "ஒரு முற்றிலும் அறிவியல்ரீதியாக சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை கையாளும் ஒரு பல்கலைக்கழக கல்வி கொள்கைகளுக்கு" மாறாக இருக்கின்றன என்று கடிதம் குறிப்பிடுகிறது. இந்த கொள்கைகளை மீறுவதை பல்கலைக்கழக நிர்வாகத்தால் சகித்துக்கொள்ளமுடியாது," என்று அது அச்சுறுத்தியது.

இந்த வழியில், பல்கலைக்கழக நிர்வாகம் வலதுசாரி பேராசிரியர்களுக்கு பின்னால் அணிசேர்கிறது. அது மாணவர்களின் விமர்சனத்தை ஒரு அவதூறாக சித்தரிக்கவும் அத்துடன் கல்வி சம்பந்தப்பட்ட விவாதம் என்ற போலிக்காரணத்தின் கீழ் அடக்க முயற்சிக்கிறது. அதேநேரத்தில், ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் இருக்கும் பேராசிரியர்களால் தீவிரமாக ஆதரிக்கப்படும் ஜேர்மனியின் ஒரு புதிய போர் கொள்கை சம்பந்தமாக ஒரு வெளிப்படையான விவாதத்தை அது தடுக்க விரும்புகிறது

பல்கலைக்கழக நிர்வாகத்தால் விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இது, ஜூலையில் நடந்த IYSSE கூட்டத்தில் திட்டவட்டமான கருப்பொருளாக இருந்தது. அந்த கூட்டத்தில், 2013 அக்டோபர் 3ந் தேதி அன்று ஜேர்மன் ஜனாதிபதி கௌக்கால் அறிவிக்கப்பட்ட வெளியுறவு கொள்கை மாற்றத்தில் ஹம்போல்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று IYSSE நிரூபித்தது. இக்கொள்கை உக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் தலையீடுகள் மூலமாக அரசாங்கத்தினால் இந்த ஆண்டின் ஆரம்பத்திற்கு பின் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதன் கூட்ட விளம்பரத்தில், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE)  இவ்வாறு விளக்கியது: ஜேர்மனிய இராணுவவாதத்தின் மீள்வரவு ஒரு விரிவான கருத்தியல் சார்ந்த தாக்குதலுடன் இணைந்து கொண்டுள்ளது. ஆளும் வர்க்கம் கட்டவிழ்த்து விட்ட இரண்டு உலகப் போர்களையும் அத்துடன் செய்த மிகக் கொடிய குற்றங்களை வரலாற்று ரீதியாக தூய்மைப்படுத்தப்பட விரும்புகின்றது. ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹெர்பிரைட் முங்க்லரால் மற்றும் பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி இதில் முக்கிய பங்காற்றுகிறார்கள். அதே சமயத்தில் ஹெர்பிரைட் முங்க்லர் முதலாம் உலகப் போரில் ஜேர்மனியின் ஏகாதிபத்திய அபிலாசைகளை மறுக்கிறார், இரண்டாமவர் நாஜி குற்றங்களை பெரிதுபடுத்ததேவையில்லை என்கின்றார்.

இது "தூற்றுவதோ அல்லது அவமதிப்பதோ" தொடர்புபட்டதல்ல. ஆனால் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள், வானொலி பேட்டிகள், பத்திரிகை கட்டுரைகள் மற்றும் பொது விவாதங்களில் ஹம்போல்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முங்க்லரால் மற்றும் பார்பெரோவ்ஸ்கி ஆகியோரால் கூறப்படுபவை தொடர்பான ஒரு விபரமான, புறநிலை ஆய்வை செய்வதாகும்.

"ஹிட்லர் மனநிலை பாதிக்கப்பட்டவர் இல்லை, அத்துடன் அவர் வக்கிரமானவர் இல்லை அவருக்கு முன்னால் யூதர்கள் அடியோடு அழிக்கப்படுவது பற்றி மக்கள் பேசுவதை அவர் விரும்பவில்லை," என்று ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் கிழக்கு ஐரோப்பிய வரலாற்றுத் துறை தலைவராக இருக்கும் பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி பிப்ரவரியில் Der Spiegel சஞ்சிகையில் அறிவித்தார்.

Spiegel சஞ்சிகையில் வெளியான அதே கட்டுரையில், ஹிட்லரை மறுபுனருத்தானம் செய்ய திட்டமிட்டு வேலை செய்யும், நாஜிக்களுக்கு ஆதரவான வரலாற்றாசிரியர் ஏர்ன்ஸ்ட் நோல்டவிற்கு வக்காலத்து வாங்கியுள்ளார். நோல்டவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக பேசும்போது, அவர் சரியானவர், என்று பார்பெரோவ்ஸ்கி கூறினார்.

ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் தத்துவத்தை போதிக்கும் பேராசிரியர் ஹெர்பிரைட் முங்க்லர், இன்று ஒரு மூர்க்கமான ஏகாதிபத்திய வெளிநாட்டு கொள்கைக்கு திரும்பியதை நியாயப்படுத்துவதற்கு ஏதுவாக முதலாம் உலகப் போர் ஏற்பட காரணமாக இருந்த ஜேர்மனியின் பங்கை மூடி மறைப்பதற்கு சாதகமாக வாதிடுகிறார். ஜனவரியில், Süddeutsche Zeitung  பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில், 1914ஆம் ஆண்டு தொடர்பான விளக்கம் அனைத்திற்கும் நாம் குற்றம் சாட்டப்படுகையில் ஐரோப்பாவில் ஒரு பொறுப்பான கொள்கையை செயல்படுத்த அரிதாகவே சாத்தியமானதாக இருக்கிறது.

மே இறுதி இறுதியில், உலக அளவில் மற்றும் ஐரோப்பாவில் இன்னும் அதிகமான "ஜேர்மன் தலைமைக்கு அழைப்பு விடுத்து ஜேர்மன் வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு அதிகாரபூர்வ வெளியீடான Review 2014 என்ற இணைய தளத்தில் முங்க்லர் ஒரு ஆய்வு கட்டுரையை நலன்களே முன்னுரிமை வாய்ந்தவையாக இருக்கின்றன! என்ற தலைப்பின் கீழ் தோற்றத்திற்கும் செயல்களுக்கு இடையே அபாயகரமான இடைவெளி, என்பதன்கீழ் பிரசுரித்தார். ஜேர்மனி ஒரு வர்த்தக நாடாக அல்லது ஏற்றுமதி நாடாக இருக்கையில் அதன் மதிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காது ஜேர்மனியின் நலன்களை கட்டாயமாக கருத்தில்கொண்டிருக்கவேண்டும் என்றார்.(அந்த ஆய்வறிக்கையின் ஆங்கில பதிப்பு இன்னும் அதிகமான வேதனை போக்குகிற வாக்கியத்துடன்  இந்த அறிக்கையை மொழிப்பெயர்க்கிறது: உண்மையில், ஜேர்மன் கொள்கை ஜேர்மன் நலன்களாலேயே உறுதியாக வழிநடத்தப்படுகின்றதே தவிர அதன் நெறிசார்ந்த அடித்தளத்தினால் குறைவாகவே வழிநடத்தப்படுகிறது.)

ஜூலையில், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் (IYSSE) நிகழ்ச்சிக்கு பின், முங்க்லர் மற்றும் பார்பெரோவ்ஸ்கி அவர்களின் வலதுசாரி நிலைகளை வெளிப்படையாகவும் திரும்ப திரும்ப தெளிவுபடுத்துகிறார்கள். உதாரணத்திற்கு எல்லாவற்றையும் விட செப்டம்பர் 1 அன்று இரண்டாம் உலகப்போர் வெடித்ததன் ஒரு நினைவு விழா கொண்டாட்ட நிகழ்ச்சியை வெளிப்படையாக ரஷ்யாவுக்கு எதிராக ஒரு மறைமுக போர் அச்சுறுத்தலுக்கு கௌக் பயன்படுத்திக் கொண்டபோது முங்க்லர் ஜனாதிபதி கௌக்கின் கூற்றை நியாயப்படுத்தினார். சில முதலாளித்துவ அரசியல்வாதிகளைவிட கௌக்கின் உரை மேலே சென்று, நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பது குறித்து உங்களால் பேச முடியவில்லை என்றால், அல்லது கற்றுக்கொண்டவை அனைத்தும் ஜேர்மானியர்களுக்கு மட்டுமே பொருத்தம் ஏனையோருக்கு இல்லையென்றால் நீங்கள் உண்மையில் ஒன்றையுமே கற்றுக்கொள்ளவில்லை என்று Deutschlandfunk வானொலிக்கு  முங்க்லர் அறிவித்தார்

அக்டோபர் 1ந்தேதி, ஜேர்மன் வரலாற்று அருங்காட்சியகத்தில் ஜேர்மனி ஒரு தலையீட்டு சக்தி? (Germany as an Intervention Force?) என்ற தலைப்பின் கீழ் ஒரு "குழு விவாதத்தில்" ஜேர்மனிக்கான ஒரு கூடுதலான இராணுவப் பங்கிற்காக பார்பெரோவ்ஸ்கிக்கு வாதிட்டார். ஆம், கண்டிப்பாக, ஜேர்மனி அதன் இத்தகைய ஒரு பங்கு மற்றும் அதன் முக்கியத்துவத்தை அனுமானிக்க வேண்டும். அதாவது ஜேர்மனி குறிப்பாக அதை பாதிக்கும் முரண்பாடுகளில் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் ஒருவர் இவற்றை பரிசீலிக்க வேண்டும் () எந்த வகையான போருக்கு ஒருவர் ஆயத்தமாக இருக்கிறார், மற்றும் () ஒருவர் வெல்ல முடியுமா.  

அவர் கூறிய வார்த்தைகளாவன: பிணையாளிகளை பிடித்து வைக்க நீங்கள் விருப்பப்படவில்லை என்றால், தீவிரவாதிகள் செய்வதைப்போல கிராமங்களை எரிக்கவோ மக்களை தூக்கிலிடவோ, மேலும் பயத்தையும் திகிலையும் பரப்பமுடியவில்லை என்றால், ஒருவேளை நீங்கள் இதற்கு ஆயத்தமாக இல்லை என்றால், நீங்கள் வெற்றி பெற முடியாது. அதன்பிறகு நீங்கள் தலையிடாது விட்டுவிட வேண்டும்.

ஆக்கிரமிப்பு ஏகாதிபத்திய போர்களின் கொடூரமான முறைகளுக்கு எதிராக யாரோ எச்சரிக்கை செய்வதைப் போல் பார்பெரோவ்ஸ்கி பேசவில்லை.மாறாக நடைமுறை அரசியலின் (realpolitik) ஒரு பழி பாவத்திற்கு அஞ்சாத வழக்குறைஞராக பேசுகின்றார்.  அதன் எதிராளிகளை விட அதிக கொடூரமாய் இருக்க மற்றும் பெருமளவிலான இராணுவ படைகளை உபயோகித்து தலையிடுவதற்கு அது ஆயத்தமாய் இருக்கும்போது மட்டுமே, அவர் ஜேர்மனி இராணுவரீதியாக தலையிட கோருகின்றார்.

அவர் மேலும் பேசுகையில் ஒருவர் "இதற்கு பெருமளவு நிதி செலவாகலாம் என்பது குறித்து ஒருவர் விழிப்பாக இருக்க வேண்டும். அதாவது , முதலில் வேறுபட்ட தரப்பினரை ஒன்றிடமிருந்து மற்றொன்றைப் பிரிப்பதற்கு ஏதுவாக ஒரு அதிகார வெற்றிடத்திற்குள் ஆயுதங்களையும் படையினரையும் நீங்கள் அனுப்ப வேண்டி இருக்கும் என்றார் . அவர் மேலும் கூறியதாவது: அத்துடன், எல்லாவற்றுக்கும் மேலாக, இதுதான் முக்கியமான விஷயம்... அரசியல் உறுதியும் அரசியல் மூலோபாயமும் உங்களுக்கு தேவை... இது வேலை செய்வதற்கு ஏதுவாக, அதனுள் நாம் செல்ல வேண்டும் என்ற நீங்கள் கூற வேண்டி இருக்கும். அதுதான் அதற்கு தகுதியானதாக இருக்கும். அது செலவு பிடிக்கக்கூடியது. நாம் அவற்றிற்கு துருப்புகளை அனுப்ப வைக்க வேண்டும். ஈராக், சிரியா மற்றும் லிபியா போன்ற நாடுகள் இனிமேலும் இந்த பிரச்சனையை தாங்களே தீர்க்க முடியாதவையாக இருந்துக்கொண்டிருக்கின்றன.

பார்பெரோவ்ஸ்கியின் திட்டங்கள் இரண்டு உலகப் போர்களிலும் அச்சம் விளைவிக்கிற ஜேர்மன் போர் முறைகளின் இருண்ட நினைவுகளை எழுப்பிவிட்டிருக்கிறது. முதல் உலகப் போர் பெல்ஜியம் ஆக்கிரமிப்பு மற்றும் பெல்ஜிய பொதுமக்களுக்கு எதிரான திகிலூட்டும் போர்க் குற்றங்களுடன் தொடங்கியது. 27 மில்லியன் மக்கள் தங்கள் உயிர்களை இழக்க காரணமான இரண்டார் உலகப்போரில் சோவியத் யூனியனுக்கு எதிராக ஹிட்லரின் அழித்தொழிக்கும் போர் இந்த குற்றங்களைக்கூட மிகச்சிறியதாக்கி விடுகின்றது.

இது இந்த கேள்வியை முன்வைக்கின்றது: சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் அரசியல் விமர்சனங்கள் குற்றஞ்சாட்டும் வகையில் "ஒரு பல்கலைக்கழகத்தின் பாடதிட்ட கொள்கைகளுடன்?" முரண்படும்போது, பல்கலைக்கழக நிர்வாகம் பார்பெரோவ்ஸ்கி மற்றும் முங்க்லரின் போர்வெறி மற்றும் மறந்து போன வரலாற்று காட்சிகள் ஏற்றுக்கொள்ள கூடியவையாகவாகவும் மற்றும்  பாட விரிவுரைகளுக்கு ஒரு சட்டபூர்வமான பங்களிப்பாக இருக்கின்றன.  

இந்த கேள்வியை எழுப்புவதற்கு காரணம் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்பதற்கு தான். ஜேர்மனியில் பெருமைமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹம்போல்ட் பல்கலைக்கழகம், ஜேர்மனிய இராணுவவாதத்தின் மீள்வருகையில் மிக உயர் மட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது. புதிய சக்தி, புதிய பொறுப்பு: மாறும் ஒரு உலகத்திற்கான ஜேர்மன் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையின் கூறுகள் என்ற மூலோபாய ஆவணத்தின் விரிவாக்கத்தில் இது நேரடியாக ஈடுபட்டிருக்கிறது, இது ஜேர்மனியின் இராணுவவாத மீள்வருகைக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இன்றியமையா செயல்திட்டத்தை அளிக்கிறது

கடந்த இலையுதிர்காலத்தில் வெளியிடப்பட்ட ஆவணம் கௌக்கின் உரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அதாவது அதன் புவி மூலோபாய மற்றும் ஒரு உலகளாவிய "வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி நாடாக" பொருளாதார நலன்களை அடைவதில் இன்னும் தீர்க்கமாக மற்றும் இன்னும் கூடுதலாக அடிக்கடி முன்னிலை வகித்தாக வேண்டும். ஒரு நடைமுறைக்கேற்ற "ஜேர்மன் பாதுகாப்பு கொள்கையின்" ஒரு பகுதியாக அதிக செலவாகும் நீண்ட கால இராணுவ நடவடிக்கைகள்" இருக்கக்கூடும்.  

ஜேர்மன் அரசாங்கம் மற்றும் ஒரு வாஷிங்டன் சிந்தனை குழுமமான ஜேர்மன் மார்ஷல் நிதியம் (GMF) ஆகியவற்றுடன் நெருக்கமாக இருக்கும் Stiftung Wissenschaft und Politik-ன் (SWPசர்வதேச மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஜேர்மன் நிறுவனம்) திட்டப்பணியின் ஒரு பகுதியாக அந்த ஆய்வறிக்கை ஒரு வருட காலத்திற்கும் மேல் 50 முன்னணி அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், இராணுவ பிரமுகர்கள், பெருநிறுவன பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. SWPஆய்வறிக்கையின் விரிவாக்கத்தில் ஏர்ன்ஸ்ட் நோல்டேயின் மகனும், பொது, சர்வதேச மற்றும் ஐரோப்பிய சட்டம் துறை தலைவர் பேராசிரியர் ஜியோர்க் நோல்டே போன்றவர்களால் ஹம்போல்ட் பல்கலைக்கழகம் பிரதிநிதித்துவபடுத்தப்பட்டது.

ஜேர்மன் இராணுவவாத மீள்வருகையில் பல்கலைக்கழகங்களின் பங்கு சம்பந்தமாக ஆய்வறிக்கை இவ்வாறு குறிப்பிடுகிறது: விரைவாக பிரதிபலிக்க கூடிய காலத்தில் மிகவும் அதிக சிக்கலான ஒரு சூழலுக்கு நல்ல அறிவுச்சார்ந்த திறன்கள் தேவைப்படுகின்றன. அறிவு, புலனுணர்வு, புரிதல், மதிப்பீடு மற்றும் மூலோபாய முன்னறிதிறன்: இந்த திறன்கள் அனைத்தும் கற்றுக்கொடுக்கப்பட முடியும் அத்துடன் பயிற்றுவிக்கவும் முடியும். ஆனால் அவற்றிற்கு அரசாங்கத்தின் தரப்பிலிருந்து, பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வெளியுறவு கொள்கை நிறுவனங்கள் தரப்பிலுருந்தும் முதலீடுகள் தேவைப்படுகின்றனஒரு அறிவார்ந்த சூழலை ஸ்தாபிப்பதற்கானதாக இலக்கு இருக்க வேண்டும் அது அரசியல் ஆக்கத்திறனை ஏற்படுத்துவது மட்டுமல்ல பேணி வளர்க்கிறது, ஆனால் அது கொள்கை தெரிவு வசதியை விரைவாக மேம்படுத்தவும் முடியும் அத்துடன் அதன் வடிவங்களில் அது இயக்கப்படவும் முடியும்

அறிவியல் என்ற போர்வையின் கீழ் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்கு முன்பிருந்தது போல, ஜேர்மன் பல்கலைக்கழகங்கள் இராணுவவாதத்திற்கான சிந்தனையியல் மட்டத்திலான பயிற்றுவிக்கும் பள்ளிகளாக (ideological cadre schools) உருமாறிக் கொண்டிருக்கின்றன. அறிவார்ந்த சுற்றுசூழல், என்ற கல்வி மொழிக்குப் பின்னால், "இராணுவரீதியான சிந்தனைகளுக்கு" திரும்ப மற்றும் "அரசியல் ரீதியாக உருவாக கூடிய ஒரு போர் கொள்கைகளுக்கு"  "அரசியல் படைப்பாற்றல்" மற்றும் "மூலோபாய முன்னோக்கு" தேவையாக இருக்கிறது.

 ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் இந்த செயல்திட்டம் தீவிரமாக பின்பற்றப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை சமீபத்திய பல்கலைக்கழக தகவல் தொகுப்பேடைப் பற்றிய ஒரு கண்ணோட்டம் அடிக்கோடிட்டு காட்டுகிறது. பேராசிரியர் முங்க்லரால் அளிக்கப்பட்ட ஒரு செயல் திட்ட கருத்தரங்கம் "போரின் கோட்பாடுகள்: புதிய போர்கள், மனிதாபிமான தலையீடுகள், ஆளில்லா விமானப் போர்" என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது.

பார்பெரோவ்ஸ்கியின் துறை, "நெருக்கடியிலிருந்து வெளியேற வழிகள், சர்வாதிகாரத்துக்கான வழிகள்? ஒப்பீட்டு சர்வாதிகார ஆராய்ச்சிக்கான அணுகுமுறைகள்," என்று தலைப்பிடப்பட்ட ஒரு ஆய்வை  அளிக்கிறது. மேலும் விரிவான உள்ளடக்கத்தை விளக்கி கூறுகிறது, அதாவது முந்தைய நெருக்கடிகளுக்கு அநேக இடங்கள் மற்றும் பல்வேறு நேரங்களில், சர்வாதிகாரங்கள் ஒரு நியாயமான விடையிறுப்பாக கருதப்பட்டதை புறக்கணிப்பது  மிக எளிமையானது [].  குழப்பமான மற்றும் மோதல்கள் உந்தப்பட்ட கட்டங்களில், ஸ்திர தன்மைக்கும் ஒழுங்குக்கும் அவர்கள் வாக்குறுதி அளித்தனர். அவர்கள் ஒரு அச்சுறுத்தலாக இல்லை பல சமகாலத்தவர்களால் ஒரு தீர்வாக பார்க்கப்பட்டார்கள்.

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போரின் ஆயத்தத்தில் முக்கிய வகித்த பிரடரிக் வில்ஹெம் பல்கலைக்கழகம் போல்  இராணுவவாதம் மற்றும் சர்வாதிகாரத்திற்கான ஒரு மையமாக உருமாற ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தை அனுமதிக்க முடியாது. ஒரு பல்கலைக்கழகத்தின் கல்வி சார்ந்த கொள்கைகள் மற்றும்  சுயாதீனமான ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலை பாதுகாப்பதுதான் இதை எதிர்ப்பதற்கான ஒரே வழிசமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் அக்டோபர் 23 ம் தேதி கூட்டத்தில் இந்த திசையில் ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும். அனைத்து மாணவர்கள் மற்றும் அக்கறை உள்ள கல்வியாளர்களை எமது கூட்டத்திற்கு வருகை தரவும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பினால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் ஆபத்தான நிகழ்வுகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தரவும் அழைக்கிறோம்.