தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
The European elections and the crisis of the EU ஐரோப்பிய தேர்தல்களும், ஐரோப்பிய ஒன்றிய நெருக்கடியும்Peter
Schwarz Use this version to print| Send feedback கடந்த வார ஐரோப்பிய தேர்தல்களின் முடிவுகள், ஐரோப்பிய ஒன்றியம் பாரியளவில் நிராகரிக்கப்பட்டிருப்பதன் வெளிப்பாடாகும். மாஸ்ட்ரிச் உடன்படிக்கையின் இருப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு பின்னரும் மற்றும் பல கிழக்கு ஐரோப்பிய அரசுகள் உள்ளிணைந்து பத்து ஆண்டுகளுக்கு பின்னரும் ஐரோப்பிய ஒன்றியம் என்பது சக்தி வாய்ந்த முதலாளித்துவ நலன்களின் ஒரு கருவி என்பதை பெரும்பாலான மக்கள் காண்கிறார்கள். 2008 நிதியியல் நெருக்கடியில் இருந்து, குறிப்பாக புரூஸ்செல்ஸின் அமைப்புகள், நிதியியல் மூலதனத்தின் நலன்களுக்கேற்ப ஐரோப்பாவிற்கு மறுவடிவமைக்க ஒரு மத்திய பாத்திரம் வகித்துள்ளன. அவை கடுமையான சிக்கன நடவடிக்கைகளால் நலன்புரி அரசை சூறையாடி, பணக்காரர்களின் நலன்களுக்காக வங்கிகளுக்கு பில்லியன்களை கைமாற்றி விட்டதுடன், ஊதியங்களை குறைந்த மட்டத்திற்கு கொண்டு வருவதற்கும், சுரண்டலையும் வேலைவாய்ப்பின்மையையும் அதிகரிப்பதற்கும் அனைத்தையும் செய்தன. தேர்தல்களுக்கு முந்தைய வாரங்களில் ரஷ்யாவுடனான ஒரு இராணுவ மோதலின் விளிம்பிற்கு ஐரோப்பா இழுத்து வரப்பட்ட நிலையில், அமெரிக்காவுடன் சேர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஒரு ஆக்ரோஷமான வெளியுறவு கொள்கையைப் பின்தொடர்ந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், ஐரோப்பிய ஒன்றியம் நல்வாழ்வு மற்றும் அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்ற உத்தியோகபூர்வ பிரச்சாரத்தை பல மக்கள் சுத்தமான பாசாங்குத்தனமாக கருதுகிறார்கள். ஆனால் இந்த அதிருப்தி எந்தவொரு நேர்மறையான வெளிப்பாட்டையும் காணவில்லை, ஏனென்றால் தொழிற்சங்கங்களும், “இடது" கட்சிகள் என்று கருதப்படுபவையும் அனைத்து போராட்டங்களுக்கும் மற்றும் பாரிய நடவடிக்கைகளுக்கும் குழி பறித்துவிடுகின்றன. இதனால், மக்கள் எதிர்ப்பு ஒரு உயிரோட்டமற்றதான, பகுதி பிற்போக்குத்தனமான வடிவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் பதிவு செய்துள்ள மொத்த வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (57 சதவீதத்தினர்) தேர்தல்களில் பங்கெடுக்கவில்லை. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏமாற்றம் உயர்ந்தளவில் இருந்தது. ஸ்லோவாக்கியாவில், வெறும் 13 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்க சென்றனர். செக் குடியரசு, ஸ்லோவேனியா, போலாந்து மற்றும் குரோஷியாவில் கால் பங்கிற்கும் குறைந்த வாக்காளர்கள் பங்கெடுத்தனர். பல நாடுகளில், வாக்காளர்கள் பதவியிலிருந்த அரசாங்கங்களைத் தண்டித்தனர். பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன், கிரீஸ் மற்றும் நெதர்லாந்தில், பல தசாப்தங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்த அல்லது ஒன்றுகூடி ஆட்சி செய்திருந்த சமூக ஜனநாயக மற்றும் பழமைவாத கட்சிகள், பாரிய இழப்புகளால் பாதிக்கப்பட்டன. ஸ்தாபக கட்சிகளின் சீரழிவு சில இடங்களில் அழிவுகரமான மற்றும் அபாயகரமான வடிவங்களை எடுத்துள்ளன. பழமைவாத கட்சி, தாராளவாத கட்சி, பசுமை கட்சி, சமூக ஜனநாயக கட்சி அல்லது "இடது" கட்சி எதுவானாலும் ஆகட்டும் இந்த ஸ்தாபக கட்சிகள் அனைத்துமே ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரித்திருந்ததால், தீவிர வலது மற்றும் பகிரங்கமான பாசிச கட்சிகளால் அந்த அதிருப்தியில் இருந்து ஆதாயமடைய முடிந்தது. பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் டென்மார்க்கில், அதிதீவிர-வலது போன்ற கட்சிகள் மிக பலமான சக்தியாக வந்துள்ளன. ஆஸ்திரியா, பெல்ஜியம், நெதர்லாந்து, பின்லாந்து மற்றும் ஹங்கேரியில் அவற்றின் வாக்குக்கள் இரட்டை இலக்க விகிதங்களை அடைந்தன. சுவீடன் ஜனநாயகக் கட்சியினரும், கிரீஸில் பாசிச கோல்டன் டோன் கட்சியினரும் ஏறத்தாழ பத்து சதவீத வாக்குகளைப் பெற்றனர். இத்தகைய வலதுசாரி மற்றும் பாசிச சக்திகளின் வளர்ச்சி ஐயத்திற்கிடமின்றி ஓர் அபாயகரமானதாகும். அவர்கள் தமது பிற்போக்குத்தன வேலைத்திட்டத்தில் தீர்மானகரமாக உள்ளனர் என்பதோடு அரசு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்தும் அத்தோடு ஆளும் வர்க்கத்திலுள்ள ஒரு வளர்ந்து வரும் பிரிவுகளினாலும் ஆதரவளிக்கப்படுகின்றார்கள். எவ்வாறிருப்பினும், அவர்களின் வளர்ச்சி அவர்களின் பேரினவாத, வெளிநாட்டவர் விரோத மற்றும் சர்வாதிகார வேலைத்திட்டத்திற்கு பாரிய ஆதரவுள்ளது என்று சித்தரிப்பது தவறாகும். சமூக நம்பிக்கையின்மையும், விரக்தியுமே வாக்காளர்களை அவர்களின் கரங்களுக்குள் தள்ளியுள்ளது. இந்த வலதுகளின் வளர்ச்சிக்கான முக்கிய பொறுப்பு, ஐரோப்பிய இடது மற்றும் போலி-இடது குழுக்களின் மட்டங்களிலும், அவற்றிற்கு ஆதரவான கட்சிகளின் மீதே தங்கியுள்ளது. இத்தகைய அமைப்புகளில் அவற்றின் பெயரில் மட்டுமே "இடது" என்பது உள்ளது. அவை தொழிலாள வர்க்கத்திற்காக அல்லாது, உயர்தர மத்திய வர்க்கத்தின் ஒரு சிறிய செல்வாக்கு பெற்ற அடுக்கிற்காக பேசுகின்றன. அவை முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தை தடுப்பதையும் மற்றும் அதற்காக தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளோடு சேர்ந்து நெருக்கமாக வேலை செய்வதையையே அவற்றின் மிக முக்கிய கடமையாக கருதுகின்றன. அவை ஐரோப்பிய ஒன்றியத்தையும், சுதந்திர சந்தையையும் பாதுகாக்கின்றன. அவை முதலாளித்துவத்தை விமர்சிப்பது என்பது, தம்மை விட அதிகமாக சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கும் மிகப் பணக்கார 1 சதவீதத்தினரை, அல்லது 0.001 சதவீதத்தினரை பொறாமையோடு பார்க்கும் சமூகத்தின் மேல்மட்டத்தில் உள்ள 10 சதவீதத்தினருக்காக பேசுகின்றன. தொழிலாள வர்க்கத்தின் மீது அவை வெறுப்போடும், இகழ்ச்சியோடும் மட்டுமே இருக்கின்றன. ஜேர்மனியின் இடது கட்சி பல மாநில அரசாங்கங்களில் பங்குகொண்டு இதை எடுத்துக்காட்டி உள்ளது. அந்நடவடிக்கைகள் மூலம் அவை கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி உள்ளன. தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தைக் குறித்து அஞ்சும் போலி-இடதுகள், அதேவேளையில் அவை வலதுசாரிகள் மற்றும் பாசிசவாதிகளோடு ஒரு உடன்பாட்டிற்கு வர தயாராக உள்ளன. இதை அவை உக்ரேனில் காட்டி உள்ளன, அங்கே அவை பாசிசவாதிகள் மீது தங்கியிருக்கும் மற்றும் அந்நாட்டை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிய செய்யும் நோக்கம் கொண்ட ஒரு இயக்கத்தை ஒரு "ஜனநாயக புரட்சியாக" பெருமைப்படுத்தியுள்ளன. போலி-இடது குழுக்கள், ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாதுகாத்ததன் மூலமாக, வலதுசாரிகளும் மற்றும் பாசிசவாதிகளும் தாம் ஒரு தீவிர எதிர்ப்பாளர்களாக காட்டிக்கொள்ள உதவின. குறிப்பாக இது பிரான்சில் மிக தெளிவாக உள்ளது. பிரான்சில் இத்தகைய அமைப்புகளின் ஒரு தசாப்த கால துருப்பிடித்த பாத்திரத்தை ஒருவர் படித்தால் மட்டுமே, தேசிய முன்னணி (Front National) மிக பலமான ஒரு கட்சியாக உயர்ந்ததை புரிந்து கொள்வது சாத்தியமாகும். 1968இல், முதலாளித்துவ ஆட்சியை அதன் கரு வரையில் அதிர வைத்த பொது வேலை நிறுத்தத்திற்கு குட்டி-முதலாளித்துவ இடது, சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் விச்ஷி ஆட்சியின் ஒரு முன்னாள் காரியாளரும், நான்காம் குடியரசில் ஒரு மந்திரியாக இருந்தவருமான அதன் தலைவர் பிரான்சுவா மித்திரோனின் பக்கம் அதிரடியாக திரும்பி எதிர்வினை காட்டியது. இன்று வரையில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (Ligue Communiste Révolutionnaire – LCR), சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (Organisation Communiste Internationaliste – OCI), மற்றும் ஏனைய போலி-இடது அமைப்புகளின் முன்னாள் அங்கத்தவர்களை சோசலிஸ்ட் கட்சியின் தலைமையில் பார்க்க முடியும். இவர்களில் ஒரு பிரமுகரான OCI அங்கத்தவர் லியோனல் ஜோஸ்பன், 1990களில் பிரதம மந்திரியாக ஆனார். 15 ஆண்டுகளுக்கு முன்னர் சோசலிஸ்ட் கட்சியின் செல்வாக்கு பொறிந்த போது, அது ஆரம்பத்தில் போலி-இடது குழுக்களுக்கு ஆதாயமளித்தது. 2002இல், LCR மற்றும் தொழிலாளர் போராட்டம் அமைப்பு (Lutte Ouvrière) ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் 10 சதவீத வாக்குகளை வென்றது. சோசலிச கட்சி வேட்பாளர், லியோனல் ஜோஸ்பன், தேசிய முன்னணி வேட்பாளர் ஜோன்-மரி லு பென்னுக்குப் பின்னால் தள்ளப்பட்டார், அவர் இரண்டாவது சுற்றில் பழமைவாத ஜாக் சிராக்கிற்கு எதிராக போட்டியிட்டார். லு பென்னுக்கு எதிராக மில்லியன் கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கி இருந்த நிலையில், போலி-இடதுகள் சிராக்கிற்குப் பின்னால் அணி வகுத்ததோடு, அவரைத் தேர்ந்தெடுக்க அழைப்பு விடுத்தன. அப்போதிருந்து, அவை சோசலிச கட்சியை ஆதரித்துள்ளன, அதே சோசலிஸ்ட் கட்சி இன்று தொழிலாள வர்க்கத்தின் மீது கொடூரமான தாக்குதல்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் தேசிய முன்னணி ஆதாயமடைந்துள்ளது. கடந்த வார ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில், அது 25 சதவீத வாக்குகளை வென்றது, அதேவேளையில் சோசலிஸ்ட் கட்சி வெறும் 14 சதவீத வாக்குகளை மட்டுமே வென்றது, இடது முன்னணிக்கு (Front de gauche) 6.3 சதவீத வாக்குகள் கிடைத்தன, தொழிலாளர் போராட்டம் (Lutte Ouvrière) 1.2 சதவீதம் பெற்றது, மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA) வெறும் 0.3 சதவீத வாக்குகளை வென்றது. தேசிய முன்னணியின் வாக்குகள் அதிகரித்திருப்பதற்கு சோசலிஸ்ட் கட்சியின் அருகில் நகர்ந்ததன் மூலமாக போலி-இடது தமது பிரதிபலிப்பை காட்டியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து "இடது" சக்திகளையும் (சோசலிஸ்ட் கட்சி உட்பட) ஒன்று திரட்டி "21ஆம் நூற்றாண்டின் ஒரு மக்கள் முன்னணியை" கட்டியமைக்க ஒரு "பெருமிதமான அழைப்பை" பிரசுரித்தது. “அதி தீவிர வலதின் வளர்ச்சிக்கு" எதிராக ஐக்கியப்பட NPA (சோசலிஸ்ட் கட்சி உட்பட) “சமூக மற்றும் அரசியல் இடது அமைப்புகள்" என்பதற்கு அழைப்பு விடுத்து வருகிறது. ஏனைய ஐரோப்பிய நாடுகளில் உள்ள போலி-இடதுகளும் இதே போன்ற பாத்திரம் வகிக்கின்றன. ஜேர்மனியில், இடது கட்சி ஒரு கூட்டணி அரசாங்கத்தில் நுழைய தயாராகி வருகிறது, அத்தோடு அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கை பிரச்சினைகளிலும் உத்தியோகபூர்வ அரசியல் நிலைப்பாட்டையே ஏற்றுக் கொண்டுள்ளது. இவ்விடயத்தில், கிரீஸில் சிரிசா மட்டுமே வெளிப்படையாக ஒரு விதிவிலக்காக பிரதிநிதித்துவம் செய்கிறது, அதன் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸ் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு ஐரோப்பிய இடதின் வேட்பாளராக இருந்தார். சிரிசா சிக்கன நடவடிக்கைக்கு முடிவு கட்டுவதாக வாக்குறுதி அளிப்பதால், அது கிரிஸின் மிக பலமான கட்சியாக மாறி உள்ளது. ஆனால் அது அதன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது அல்லது அதை நிறைவேற்ற அது விரும்பவும் இல்லை. அதன் கொள்கைகளும் சமூக ஜனநாயகவாதிகளின் கொள்கைகளில் இருந்து வேறுபடப் போவதில்லை. சிரிசா இன்னும் மேலதிகமாக கோல்டன் டோன் பாசிசவாதிகளின் வளர்ச்சிக்கு அடித்தளத்தைத் தயார் செய்கிறது. தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடர்ந்து நடந்துவரும் தாக்குதல்கள், தவிர்க்கவியலாமல் தீவிரமான வர்க்க போராட்டங்களை கொண்டு வரும். வலதுசாரிகளின் வளர்ச்சி எதிர்ப்பைச் சந்திக்கும். தேசிய முன்னணி பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் பெரும் பகுதிகளால் வெறுக்கப்படுகிறது. இத்தகைய மோதல்களுக்கு தயாரிப்பு செய்வதற்காக, அவர்களுக்கு ஒரு முன்னோக்கை வழங்குவதற்காக, மற்றும் ஐரோப்பா முழுவதிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்ப பிரிட்டனின் சோசலிச சமத்துவ கட்சியும் மற்றும் ஜேர்மனியின் சோசலிச சமத்துவ கட்சியும் (Partei für Soziale Gleichheit) ஐரோப்பிய தேர்தல்களில் பங்குபற்றின. தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கம் மட்டுமே பாசிசம், யுத்தம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திற்குத் தலைமை கொடுக்க முடியும். எமது பிரச்சாரம், யுத்தத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகளுக்கான போராட்டம் ஆகிய இரண்டு பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்தியிருந்தது. நாம், ஐரோப்பிய ஒன்றியம், தேசியவாதிகள் மற்றும் பாசிசவாதிகளை நிராகரிப்பது மற்றும் ஒரு சோசலிச ஐரோப்பாவிற்கான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் எந்த அரசியல் போக்கில் அபிவிருத்தி அடைய முடியும் மற்றும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதற்காக போராடினோம். சாத்தியமான வெகுஜன முழக்கங்கள் மூலமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாக்குகளை வெல்வது அல்ல நமது குறிக்கோள், மாறாக தொழிலாள வர்க்கத்திற்கு உண்மையைக் கூறுவதும் மற்றும் அவர்களை வரவிருக்கும் போராட்டங்களுக்குத் தயார் செய்வதுமே எமது குறிக்கோள் ஆகும். பல தொழிலாளர்கள் எதிர்வரும் காலகட்டத்தில் முக்கிய அனுபவங்களூடாக செல்ல இருக்கிறார்கள். தங்களின் நலன்களுக்காக போராட கூடிய ஒரு கட்சியையும் மற்றும் ஒரு வேலைத்திட்டத்தையும் அவர்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவில் கண்டுகொள்வார்கள். |
|
|