World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா India-Pakistan tensions remain high, despite Modi’s meeting with Sharif ஷரீப்புடனான மோடியின் சந்திப்பிற்கு இடையே, இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன
By Sampath Perera and Keith
Jones இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி, அவரது பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற அடுத்த நாளான செவ்வாயன்று, பாகிஸ்தானிய ஜனாதிபதியான நவாஜ் ஷரீப்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தினார். மோடியின் அழைப்பை அடுத்து, அவரது பதவியேற்று விழாவில் கலந்து கொள்ள ஷரீப் புதுடெல்லிக்கு விஜயம் செய்திருந்தார். இது 1947இல் இந்திய துணை கண்டத்தினை வகுப்புவாத பிரிவினையால் உருவாக்கப்பட்ட போட்டி அரசுகளுக்கு இடையிலான கொந்தளிப்பான உறவுகளில் முன்னொருபோதுமில்லாத வகையிலான ஒரு முதல் சந்திப்பாகும். இந்தோ-பாகிஸ்தான் உறவுகளின் விரோத குணாம்சத்திற்கு இடையே, ஒரு இந்து மேலாதிக்கவாத மற்றும் பாகிஸ்தான்-விரோத கடும்போக்காளர் என்று மோடி பெயரெடுத்திருக்கும் நிலையில், செவ்வாயன்று மோடி மற்றும் ஷரீப்பிற்கு இடையிலான சந்திப்பு நிச்சயமாக சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்தது. இருந்த போதினும், அந்நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "விரிவான சமாதான பேச்சுவார்த்தைகளை" மீண்டும் தொடங்க முயற்சிப்பது என்று இருதரப்பிலிருந்தும் மீண்டும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது என்பதற்கு அப்பாற்பட்டு, அந்த கூட்டம் வேறெதையும் சாதித்தது என்று கூற அங்கே ஒன்றும் இருக்கவில்லை. அந்த கூட்டத்தின் முடிவில், அங்கே எந்தவொரு கூட்டு பத்திரிகையாளர் கூட்டமோ அல்லது ஒரு கூட்டு அறிக்கையோ வெளிவிடப்படவில்லை. தேதி குறிப்பிடாமல் வரவிருக்கும் ஒரு நாளில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வதற்கான ஒரு அழைப்பை மோடி ஏற்றுக் கொண்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. அந்நாடுகளின் வெளியுறவுத்துறை செயலர்கள் — அதாவது அவற்றின் உயர்மட்ட இராஜாங்க அதிகாரிகள் — இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க சந்திந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் மீண்டும் அதுபோன்ற கூட்டங்களுக்கு தேதியோ அல்லது சாத்தியமான கால நிர்ணயமோ வரையறுக்கப்படவில்லை. மோடிக்கு முன்னர் பதவியிலிருந்த மன்மோகன் சிங், அதுபோன்றவொரு நடவடிக்கையை பிஜேபி தீவிரமாக எதிர்க்குமென அவரது காங்கிரஸ் கட்சி அஞ்சியதால் பாகிஸ்தான் விஜயத்தை தொடர்ந்து அதிகமாக நிராகரித்து வந்தார். சிங் அவரது பத்தாண்டு கால பிரதம மந்திரி பதவியில் ஒருமுறை கூட பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யாமல் பதவியிலிருந்து இறங்கினார். ஷரீப், அவரது பங்கிற்கு, பாகிஸ்தான் இராணுவத்தின் உடன்பாட்டைக் காப்பாற்ற வேண்டி இருந்தது, அதன் காரணமாக இப்போதும் கூட மோடியின் அழைப்பை ஏற்பதற்கு முன்னர் அவர் அந்நாட்டின் வெளியுறவு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பொலிஸ்களின் கட்டுப்பாடுகளின் மீது மிக பகிரங்கமாக அதிகார மோதலில் சிக்கி இருந்தார். செவ்வாயன்று கூட்டத்தை இரண்டு தரப்பும் ஒரு வெற்றியாக சித்தரித்த அதேவேளையில், அவர்களின் சந்திப்பிற்குப் பிந்தைய கருத்துக்கள் அவர்களின் எதிரிடையான நிகழ்ச்சிநிரலை எடுத்துக் காட்டியது. பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும் மற்றும் பாகிஸ்தானின் தேசிய-பாதுகாப்பு அமைப்புடன் தொடர்புகள் கொண்ட சிலர் உட்பட 2008 மும்பை பயங்கரவாத சம்பவத்தில் பங்குவகித்து தற்போது பாகிஸ்தானில் விசாரணையின் கீழ் உள்ளவர்களை விரைவாக தண்டிக்க வேண்டுமென்ற அதன் கோரிக்கைகளில் இந்த கூட்டம் கவனம் செலுத்தியதாக இந்தியா வலியுறுத்தியது. ஜம்மு & காஷ்மீரில் இந்திய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிக்கு, அத்துடன் 1992 பாபரி மசூதி இடிப்பை ஒட்டி இந்தியாவில் வேறு எங்கு ஏற்படும் இஸ்லாமிய பங்கரவாத குழுக்களின் வளர்ச்சிக்கு, ஏறக்குறைய ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானிய தேசிய-பாதுகாப்பு அமைப்பின் சூழ்ச்சிகளே காரணமென்று இந்தியா நீண்டகாலமாக சித்தரித்து வந்துள்ளது. இந்தியாவின் ஒரே முஸ்லீம்-பெரும்பான்மை மாநிலமான ஜம்மு & காஷ்மீர் பாகிஸ்தானால் உரிமை கோரப்படுவதோடு, அந்நாடுகளுக்கு இடையே நடந்துள்ள மூன்று யுத்தங்களில் இரண்டில் அது முக்கிய பிரச்சினையாக இருந்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுராஜ் புதனன்று கூறுகையில், "நாங்கள் நல்லுறவுகளை விரும்புவதாக பாகிஸ்தானிடம் கூறினோம்,” என்றார். “ஆனால் ... பேச்சுவார்த்தைகளின் குரல்கள் குண்டு வெடிப்பின் சத்தத்தில் காணாமல் போய்விடுகின்றன,” என்றார். “குண்டு வெடிப்புகளின் இரைச்சலில் பேச்சுவார்த்தைகள் அடிபட்டு போகும்" என்று மோடி ஷரீப்பிடம் பட்டவர்த்தனமாக கூறியதாக சுவராஜ் தெரிவித்தார். இந்தோ-பாகிஸ்தானிய பொருளாதார உறவுகளின் அவசியத்தை தாம் வலியுறுத்தியதாக, அவரது பத்திரிகையாளர்களுக்கான சிறிய கருத்துரைகளில், ஷரீப் தெரிவித்தார். இந்தியா தம்பட்டமடிக்கும் பயங்கரவாத பிரச்சினைக்கு மறைமுகமாக பிரதிபலிப்பு காட்டும் வகையில் அவர் தொடர்ந்து கூறினார், “நாம் குற்றச்சாட்டுக்களிலும், எதிர்-குற்றச்சாட்டுக்களிலும் ஈடுபடக்கூடாது என்று நான் வலியுறுத்துகிறேன்,” என்றார். கடந்த இரண்டு தசாப்தங்களின் போது இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சியால் மற்றும் அமெரிக்கா உடன் அரும்பி வந்த அதன் "மூலோபாய கூட்டுறவால்"; இந்தியா பாகிஸ்தானுடன் ஒரு பெரும் மூலோபாய ஆதாயத்தை அனுபவித்து வருகிறது என்பது இந்திய ஆளும் மேற்தட்டிற்கு நன்றாக தெரியும் மற்றும் இஸ்லாமாபாத் உடனான உறவுகளில் எந்தவொரு "இயல்பாக்குதலிலும்" இது பிரதிபலிக்கப்படும் என்பதில் அது தீர்மானகரமாக உள்ளது. அப்பிராந்தியத்தின் மீது இந்திய தலைமையை வலியுறுத்தும் நோக்கம் கொண்ட ஒரு நகர்வில், மோடி அவரது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ஷரீப்பிற்கு மட்டும் அழைப்பு கொடுக்கவில்லை, மாறாக தெற்காசிய நாடுகளினது பிராந்திய கூட்டமைப்பின் (சார்க் - SAARC) ஏனைய அனைத்து அங்கத்துவ-அரசுகளின் அரசாங்க தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். மேலும் ஷரீப்புடனான அவரது சந்திப்பு மைய விடயமாக இருந்த போதினும், இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் ஆப்கானிஸ்தானின் ஹமீத் கர்ஜாய் உட்பட செவ்வாயன்று ஏனைய சார்க் தலைவர்களையும் மோடி சந்தித்திருந்தார். மோடியின் அழைப்பை ஏற்று ஷரீப் விஜயம் செய்வதற்கு பாகிஸ்தானிய பத்திரிகைகளில் பலமான ஆதரவிருந்தது, ஆனால் செவ்வாய்கிழமை சந்திப்பிற்குப் பின்னர், இந்திய பிரதம மந்திரி ஒரு இராஜதந்திரியாக தனது நற்சான்றுகளை மெருகேற்றிக்கொள்ள சந்தர்ப்பத்தை கொடுத்து, வெகு குறைந்தளவு எதிர்பார்ப்புகளையே பூர்த்தி செய்திருப்பதாக அவை கவலை வெளியிட்டன. “பாக்-இந்தியா: முன்னையமாதிரியே நடந்துகொள்கின்றன" என்ற தலைப்பிட்ட ஒரு தலையங்கத்தில் Dawn இதழ் இவ்வாறு எழுதியது: “ஷரீப்பை அழைத்ததன் மூலமாக, மோடி புத்திசாலித்தனமாக சர்வதேச அளவில் அவர் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டார், ஆனால் உண்மையில் அதில் ஒப்புக் கொள்ளத்தக்க ஒன்றுமே இல்லாத விதத்தில் அதை செய்திருந்தார்.” “அந்த அழைப்பே சார்க் தலைவர்களுக்காக இருந்தது, மேலும் நேற்றைய பிரதம மந்திரிகளுக்கு இடையிலான கூட்டத்திற்குப் பின்னர் ஊடகங்களுக்கு கசிந்த பிரத்யேக விபரங்கள், மோடி கூடுதலாக அமைதிக்கான கதையை ஏற்பதற்கு மாறாக ஒரு கொடூர கதையில் தங்கியிருந்ததை அறிவுறுத்துவதாக இருந்தன,” என்று அது எழுதியது. News இதழ் எழுதியது, “இந்த இரண்டு தலைவர்களும் யாரும் எதிர்பார்க்காததை செய்திருந்தனர், ஆனால் மீண்டும் பழைய கதைக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் நிறைந்திருக்கின்றன,” என்றது. மோடி-ஷரீப் சந்திப்பை அமெரிக்கா வரவேற்றது. “இந்தியா மற்றும் பாகிஸ்தான் அவற்றின் பேச்சுவார்த்தைகள் மற்றும் கூட்டுறவைப் பலப்படுத்த எடுக்கும் எந்தவொரு மற்றும் அனைத்து நடவடிக்கைகளையும்" வாஷிங்டன் ஊக்குவிக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜென் சகி (Jen Psaki) தெரிவித்தார். “(அந்த கூட்டம்) ஒரு சாதகமான அறிகுறியாக இருக்குமென்பதில் நாங்கள் கவனத்துடன் நம்பிக்கையாக இருக்கிறோம்,” என்று ஒரு "மூத்த" ஒபாமா நிர்வாக அதிகாரி மேற்கோளாக பயன்படுத்துவதற்கு அல்லாத கருத்துரையாக தெரிவித்தார். 1990களின் பின்னரில் இருந்து, இந்தோ-பாகிஸ்தான் உறவுகளின் நெருக்கடிகளைத் தணிக்க முயல்வதில் அமெரிக்கா அடிக்கடி தலையீடு செய்துள்ளது. ஆனால் ஆசியாவிலும், மத்திய கிழக்கிலும் அதன் சொந்த ஆக்ரோஷமான நடவடிக்கைகள் (பரந்த பிராந்தியங்களில் அதன் நடவடிக்கைகள் குறித்து கூற வேண்டியதே இல்லை) புது டெல்லிக்கும் இஸ்லாமாபாத்திற்கும் இடையே பதட்டங்களைத் தூண்டிவிடுவதில் ஒரு பெரும் காரணியாக இருந்துள்ளன. ஈரானைத் தனிமைப்படுத்த மற்றும் அதன் பொருளாதாரத்தை முடமாக்குவதற்கான அதன் நடவடிக்கைகளின் பாகமாக, பாகிஸ்தான் வழியாக ஈரானில் இருந்து ஒரு இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்திலிருந்து பின்வாங்க இந்தியாவிற்கு அமெரிக்கா அழுத்தம் அளித்தது — அந்த திட்டம் 2003இல் தொடங்கப்பட்ட இந்தோ-பாகிஸ்தான் "விரிவான சமாதான நிகழ்போக்கின்" கீழ் இணைக்கப்பட்டிருந்தது, அதற்கு ஓராண்டிற்கும் சற்று கூடுதலான காலத்தில் அந்த இரண்டு நாடுகளும் மீண்டும் யுத்தத்தின் விளிம்பிற்கு வந்திருந்தன. சீனாவைச் சுற்றி வளைக்கும் மற்றும் அதன் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கத்தோடு, இந்தியாவை ஓர் "உலகளாவிய மூலபாய கூட்டாளியாக" ஆக்குவதில், இந்தியாவை ஒரு உலக சக்தியாக மாறுவதற்கு உதவ அது தயாராக இருப்பதாக அறிவித்து, அமெரிக்கா ஆக்ரோஷமாக இந்தியாவின் ஆதரவைப் பெற முயன்று வருகிறது. இதில் பொது அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பெற புது டெல்லியை அனுமதித்ததும் உள்ளடங்கும், இவ்விதத்தில் ஆயுதங்களை அபிவிருத்தி செய்வதற்கான அதன் உள்நாட்டு அணுசக்தி திட்டத்தில் அது ஒருமுனைப்பட அதை அனுமதித்ததோடு, அதன் நெருங்கிய கூட்டாளிகளிடம் மட்டும் இருக்கக்கூடிய நவீன ஆயுத தளவாடங்களை இந்தியாவிற்கும் கிடைக்கச் செய்தது. அதன் சீன-விரோத "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக இந்தியாவை அமெரிக்கா ஊக்குவிப்பது, யுத்தகள தந்திரோபாயத்திற்கான அணுசக்தி ஆயுதங்களை அபிவிருத்தி செய்வது போன்ற அதிக-அபாயகரமான எதிர் நடவடிக்கைகளை கையாள பாகிஸ்தானுக்கு வழியமைப்பதுடன், தெற்கு ஆசியாவில் இராணுவ அதிகார சமநிலையை சீர்குலைக்கிறது. ஆப்கான் பாதுகாப்பு படைகளுக்கு இந்தியா பயிற்சி அளிப்பது உட்பட அதிகரித்து வரும் இந்தோ-ஆப்கான் கூட்டுறவை வாஷிங்டன் ஊக்குவித்து வருவதிலும் இஸ்லாமாபாத் எச்சரிக்கப்பட்டுள்ளது. தசாப்தங்களாக, பாகிஸ்தான் இராணுவம் இந்தியா உடனான அதன் பிற்போக்குத்தனமான மோதலில் அதற்கு "மூலோபாய ஆழத்தை" எடுத்துக்காட்ட ஆப்கானிஸ்தானை நோக்கி திரும்பியிருந்தது, ஆனால் இப்போது ஆப்கானிஸ்தான் அதன் எதிரிக்கு நடவடிக்கைகளுக்கான ஒரு புதிய தளத்தை வழங்கி வருவதோடு அதனைக்கொண்டு பாகிஸ்தானை அச்சுறுத்துமோ என்று அது அஞ்சுகிறது. பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் இன-பிரிவினை கிளர்ச்சிக்கு ஆதரவளிக்க இந்தியா ஆப்கானிஸ்தானில் அதன் தூதரக வலையமைப்புகளைப் பயன்படுத்தி வருவதாக இஸ்லாமாபாத் குற்றஞ்சாட்டுகிறது. அவரது இந்திய விஜயத்தின் போது பதவிவிலகவிருக்கும் ஆப்கான் ஜனாதிபதி கர்சாய், மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹேரட்டில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் மீது நடந்த கடந்த வார தாக்குதல், பாகிஸ்தானை மையமாக கொண்ட ஒரு இஸ்லாமிய போராளிகள் குழுவான இலஷ்கர்-ஈ-தொய்பாவினால் (LeT) நடத்தப்பட்டதாக அவரது குற்றச்சாட்டை மீண்டும் கூறினார். LeT அந்த குற்றச்சாட்டை நிராகரிக்கிறது. இந்தியாவின் பெருநிறுவன மேற்தட்டு மற்றும் இராணுவ பாதுகாப்பு ஸ்தாபகத்தின் பெரும் பிரிவுகள், இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையிலான "மூலோபாய இடைவெளியை" சரிகட்டுவதற்காக அமெரிக்க மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியத்துடனான இந்தியாவின் கூட்டணியை மேலதிகமாக பலப்படுத்த இந்தியாவின் புதிய அரசாங்கத்திற்கு அழுத்தம் அளித்து வருகின்றன. இதுபோன்றவொரு நிகழ்வு, இஸ்லாமாபாத்தின் அச்சங்களை இன்னும் மேலதிகமாக அதிகரிக்க மட்டுமே செய்யும். அனைத்திற்கும் மேலாக, அது சீனா உடனான அதன் "அனைத்து காலத்திற்கான கூட்டுறவை" ஆழப்படுத்தும் பிரதிபலிப்பைக் காட்ட விரும்பமுயல்வதன் மூலமாக, அமெரிக்க-சீன மற்றும் இந்தோ-பாகிஸ்தானிய மோதல்களில் ஒரு உயர்ந்தளவில் வெடிக்கக்கூடிய புதிய பரிமாணத்தைச் சேர்த்து, அவற்றை ஒன்றோடொன்று தொடர்புள்ளதாக்குவதற்கு இட்டுச் செல்லக்கூடும். மோடி இதுவரையில் இந்தோ-அமெரிக்க உறவுகள் குறித்து எதுவும் கூறவில்லை என்ற போதினும், பாரியளவில் இந்திய இராணுவத்தின் ஆயுதங்கள் வாங்கும் திட்டங்களை தீவிரப்படுத்த அவரது அரசாங்கம் இராணுவ செலவினங்களை வேகமாக அதிகரிக்க விரும்புகிறது என்பதற்கு சமிக்ஞை காட்டி உள்ளது. ஷரீப் இந்தியாவில் விஜயம் செய்து வந்த போதும் கூட, ஜம்மு & காஷ்மீர் அந்தஸ்து மீதான ஒரு பிரதான, வகுப்புவாதரீதியில் ஊக்குவிக்கப்பட்ட சர்ச்சையை புதிய பிஜேபி அரசாங்கம் தூண்டிவிட்டிருந்தது. இந்திய அரசியலமைப்பின் 370வது ஷரத்தை நீக்குவதன் மீது புதிய அரசாங்கம் விவாதம் நடத்த விரும்புவதாக செவ்வாயன்று மாநிலங்களுக்கான மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார், அந்த ஷரத்து இந்திய ஒன்றியத்தில் ஜம்மு & காஷ்மீருக்கு ஒரு சிறப்பு அந்தஸ்தை வழங்குகிறது. 370வது ஷரத்து பிரிவினைவாதத்தைத் தூண்டிவிடுவதாக பிஜேபி நீண்டகாலமாக அதை எதிர்த்து வருகிறது. ஆனால் அதன் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) முன்னதாக இந்திய அரசாங்கத்தை ஸ்தாபித்த போது, பிஜேபி-ஆல் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை ஏனென்றால் அது அதன் நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு அதன் NDA கூட்டாளிகளைச் சார்ந்திருக்க வேண்டி இருந்தது. இந்திய-ஆதரவிலான காஷ்மீர் அரசியல் ஆளும் தட்டு, 370வது ஷரத்து மீதான பிஜேபி-இன் தாக்குதலை கடுமையான வார்த்தைகளோடு சாடியுள்ளது. ஒன்று ஷரத்து 370 இருக்கும் அல்லது காஷ்மீர் இந்தியாவின் பாகமாக இருக்காது என்று ஜம்மு-காஷ்மீர் முதல் மந்திரி ஒமர் அப்துல்லாஹ் கூறினார், அதேவேளையில் போட்டி கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஸ்தி கூறுகையில், “நாம் இன்னொரு (வகுப்புவாத) பிரிவினை மற்றும் பிளவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்,” என்று எச்சரித்தார். |
|